
'ஆடுகளம்' படத்தில் தனுஷுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் தபசி. பஞ்சாபியான இவருக்கு படப்பிடிப்புக் குழுவுடன் பேசுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டதாம். இதற்குக் காரணம் தபசிக்கு தமிழ் தெரியாது (இது தானே தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி, நிலைத்து நிற்க முதல் தகுதியே). இந்த நிலையில் தமிழ் தெரியாமல் தவிக்கும் தபசிக்கு தனுஷ் கை கொடுத்து உதவியுள்ளார். தபசியின் நண்பர்கள் பட்டியலிலும் அவர் இதன் மூலம் நுழைந்துள்ளார். என்னடா இவன் கிப்ட்னு சொல்லிவிட்டு கத சொல்ரான் என்று சொல்வது புரியுது.

தமிழ் தெரியாமல் தபசி தவிப்பதைப் பார்த்த தனுஷ் அவருக்கு 30 நாட்களில் தமிழ் கற்கலாம் என்ற புத்தகத்தைப் பரிசாக அளித்தாராம். இது குறித்து தபசி கூறுகையில்: மதுரையில் நடந்த படப்பிடிப்பு எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. புது இடம், புது மக்கள் என்பதால் அதுவும் மொழி தெரியாததால் சிரமப்பட்டேன். தனுஷ் தான் எனக்கு பக்கபலமாக இருந்து நம்பிக்கை அளித்தார். தனுஷ் கொடுத்த புத்தகத்தில் உள்ள வார்த்தைகளை தினமும் மனனம் செய்யத் துவங்கினேன். ஒரே மாதத்தில் என்னால் தமிழில் பேசவும், புரிந்து கொள்ளவும் முடிந்தது என்றார்.
போச்சு! தமிழ் தெரியாத ஹீரோயினெல்லாம் இனி, நம்ம சுள்ளான் வீட்டுக்கு படையெடுக்கப் போறாங்க.....
0 comments:
Post a Comment