Hi quest ,  welcome  |  sign in  |  registered now  |  need help ?

சீமான்-விஜய்யின் 'கோபம்'!

Written By Raveendran on Tuesday, December 28, 2010 | Tuesday, December 28, 2010


இது பழிவாங்கப்பட்டவர்களின் கதை என்று சப் டைட்டில் கொடுக்காமல் இருந்தால் சரி. மற்றபடி இரண்டு கைகள் நான்கானால்... என்ற ரேஞ்சில் கை கோர்த்துவிட்டார்கள் சீமானும், விஜய்யும். தாணுவின் தயாரிப்பில் சீமான் இயக்கவிருக்கும் 'பகலவன்' படத்தில் விஜய் நடிக்கிறார் என்பதுதான் நேற்றுவரை உலவிய செய்தி. இன்று அதில் இஞ்ச் அளவுக்கு ஒரு மாற்றம்! 'கோபம்' என்று தலைப்பு வைக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம் இருவரும். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உள்ளேயிருந்தவர் சீமான். வெளியே வந்த பின்பும் முன்னிலும் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறார். என் மீனவனை அடித்தால் உன் மாணவனை அடிப்பேன் என்ற தனது வாதத்தில் இப்போதும் மாற்றமில்லை என்று முழங்கிக் கொண்டிருக்கிறார். தன் படத்திற்கு தியேட்டர் கிடைக்காததால் குமுறிக் கொண்டிருக்கிறார் விஜய். எனவே "சீமான் இயக்கத்தில் விஜய்யின் கோபம்" என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறார்களாம் இருவரும். மாற்றம் இதில் மட்டும் இல்லை. இன்னொரு முக்கியமான விஷயத்திலும் இருக்கிறது என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். அது? முன்பு இப்படத்தை தயாரிப்பதாக இருந்த தாணு என்ன காரணத்தாலோ கை மாற்றிவிடத் துடிக்கிறாராம். தாணு போனாலும் 'கோபத்தை' விடக் கூடாது என்ற முடிவிலிருக்கிறார்களாம் சீமானும், விஜய்யும். யார் மேல இம்புட்டு கடுப்புனு சொல்லியா தெரியணும் நம்மாளுங்களுக்கு......
Tuesday, December 28, 2010 | 0 comments

மன்மதனுக்கு பாராட்டு அம்பு எய்த ரஜினி!


கமல்-த்ரிஷா ஜோடியாக நடித்த 'மன்மதன் அம்பு' நேற்று வெளியானது. இப்படத்தை நடிகர்-நடிகைகளுக்கு கமல் நேற்று மாலை பிரத்யேகமாக திரையிட்டுக் காண்பித்தார். ஆழ்வார்பேட்டையில் தனது ராஜ்கமல் ப்ரிவியூ திரையரங்கில் இந்தப் படம் திரையிடப்பட்டது. ரஜினி கலந்துக் கொண்டு படம் பார்த்தார். படம் முடிந்ததும் கமல் கையை பிடித்துக் கொண்டு அபாரமாக நடித்துள்ளீர்கள் என்று ரஜினி பாராட்டினார். வசனம் பிரமாதமாக இருப்பதாக சொன்னார். குறிப்பாக ஒரு காட்சியில் த்ரிஷாவிடம் மாதவன் 'இந்த உலகத்தையே உன் காலடியில் போடுறேன்' என்பார். அதற்கு த்ரிஷா, "உலகத்தை யாரும் யார் காலடியிலும் வைக்க வேண்டாம். அது அங்கேதான் இருக்கிறது. பிச்சைக்காரர்கள் காலடியில் கூட உலகம் இருக்கிறது" என்று பதில் அளிப்பார். இந்த வசனம் தன்னை மிகவும் கவர்ந்ததாக ரஜினி 
சொன்னார். இன்னொரு இடத்தில் வீரத்தின் அடுத்த கட்டம் என்ன தெரியுமா? மன்னிக்கிறது.
 வீரத்தின் உச்சக்கட்டம் என்ன தெரியுமா? அஹிம்சை என்று கமல் பேசும் வசனமும் ரஜினியை ஈர்த்தது. கைதட்டி ரசித்தார். ரஜினியோடு இயக்குநர் கே.பாலச்சந்தர், நடிகர்கள் பிரபு, பார்த்திபன் உள்ளிட்ட பலரும் 'மன்மதன் அம்பை' பார்த்து ரசித்தனர். மனச குறிபார்த்து அடிச்ச அம்பாச்சே....ஆனந்த தையல் போட்டுக்கோங்க...!
Tuesday, December 28, 2010 | 0 comments

மீண்டு வந்த விஜய்! பொங்கலுக்கு காவலன் ரீலிஸ்!!

Written By Raveendran on Sunday, December 26, 2010 | Sunday, December 26, 2010

காவலன் படம் தொடர்பான வழக்குகளில் இருந்து மீண்டு வந்திருக்கிறார் நடிகர் விஜய்.  காலனுக்கு தடை கோரி கோகுலம் சிட்பண்ட்ஸ் நிறவனம் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தது. அதில், `பாடி கார்ட் என்ற மலையாள படத்தை தயாரிப்பதற்காக நிதி கேட்டு ஜானி சகரிகா சினிமா ஸ்கொயர் நிறுவனம் எங்களை அணுகியது. அதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்துக்கு ரூ.3.90 கோடி கடன் வழங்கினோம். அப்போது `பாடி கார்டு படத்தின் பிறமொழி பதிப்புரிமையை எங்களுக்கு தரவேண்டும் என்று கேட்டோம். அதற்கான ஒப்பந்தமும் போடப்பட்டது.  தற்போது தயாரிக்கப்பட்டுள்ள `காவலன் என்ற சினிமா, `பாடி கார்ட் படத்தின் கதையை கொண்டதாகும். `பாடி கார்ட் கதையை மற்ற மொழிகளில் தயாரிக்கும் உரிமையை கோகுலம் நிறுவனம்தான் பெற்றுள்ள நிலையில், அந்த கதையை தழுவிய `காவலன் படத்தை ரோமேஷ்பாபு தயாரித்துள்ளார். மேலும் நாங்கள் கொடுத்த தொகையில் மீதி ரூ.1.88 கோடியை ஜானி சகரிகா நிறுவனம் தரவில்லை. எனவே அந்தத் தொகையை திருப்பித்தர உத்தரவிட வேண்டும். எங்களிடம் பதிப்புரிமை உள்ளதால் மற்றவர்கள் அந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.
http://tkada.com/wp-content/uploads/2010/12/Vijay-Launched-Kavalan-Movie-Triler-In-USA.jpg
இந்த மனுவை நீதிபதி ராமசுப்பிரமணியன் விசாரித்தார். அதன் பின்னர் அவர் பிறப்பித்த உத்தரவில், `காவலன் படம் வெளியிடப்பட்டு விட்டால், பாக்கி தொகையை திருப்பி செலுத்த வேண்டிய பொறுப்பு, ஜானி சகரிகா நிறுவனத்துக்கு இருக்காது. அதனால் கோகுலம் சிட்பண்ட்ஸ் நிறுவனத்துக்கு பாதிப்பு ஏற்படும். அதே நேரத்தில் ரூ.30 கோடி செலவழித்து `காவலன் படம் தயாரிக்கப்பட்டு இருப்பதால் குறித்த நேரத்தில் படத்தை வெளியிடாவிட்டால் தனக்கு பாதிப்பு ஏற்படும் என்று ரோமேஷ்பாபு தரப்பில் கூறப்பட்டு உள்ளது. எனவே பாக்கித் தொகையான ரூ.1.88 கோடியை திருப்பித் தருவதற்கான உத்தரவாதத்தை தரவேண்டும். அந்த உத்தரவாதத்தின் அடிப்படையில் `காவலன் படத்தை வெளியிடலாம், என்று கூறியுள்ளார்.
பொதுவாக ஒரு படம் ரீலிசுக்கு தயாராகியும் பெட்டிக்குள் முடங்கிக் கிடப்பது வே‌தனையிலும் வேதனையான விஷயம். காவலன் படத்திற்கு ஆரம்பம் முதலே ஏராளமான எதிர்ப்புகள், வழக்குகள், பஞ்சாயத்துக்கள் நடந்து வருகின்றன. படத்தை ரீலிஸ் செய்ய விடாமல் தடுப்பதாக குற்றச்சாட்டுக்களும் எழுந்தன. அரசியல் பிரவேசத்துக்கு நடிகர் விஜய் தயாராகி வருவதாலும், அவர் எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வில் சேரப்போவதாக வெளியான தகவல்களாலும் காவலனுக்கு கூடுதல் குடைச்சல் கொடுக்கப்படுவதாகவும் தகவல்கள் ‌வெளியாகியிருந்த நிலையில், ஒருவழியாக பஞ்சாயத்துக்களில் இருந்து மீண்டு வந்திருக்கும் காவலனை பொங்கல் தினத்தில் ரீலிஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்
Sunday, December 26, 2010 | 0 comments

பிக்பாக்கெட் திருடனாக நடிக்கும் கார்த்தி

தெலுங்கில் ஹிட்டான ‘விக்ரமார்க்குடு’ படம் தமிழில் ‘சிறுத்தை’ என ரீமேக் ஆகிறது. ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ ஸ்கிரீன் தயாரிக்கும் இந்த படத்தில், கார்த்தி இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அவர் ஜோடி, தமன்னா. சந்தானம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 'சிறுத்தை' படத்தில் பிக்பாக்கெட் திருடனாக கார்த்தி, சந்தானம் நடிக்கின்றனர். மற்றொரு வேடத்தில் ஐ.பி.எஸ் அதிகாரியாக கார்த்தி நடிக்கிறார். பிக்பாக்கெட் கதாபாத்திரத்தில் வரும் கார்த்தி, சந்தானம் காம்பினேஷன் செம காமெடியாக அமைத்துள்ளதாக சிறுத்தை படத்தின் இயக்குனர் சிவா தெரிவித்துள்ளார்.
Sunday, December 26, 2010 | 0 comments

என்னுடைய படத்தில் விஜய் நடிப்பது உறுதி! - சீமான்

பகலவன் படத்தின் சூட்டிங் ஜனவரியில் தொடங்க உள்ளது. தம்பி, வாழ்த்க்கள் உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கும் டைரக்டர் சீமான், அடுத்து இயக்கவிருக்கும் படம் பகலவன். கலைப்புலி தாணு தயாரிப்பில், நடிகர் விஜய் நடிக்கும் இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகளில் இருக்கும்போதுதான் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சீமான் கைது செய்யப்பட்டார். சிறைக்குள் இருந்தபடியே பகவலன் படத்திற்கான திரைக்கதையை எழுதி முடித்துவிட்ட சீமான், சமீபத்தில் விடுதலையானார். இதையடுத்து அடுத்தகட்ட பணிகளில் பிஸியாகி விட்டார் அவர். பகலவனில் நடிக்கும் மற்ற கலைஞர்கள் தேர்வில் முழு வீச்சில் இருக்கும் சீமான், ஜனவரியில் பகவலன் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளாராம்.

புதிய படம் குறித்து சீமான் அளித்துள்ள பேட்டியொன்றில், தம்பி படத்தைப் போன்று புரட்சிகமான படமாக உருவாகப்போகும் பகவலன், தம்பி விஜய்க்கு மாறுபட்ட அனுபவமாக இருக்கும், என்று கூறியிருக்கிறார்
Sunday, December 26, 2010 | 0 comments

பத்து வயதைக் கடந்த தனுஷ்!

Written By Raveendran on Thursday, December 23, 2010 | Thursday, December 23, 2010


ஒல்லியான உருவம், சுமாரான அழகு என தனது சினிமா பயணத்தைத் தொடங்கிய தனுஷ், இந்த வருடத்துடன் சினிமாவில் 10 வயதைக் கடக்கிறார். 'துள்ளுவதோ இளமை' படத்தில் அறிமகமான தனுஷுக்கு அவர் நடித்த முதல் படங்களும் சூப்பர் ஹிட்டானது. முதலில் இவரைக் கண்ட சிலர் விளையாட்டுப் பிள்ளை என்று எண்ணியது உண்டு. இந்த பத்து வருடத்தில் சூப்பர் ஸ்டாரின் மாப்பிள்ளையானதும் 2 குழந்தைகளின் தந்தை என்பதும் வியக்கத்தக்க விஷயமாயிருந்தாலும், இது அவரின் உழைப்பிற்கும் சின்சியாரிட்டிக்கும் கிடைத்த உத்திரவாதம் என்றே சொல்லலாம். ஆனால் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் இவரும் இடம் பிடித்துள்ளார். நல்லா சாப்பிட்டு ஒடம்ப தேத்துங்க... பத்து வருஷத்துக்கு முன்னாடி பாத்த மாதிரியேதான் இன்னும் இருக்கீங்க...
Thursday, December 23, 2010 | 0 comments

கடுமையாக உழைத்த சிறுத்தை!


கார்த்தி, தமன்னா ஜோடிகளாக நடிக்கும் படம் 'சிறுத்தை'. சிவா இயக்குகிறார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் நடந்தது. விழாவில் சூர்யா பங்கேற்று பேசியதாவது:- கார்த்தி ஒன்றரை வருடங்களாக போலீஸ் கெட்டப்பில் நடிக்கக் கடுமையாக உழைத்தார். ட்ரெய்லர், பாடலைப் பார்க்கும் போது அவரது சிறப்பான உழைப்புத் தெரிகிறது என்றார். கார்த்தி பேசும்போது, அண்ணன் சூர்யா, 'காக்க காக்க', 'சிங்கம்' படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவர் சாயல் எனக்கு வராமல் இருக்கக் கவனமாக இப்படத்தில் நடித்துள்ளேன். தமன்னாவுடன் நடிக்கும் இது இரண்டாவது படம். ரசிகர்களுக்குப் பிடித்து விட்டால் அவர்கள் படத்துக்குள் எளிதாக நுழைந்து விடுவார்கள் என்று அப்பா சொல்வார். அப்படித்தான் தமன்னா மீண்டும் எனக்கு ஜோடியாகியுள்ளார் என்றார். இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், லிங்குசாமி, கௌதம் மேனன், ஜெகன்நாத், விஜய், ராஜேஷ், 'ஜெயம்' ராஜா, பிரபு, இசையமைப்பாளர் வித்யாசாகர், நடிகை தமன்னா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 
Thursday, December 23, 2010 | 0 comments

அந்தப் பாடலை நீக்க முடியாது: கமல்ஹாசன்


அவ்வை சண்முகி', 'வசூல்ராஜா எம்பிபிஎஸ்', 'தெனாலி' போன்ற படங்களைப் போலவே இந்தப் படத்திலும் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது என்ற அக்மார்க் உத்தரவாதத்துடன் திரைக்கு வரத் தயாராகியிருக்கும் 'மன்மதன் அம்பு' படத்தில் கமல்ஹாசன் எழுதிய பாடல் ஒன்று சர்ச்சைக்குள் சிக்கியது. பெண் ஒருத்தி, வரலட்சுமியிடம் வரம் கேட்கும் விதமாக அந்த பாடல் வரிகளை அமைத்துள்ள கமல்ஹாசன், இந்தப் பாடலின் மூலம் காமம் முடிந்த பிறகு கரெக்டாக கழுவிக்கொள்ள வேண்டும் என்றும் கற்றுக்கொடுக்கிறார். கமல்ஹாசனின் இந்தப் பாடலுக்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததுடன், பாடல் வரிகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளனர். பெரிய நிறுவத்தின் தயாரிப்பு. பெரிய நடிகரின் படம் என்றெல்லாம் பார்க்காமல் கண்டனக் குரல்கள் எழுந்தன. அதேநேரம் படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், 'மன்மதன் அம்புக்கு' யு சான்றிதழ் (சிறுவர்கள், பெரியவர்கள் என அனைத்துத் தரப்பினரும் பார்ப்பதற்கு ஏற்ற படம்) வழங்கப்பட்டு விட்டது. இந்நிலையில், சர்ச்சைக்குரிய பாடலை நீக்க முடியாது என்று கமல்ஹாசன் ஆணித்தரமாக கூறியிருக்கிறார். கொச்சியில் நடந்த 'மன்மதன் அம்பு' பிரமோஷன் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்துக் கொண்டு ரசிகர்களிடையே பேசினார். அப்போது அவர், 'மன்மதன் அம்பு' படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை நீக்க வேண்டும் என்று சில அமைப்புகள் கூறி வருகின்றன. ஆனால் சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டு விட்ட நிலையில் எந்த காரணத்தைக் கொண்டும் அந்தப் பாடலை நீக்க முடியாது, என்று கூறினார். கத்திரிக்கிட்ட தப்பிச்சது காவிக்கிட்ட மாட்டுமா என்ன.....?


Thursday, December 23, 2010 | 0 comments

சூர்யா 1ஸ்ட் ரேங்க்! விஜய் 2ன்ட் ரேங்க்!!


நடிகர் ரஜினிகாந்த் முன்னிலையில் 4 மாநில சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி நடக்கிறது என்றார் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார். சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது: தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய 4 மொழி படக் கலைஞர்களும் பங்கேற்கும் செலிப்ரிட்டி கிரிக்கெட் லீக் (சிசிஎல்) போட்டி வரும் ஜனவரி மாதம் 22, 23, 29, 30 ஆகிய 4 நாட்கள் நடக்க உள்ளது. தமிழ் நடிகர்கள் கிரிக்கெட் டீமுக்கு 'சென்னை சூப்பர் ஸ்டார்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த டீமின் ஐகான் வீரர்களாக சூர்யா, விஜய் இருப்பார்கள். அவர்களிடம் இது தொடர்பாக பேச்சு நடக்கிறது. சிம்பு, கார்த்தி, ஜெயம் ரவி, தனுஷ், ராதாரவி, ஷாம், அப்பாஸ், ஜெய், அம்சவர்தன், ரமணா, விக்ராந்த், ஜீவா, ஆர்யா, மாதவன், சாந்தனு உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் இதில் பங்கேற்கின்றனர். நானும் பங்கேற்கிறேன், என்றார். கேட்பதற்கு சந்தோஷமாக இருந்தாலும் அனைவருக்கும் ஒரு பொறி தட்டியது. இந்த அணியின் 'செலிப்ரிட்டி பிளேயர்கள்' சூர்யா மற்றும் விஜய் என்று குறிப்பிட்டார். ஏதோ முதல் முறை தவறி சொல்லியிருப்பார் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் திரும்பத் திரும்ப நடிகர்களின் பெயர்களை உச்சரிக்கும் போதும் சரத்குமார் தனது 'ஆர்டரில்' முதலிடத்தை சூர்யாவுக்கும் இரண்டாமிடத்தை விஜய்க்கும் தர பத்திரிகையாளர்களுக்கே வியப்பு. விஜய் சீனியர் மட்டுமல்ல, ரஜினிக்கு அடுத்து அதிக ரசிகர்களை, அதுவும் பக்கா அரசியல் செட்டப்போடு வைத்திருப்பவர். சமீபத்தில் சில படங்கள் அவருக்கு சரியாகப் போகவில்லை என்றாலும், ரசிகர் பலத்தில், வர்த்தகத்தில் அவர் குறைந்துவிடாத நிலையில், நடிகர் சங்கமே விஜய்யை இரண்டாம் இடத்துக்கு தள்ளுகிறதோ என்ற முணுமுணுப்புகளைக் கேட்க முடிந்தது. முன்னணி நடிகர்களுக்கு இந்த ரேங்க் பிரச்சினை ரொம்ப முக்கியம். சரத்குமார் தவறுதலாக இதைச் சொன்னாரா, அல்லது மனதிலிருப்பதைச் சொன்னாரா என்று அவர்தான் விளக்க வேண்டும், என்றார் சரத்துக்கு நெருக்கமான ஒரு பத்திரிகையாளர். ஆடுறதுக்கு முன்னாடியே தளபதிய டக்-அவுட் பண்ணிட்டாரே.....

Thursday, December 23, 2010 | 0 comments

கார்த்தி நண்பர் ??? தமன்னாவின் அதிரடி பேட்டி!

Written By Raveendran on Friday, December 17, 2010 | Friday, December 17, 2010

நான் யாரையும் காதலிக்கவில்லை, தன்னுடன் நடிக்கும் சக ஹீரோக்களை, என்னுடைய நண்பர்களாகத் தான் பார்க்கிறேன் என்று நடிகை தமன்னா கூறியுள்ளார்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgITh74jGWK7XtLwYwjWQq5TvGLezD8iDXF0XAx5T63M_QLD0Bcw_xnnbIXk2HBD-OSKzt3jd1qUIG5GgBMfI1R1pikKvFjSpo5VPF9hqEmnAIcfg2N3e286HRUKSYFKuwLax8R6GbkHDY/s400/Tamanna-and-Karthik-in-Shiruththai-Tamil-Movie-Photo+%25284%2529.jpg

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வரும் தமன்னா தமிழில் கார்த்தியுடன் சிறுத்தை, தனுஷ் உடன் வேங்கை உள்ளிட்ட படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே கார்த்தி-தமன்னா நடித்த பையா படம் சூப்பர் ஹி்ட்டானது. இப்படம் வந்த தருணத்தில் இருவரும் காதலிப்பதாக செய்திகள் வந்தன. அந்த செய்தி இப்போதும் தொடர்கிறது. ஆனால் இச்செய்தியை இருவரும் மறுத்தனர்.

இதனிடை‌யே தமன்னா அளித்துள்ள பேட்டியில், நான் ஏற்கனவே இதுபற்றி நிறைய கருத்துக்கள் சொல்லிவிட்டேன். ஆனாலும் இதுபோன்று தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கிறது. எனக்கும், கார்த்திக்கும் இடையே காதல் எதுவும் கிடையாது. அவர் ஒரு சிறந்த மனிதர் மற்றும் சகநடிகர். எனக்கும், அவருக்கும் இடையே இருப்பது நல்ல நட்பு மட்டுமே. இந்த நட்பு பையா படத்திற்கு முன்பு இருந்தே தொடர்கிறது. அது இனிமேலும் தொடரும் என்றார். என்னைப்பொறுத்த வரை சிறுத்தை படத்தில் கார்த்தியுடன் நடிக்கும் சகநடிகை அவ்வளவுதான் மற்றபடி வேறு ஒன்றுமில்லை என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்
Friday, December 17, 2010 | 0 comments

விஜய் அரசியலுக்கு வருவாரா? - எஸ்.ஏ.சந்திரசேகர்

http://chennaionline.com/film/Photofeature/images/Kavalan-movie/Kavalan_07.jpgநடிகர் விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வர மாட்டார். அரசியல் மேடைகளிலும் ஏற மாட்டார், என்று விஜய்யி்ன் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதியில் உள்ள சூட்டிங் ஸ்பாட்களை பார்வையிட வந்த டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,  1982ல் வெளியாகி வெற்றிபெற்ற சட்டம் ஒரு இருட்டறை படத்தை இந்த காலத்துக்கு ஏற்றாற்போல மாற்றி சட்டப்படி குற்றம் என்ற பெயரில் எடுத்து வருகிறேன். முதல் பாதி சென்னையிலும், பின் பாதி காடுகள் நிறைந்த பகுதிகளிலும் காட்சிகள் வருகின்றன. அத‌னால் சூட்டிங் ஸ்பாட்டை தேர்வு செய்வதற்காக வந்துள்ளேன், என்றார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், எனக்கு காமராஜரைத் தெரியும், காங்கிரசை தெரியாது, எம்.ஜி.ஆரை தெரியும், அ.தி.மு.க.வை தெரியாது. தி.மு.க.வை தெரியும் கலைஞரை தெரியாது. தே.மு.தி.க.வை தெரியும் விஜயகாந்தை தெரியாது. மக்களுக்கு நல்லது செய்யும் தலைவர்களை தெரியும். அவர்கள் இருக்கும் கட்சியை எனக்கு தெரியாது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாகத்தான் சந்தித்தேன். அரசியல் கட்சியில் இணையும் எண்ணம் கிடையாது.  ஆனால் நான் அரசியலுக்கு வர வாய்ப்பு உள்ளது. அதை நான் மறுக்கவில்லை. மக்களுக்கு நல்லவற்றை செய்யும் கட்சிக்காக வரும் தேர்தலில் பிரச்சாரம் செய்யவும் வாய்ப்புகள் உள்ளது, என்றார்.
http://4.bp.blogspot.com/_ZCAwgWwQSdI/TJW4PNFcj5I/AAAAAAAAHzw/bxCPn12nn-g/s1600/Vijay_Kavalan_Pressmeet_5.jpg 
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? என்ற கேள்விக்கு, தற்போது விஜய் கண்டிப்பாக நேரடியாக அரசியலுக்கு வரமாட்டார். அரசியல் கட்சியும் தொடங்க மாட்டார். அவர் அரசியல் மேடைகளிலும் ஏறமாட்டார். அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும். அதற்கு அஸ்திவாரம் நன்றாக இருக்க வேண்டும். தற்போது அஸ்திவாரம் போட்டு வருகிறேன், என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில், மக்களுக்கு உதவிகள் செய்வதற்காகத்தான் மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டது. மக்கள் இயக்கத்தின் மூலம் ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளை நடிகர் விஜய் செய்து வருகிறார். ரசிகர்களின் திருமண விழாவுக்கு சென்றால்கூட அங்கு ஏழைகளுக்கு ஏதாவது உதவிகள் செய்தால்தான் விஜய் வருவார் என்று கூறிவருகிறேன். இவ்வாறு ஏழைகளுக்கு உதவி செய்வதை ஊக்குவித்து வருகிறேன், என்றார்
Friday, December 17, 2010 | 0 comments

சூர்யா ஷங்கருக்கு போட்ட கண்டிஷன்!

கையிலிருந்த நெய்ய கீழே கொட்டிவிட்டுட்டு இப்ப வெண்ணையத் தேடி அலையுறாப்புல ஆகிப்போச்சு ஷங்கரின் நிலைமை. கையிலிருந்த விஜய்யை காவு கொடுத்துவிட்ட ஒரே காரணத்தால் கால்ஷீட் தேடி இவரே மூவ் பண்ண வேண்டியிருக்கிறது முன்னணி நடிகர்களை. த்ரி இடியட்ஸ் ரீமேக்கில் ஏற்பட்ட பிரச்சினைக்குப் பிறகு ஷங்கர் லேண்ட் ஆன முதல் இடம் சூர்யா வீடுதான். ஷங்கர் இயக்கத்தில் நடிப்பதென்றால் யாருக்குக் கசக்கும்? சந்தோஷமாக ஓ.கே சொன்ன சூர்யா அடுத்தடுத்து சொன்ன இரு கண்டிஷன்கள்தான் ஷங்கரை ஆடிப்போக வைத்ததாம். நம்பர் 1- உடனே என்னால் கால்ஷீட் தர முடியாது. நம்பர் 2- இந்தப் படத்தில் நான் நடிக்கணும் என்றால், தெலுங்கிலும் இந்த கேரக்டரை நானே செய்யணும் என்றாராம் சூர்யா. 
http://www.chennai365.com/wp-content/uploads/Director/Shankar.jpgஅங்குதான் ஜர்க் ஆகியிருக்கிறார் ஷங்கர். ஆந்திராவிலும் தன் சக்தியைக் காட்ட வேண்டும் என்று நினைக்கிறார் சூர்யா. இதற்கு முன்பு இவர் நடித்த படங்கள் அங்கு சூப்பர் ஹிட் ஆகியிருப்பதால்தான் இப்படி ஒரு ஆசை அவருக்கு. ஆனால் இந்த கேரக்டரில் மகேஷ்பாபு என்ற பெரிய ஹீரோவை நடிக்க வைக்க விரும்பி, பெரிய அட்வான்சையும் கொடுத்திருக்கிறது ஜெமினி லேப். இந்த நேரத்தில் மகேஷ்பாபு வேண்டாம் என்றால் கூட பரவாயில்லை. கொடுத்த அட்வான்சை எப்படித் திருப்பி வாங்குவது? "யோசிச்சு சொல்லுங்க" என்று சொல்லியனுப்பியிருக்கிறாராம் சூர்யா. அப்டிபோடு.. கொஞ்சம் குனிஞ்சா பச்ச குதிர விளையாடிடுவாங்களே......
Friday, December 17, 2010 | 0 comments

மீண்டும் உலகின் செக்ஸியான பெண்ணாக காத்ரீனா!

Written By Raveendran on Wednesday, December 15, 2010 | Wednesday, December 15, 2010

உலகின் மிகவும் செக்ஸியான பெண்ணாக நடிகை காத்ரீனா கைப் மீண்டும் தேர்வாகியுள்ளார். இவ்வாறு அவர் தேர்வாவது இது தொடர்ச்சியாக 3வது முறையாகும். ஹாலிவுட்டில் கலக்கி வரும் ப்ரீடா பின்டோ, பிரியங்கா சோப்ராவை அவர் போட்டியில் எதிர்கொண்டு பின் தள்ளியுள்ளார். லண்டனைச் சேர்ந்த ஈஸ்டர்ன் ஐ என்ற பத்திரிக்கையின் கருத்துக் கணிப்பில்தான் காத்ரீனாவுக்கு இந்தப் பெருமை கிடைத்துள்ளது. உலகின் ஹாட்டான பெண்கள் பட்டியலை 'ஈஸ்டர்ன் ஐ' வெளியிட்டுள்ளது. அதில் தொடர்ச்சியாக 3வது முறையாக காத்ரீனா முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதுகுறித்து காத்ரீனா கூறுகையில், ஈஸ்டர்ன் ஐ பத்திரிக்கையின் உலகின் செக்ஸியான பெண்கள் பட்டியலில் மூன்றாவது முறையாக நான் முதலிடத்தைப் பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு இங்கிலாந்து மிகவும் விசேஷமான ஒரு இடமாகும். அந்த நாட்டிலிருந்து வெளியாகும் பத்திரிக்கை என்னை செக்ஸியான பெண்ணாகத் தேர்வு செய்திருப்பது கூடுதல் விசேஷமாகும். 
எனக்காக வாக்களித்த அனைவருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன் என்றார். சல்மான் கானுடன் மிகவும் நெருக்கமாக இருந்த காத்ரீனா இப்போது அதைத் துண்டித்து விட்டதாக பாலிவுட்டில் பேசப்படுகிறது. இதையடுத்து அவர் பிற நடிகர்களுடன் அதிகம் ஜோடி சேர ஆரம்பித்துள்ளார்.
http://dhangout.com/bollywood/celebs/basu/photos/main.jpghttp://www.actressbook.com/wp-content/uploads/2010/11/Priyanka-Chopra-marriage.jpgஇப்பட்டியலில் பிரியங்கா சோப்ரா 2வது இடத்தைப் பிடித்துள்ளார். பாகிஸ்தானிய நடிகையான மேவிவ் ஹயாத் 8வது இடத்தைப் பிடித்துள்ளார். நம்ம  கரீனா கபூர் 7வது இடம் பிடித்துள்ளார். பிபாஷா பாசு 3வது இடத்தையும், ப்ரீடா பின்டோ 4வது இடத்தையும் பிடித்துள்ளனர். சமீபத்தில் மகேஷ் பூபதியைக் கைப்பிடித்த லாரா தத்தாவுக்கு 5வது இடம் கிடைத்துள்ளது. ஹாங்காங்கில் பிறந்தவரான காத்ரீனா கைப், காஷ்மீரி தந்தைக்கும், இங்கிலாந்து தாய்க்கும் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது குழந்தைப் பருவத்தை ஹவாயிலும், பின்னர் இங்கிலாந்திலும் கழித்தவர் அவர்.
லண்டனில் நகைக் கடை விளம்பரத்திற்காக நடித்துக் கொண்டிருந்த போது அவரைப் பார்த்த இயக்குநர் கைசாத் குஸ்தாத், பாலிவுட்டுக்கு அழைத்து வந்து பூம் படம் மூலம் அறிமுகப்படுத்தினார். ஹாட்ரிக் அடிச்சிட்டீங்க!
Wednesday, December 15, 2010 | 0 comments

சினேகா இடுப்பை கிள்ளிய ஈ.மு.கோழி!

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஈரோடு, பெருந்துறை பகுதியில் ஈமு.கோழிப்பண்ணை திறப்பு விழாவிற்கு போயிருந்த நடிகை சினேகாவை ரசிகர் ஒருவர் இடுப்பில் கிள்ளி இம்சைக்கு ஆளான செய்தியை படித்திருப்பீர்கள்! அந்த ரசிகர் மீது சினேகா அவ்வளவு கோபம் அடைய காரணம் என்ன? என்ற கேள்விக்கு சற்று தாமதமாக பதில் இப்பொழுது கிடைத்திருக்கிறது.

அதாகப்பட்டது சினேகாவை ரசிகர் இடுப்பில் கிள்ளுவதற்கு முன்பாக ஈமு.கோழிப்பண்ணையை ரிப்பன் வெட்டி திறந்துவிட்டு உள்ளே போனபோது, ஒரு ஈமு.கோழி ஒன்றும் தன் அலகால் பதம் பார்த்திருக்கிறது. அந்த எரிச்சலில் பண்ணைக்குள்ளே போகவே பயந்து திரும்பியிருக்கிறார் சினேகா. இந்நிலையில் ரசிகர் ஒருவரும் தன் கைகளால் இடுப்பை கிள்ளி துன்புறத்த சினேகாவிற்கு வந்ததே கடுப்பு. ஈமு.கோழியை ஒன்றும் செய்ய முடியாத நட்பு நாயகி, தன் ஆட்கள் மூலம் அந்த ரசிகரிடம் விரோதம் காட்டி வெளுத்து கட்டியிருக்கிறார். ஆஃப்தரெக்கார்டாக கோழியை மன்னித்த மாதிரி ரசிகரையும் மன்னித்து இருக்கலாம் சினேகா......
Wednesday, December 15, 2010 | 0 comments

'ஏழாம் அறிவு' மலையேரும் Bill !

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVX6Godjp1LGbDvsYckMdBLkAC3WojLtMOElnLX2ngvOFEF6D0NAhh33NyQZ3YCA4HG-M7yqAZlXIRfnxeATuZI5KYOBgSoVhcEGlxXI6LKDlFtw60jkAVvwfPdgeN_QHBRBwSBU8IQzMo/s1600/surya_7aam_arivu-stills-1.jpgதொழிலாளர்களின் கூலி, தங்குமிடம், லொக்கேஷன் செலவு இப்படி பல விதங்களில் கணக்குப் போட்டுப் பார்த்தாலும் தினந்தோறும் சினிமா படப்பிடிப்புக்கு ஆகும் செலவு ஒன்றரை லட்சம் அல்லது இரண்டு லட்சங்கள் ஆகும். இதுதான் பொதுவான ஃபார்முலா. ஆனால் 'ஏழாம் அறிவு' படத்தின் தினச்செலவு ஆவரேஜாக ஆறு லட்சத்தைத் தாண்டுகிறதாம். எல்லா செலவும் செட்டுக்குள் முடங்கிவிடுவதாகவும், கேரவேன்களில் கரைந்துவிடுவதாகவும் கூறுகிறார்கள் தயாரிப்பு நிர்வாகிகள். 
http://www.oneasianworld.com/wp-content/uploads/2010/11/7aam-Arivu-Pic1.jpg
பொதுவாக ஒரு படத்தை அறுபது நாட்கள், அல்லது தொண்ணூறு நாட்களில் எடுத்து முடிப்பார்கள். இந்தப் படத்தை பொறுத்தவரை 200 நாட்கள் ஆகும் என்று கூறியிருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ். போகிற வேகத்தைப் பார்த்தால் அது இன்னும் கூடும் என்று கணக்குப் போடுகிறார்கள். ஆனால் இந்தப் படத்தை வியாபார ரீதியாக அணுகாமல் மிகுந்த ஆர்வத்தோடு அணுகி வருகிறாராம் தயாரிப்பாளர் உதயநிதி. அதனால்தான் எவ்வளவு பில் கொடுத்தாலும், ஓ.கே என்று கையெழுத்திடுகிறாராம் அவர். 
Wednesday, December 15, 2010 | 0 comments

காவலனில் வடிவேலுவின் காந்தக் கோட்!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkw3V9PC7B_Uj5vrPm5xy7fkxYvXglBoK6T7JflqE0hAs_zzb-Aybfu6kOYhmB2xtXFN7GsD7p6HYPaHzgMOuNFXJ4HvYASESk8SIYRMnhVUT1H7y4W3g94112EZgyONbCoxrFfja2nLY1/s1600/kavalan_unseen_stills_02.jpg
காவலன் படத்தில் விஜய்யை விடவும் வடிவேலுவைதான் அதிகம் எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள். ஏனென்றால் இதற்கு முன்பு பிரண்ட்ஸ் படத்தில் வடிவேலுவை வைத்துக் கொண்டு சித்திக் ஏற்படுத்திய சிரிப்போற்சவம், இன்னும் சின்னத் திரைகளில் கொட்டமடித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் காமெடி போர்ஷனை மட்டும் நல்ல ரேட்டுக்கு விலை பேசி வருகிறார்களாம் சேனல்காரர்கள். அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வது போலவே புதுப்புது ஸ்டைலில் வரப் போகிறார் வடிவேலு. ஒரு காட்சியில் இவர் உடல் முழுக்க காந்தத்தால் ஆன கோட் அணிந்துக் கொண்டு வருவாராம். யேய்... எனக்கு எதிரி எவனாயிருந்தாலும் அவன் கையில் வச்சிருக்கிற ஆயுதம் என்னை தாக்குவதற்கு முன்னாடியே என் கோட்ல பறந்து வந்து ஒட்டிக்கும். எப்படி நம்ம ஐடியா? என்று மார்தட்டுவாராம் வடிவேலு. அந்த நேரம் பார்த்து ஒரு தண்ணி லாரி அந்த பக்கம் வர, லாரியின் பாடி இரும்பும், வடிவேலு பாடியின் காந்தமும் ஒட்டிக் கொள்ள, லாரியோடு லாரியாக பறப்பாராம் வடிவேலு. யோசிக்கும் போதே பொத்துக் கொள்கிறதா சிரிப்பு? இவர் இப்படி என்றால், இதே மாதிரி ஸ்டைலில் ஒரு காட்சியை யோசித்து வைத்திருக்கிறார் விவேக். இது விஷால் நடிப்பில் பிரபுதேவா இயக்கப்போகும் பெயர் வைக்காத படத்திற்காக. சிக்ஸ்பேக் வயிற்றை காட்டி ஃபிகர்களை மடக்க வேண்டும் என்று பிளான் போடும் விவேக்கின் வயிற்றில் கேஸ் பலூனை கட்டி விட்டுவிடுவாராம் அவரது நண்பர் செல் முருகன். அப்புறம் என்ன? விவேக் அப்படியே அந்தரத்தில் பறக்க, மீண்டும் எப்படி தரையிறங்குகிறார் என்பது ஒரு காட்சி! கப்ஸா அடிச்சாலும் கலக்கலாத்தான்யா அடிக்கிறாய்ங்க......
Wednesday, December 15, 2010 | 0 comments

முதல்வர் கருணாநிதி நமீதாவுக்கு வைத்த பெயர்!

Written By Raveendran on Saturday, December 11, 2010 | Saturday, December 11, 2010

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjy62tA16L_6B2ecghKU4noN9URc7pJLV0KzF-wLHoeUFSdKE1vKuhWwkgbxBnYYpcr7dnI5s4Ts3MptPY9jaAZpA7nQ5yTJOUo0kZesEj983wkCklXjHW0Bl31WybH4QYPUCD3Jbmt2bw/s1600/Namitha+Hot+Still+(5).jpgமனோகரா படத்தில் கொடூரமான வில்லி கேரக்டருக்கு வசந்த சேனை என்று பெயர் சூட்டிய முதல்வர் கருணாநிதி, தனது இளைஞர் படத்தில் வில்லியாக நடிக்கும் நமீதாவுக்கு சேனை என்று பெயரிட்டிருக்கிறார். டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணாவின் 50வது படம் இளைஞன். முதல்வர் கருணாநிதி கதை, வசனத்தில், உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படம் பொங்கல் தினத்தில் ரீலிஸ் ஆகவிருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் முதல்வர் கருணாநிதி கருணாநிதி கலந்து கொண்டு இசை குறுந்தகடை வெளியிட்டார்.
இளைஞனை பார்த்து விட்டு "தமிழ் படம் எடுப்பேன்னு பார்த்தா ஒரு இங்கிலீஷ் படமே எடுத்திருக்கியே!" என்று சுரேஷ் கிருஷ்ணாவை முதல்வர் பாராட்டியிருக்கிறார். அந்த சந்தோஷத்தில் இருந்து மீளான அவர் இளைஞன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். படத்தின் கதைக்களம் கப்பல் கட்டும் துறைமுகமா இருந்தா நல்லாயிருக்கும்னு சொன்னார் கலைஞர். நிறைய செலவாகுமே என்றேன். பக்கத்திலிருந்த தயாரிப்பாளர் மார்ட்டின் செலவு ஒரு பிரச்சனையே இல்லை. கலைஞர் என்ன நினைக்கிறாரோ அது ஸ்கீரின்ல வரணும்னு சொன்னார். அப்புறம் என்ன? இந்த படம் இங்கிலீஷ் படம் மாதிரி பிரமாண்டமா வந்திருக்கு. பென்ஹர் மாதிரி படங்கள் எடுத்த ஸ்டுடியோவுல இளைஞன் எடுத்திருக்கோம். இங்கிருந்து எங்களோட வந்திருந்த டெக்னீஷியன்கள் அந்த ஸ்டுடியோவுல கால் வச்சதுமே கண் கலங்கிட்டாங்க, என்கிறார் சுரேஷ் கிருஷ்ணா.
கடைசி படம் ஓடவில்லை என்பதால் விரக்தியில் இருந்த நேரத்தில்தான் நமீதாவை இந்த படத்தில் நடிக்க அழைத்திருக்கிறார்கள். வில்லி கேரக்டர் என்பதும் சம்மதிக்காமல் இழுத்தடித்த நமீதாவை முதல்வர் கருணாநிதியே போன் செய்து அழைத்திருக்கிறார். முதல்வரின் அழைப்பென்றால் சும்மாவா.... மறு பேச்சேதும் பேசாமல் டபுள் ஓ.கே. சொல்லி களத்தில் இறங்கிவிட்டாராம் நமீ. இளைஞனில் நமீதாவின் கேரக்டர் பெயர் சேனை. மனோகரா படத்தில் வசந்த சேனை என்ற கொடூரமான வில்லியை காட்டிய கலைஞர், அந்த தாக்கத்தில்தான் நமீதா கேரக்டருக்கு இப்படியொரு பெயரை முதல்வர் வைத்தார் என்பது கூடுதல் தகவல்
Saturday, December 11, 2010 | 0 comments

மன்மதன் அம்பு படத்தில் கெஸ்ட் ரோலில் சூர்யா!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGV0yaWHx5fWSm2EiSdaqK2Mmxu6oUOUZ1wYtjKvY0x9aUr-nyooBulngZEaCdN2zGxYoI9vwdwWx4ZgS6OOml7Of7adSQXQgpXxFqrQBaEV0IGZGqMmeKU-LXWg12IZMad0mltQyvp70/s400/Surya+(15).jpgமற்ற ஹீரோக்கள் நடிக்கும் படங்களில் சிறப்புத்தோற்றம் இருந்து அழைத்தால், ஈகோ பார்க்காமல் சூர்யா ஒப்புக் கொள்கிறார். ஒருநாள் ஷூட்டிங் என்றாலும் ஒத்துழைப்பு தருகிறாராம். ஏற்கனவே ஜோதிகாவுடன் ‘ஜூன் ஆர்’ படத்தில் ஒரு காட்சியில் நடித்த அவர், ரஜினியின் ‘குசேலன்’ படத்திலும் வந்தார். இப்போது கமல்ஹாசனின் ‘மன்மதன் அம்பு’, ஜீவா நடிக்கும் ‘கோ’, பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷாலுடன் ‘அவன் இவன்’ ஆகிய படங்களிலும் சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ளார். ‘இது, என் நண்பர்களுக்காக நான் தரும் ஒத்துழைப்பு’ என்கிறார் சூர்யா.
Saturday, December 11, 2010 | 0 comments

3 இடியட்ஸில் விஜய்? சூர்யா?

http://www.extramirchi.com/wp-content/uploads/2008/08/surya-taare-zameen-par.jpgசூப்பர் மெயிலுக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்பது 'ஸ்லோ' ரயில்களின் வழக்கம். அப்படி ஒரு சூப்பர் மெயிலுக்கு வழி விட தயாராகியிருக்கிறார்கள் சில இயக்குநர்கள். அதிலும் சூர்யாவை வைத்து படம் எடுக்கப் போகிறோம் என்ற தெம்பிலிருந்தவர்களுக்கு ஏற்பட்ட திடீர் திருப்பம் இது. த்ரி இடியட்ஸ் படத்திலிருந்து விஜய் நீக்கப்பட்டுள்ளார். (அட... இத்தனை நாளும் அவரே விலகிட்டார்னுல்ல நினைச்சுகிட்டு இருந்தோம்) ஒரு சில பிரஷரின் காரணமாகத்தான் இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டியிருந்ததாம் ஷங்கருக்கு. இந்தப் படமே இனிமேல் வளரப் போவதில்லை. விஜய்க்கு இணையான நடிகர் இருந்தாலொழிய ஷங்கர் படப்பிடிப்புக்குப் போக மாட்டார் என்றெல்லாம் யூகங்கள் கசிய, விஜய்க்கு இணையான நடிகரான சூர்யாவை சந்தித்துப் பேசி முடித்துவிட்டாராம் ஷங்கர். ஏழாம் அறிவுக்குப் பிறகு கவுதம் மேனன், ஹரி போன்ற இயக்குநர்களுடன் மீண்டும் இணைந்து நடிக்கத் திட்டமிட்டிருந்த சூர்யா, எல்லாவற்றையும் தள்ளி வைக்க முன் வந்திருக்கிறாராம். 
Saturday, December 11, 2010 | 0 comments

இரு கும்பல்களின் மோதல்! , "மங்காத்தா"

Written By Raveendran on Wednesday, December 8, 2010 | Wednesday, December 08, 2010

http://thumbnails.truveo.com/0023/08/39/083955E3697E960971D57F.jpg'மங்காத்தா' பற்றிய தகவல்கள் தினந்தோறும் வெளிவந்து தல ரசிகர்களை மகிழ்வித்த வண்ணம் தான் உள்ளது. படப்பிடிப்பு நடைபெறும் இடங்கள், தேதி என அனைத்தும் ரசிகர்களை வந்தடைகின்றன. இரண்டு கும்பலுக்கு இடையே நடைபெறும் போராட்டத்தை மையப்படுத்தியதே 'மங்காத்தாவின்' கதை என தற்பொழுது தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பாங்காங்கில் நடைபெற்றது, தற்பொழுது சென்னையின் ஸ்டுடியோ ஒன்றில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு  டிசம்பர் 6 ம் திகதி துவங்கியுள்ளது.

 'மங்காத்தா' படத்தில் அஜித், அர்ஜூன், த்ரிஷா, சினேகா, கணேஷ் வெங்கட்ராம், பிரேம்ஜி அமரன், லட்சுமிராய் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தில் நடிக்கக் கடைசி நேரத்தில் நாகார்ஜுனா மறுத்துவிட்டதால், அவருக்குப் பதிலாக அர்ஜூன் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 
'விளையாடு மங்காத்தா' உட்பட இப்படத்தின் மூன்று பாடல்களுக்கும், படத்தின் தீம் இசைக்கும் யுவன் ஏற்கனவே இசை அமைத்து முடித்துவிட்டார். இப்படம் வரும் மே.1, அஜித் பிறந்தநாளன்று திரைக்கு வரவுள்ளது. 
Wednesday, December 08, 2010 | 0 comments

இழப்பை ஈடு செய்த சூர்யா!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHx4T2RPQpd1-Wvv3LYSn6s4rBGkvdWmsCD_epfM-87hV8YHgdH3GKGP13IT1QYcyViAe0ld5hW26mDKy6_ZXx4VxQ918JfhNgHSD3sE6AJ8VkTfKsoe306p-NmUu45D6gXIG-YC7qDn_F/s1600/Ratha_Sarithiram_Movie_Stills_02.jpgஒரு நடிகர் உயர செல்லச் செல்ல நடிப்பில் மட்டுமல்லாது, படத்தின் தயாரிப்பு, விநியோகம், விளம்பரம் என அனைத்து வித நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. படம் நன்றாக ஓடினால் நடிகருக்குப் பெயர், புகழ், பணம் என அனைத்தும் கிடைக்கிறது. அதே நேரத்தில் படம் தோல்வியடைந்தால் தயாரிப்பாளர், விநியோகிஸ்தர், திரையரங்கு உரிமையாளர்கள் என அனைவருக்கும் அந்நடிகர் இழப்பை ஈடு செய்ய வேண்டியிருக்கிறது. தயாநிதி அழகிரியின் 'க்ளவுட் நயன்' நிறுவனம் தீபாவளிக்கு வெளியிட்ட 'வ குவாட்டர் கட்டிங்' 2010ன் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்து, க்ளவுட் நயனுக்கு பெருத்த நஷ்டத்தை விளைவித்தது. இந்நிலையில் ராம்கோபால் வர்மா இயக்கத்தில், சூர்யா நடிக்க இந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட 'ரத்த சரித்திரம்' திரைப்படமும் தோல்வியைத் தழுவியுள்ளது.
http://goob.mobi/slide/ratha-sarithiram-overseas-rights-sold-for-record-price-2fb019e2a75ae5d59c9a533545401b11.jpg
கதையே இல்லாத படம் என 'வ குவாட்டரை' நிராகரித்த ரசிகர்கள், டப்பிங் படம் போன்று உள்ளது என 'ரத்த சரித்திரத்தை' நிந்திக்கிறார்கள். 'ரத்த சரித்திரம்' எடுபடாமல் போனதால் நஷ்டம் அடைந்துள்ள தயாநிதி அழகிரி, இழப்பை ஈடு செய்யும் வகையில் க்ளவுட் நயன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்குமாறு சூர்யாவை கேட்டுக் கொண்டார். சூர்யாவும் அதற்கு சம்மதித்து தனது அடுத்த படத்தை 'க்ளவுட் நயன்' தயாரிப்பில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
Wednesday, December 08, 2010 | 0 comments

'மன்மதன் அம்பு' பாடலுக்கு கண்டனம்! பரபரப்பான செய்தி!

இந்து மக்கள் கட்சி ஒருங்கிணைப்பு செயலாளர் தா.கண்ணன் சார்பில் வக்கீல் ராஜசெந்தூர் பாண்டியன் நடிகர் கமலஹாசன், நடிகை த்ரிஷா, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
'மன்மதன் அம்பு' படத்தில் கமல், த்ரிஷா நடித்துள்ளனர். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் இடம் பெறும் 'கண்ணோடு கண்ணை கலந்தால் என்றால்' எனும் பாடல் வரிகள் எனது கட்சிக்காரரை வேதனைப்படுத்தியுள்ளது. இந்தப் பாடலை கமல் எழுதியுள்ளார். அவரும் த்ரிஷாவும் பாடியுள்ளனர். இந்தப் பாடல் வரிகள் இந்து சமயத்தினரையும் இந்துக் கடவுள்களை வழிபடுபவர்களையும் புண்படுத்துகிறது. பாடலில் வரும் 'அருள்மிகு அரங்கநாதன் மற்றும் 'ஸ்ரீவரலட்சுமி' பற்றிய கவிதை வரிகள் இந்து தெய்வங்களை இழிவுப்படுத்துவதாக அமைந்துள்ளது. 
உந்தன் அரங்கநாதன் ஆள் எப்படி, பிரபந்தம் சொல்லும் அத்தனை சேட்டையும் வாஸ்தவமாக நடப்பது உண்டோ? "குழந்தை வாயை முகர்ந்தது போல கடும் நாற்றம் இல்லாதவாயும் வேண்டும்" என கூறி கடவுள் அவதாரத்தை கேலி செய்துள்ளீர்கள். உறங்கிக் கொண்டே இருக்கும் உந்தன் அரங்கநாதன் ஆள் எப்படி? அதுவும் இதுவும் உதுவும் செய்யும் முறை பற்றியும் ஸ்ரீவரலட்சுமி கடவுளாகிய உனக்காவது கல்வியைப் பெருமளவு போற்றும் கணவர் அமையப் பெற்றால் உண்மையில் அதிர்ஷ்டசாலிதான் எனும் அர்த்தத்திலும் நீ அது போல் எனக்கு அமைய செய்யேன். ஸ்ரீவரலட்சுமி நமோஸ்துதே என ஒரு பெண் தெய்வத்துக்கிட்ட பாடுற தோத்துர பாடல் என கடவுளை கேவலப்படுத்த முயன்றுள்ளீர்கள். 'கண்ணோடு கண்ணை கலந்தால் என்றால்' என்ற பாடலை ஆடியோ சி.டி.யில் இருந்து நீக்க வேண்டும். ஒலி மற்றும் ஒளி என எந்த இடத்திலும் அதனை இடம்பெறச் செய்யக்கூடாது. மீறி இடம்பெறச் செய்தால் உங்கள் அனைவரின் மீதும் நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு நோட்டீசில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தொட்டா குத்தம் விட்டா குத்தம்னா... எங்கயிருந்து வரும் சினிமா...? எல்லாரும் பழைய பேசும் படங்கள பார்க்க வேண்டியதுதான்!
Wednesday, December 08, 2010 | 0 comments

ரஜினியுடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் : கமல்!

Written By Raveendran on Tuesday, December 7, 2010 | Tuesday, December 07, 2010

“இந்த தலைமுறை நடிகர்களில் ரஜினியும் என்னையும்போல் ஒரு நண்பர்கள் இருந்தால் காட்டுங்கள் ” என்று கமல் 50 விழாவில் கமல்ஹாசன் கூறியது நினைவு இருக்கலாம். அப்படி ஒருவருக்கு அன்பை பரிமாறிக் கொள்ளும் இவர்கள் சேர்ந்து நடிக்க வேண்டுமென்பதே அனைத்து ரசிகர்களும் ஆசைப்படுகிறார்கள். ஆனால் கமல், நானும் ரஜினியும் சேர்ந்து நடிப்பதில்லை என்று பல வருடங்களுக்கு முன்பே ஒப்பந்தம் செய்துகொண்டோம் எனக் கூறியுள்ளார்.

சமீபத்தில் மன்மதன் அம்பு படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி எந்திரன் படம் நடித்தார். இந்தியாவிலே பெரிய பட்ஜட் படமாகவும் வெற்றிப் படமாகவும் அமைந்துள்ளது. அதே போல நீங்களும் ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்கும் திட்டமுள்ளதா.. ஏற்கெனவே இதற்காக நீங்கள் முயற்சி எடுத்ததாகக் கூறுகிறார்களே?', என்று கேட்டனர் பத்திரிகையாளர்கள்.http://ramyawrites.com/wp-content/uploads/2010/05/rajini3003.jpg

இதற்கு கமல் " நான் யாரையும் காப்பி அடிப்பதில்லை. எனக்கென்று தனித்துவம் இருக்கிறது. நடிப்பில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டால், என் குரு சிவாஜியைத்தான் நினைப்பேன். அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.

என்னையும், ரஜினியையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம். எங்களை நாங்கள் ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை என்றும், சேர்ந்து நடிப்பதில்லை என்றும் பல வருடங்களுக்கு முன்பே ஒப்பந்தம் செய்துகொண்டோம். இளமை ஊஞ்சலாடுகிறது காலத்திலேயே இந்த முடிவை எடுத்துவிட்டோம். எங்களுக்குள் நல்ல அன்பு இருக்கிறது, நல்ல நட்பு இருக்கிறது, அது இருந்தாலே போதும்...

பட்ஜட்டுன்னு பார்த்தா, தசாவதாரம் பெரிய பட்ஜெட் படம்தான். அதேபோல் இந்த மன்மதன் அம்பும் பெரிய பட்ஜெட் படம்தான்...,"" என்றார். மேலும் இனி நீங்கள் எழுதும் கதைகளில் மட்டுமே நடிப்பீர்களா என்ற ஒரு கேள்விக்கு கமல் பதிலளிக்கையில், நல்ல கதை யார் எழுதினாலும், அதில் நான் நடிப்பேன். உங்களிடம் நல்ல கதை இருந்தால், நான் நடிக்க தயார் என்றார் கமல்.
Tuesday, December 07, 2010 | 0 comments

விபச்சாரியா நடிக்க மாட்டேன் - த்ரிஷா!

பாலிவுட்ட நம்பி பெட்டிய தூக்கிட்டு, போன வேகத்துல திரும்பி வந்த கையோடு பழைய 'வுட்'களே நமக்கு பெஸ்ட்னு செட்டாகலாம்னு வந்தா விட்ட குறை தொட்ட குறை. அம்பு பாய்ஞ்ச இடத்தில இப்ப ஆல்கஹால வேற ஊத்துறாய்ங்க ஆத்திரமடைந்த ஆந்திராகாரனுங்க! த்ரிஷாவை தெலுங்கு படமொன்றில் விலைமாதுவாக நடிக்க அழைத்தனர். அதிக சம்பளம் தருவாகவும் பேசப்பட்டது. ஆனால் அதில் நடிக்க மறுத்து விட்டார். இதுபற்றி த்ரிஷா சொல்கிறார். விபச்சாரி கேரக்டர் என்பது மிகவும் சவால் நிறைந்தது. எளிதாக அதில் நடிக்க முடியாது. எனவேதான் அந்த வேடத்தில் நடிக்க நான் மறுத்து விட்டேன். விலைமாது கேரக்டர் செய்யும் அளவு எனக்கு இன்னும் பக்குவம் வரவில்லை. அந்த கேரக்டரில் நடிக்கும்போது இதற்கு முன் எந்த நடிகையும் அதுமாதிரி நடிக்கவில்லை என்று பெயர் எடுக்க வேண்டும். வேறு நடிகைகளும் இந்த நடிப்பைப் பார்த்து பயப்பட வேண்டும். அப்படியொரு துணிச்சல் வரும்போது நடிப்பேன். கமலுடன் நடித்த 'மன்மதன் அம்பு' படம் வருகிற 17-ந்தேதி வெளியாகிறது. கமலுடன் நடிக்கும் முதல் படம் என்பதால் ரொம்ப பயந்தேன். படப்பிடிப்புக்குப் போகும் போதெல்லாம் எனது முதல் படத்தில் வேலை செய்த உணர்வே ஏற்பட்டது. அந்தப் படத்தை ரொம்பவும் எதிர்நோக்கி இருக்கிறேன். நடிகர், நடிகைகள் பற்றி கிசுகிசுக்கள் வருவது தவறல்ல. கிசுகிசுக்கள் வளர்ச்சிக்கு உதவுகின்றன. எனவே அவை பற்றி வருத்தப்படக் கூடாது. சில நடிகைகள் தங்களைப் பற்றிய கிசுகிசுக்களை அவர்களே பரப்பி விளம்பரம் தேடுகின்றனர். நான் அதுபோல் பரப்புவது இல்லை. அம்மாடியோவ்! நல்ல வேள இமேஜ்ல ஆசிட்ட ஊத்திட்டு அப்புறம் எரியுதேனு புலம்பலியே....!
Tuesday, December 07, 2010 | 0 comments

சௌந்தர்யாவுக்கு ரஜினி கொடுத்த தெம்பு!

Written By Raveendran on Sunday, December 5, 2010 | Sunday, December 05, 2010

பெட்டிகளைக் கழற்றிவிட்ட என்ஜினைப் போல ஜம்மென்று புறப்பட்டு விட்டது ஒரு திரைப்படம். இப்போதெல்லாம் படத்தைத் தயாரிப்பது ஒருவர். அதை வாங்குவது மற்றொருவர். பின்பு வெளியிடுவது வேறொருவர் என்ற நிலைதான் காணப்படுகிறது. இந்த மூவரின் பெயரையும் எந்த ஆர்டரில் போடுவது என்ற குழப்பம் ஏற்பட்டு கடைசியில் "போங்கய்யா உங்க பார்ட்னர்ஷிப்பும் நீங்களும்" என்று கூட்டணியே முறிந்து போன சம்பவங்களும் உண்டு. அப்படியெல்லாம் நிகழ்வதற்கு முன்பே திடமாக ஒரு முடிவெடுத்திருக்கிறார் அந்தத் தயாரிப்பாளர். இனிமேல் தயாரிப்பு என்ற டைட்டிலுக்கு நேராக ஒரே ஒருவர் பெயர்தான் வரும். அவர் சௌந்தர்யா ரஜினி! 'ஹரா' என்று மாறிவிட்ட சுல்தான் தி வாரியரின் பிரச்சினைகள் எல்லாவற்றையும் பைசா பாக்கி விடாமல் பேசி முடித்துவிட்டார்களாம். இந்தப் படத்தைத் தயாரிக்க முன் வந்த ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களின் கணக்கும் கொடுத்து முடிக்கப்பட்டு விட்டது. 
இவை எல்லாமுமாக சேர்ந்து சுமார் 18 கோடிகள் என்கிறது நம்பத் தகுந்த செய்திகள். தன் மகளை அழைத்த அப்பா, "நீ ஒன்றும் டென்ஷன் ஆக வேண்டாம்மா. ஒரு படம் ஃபிரீயா நடிச்சுக் கொடுத்ததா நினைச்சுக்கிறேன்" என்றாராம். படத்தில் இப்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், இதுவரை ஆன செலவை பல மடங்காக வசூலித்துக் கொடுக்கும் என்ற நம்பிக்கையை மட்டும் தளர விடவில்லையாம் மகள்! 'தாயானாலும் பிள்ளையானாலும் வாயும் வயிறும் வேற எங்கிறது சூப்பர் ஸ்டார் குடும்பத்தில கூடவா.....?
Sunday, December 05, 2010 | 0 comments

எந்திரனில் விழும் இடிகள்... வழக்குக்கு மேல் வழக்கு!

http://reviews.in.88db.com/images/stories/enthiran-still-audio2.jpg'எந்திரன்' படத்தின் கதை தொடர்பாக சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு 'எந்திரன்' படக் கதையை எதிர்த்துத் தொடரப்பட்டுள்ளது. சிதம்பரத்தைச் சேர்ந்த எழுத்தாளர் பி.எஸ்.ஆர்னிகா நாசர் என்பவர் வழக்கறிஞர் ஆர்.கார்த்திகேயன் மூலம் இயக்குநர் ஷங்கர், சன் பிக்சர்ஸ் நிர்வாக இயக்குநர் ஆகியோரை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கின் விவரம்:  நான் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சுகாதார அதிகாரியாக பணி செய்கிறேன். நான் எழுதிய 31 நாவல்கள் மணிமேகலை பிரசுரம் மூலம் கடந்த 1992-ல் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்றான ரோபாட் தொழிற்சாலை என்ற நாவல் குமுதம் பதிப்பகத்தின் மாலைமதி என்ற தமிழ் இதழில் கடந்த 13.7.95-ல் வெளியிடப்பட்டது. இது தவிர, ஜிப்சா காத்திருக்கிறான் என்ற நாவல் 1992-ல் வெளியானது. அதில் ரோபோக்கள் தற்கொலை வெடிகுண்டாக பயன்படுத்தப்படுகின்றன என்று எழுதியுள்ளேன். 2001-ல் தோழன் என்ற பெயரில் வெளியான நாவலில் ரோபோக்களின் உறவுமுறை குறித்து எழுதியுள்ளேன். இந்தக் கதைகளை அப்படியே காப்பி அடித்தே இயக்குநர் ஷங்கர் 'எந்திரன்' படத்தைத் தயாரித்துள்ளார். அதை சன் பிக்சர்ஸ் நிறுவன இயக்குநர் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் 28.10.10-ம் தேதி புகார் செய்துள்ளேன். ஆகவே, 'எந்திரன்' படக்கதையின் உரிமையாளர் நான்தான் என்று நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். மேலும், எனக்கு 50 லட்சம் இழப்பீடு வழங்கவும், அந்தப் படத்தைத் திரையிடுவதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இந்த வழக்குத் தொடர்பாக எதிர் மனுதாரர்கள் விளக்கம் அளிக்க அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணையை டிசம்பர் 23-ம் தேதிக்கு தள்ளி வைத்தார். என்னோட கதைனு சொந்தம் கொண்டாடிட்டு இன்னும் எத்தன பேருதான் வரப்போறாங்களோ...?
Sunday, December 05, 2010 | 0 comments

3 இடியேட்ஸிலிருந்து விஜய் விலகல்? லேட்டஸ்ட் தகவல்

ImageShack, share photos, pictures, free image hosting, free video 
hosting, image hosting, video hosting, photo image hosting site, video 
hosting site
ஷங்கர் இயக்கும் '3 இடியேட்ஸ்' படத்திலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஆனால் எந்த அளவுக்கு உண்மை என்று நமக்கு தெரியவில்லை. விஜய் நடித்து வரும் 'வேலாயுதம்' படத்தின் ஷூட்டிங் இன்னும் முடியவில்லை, 3 இடியட்ஸுக்காக கெட் அப் மாற்ற வேண்டியுள்ளதால் தன்னால் படத்தில் நடிக்க முடியாது என்று விஜய் ஷங்கரிடம் கூறிவிட்டதாகவும். ஷங்கரும் இதற்கு ஒப்புக் கொண்டதாகவும் தெரிகிறது. படப்பிடிப்பு நாளை மறுநாள் சென்னையில் துவங்குவதாக இருந்த நிலையில், இந்த பரபரப்பு தகவல் எழுந்துள்ளது. ஆனால் படத்திலிருந்து விலகியதாக விஜய்யோ அல்லது ஷங்கரோ எந்த ஒரு தகவலும் சொல்லவில்லை..... இது பொய்யா மெய்யா என பொருத்திருந்து தான் பாப்போமே....
Sunday, December 05, 2010 | 1 comments

'காவலன்' ட்ரெய்லர் வெளியீட்டு விழாவும், அரிசி வழங்கும் நிகழ்ச்சியும் !

விஜய் நடித்த 'காவலன்' பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவும், ஏழைகளுக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சியும் வடபழனி ஜே.எஸ்.திருமண மண்டபத்தில் இன்று காலை நடந்தது. விழாவில் விஜய் பங்கேற்று 300 ஏழை குடும்பங்களுக்கு 300 மூட்டை இலவச அரிசி வழங்கினார். 'காவலன்' பட ட்ரெய்லரையும் வெளியிட்டார். 
விழாவில் விஜய் பேசியதாவது:- 'காவலன்' பட ட்ரெய்லர் வெளியிட அழைத்ததும் நான் ஒப்புக்கொள்ளவில்லை. ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்குவதையும் சேர்த்து நடத்துவதாகச் சொன்னார்கள். அதன் பிறகுதான் விழாவுக்கு வர சம்மதித்தேன். எந்த ஒருவிழாவாக இருந்தாலும் அதை ஏழைகளுக்குப் பயன்படுவதாக நடத்த வேண்டும். 'காவலன்' படம் சிறப்பாக வந்துள்ளது. மனதுக்கும் நிறைவாக இருக்கிறது. 'காதலுக்கு மரியாதை' படம் போல கடைசி 15 நிமிடங்கள் உணர்ச்சிகரமாக இருக்கும். சித்திக் மலையாளத்தில் நிறைய வெற்றிப்படங்கள் கொடுத்துள்ளார். இதையும் நன்றாக எடுத்துள்ளார்.
http://nammaarea.com/wp-content/uploads/2010/09/Kaavalan-Movie-Stills-1.jpg
விழாவில் இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், ஷக்தி சிதம்பரம், செல்வபாரதி, தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், கேரள விநியோகஸ்தர் சிபு, மக்கள் தொடர்பாளர்கள் பி.டி.செல்வகுமார், தென்னிலவன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். என்னமா மூட்டை மூட்டையா புழுகுறாய்ங்க.......
Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com
Sunday, December 05, 2010 | 0 comments

படப்பிடிப்பில் சூர்யா காயம்!

சூர்யாவின் 'ரத்த சரித்திரம்' நேற்று திரையைத் தழுவியிருக்க, சூர்யாவோ காயமடைந்து ஓய்வெடுத்து வருகிறார். தற்பொழுது '7ஆம் அறிவு' படத்தில் நடித்து வரும் சூர்யா, அப்படத்தின் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டபோது காயமடைந்தார். ஏ.ஆர்.முருகதாஸ், சூர்யாவை வைத்து '7ஆம் அறிவு' படத்தின் முக்கிய காட்சியொன்றை படமாக்கிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சூர்யா காயமடைந்தார். உடனடியாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இரண்டு நாட்களுக்கு எவ்வித படப்பிடிப்பிலும் கலந்துக் கொள்ளாமல் ஓய்வாக இருக்கும்படி சூர்யாவை அறிவுறுத்தினர். இதனால் நேற்று மாலை மலேசியாவில் நடைபெறவிருந்த 'ரத்த சரித்திரம்' முன்னோட்டக் காட்சியில் சூர்யா கலந்துக் கொள்ள முடியாது போய்விட்டது. மருத்துவர்களின் அறிவுரைப்படி சூர்யா தற்பொழுது முழு ஓய்வில் இருந்து வருகிறார். அச்சச்சோ! யாரு கொள்ளிக்கண்ணு பட்டுச்சோ... முதல்ல சுத்திப் போடுங்க!
Sunday, December 05, 2010 | 1 comments

புதுமுக நாயகிக்கு தனுஷ் கொடுத்த Gift !

Written By Raveendran on Friday, December 3, 2010 | Friday, December 03, 2010

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAFi8hdDll4gJlbwVys5ory_6I4vOlPTbiSz9mJA4PfKSC42XYmf1iYtSVFfF-GHR1XoFhLahS8F94IxCWnLtGClNNKhRnQ9Q9MSJWWJbRYLlTTop9L9kvAA4AheAmP-hagSgR30l0_Rc/s1600/dhanush+actor.jpg'ஆடுகளம்' படத்தில் தனுஷுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் தபசி. பஞ்சாபியான இவருக்கு படப்பிடிப்புக் குழுவுடன் பேசுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டதாம். இதற்குக் காரணம் தபசிக்கு தமிழ் தெரியாது (இது தானே தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி, நிலைத்து நிற்க முதல் தகுதியே). இந்த நிலையில் தமிழ் தெரியாமல் தவிக்கும் தபசிக்கு தனுஷ் கை கொடுத்து உதவியுள்ளார். தபசியின் நண்பர்கள் பட்டியலிலும் அவர் இதன் மூலம் நுழைந்துள்ளார். என்னடா இவன் கிப்ட்னு சொல்லிவிட்டு கத சொல்ரான் என்று சொல்வது புரியுது.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQuhMEe8F8h2prqGKS21AQX_vCYD-ckN9Bv3Z8F56BsFSRMPUnGDcWARjB-StrNUftm_MDzckiX7bNij5drreWnMlHHw21SDypyjXky-7JSY9qnK3QgI5F4-CXB3Vj6PtA99tRYjhRI-M1/s1600/tapasee.jpgதமிழ் தெரியாமல் தபசி தவிப்பதைப் பார்த்த தனுஷ் அவருக்கு 30 நாட்களில் தமிழ் கற்கலாம் என்ற புத்தகத்தைப் பரிசாக அளித்தாராம். இது குறித்து தபசி கூறுகையில்: மதுரையில் நடந்த படப்பிடிப்பு எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. புது இடம், புது மக்கள் என்பதால் அதுவும் மொழி தெரியாததால் சிரமப்பட்டேன். தனுஷ் தான் எனக்கு பக்கபலமாக இருந்து நம்பிக்கை அளித்தார். தனுஷ் கொடுத்த புத்தகத்தில் உள்ள வார்த்தைகளை தினமும் மனனம் செய்யத் துவங்கினேன். ஒரே மாதத்தில் என்னால் தமிழில் பேசவும், புரிந்து கொள்ளவும் முடிந்தது என்றார். போச்சு! தமிழ் தெரியாத ஹீரோயினெல்லாம் இனி, நம்ம சுள்ளான் வீட்டுக்கு படையெடுக்கப் போறாங்க.....
Friday, December 03, 2010 | 0 comments

முதல்முறையாக செல்வராகவனுடன் இணையும் சூர்யா

http://www.extramirchi.com/wp-content/uploads/2008/08/surya-taare-zameen-par.jpgதொழில் ஸ்தானமான பத்தாமிடத்தில் ஊரிலுள்ள கெட்ட கிரகங்கள் எல்லாம் சேர்ந்து உட்கார்ந்துக் கொண்டு செல்வராகவனை பாடாய்படுத்தி வந்தன. ஆனால் எல்லாவற்றையும் தன் உழைப்பால் விரட்டியடிப்பார் போலிருக்கிறது செல்வா! பரபரப்பான திரைக்கதையுடன், படபடப்பான ஒரு கதையைத் தயாரித்துக் கொண்டு சென்றாராம் சூர்யாவிடம். முழு கதையையும் கேட்ட சூர்யா, ஆஹா ஓஹோ என்றாராம்! "கண்டிப்பா இந்த கதையை நாம சேர்ந்து பண்றோம். ஆனால் அதுக்கு முன்னாடி ஸ்கிரிப்டின் முழு பைண்டிங் காப்பியும் தயார் பண்ணிட்டீங்கன்னா சந்தோஷப்படுவேன்" என்று சொல்ல, பேனாவும் பேப்பருமாக உட்கார்ந்து விட்டார் செல்வா. கதையைக் கேட்டு கவுரமாக அனுப்பி வைத்ததோடு இல்லாமல், இந்த கதையை அப்படியே தன் ஆஸ்தான இயக்குநர் கே.வி.ஆனந்திடமும் சொன்னாராம் சூர்யா.
http://thebollywoodactress.com/wp-content/uploads/2008/12/selvaraghavan.jpgஅவரும் "இந்த கதையில் நீங்க நடிச்சா பெரிய பேர் கிடைக்கும். படமும் பெரிய ஹிட் ஆகும்" என்று கூற, எப்படியாவது முந்தைய கமிட்மென்டுகளை முடித்துவிட்டு செல்வாவுடன் கரம் கோர்ப்பதென்று தயார் நிலையில் இருக்கிறாராம் சூர்யா. சூர்யா செல்வாவின் கூட்டு என்னதான் நடக்கும் என்று பொருத்திருந்துதான் பார்ப்போமே.....
Friday, December 03, 2010 | 0 comments

த்ரிஷாவை பழிவாங்கிய கௌதம் மேனன்!

த்ரிஷா இந்தியில் தயாரிக்கப்படும் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் . திடீரென வேறு படங்களில் நடிப்பதற்காக  த்ரிஷா இப்படத்திலிருந்து விலகினார். இதனால் இப்பட இயக்குநர் கௌதம் மேனன் அவர் மீது கோபம் அடைந்ததாகக் கூறப்பட்டது. இந்தப் படத்திற்கு முன்பாக 'சென்னையில் ஒரு மழைக்காலம்' படத்தை கௌதம் இயக்கி வந்தார். இதிலும் த்ரிஷா தான் நடித்தார். அந்தப் படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில், திடீரென படம் நிறுத்தப்பட்டு விட்டது. இப்போது மீண்டும் இப்படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறார் கௌதம் மேனன். 50 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் இதிலிருந்து த்ரிஷாவை நீக்க அவர் திட்டமிட்டுள்ளாராம். 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்திலிருந்து த்ரிஷா விலகியதுதான் இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. த்ரிஷாவுக்கு பதிலாக 'மதராசப்பட்டினம்' எமி ஜாக்சன் கதாநாயகியாக நடிக்க உள்ளாராம். ஏற்கனவே இந்தி 'விண்ணைத்தாண்டி' படத்திலும் த்ரிஷா வேடத்தை அவர் ஏற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. கால வாரிட்டீங்க.. அப்படியே ஜில்லுனு ஒரு கப் ஐஸ் வாட்டர் குடிங்க... இந்த மழைகாலத்துல இன்னும் குளு குளுனு இருக்கும்!
Friday, December 03, 2010 | 0 comments

ஸ்ருதிகமலின் அடுத்த படம் - கதை + சம்பளம் + பிரமாண்டம்!

Written By Raveendran on Thursday, December 2, 2010 | Thursday, December 02, 2010

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirz8fFmwDqhv59p5ADImikoKt7zCfgzApyerflhqKZKmfjCyrNX2TgwBiYp9H5Rk2xAGdaz-dsUNjPbPv35Gn_YMNlxoWiLqecNfn27drSC3Gb6lxLIYpAXvmwonl-U9vBKo_6LkvAv3A/s400/Shruti+Hassan13.jpgலேசாக தாடி வளர்க்க ஆரம்பித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். எல்லாம் அவர் நடிக்கப் போகும் புதுப்படத்திற்காக. 'ஒரு கல் ஒரு கண்ணாடி' என்ற தலைப்பெல்லாம் மலையேறி போச்சு. இப்போது 'நண்பேன்டா' என்ற தலைப்போடு ஸ்டார்ட் ஆக்ஷன் சொல்ல நாள் பார்த்துக் கொண்டிருக்கிறார் டைரக்டர் ராஜேஷ் எம். ரொம்ப சீரியஸ்சா கதை சொல்ற பாணியை மறந்தும் கையால் கூட தொடாத ராஜேஷ், உதயநிதிக்காகவும் ஒரு ஸ்பெஷல் ஜோக் தோரணம்தான் கட்டிக் கொண்டிருக்கிறாராம்.
இதற்கிடையில் இந்த யங் ஹீரோவுக்கு ஜோடியாக யாரை நடிக்க வைப்பது? வாக்காளர் பட்டியல் நீளத்துக்கு ஒரு நடிகைகள் மேளாவையே நடத்திய ராஜேஷ் கடைசியாக செலக்ட் செய்திருப்பது கமல்ஹாசனின் கலை வாரிசு ஸ்ருதியைதானாம்.
ஏழாம் அறிவு படத்திற்கு பிறகு அதே தரத்துடன், அதே பிரமாண்டத்துடன் ஒரு கதைக்காவும், சம்பளத்திற்காகவும் காத்திருந்த ஸ்ருதி, உதயநிதியுடன் ஜோடி சேர சம்மதித்திருப்பதாக தகவல்.
Thursday, December 02, 2010 | 0 comments

டிசம்பர் 24ல் காவலன் ரிலீஸ்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvElnx8lP6t8WnfOdE0KEdIZryv2HdP7i_RZb_RbE6JxKwFoFxN31NH3LcORG25ondI0ra_lzhPivpie-VBUdFibC_p6zW2oRXSHqvGB8VCwJ4Y_Y1le-rOVRD2YKpPOpC9gWHwCMNlAY/s1600/vijay_kavalan_movie_stills_wallpapers_10.jpgவெளிநாட்டு உரிமை வழங்கியதில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பான வழக்கில் நடிகர் விஜய் படத்துக்கு ஐகோர்ட் தடை விதித்தது. காவலன் படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால‌த் தடை விலக்கிக் கொண்டதையடுத்து திட்டமிட்டபடி காவலன் டிசம்பர் மாதம் 24ந் தேதி ரிலீஸ் ஆகிறது. படத்தின் வெளிநாட்டு உ‌ரிமையை வாங்கிய தந்‌த்ரா நிறுவனம் தந்த புகாரையடுத்து காவலனுக்கு நீதிமன்றம் தடை விதித்தது. தற்போது அந்த‌த் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.
Thursday, December 02, 2010 | 0 comments

அனிமேஷன் ர‌ஜினியும் நிஜ ர‌ஜினியும் - சுல்தான் தி வா‌ரியர்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhcem_xlDWx8_ceidwk85LkH31j_STndhdip2YhYbn4jjSQYwrgz8AKUVd9jktJAtJDgHK11va4zMxkyYxAwYHpYGeJqmiYuL50z2vc9WT26nhEnDj09IKErpnPSFl4_x8Np-PLL6oLzJQS/s320/superstar-rajinikanth-sultan-the-warrior.jpgகிட்டத்தட்ட எந்திரன் போலதான் உருவாகி வருகிறது சுல்தான் தி வா‌ரியரும். ர‌ஜினி மகள் அகலக்கால் வைத்த இந்தப் படம் இன்ச் இன்சாகதான் வளர்கிறது.

சுல்தானை முழுக்க 3டி அனிமேஷனில் எடுக்க வேண்டும் என்பதுதான் சௌந்தர்யாவின் திட்டமாக இருந்தது. போட்ட பட்ஜெட் எகிறவும் படத்தை முடிக்க முடியுமா? போட்ட முதலை திருப்ப முடியுமா என்று சந்தேகம் வந்துவிட்டது.

இதனால் எவர்கி‌‌ரீன் பாக்ஸ் ஆஃபிஸ் ர‌ஜினியை ர‌ஜினியாகவே திரையில் தோன்ற வைக்கிறார்கள். அதாவது அனிமேஷன் இல்லாத நிஜ ர‌ஜினி. இந்த நிஜ ர‌ஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார்.

நிஜ ர‌ஜினிக்காக பாடல் காட்சிகளையும் சேர்க்க இருக்கிறார்கள் என்பது சுல்தானின் லேட்டஸ்ட் தகவல்.
Thursday, December 02, 2010 | 0 comments

அக்ஷராவின் காதல்... அப்பா Kamal செய்யப் போவதென்ன?

Written By Raveendran on Wednesday, December 1, 2010 | Wednesday, December 01, 2010

வீணைக்கு பிறந்தது விறகாகுமா? யானைக்கு பிறந்தது எறும்பாகுமா? நடிகர் கமல்ஹாசனின் வாரிசுகள் கலையுலகத்தையே வியக்க வைக்கிற அளவுக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். கமலுக்கு காதல் மன்னன் என்றொரு பட்டமும் உண்டல்லவா? அவரது மகள்கள் இருவரும் அப்பாவின் கலையுலக வாழ்க்கைக்கும், காதல் வாழ்க்கைக்கும் சேர்த்து வியத்தகு வாரிசுகளாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.
ஸ்ருதியின் முதல் படம் முன்னே பின்னே இருந்தாலும், இழந்த மார்க்கெட்டை முன்னிலும் வேகமாக கைப்பற்றிவிட்டார். அவரது இரண்டாவது மகள் அக்ஷரா, சொசைட்டி என்ற படத்தில் உதவி இயக்குனராகவும், டான்ஸ் மாஸ்டராகவும் இருக்கிறார். அம்மா தனியே அப்பா தனியே இருந்தாலும், மகள்களில் அக்ஷரா மட்டும் அம்மா செல்லம். மும்பையில் சரிகாவுடன்தான் இருக்கிறாராம்.
http://www.chennai365.com/wp-content/uploads/general/Oct/Akshara_Hassan.jpgகண்டிப்பு இல்லாத குழந்தைக்கு காதல் ஈசி! அக்ஷராவும் அப்படி ஒரு காதலில் சிக்கிக் கொண்டாராம். இலங்கை வாலிபர் ஜேசன் ஜெயசீலன் என்பவருடன் கடந்த ஒரு வருடமாக காதல் கொண்டிருக்கிறாராம் அக்ஷரா. முதலில் நட்பாக துவங்கிய பழக்கம் நாளடைவில் காதலாகிவிட்டது என்று முணுமுணுக்கின்றன மும்பை மீடியாக்கள். இந்த மேட்டர் மெல்ல மெல்ல கமல்-சரிகா இருவருக்கும் இப்போதுதான் தெரிந்ததாம். அதுவும் தங்கள் போட்டோக்களை இன்டர்நெட்டில் இருவரும் வெளியிட்டதால்தான் என்கிறார்கள் அதே மும்பைக்காரர்கள்.
தப்பா கிறுக்குனா மாடர்ன் ஆர்ட்! சரியா எழுதினா கவிதை! இது புரியாதா காதல் அத்தாரிடியான கமலுக்கு?
Wednesday, December 01, 2010 | 0 comments

Blog Archives