Hi quest ,  welcome  |  sign in  |  registered now  |  need help ?

கடுமையாக உழைத்த சிறுத்தை!

Written By Raveendran on Thursday, December 23, 2010 | Thursday, December 23, 2010


கார்த்தி, தமன்னா ஜோடிகளாக நடிக்கும் படம் 'சிறுத்தை'. சிவா இயக்குகிறார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் நடந்தது. விழாவில் சூர்யா பங்கேற்று பேசியதாவது:- கார்த்தி ஒன்றரை வருடங்களாக போலீஸ் கெட்டப்பில் நடிக்கக் கடுமையாக உழைத்தார். ட்ரெய்லர், பாடலைப் பார்க்கும் போது அவரது சிறப்பான உழைப்புத் தெரிகிறது என்றார். கார்த்தி பேசும்போது, அண்ணன் சூர்யா, 'காக்க காக்க', 'சிங்கம்' படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவர் சாயல் எனக்கு வராமல் இருக்கக் கவனமாக இப்படத்தில் நடித்துள்ளேன். தமன்னாவுடன் நடிக்கும் இது இரண்டாவது படம். ரசிகர்களுக்குப் பிடித்து விட்டால் அவர்கள் படத்துக்குள் எளிதாக நுழைந்து விடுவார்கள் என்று அப்பா சொல்வார். அப்படித்தான் தமன்னா மீண்டும் எனக்கு ஜோடியாகியுள்ளார் என்றார். இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், லிங்குசாமி, கௌதம் மேனன், ஜெகன்நாத், விஜய், ராஜேஷ், 'ஜெயம்' ராஜா, பிரபு, இசையமைப்பாளர் வித்யாசாகர், நடிகை தமன்னா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

0 comments:

Post a Comment