skip to main |
skip to sidebar
விபச்சாரியா நடிக்க மாட்டேன் - த்ரிஷா!
பாலிவுட்ட நம்பி பெட்டிய தூக்கிட்டு, போன வேகத்துல திரும்பி வந்த கையோடு பழைய 'வுட்'களே நமக்கு பெஸ்ட்னு செட்டாகலாம்னு வந்தா விட்ட குறை தொட்ட குறை. அம்பு பாய்ஞ்ச இடத்தில இப்ப ஆல்கஹால வேற ஊத்துறாய்ங்க ஆத்திரமடைந்த ஆந்திராகாரனுங்க! த்ரிஷாவை தெலுங்கு படமொன்றில் விலைமாதுவாக நடிக்க அழைத்தனர். அதிக சம்பளம் தருவாகவும் பேசப்பட்டது. ஆனால் அதில் நடிக்க மறுத்து விட்டார். இதுபற்றி த்ரிஷா சொல்கிறார். விபச்சாரி கேரக்டர் என்பது மிகவும் சவால் நிறைந்தது. எளிதாக அதில் நடிக்க முடியாது. எனவேதான் அந்த வேடத்தில் நடிக்க நான் மறுத்து விட்டேன். விலைமாது கேரக்டர் செய்யும் அளவு எனக்கு இன்னும் பக்குவம் வரவில்லை. அந்த கேரக்டரில் நடிக்கும்போது இதற்கு முன் எந்த நடிகையும் அதுமாதிரி நடிக்கவில்லை என்று பெயர் எடுக்க வேண்டும். வேறு நடிகைகளும் இந்த நடிப்பைப் பார்த்து பயப்பட வேண்டும். அப்படியொரு துணிச்சல் வரும்போது நடிப்பேன். கமலுடன் நடித்த 'மன்மதன் அம்பு' படம் வருகிற 17-ந்தேதி வெளியாகிறது. கமலுடன் நடிக்கும் முதல் படம் என்பதால் ரொம்ப பயந்தேன். படப்பிடிப்புக்குப் போகும் போதெல்லாம் எனது முதல் படத்தில் வேலை செய்த உணர்வே ஏற்பட்டது. அந்தப் படத்தை ரொம்பவும் எதிர்நோக்கி இருக்கிறேன். நடிகர், நடிகைகள் பற்றி கிசுகிசுக்கள் வருவது தவறல்ல. கிசுகிசுக்கள் வளர்ச்சிக்கு உதவுகின்றன. எனவே அவை பற்றி வருத்தப்படக் கூடாது. சில நடிகைகள் தங்களைப் பற்றிய கிசுகிசுக்களை அவர்களே பரப்பி விளம்பரம் தேடுகின்றனர். நான் அதுபோல் பரப்புவது இல்லை. அம்மாடியோவ்! நல்ல வேள இமேஜ்ல ஆசிட்ட ஊத்திட்டு அப்புறம் எரியுதேனு புலம்பலியே....!
0 comments:
Post a Comment