Hi quest ,  welcome  |  sign in  |  registered now  |  need help ?

கின்னஸில் இடம்பெறப் போகும் விஷால்!

Written By Raveendran on Sunday, November 28, 2010 | Sunday, November 28, 2010

http://showfizz.com/wp-content/uploads/2010/02/theeratha-vilayattu-pillai-latest-stills-pics-images-11.jpgநடிகர் விஷாலின் பெயர் மதிப்புமிக்க 'கின்னஸ்' புத்தகத்தில் விரைவில் இடம்பெறவுள்ளதாம். என்ன காரணத்திற்காக அவரது பெயர் அப்புத்தகத்தில் இடம்பெறவுள்ளது என்பது இதுவரைத் தெரியவில்லை, ஆனால் எந்தவொரு மொழிப் படத்திலும் இல்லாத, ஏதோ ஒன்றை சிறப்பாக செய்துள்ளதால் விஷாலின் பெயர் கின்னஸில் இடம்பெறவுள்ளதாம். பாலா இயக்கத்தில், 'திருநங்கையாக' வித்தியாசமான வேடத்தில் விஷால் 'அவன் இவன்' படத்தில் நடித்து வருகிறார். எந்தவொரு படத்தையும் விரைவாக முடித்திடாத பாலா இப்படத்தையும் வெகு நாட்களாக இயக்கி வருகிறார்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbVrpjBS8A9M5bRPpVA2EzCMmAa8qf7e3igZX6S77LG79FPakz0Spt2jOq3TzbU9e1f6yQ6Vhfv-Mq0t-CMQXoVwdmu1a2obz-XDFaUbbKygk7VT3jNnkI_kVi80S1d-N8fLS0jd7FAkt3/s1600/avan-ivan-press-meet-stills-05.pngஇப்படம் கிட்டத்தட்ட முடிந்து விட்டது எனக் கூறப்பட்ட நிலையில், பல காட்சிகளை மீண்டும் படமாக்கப் போவதாகக் கூறி பாலா வழக்கம் போல் இழுத்தடித்து வருகிறார். இப்படத்தில் விஷாலுடன் இணைந்து ஆர்யாவும் நடித்து வருகிறார். 'அவன் இவனில்' விஷால் செய்த ஏதோ ஒன்று கின்னஸில் இடம்பெறப் போகிறதாம், விஷால் என்ன சாதனை புரிந்துள்ளார் என்பது படம் வெளியானதும் தெரியவருமாம். இப்படத்தை பாலா விரைவில் முடித்து, திரைக்குக் கொண்டு வருவார் என நம்புவோம். இழுத்தடிச்சாலும் எப்டியாச்சும் இடத்த புடுச்சுப்புடுறீக பாருங்க....சந்தோஷம்ணே!
Sunday, November 28, 2010 | 0 comments

தூங்கவிடாமல் வேலை வாங்கிய செல்வராகவன்

Written By Raveendran on Saturday, November 27, 2010 | Saturday, November 27, 2010

தனுஷ்-செல்வராகவன் சகோதரக் கூட்டணி தற்போது இணைந்துள்ளனர்.  இதனையடுத்து படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பையும் படு சுமூகமாக முடித்துள்ளது. பத்து நாட்களாக படப்பிடிப்பில் எல்லோரையும் தூங்கவிடாமல் வேலை வாங்கினாராம் செல்வா. மொத்த யூனிட்டும் மொத்தமாகவே தினமும் நான்கு மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்கியதாம். இப்படி நடந்து முடிந்த முதல் கட்டப் படப்பிடிப்பிலேயே படத்தின் ரொம்பவே கஷ்டமான காட்சிகள் எல்லாம் எடுக்கப்பட்டுவிட்டதாக கூறி பெருமைப்படுகிறது படக்குழு. படத்தின் நாயகியாக ஆன்ட்ரியா நடிக்க,  இசைப்பணியை ஜீ.வி. பிரகாஷ் ஏற்றுள்ளார். படத்திற்கு செல்வராகவன் 'மறவன்' எனப் பெயர் சூட்டினார் என செய்திகள் வெளியாகின. ஆனால் தனது படத்துக்கு 'மறவன்' என பெயரிடவில்லை என்கிறார் செல்வராகவன்.
Saturday, November 27, 2010 | 0 comments

பிரபுதேவாவின் 'புதிய காதல்'!

ஏற்கனவே ரம்லத்தை காதலித்து திருமணம் செய்து, மூன்று குழந்தைகளையும் பெற்ற பிரபுதேவா, நயன்தாராவுடன் கள்ளக் காதல், திருமணத்துக்கு முயற்சி என வேறு பாதையில் பயணித்து வருகிறார். இதனை எதிர்த்து பிரபுதேவா மனைவி ரம்லத் நீதிமன்றத்தில் வழக்கு மேல் வழக்காகத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்குகளில் பிரபுதேவாவுக்கும், நயன்தாராவுக்கும் அனுப்பப்பட்ட சம்மனுக்கே இன்னும் பதில் தராமல் டிமிக்கிக் கொடுத்து வருகிறார் பிரபுதேவா. நயன்தாரா தனது சென்னை இருப்பிடத்தை ரகசியமாக வைத்துள்ளார். இந்த நிலையில், நயன்தாராவுடனான காதலும் பிரபுதேவாவுக்கு சலித்துவிட்டது போலிருக்கிறது. இப்போது தனது 'எங்கேயும் காதல்' படத்தில் நாயகியாக நடிக்கும் ஹன்ஸிகா மோத்வானி மீது அவருக்குப் புதிய காதல் பிறந்துள்ளதாம். இருவரும் இப்போது ஒன்றாகச் சுற்றத் தொடங்கியுள்ளார்களாம். ஹன்ஸிகாவை ஷாப்பிங் அழைத்துப்போனாராம் பிரபுதேவா. வெளியிடங்களில் இருவரும் தங்கும் அளவு முன்னேறிவிட்டதாகக் கூறப்படுகிறது. இது நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் இடையே பெரும் மோதலை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நட்சத்திர ஹோட்டலில் பிரபுதேவாவிடம் கடுமையாக சண்டைப் போட்டாராம் நயன்தாரா. ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே சண்டை முற்றியதால், பக்கத்திலிருந்தவர்கள் என்னவோ ஏதோவென்று வந்து விசாரிக்கும் அளவுக்கு விபரீதமாகப் போய்விட்டதாம் நிலைமை. அடுத்தவ அடிவயித்துல ஊதின சைரன் இப்ப ஒங்க வயித்துல கேக்குதா?
Saturday, November 27, 2010 | 0 comments

இது நடிகைக்கு எதிரானது அல்ல அசின் விஷயத்தில் ஈழ மாணவர்கள்!

Written By Raveendran on Friday, November 26, 2010 | Friday, November 26, 2010

தமிழீழ புரட்சிகர மாணவர்கள் அமைப்பு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அசின் நடித்த காவலன் படத்தை புறக்கணிக்கும்படி அதில் கேட்டுக் கொண்டிருப்பதால் உலகம் முழுக்க இப்படம் குறித்த சலசலப்பு எழுந்துள்ளது. இது விஜய் நடித்த படம் என்பதையும் தாண்டி அசின் முன்னிலைப்படுத்தப்படுவதால் எழுந்துள்ள இந்த வினைக்கு எதிர் வினை என்பது ரிலீஸ் நேரத்தில் தெரியும். இப்போதைக்கு அந்த அறிக்கை அப்படியே உங்கள் பார்வைக்கு-
அன்பார்ந்த உலகத் தமிழ் மக்களே...
வெகு விரைவில் வெளிவர இருக்கும் விஜய் அசின் நடித்த காவலன் படத்தை உலகமெங்கும் புறக்கணிக்குமாறு உரிமையோடு வேண்டும் அதே நேரம் அதற்கான வலுவான காரணங்களையும் முன்வைக்க விரும்புகின்றோம்.
முதலில் படப்பிடிப்புக்கு மட்டுமே இலங்கை சென்றேன் என்றார் அசின் பின்பு போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யவே சென்றேன் என பல்டியடித்தார். எல்லாவற்றையும் விட கொடுமையான விடயம் எதுவெனில் ஒருவருக்கு கண் சிகிச்சை முடிந்த பின் நீங்கள் முதலில் யாரை பார்க்க விரும்புகின்றீர்கள் என கேட்ட கேள்விக்கு நான் அசினை மட்டுமே பார்க்க விரும்புகின்றேன் என அவர் கூறியதாக அசின் பேட்டிகளில் கூறினார்.
இதில் இருந்து சிங்களம் செய்ய நினைக்கும் பரப்புரை என்னவென்று உங்களுக்கு புரிந்திருக்க வேண்டும்.https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjL6Ih4hrmPfbjvuv0Hn6-NbhF9UWL6AE-_-QJe3_68fSn1nx89ytzx9pMB6a-wB611aBVX0hMXLwZBt_a0ymfYgiP9bsuK6hHKkQuW4dNjHsK7_fSz7ntf6nuewcOdlodaKCs9lOrJc0NW/s1600/kavalan-Latest-Movie-Stills-1.jpg
ஆம் தமிழினத்தை அனைத்து விதமான போதைக்குள்ளும் வைத்திருக்க விரும்பும் சிங்களம் தன் முதற் பார்வையே நடிகைமேல்தான் இருக்க வேண்டும் எனும் அளவுக்கு தமிழர்கள் சினிமா பைத்தியங்கள் எனவும் அதை விடுதலைப்புலிகள் தடுத்ததாகவும் பிரச்சாரங்கள் செய்கின்றார்கள்.
இது ஒரு நடிகைக்கு எதிரான பிரச்சாரம் அல்ல பேரினவதாத்தின் தந்திரத்திற்கு எதிரான பிரச்சாரம்.
சற்று யோசித்துப் பாருங்கள் பல பல கோடிகள் திட்டங்களோடும் உதவிகளோடும் சென்ற இந்திய குழுவோடு கூட  திருமாவளவன், கனிமொழி, பாலு போன்றோர் சென்ற போது  ஜனாதிபதியோ அல்லது பிரதமரே ஏன் முதலமைச்சர்கூட அவர்களோடு செல்லவில்லை.
ஆனால் இந்திய அளவில் கூட புகழ் பெறாத ஒரு நடிகையோடு அவர் சென்ற இடம் முளுவதும் அந்த நாட்டின் முதற் பெண் அதாவது ஜனாதிபதியின் மனைவி உடன் சென்று வந்த்தன் மர்மம் என்ன?.
அசினோடு சென்ற சல்மான் கானுக்கோ அல்லது உண்மையில் உதவிகள் செய்த விவேக் ஓபராய்க்கோ கூட இந்த கவுரவங்கள் வழங்கப்படவில்லை.
அதோடு அசினால் சிகிச்சை அளிக்கப்பட்டவர்கள் என கூறப்படுவோர்க்கு 10க்கும் மேற்பட்டவர்களுக்கு முளுமையாக கண் பார்வை பறிக்கப்பட்டுள்ளது சிகிச்சை எனும் பெயரால். சிறு வலி என்றாலும் கால்களை அகற்றியும் கைகளை அகற்றியும் தமிழர்களை முடவர்களாக்கியுள்ளது சிங்கள அரசு.
இவைகள் அனைத்தும் சிங்கள அரசால் திட்டமிட்டு நடத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கையே தவிர வேறில்லை. அதற்கு துணைபோகும் அனைவரையும் புறக்கணிப்போம்.
இப்பட புறக்கணிப்பு ஒரு பாடமாக அனைவருக்கும் அமைய வேண்டும். ஏற்கனவே பல கடிதங்ளை தமிழ் நாட்டின் பல திரைப்பட சங்கங்களுக்கு அனுப்பியிருந்தோம் அசின் மன்னிப்பு கோருவார் என அவர்களால் சொல்லப்பட்டாலும் இதுவரை அப்படி எதுவும் நிகழவில்லை மாறாக மேலும் திமிராகவே காணப்பட்டார் அசின் உதவி செய்யவே சென்றேன் என்றவர் இயக்குனர் படப்பிடிப்பு இலங்கையில் வைத்த்தற்கு நான் மன்னிப்பு கோர மாட்டேன் என்றார்.
Friday, November 26, 2010 | 0 comments

விக்ரம் போட்ட கட்டளை ஆமாம் போட்ட அமலா!

Written By Raveendran on Thursday, November 25, 2010 | Thursday, November 25, 2010

டத்துல மட்டுமல்ல, நிஜத்திலேயும் ஒரு நடிகைக்கு 'எல்லாமுமாக' இருப்பது ஹீரோக்களுக்கு பிடித்த விஷயம். அதிலும் விக்ரம் மாதிரி ஹீரோக்களுக்கு இந்த விளையாட்டு ரொம்பவே பிடிக்கும். உதாரணமில்லாமல் ஒரு விஷயத்தை பேச நாமென்ன விரோதியா விக்ரமுக்கு?
சிந்து சமவெளி, மைனா போன்ற படங்களில் நடித்த அமலா தற்போது விக்ரம் படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். இன்னும் பெயர் வைக்கப்படாத அந்த புதிய படத்தில் அமலாதான் இவருக்கு ஜோடி. சீன் காட்ற சினிமாவுலேயே சீன் போடுற வேலை ஆரம்பம் ஆகிவிட்டதாம் இப்போது! "என்னுடைய அடுத்த படத்திலேயும் நீதான் எனக்கு ஜோடி" என்ற முதல் அஸ்திரத்தை எரிந்த விக்ரம், அப்படியே சொன்ன இன்னொரு அட்வைஸ் "மேனேஜரை மாத்திரு" என்பதுதான்.
முதல் படத்திலிருந்தே இவருக்கு பட வாய்ப்புகள் வாங்கிக் கொடுத்த இன்னொரு மேனேஜருக்கு இந்த விஷயம் தெரியுமோ, தெரியாதோ? சட்டென்று சரி சொல்லிவிட்டார் அமலாவும். (ஹ்ம்... நடிகைப்பா!) தன் மேனேஜரை அழைத்து "இனிமே இவங்களுக்கு தேவையான பப்ளிசிடி மற்றும் பட வாய்ப்புகள் எல்லாமே உங்க பொறுப்பு" என்று கூறிவிட்டாராம் விக்ரம்.
பொழப்புக்கு பூ விக்க போனாராம் ஒருவர். மொழம்போட வந்தாராம் இன்னொருவர்! வெளங்கிரும்...
Thursday, November 25, 2010 | 0 comments

அஜீத் பிறந்தநாளில் மங்காத்தா

சென்னை-28, ‌சரோஜா, கோவா ஆகி‌ய வெற்றிபடங்களை இயக்கிய வெங்கட் பிரபு, தயாநிதி அழகிரி தயாரிப்பில் அஜீத்தை வைத்து இயக்கி வரும் படம் மங்காத்தா. இதில் அஜீத் ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். யுவன்சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்து உள்ளார்.
இது அஜீத்தின் 50வது படம் என்பதால் ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பு துவங்கி மும்மராம நடைபெற்று வருகிறது. படத்தின் ஓபனிங் சாங்கை பாங்காக்கில் முடித்து சென்னை திரும்பியுள்ளனர் படக்குழுவினர். படத்தின் பாடல் வெளியீட்டு விழா 2011ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி வெளியிடவும், படத்தை மே-1 அஜீத் பிறந்தநாளில் ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளனர். இதனால் அஜீத் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்
Thursday, November 25, 2010 | 0 comments

விஜய் படத்துக்கு ஐகோர்ட் திடீர் தடை

வெளிநாட்டு உரிமை வழங்கியதில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பான வழக்கில் நடிகர் விஜய் படத்துக்கு ஐகோர்ட் தடை விதித்துள்ளது. வெளிநாட்டில் வசிக்கும் இந்தியரான சந்திரா சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது:விஜய், அசின் நடிப்பில் உருவாகும் ‘காவலன்’ படம் டிசம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் சிங்கப்பூர், மலேசியா உள்பட வெளிநாட்டு விநியோக உரிமையை ரூ.5 கோடிக்கு நான் வாங்கினேன். தற்போது இந்த உரிமையை எனக்கு கொடுக்காமல் வேறொருவருக்கு கொடுக்க முயற்சிகள் நடக்கின்றன. ஒப்பந்தப்படி வெளிநாட்டு விநியோக உரிமையை எனக்கு அளிக்க வேண்டும். அதுவரை படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் சந்திரா கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதி ராஜேஸ்வரன் விசாரித்து, காவலன் படத்தை வெளியிட 6 வாரத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
Thursday, November 25, 2010 | 0 comments

தமிழ் படத்திலிருந்து விலகிய அனுஷ்கா

தமிழ், தெலுங்கில் ‘காஞ்சனா’ படத்தை இயக்க திட்டமிட்ட லாரன்ஸ், இப்போது தமிழில் மட்டுமே அப்படத்தை இயக்கி, ஹீரோவாக நடிக்கிறார். தமன் இசை அமைக்கிறார். ‘காஞ்சனா’ படத்தில் ஹீரோயினாக அனுஷ்கா நடிப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் காஞ்சனா படத்திலிருந்து விலகிய அனுஷ்கா, அவர் இயக்கும் தெலுங்கு படத்தில் மட்டும் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.
Thursday, November 25, 2010 | 0 comments

இனி சேலை, தாவணி தமன்னா

Written By Raveendran on Wednesday, November 24, 2010 | Wednesday, November 24, 2010

சிங்கம் வெற்றியை அடுத்து ஹரி இயக்கும் படம் ‘வேங்கை. படம் பற்றி அவர் கூறியதாவது: குடும்பம், ஆக்ஷன், காமெடி என எல்லாம் கலந்த பொழுதுபோக்கு படமாகவே என் படம் இருக்கும். ‘வேங்கை, 49 சதவீதம் குடும்பம், 51 சதவீதம் ஆக்ஷன் கலந்த படம். கோபம் கொண்ட இளைஞனாக தனுஷ் நடிக்கிறார். அவரை தாங்கி நிற்கும் கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் நடிக்கிறார். இதுவரை பார்க்காத தமன்னாவை இதில் பார்க்கலாம். மாடர்ன் உடை, சேலை, தாவணி என எல்லா காஸ்டியூம்களிலும் அவரை பார்த்த ரசிகர்கள், இதில் அவரை பாவாடை, சட்டையுடன் பார்ப்பார்கள். படம் முழுவதும் இதே காஸ்டியூமில் வருவார். அத்துடன் அவரது சுட்டித்தனமான நடிப்புக்கு குறை இருக்காது. இதன் படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. அடுத்து குற்றாலம், திருச்சி ஆகிய இடங்களில் மொத்தம் 25 நாட்கள் இடைவிடாமல் ஷூட்டிங் நடக்கிறது. தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைக்கிறார்.
Wednesday, November 24, 2010 | 0 comments

மன்மதன் அம்பு - சுவாரஸ்யமான தகவல்கள்!

அவ்வை சண்முகி', 'தெனாலி', 'பஞ்சதந்திரம்', 'தசாவதாரம்' ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து கமல்ஹாசன் - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படம்தான் 'மன்மதன் அம்பு'. மிதக்கும் கப்பலில் மனித உறவுகளுக்கு இடையே நடக்கும் உறவுகளை ரொமான்டிக் கலந்த காமெடியில் சொல்லப்போகும் இந்தப் படத்தை ரெட்ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கிறார். கமலுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கும் இப்படம் பற்றிய ஸ்பெஷல் ஹைலைட்ஸ்: பாரீஸ் நகரில் தொடங்கி படப்பிடிப்பு பெரும்பாலும் ஐரோப்பாவின் முக்கியத் துறைமுக நகரங்களான பார்சிலோனா, ஜனோவா, அன்னிசி, ஷெத்தோ ரெனாட் உள்ளிட்ட இடங்களிலும், இத்தாலியப் பகுதியில் வெனிஸ் மற்றும் ரோமிலும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் சில பகுதிகளிலும் தமிழ்நாட்டில், கொடைக்கானல், சென்னை உள்ளிட்ட இடங்களிலும் படப்பிடிப்பு நடந்தது. படத்தின் இறுதிக்கட்டக் காட்சிகள் சென்னையில் படமாக்கியுள்ளனர். மத்தியத் தரைக்கடலில் மிதக்கும் பிரம்மாண்ட கப்பலில் பெரும்பாலான கதை நிகழ்கிறது. நகைச்சுவை உணர்வுடன், மனித உறவுகளுக்கு இடையேயான உறவுகளை சித்தரிக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. நாயகன் கமல்ஹாசன், மேஜர் ஆர்.மன்னாரு கேரக்டரில் நடிக்கிறார்.
நட்புக்கும் - காதலுக்கும் இடையே சிக்கிக் கொண்டு அவர் படும் பாடு கலகலப்பாக இருக்குமாம். கமலுக்கு ஜோடியாக வரும் த்ரிஷா இப்படத்தில் தமது சொந்த குரலில் பேசியுள்ளார். அம்பு ஜாக்கி என்ற கேரக்டரில் நடித்திருக்கும் அவர், கவிதை பிரியராக இருப்பதுடன், கவிகளையும் வாசித்திருப்பது ஹைலைட். மாதவன் மதனகோபால் எனும் தொழிலதிபர் கேரக்டரில் நடித்திருக்கிறார். தீபா என்ற கேரக்டரில் சங்கீதா நடித்திருக்கிறார். இவர்கள் தவிர ரமேஷ் அரவிந்த், ஊர்வசி, பாப் பாடகி உஷா உதுப், ஸ்ரீமன், ராம்ஜி உள்ளிட்டோரும் இருக்கிறார்கள். 'களவாணி' ஓவியா கவுரவத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் கமல் நாயகனாக நடித்திருப்தோடு மட்டும் அல்லாமல் திரைக்கதை மற்றும் ஐந்து பாடல்களை எழுதியுள்ளார். இப்பாடல்கள் தமிழ் இலக்கியம் முதல் காமெடி வரை பல பாடல்களை உள்ளடக்கியுள்ளது. தேவிஸ்ரீ பிரசாத்தின் துள்ளலான இசையில் நெஞ்சை அள்ளும் மெலடி, வசீகரிக்கும் பாட்டு என ஆறுபாடல்கள் இடம்பெற்றுள்ளன. பாடல்களுக்கு ஏற்றவாறு மிக நேர்த்தியாக நடனம் அமைத்து இருக்கிறார் ஷோபி. சண்டைக் காட்சிகளில் தன் திறமையை வெளிப்படுத்தியுள்ள ரமேஷ், ஹைலைட்டாக பிரான்சின் ஹியூகோ பிரல்லியர், மலேசியாவின் வில்லியம் ஹாங் ஆகியோருடன் சண்டைக் காட்சிகள் அமைத்துள்ளார். எழுத்தாளர் ஞானி மகன் மனுஷ் நந்தன், இந்தப் படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். மனுஷ் நந்தன், அனைத்துக் காட்சிகளையும் டிஜிட்டல் வடிவில் படமாக்க ரெட் எம்.எக்ஸ் கேமராவைப் பயன்படுத்தியிருக்கிறார். எப்டியோ மன்மதனின் அம்பு குறி பாத்து பாஞ்சா சரி!
Wednesday, November 24, 2010 | 0 comments

ரசிகர்களை ஏமாற்றிய விஜய்!

ரசிகர்களின் ரகளை மற்றும் தள்ளுமுள்ளுவால் ஈரோட்டில் நிகழ்ச்சிகளைப் புறக்கணித்துவிட்டு நடிகர் விஜய் கிளம்பினார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஈரோட்டில் ரசிகர் மன்ற மாவட்டத் தலைவர் பாலாஜியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. இதில் நடிகர் விஜய் பங்கேற்றார். மணமக்களை வாழ்த்திய பிறகு, நலத் திட்ட உதவிகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் திருமணம் நடந்த மகாராஜா கலையரங்குக்கு விஜய் வந்த சிறிது நேரத்திலேயே ரசிகர்கள் ரகளையில் இறங்கி கூச்சல் போட்டனர். விஜய்க்கு பாதுகாப்பு அரண் அமைப்பதாகச் சொல்லி ஆளாளுக்கு வளையம் போட்டதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நலத்திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காரிலேயே 30 நிமிடங்கள் காத்திருந்தார் விஜய். ஆனால், ரசிகர்கள் ரகளை அடங்காமல் தொடர்ந்ததால், போலீசார் நடிகர் விஜய்யை அங்கிருந்து கிளம்பி விடுமாறு அறிவுறுத்தினர். இதனால், நலத்திட்ட நிகழ்ச்சியை புறக்கணித்து விட்டு விஜய் கிளம்பிச் சென்றார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மீண்டும் கூச்சலில் இறங்கினர். இதுகுறித்து விஜய் ரசிகர் மன்ற மாநில செய்தி தொடர்பாளர் பி.டி.செல்வகுமார் கூறுகையில், "தள்ளுமுள்ளு, நெரிசல் காரணமாக, அசம்பாவிதம் எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாதே என்பதற்காக போலீசார் விடுத்த வேண்டுகோளை ஏற்று நிகழ்ச்சியை விஜய் ரத்து செய்து விட்டார். நிகழ்ச்சியை ரத்து செய்ததற்காக விஜய் வருத்தம் தெரிவித்தார். இன்னும் ஓரிரு நாட்களில் மீண்டும் ஈரோடு ரசிகர்களை சந்தித்து நலத்திட்ட உதவிகளை விஜய் வழங்குவார்" என்றார். ஐயாவ இன்னும் கொஞ்ச நாளைக்காச்சும் விடுங்கப்பா..... இப்பவே முழுநேர அரசியல்வாதி ஆக்கிறாதீங்க!
Wednesday, November 24, 2010 | 0 comments

கமல் பாடும்போது கண்கலங்கிய மாதவன்!

Written By Raveendran on Tuesday, November 23, 2010 | Tuesday, November 23, 2010


சிங்கப்பூரில் நடந்த 'மன்மதன் அம்பு' பாடல் வெளியீட்டு விழாவில் த்ரிஷாவுடன் ஆடிப் பாடி அசத்தினார் கமல்ஹாசன்.  உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில், கே.எஸ். ரவிக்குமார் இயக்கியுள்ள 'மன்மதன் அம்பு' படத்தின் இசை நிகழ்ச்சி சிங்கப்பூரில் பிரமாண்டமாக நடந்தது. இதில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், படத்தின் பாடல்களை மேடையில் லைவாக இசைத்தார். இதில் கமல்ஹாஸன், த்ரிஷா ஆகியோர் பங்கேற்று பாடல்களைப் பாடி ஆடினர். 'நீலவானம்' என்ற டூயட் பாடலை இருவரும் பாடி ஆடினர். இதுகுறித்து த்ரிஷா கூறுகையில், "கமலுடன் நான் மேடையில் ஆடிப் பாடியதை நம்பவே முடியவில்லை. இதுவரை நான் பார்த்ததிலேயே சிறந்த பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி இதுவே. மேடையில் கமல் பாடியபோது, மாதவன் கண்­ர்விட்டு அழுததை (ஆனந்தத்தில்!) என்னால் மறக்க முடியவில்லை" என்றார். இந்த நிகழ்ச்சியை லைவாக சென்னையில் நிருபர்களுக்கு போட்டுக் காட்டுவதாகவும், இறுதியில் கமல் பேசுவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் பின்னர் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுவிட்டது. அசத்தலா பிலிமெல்லாம் காட்டிப்புட்டு இப்படி ஆப் பண்ணிட்டீங்களே........
Tuesday, November 23, 2010 | 0 comments

மதராசபட்டினம்

Written By Raveendran on Sunday, November 21, 2010 | Sunday, November 21, 2010

சுதந்திர போராட்டத்திற்கு முந்தைய காலகட்டத்து காதல் கதை! அதுவும் மதராசப்பட்டினத்து டோபிகானா பகுதியில் வசிக்கும் சலவை தொழிலாளி ஒருவருக்கும், அந்த மாகாணத்தையே ஆளும் ஆங்கிலேயே கவர்னரின் செல்ல மகளுக்குமிடையேயான காதல் கதை என்பதுதான் ஹைலைட்.

கதைப்படி, இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கப்போகும் தருணத்தில் மதராசப்பட்டினத்தில் வசிக்கும் சலவை தொழிலாளி ஆர்யா. அவரது வீரதீர செயல்களையும், நற்குணங்களையும் யதேச்சையாக கவனிக்கின்ற ஆ‌ங்கிலேய கவர்னரின் மகளுக்கு ஆர்யா மீது காதல். அந்த காதல் தடைகளை தாண்டி பூத்து, காய்த்து, கனிந்து ருசித்ததா? அல்லது கசந்து கருகியதா? என்பதை கதாநாயகி எமிஜாக்ஸனின் நீங்கா நினைவலைகளில் இருந்து படமாக்கியிருப்பது வித்தியாசம்!

லண்டனில் இருந்து 60 ஆண்டுகளுக்கு பிறகு காதலனை தேடி இந்தியா வரும் கதாநாயகி, பழைய மதராசப்பட்டினத்தையும் தன் ஆசை காதலனையும் மீண்டும் பார்க்க முடியாமல் பார்வையாலும் பக்குவமான நடை, உடை, பாவனைகளாலும் தவிக்கும் தவிப்புகள் படம் பார்ப்பவர்களையும் தவிப்புக்கு உள்ளாக்குவதுதான் இயக்குனர் விஜய்க்கு கிடைத்துள்ள வெற்றியாகும். க்ளைமாக்ஸில் இருக்கும் விறுவிறுப்பு படம் முழுக்க இல்லாதது மைனஸ். அதே நேரம் படம் முழுக்க ஊசி பட்டாசாக வெடிக்கும் காமெடிகள் பெரிய ப்ளஸ்.
http://www.mirchigossips.in/wp-content/uploads/2010/04/madharasapattinam-movie-stills-06-500x384.jpg
ஹீரோயின் ஏமிஜாக்ஸனிடம் நம்மூர் நடிகைகள் கற்றுக் கொள்ள வேண்டிய சமாச்சாரங்கள் எக்கச்சக்கம் இருக்கிறது எனும் அளவிற்கு பக்காவாக நடித்திருக்கிறார் பேஷ்! பேஷ்!! வயதான ஏமியாக வரும் ஆங்கிலேயே ஆச்சி சும்மா நச்சென்று நடித்திருக்கிறார். குஸ்தி வாத்தியாராக வரும் சலவை தொழிலாளி நாசரில் தொடங்கி, பாலாசிங் எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட சகலரும் பாத்திரத்திற்கேற்ற பளிச் தேர்வு. பலே நடிப்பு. ஆனால் இவர்கள் எல்லோரையும் காட்டிலும் ஐந்துமொழி தெரிந்தும் தெரியாத மொழி பெயர்ப்பாளர் வி.எம்.சி.ஹனீபா அட்டகாசம். அவர் ஸ்கிரீனில் வந்தாலே சிரிப்பு வருகிறது. கூடவே நிஜத்தில் ஹனீபா இன்று நம்மிடையே இல்லையே என்ற வருத்தமும் எழுகிறது.

ஆங்கிலேயே வில்லன் அலெக்ஸ். கவர்னர் ஜாக்ஜேம்ஸ்ஜார்ஜ் மற்றும் நண்பர்கள் பாலாஜி, உமர், சதிஷ், கிஷோர், ஜீவா, ஜெயக்குமார், குமாரவேல் உள்ளிட்ட எல்லோரும் தங்கள் பங்கை சரியாக செய்து சபாஷ் வாங்கி விடுகின்றனர்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiz17S9DRt36n_1fRY6JT_QghxHBv0M0la0PBQ8lLEMkkK1F6ixrlmaxaRJglotMmi9LB684QEqb0j_2KnVTczyD7fHAZO6yOpQN3Sg7_1nrYM_NIVKfj06sBqiYtTIvEA81pQnENdpn5eM/s1600/madrasapattinam-movie-stills-12.jpg
பழைய மதாராசபட்டினத்தையும் புதிய சென்னை மாநகரத்தையும் மாற்றி மாற்றி காட்ட இயக்குனர் விஜய் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் என்பது காட்சிக்கு காட்சி தெரிகிறது. அவரை விட அதிக ரிஸ்க் எடுத்து அசத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா. இவர்கள் இருவருக்கும் கலைஇயக்குனர் செல்வக்குமார் பக்கபலமாக இருந்திருக்கிறார் என்றால் மிகையல்ல. ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையில் வாம்மா துரையம்மா, மே கமே என எல்லா பாடல்களும் பிரமாதம். பழைய சென்னை வீதிகள், அதில் ஓடும் ட்ராம் வண்டிகள், சென்ட்ரல் ஸ்டேஷன், கூவம் ஆறு, அதில் ஓடும் படகுகள் என இன்றைய சிங்கார சென்னையை காட்டிலும் பழைய மதராசபட்டினம் பளிச்சென்று இருக்கிறது.
Sunday, November 21, 2010 | 0 comments

விஜய் இடத்தில் விஜய் ஆண்டனி!

Written By Raveendran on Saturday, November 20, 2010 | Saturday, November 20, 2010

ஆடி போயி ஆவணி வந்தா டாப்ல போயிடுவேன் என்று களவாணி சரண்யா போலவே பேசி காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிற பல சினிமாக்காரர்களுக்கு பனிரெண்டு கட்டங்களைத் தாண்டி பயணம் செய்வது மட்டும் ஆகவே ஆகாத காரியம்! அதிலும் சிலர் வாஸ்து, ராசிக்கல், நாடி ஜோதிடம் என்று சினிமாவை 'அந்த' சமாச்சாரங்களுக்குள் தேடிக் கொண்டிருப்பார்கள். அதில் லேட்டஸ்ட் வரவு இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. இவருடைய பிரச்சினை வாஸ்துதானாம். 'நான்' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாகவும் காலடி எடுத்து வைத்த விஜய் ஆண்டனி அந்தப் படத்தை முடிப்பதற்குள் கைநழுவிப் போனது ஏராளமான படங்கள். சரி, அதையெல்லாம் தியாகம் செய்து விட்டு நடித்த படம் எப்போது ரிலீஸ்? அதைத் தெளிவாக சொல்ல முடியாதளவுக்கு இருக்கிறதாம் அப்படத்தின் வியாபாரம். விட்டத்தை பார்த்துக்கிட்டு இருந்தா விட்டதை பிடிக்க முடியுமா? மீண்டும் பழைய வேகத்தில் படங்களுக்கு இசையமைக்கப் போகிறாராம். இந்த நேரத்தில்தான் விஜய் ஆண்டனி தேடிய மாதிரி முழு வாஸ்த்துடன் கூடிய பங்களா கிடைத்திருக்கிறது அவருக்கு. சாலிகிராமம் வீட்டிலிருந்து நடிகர் விஜய் நீலாங்கரை பங்களாவுக்கு போய்விட்டார். இங்கு இருந்தபோது அவர் பெற்ற தொடர் வெற்றிகள் நீலாங்கரைக்கு போனபின் இல்லை. இந்த விஷயத்தை விஜய் நம்புகிறாரோ இல்லையோ, விஜய் ஆண்டனி நம்புகிறார். தற்போது காலியாக இருக்கும் அந்த வீட்டுக்கு தனது ரெக்கார்டிங் ஸ்டுடியோவை மாற்றிவிட்டார். இதல்லாம் ரொம்ப ஓவராக்கும்.... நீங்க செய்யறதுக்கு பாவம் வாஸ்து என்ன பண்ணிச்சு.....
Saturday, November 20, 2010 | 0 comments

சிக்குபுக்கு படத்திற்கு யு சர்டிபிகேட்!

Written By Raveendran on Friday, November 19, 2010 | Friday, November 19, 2010

தாம்தூம் படத்தை தொடர்ந்து மீடியா ஒன் குளோபல் மற்றும் மெஜஸ்டிக் மல்டிமீடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வழங்கும் புதிய படம் சிக்கு புக்கு. ஆர்யா, ஸ்ரேயா, ப்ரீத்திகா, சந்தானம் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்தை டைரக்டர் கே.மணிகண்டன் இயக்கியுள்ளார். டிசம்பர் 3ம் தேதி உலகம் முழவதும் 300 தியேட்டர்களில் ரீலிஸ் ஆகவிருக்கும் இப்படத்தை சமீபத்தில் சென்சார் அதிகாரிகள் பார்த்து பாராட்டியுள்ளனர். அதோடு யு சர்டிபிகேட் கொடுத்திருக்கிறது சென்சார்போர்டு. பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய வெற்றி நாயகனாக உலா வரும் ஆர்யா இப்படத்திலும் சந்தானத்துடன் சேர்ந்து செம கலாட்டா செய்திருக்கிறாராம். எனவே இந்த படமும் பாஸ் போலவே மக்கள் மதிப்பீட்டில் பாஸ் ஆகும் என்கிறார் டைரக்டர் மணிகண்டன்
Friday, November 19, 2010 | 0 comments

வேங்கைக்காக சீறும் ஹரி!

டைட்டிலே மிரட்டலா இருக்கே என்று கூறுவதைத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஒரு டைட்டிலுக்காக புதுமுக இயக்குநர் ஒருவரை, பிரபல இயக்குநர் மிரட்டிக் கொண்டிருப்பதாக கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனுஷ் நடிக்கும் ஹரியின் புதிய படத்துக்கு வேங்கை என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதையும், இதே பெயரை இன்னொரு இயக்குநரும் தனது படத்துக்கு சூட்டியிருப்பதையும் சில தினங்களுக்கு முன்பே கூறியிருந்தோம். அருவா, சிவகங்கை என்று ஒன்றிரண்டு பெயர்களை யோசித்திருந்த ஹரி, கடைசியாக முடிவு செய்தது வேங்கை என்ற டைட்டிலை! தனுஷ்-தமன்னா இணைந்து நடிக்கும் படத்திற்குத்தான் இப்படி ஒரு பெயரை வைத்திருந்தார் அவர். ஆனால் ஹரியை முந்திக்கொண்டு இந்த டைட்டிலை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்துவிட்டார் புதுமுக இயக்குநரான பாலா. அதற்காக முறைப்படி அனுமதியும் பெற்றுவிட்டார். நினைச்சது கிடைக்கலேன்னா, கிடைச்சதை நினைச்சுக்க வேண்டியதுதான்னு போய்விடுகிற மூடில் இல்லை ஹரி. பாலாவுக்கு போன் பண்ணி டைட்டிலை கொடுத்திரு என்கிறாராம். பாலா மறுத்தாலும் ஹரி தரப்பிலிருந்து தொடர்ந்து நெருக்கிக் கொண்டிருக்கிறார்களாம். இந்த நிலையில் இயக்குநர்கள் சங்கத்திற்கு வேறொரு வேலையாக வந்திருந்த ஹரி, மிஷ்கின் விவகாரத்திற்காக அங்கு வந்திருந்த பாலாவை பார்த்ததும் பிடிபிடியென்று பிடித்துக் கொண்டாராம். ஆளு தெரியாம மோதாதே... மரியாதையா டைட்டிலை கொடுத்திரு என்று ஹரி முழங்க, எவ்வளவு மிரட்டினாலும் வேங்கையை தர முடியாது என்று பாலா மறுக்க, மிஷ்கின் பிரச்சினையை தள்ளி வைத்துவிட்டு இவர்கள் மேட்டரை கவனிக்கும்படியானது உதவி இயக்குநர்களுக்கு! இன்னமும் பிரச்சினை முடியாமல் இழுத்துக் கொண்டிருப்பதால் வேங்கை போலவே சீறிக் கொண்டிருக்கிறார்கள் இரு தரப்பும். ஹய்யோ... ஹய்யோ... டைட்டிலுக்கெல்லாம் ஒரு போரா? ஒரே அக்கப்போராவுலயா இருக்கு......
Friday, November 19, 2010 | 0 comments

மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகன் திருமணம் கோலாகலமாக நடந்தது!

மத்திய ரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி - அனுஷா திருமணம் இன்று காலை மதுரையில் தமிழக நிதி அமைச்சர் அன்பழகன் தலைமையில் கோலாகலமாக நடந்தது. மணமக்களை முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், துணை முதல்வர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் வாழ்த்தினர்.

முதல்வர் கருணாநிதியின் பேரனும், மு.க.அழகிரியின் மகனுமான துரை தயாநிதிக்கும், சென்னை ஐகோர்ட் வக்கீல் சீதாராமன் மகள் அனுஷாவுக்கும் திருமணம், மதுரை தமுக்கம் மைதானத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த பிரமாண்ட பந்தலில் இன்று கோலாகலமாக நடந்தது. திருமணத்துக்கு வந்தவர்களை முதல்வரின் மனைவி தயாளு அம்மாள், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மனைவி காந்தி அழகிரி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், மு.க.முத்து, மு.க.தமிழரசு, ராஜாத்தி அம்மாள், கனிமொழி எம்.பி., முரசொலி செல்வம், செல்வி செல்வம், கயல்விழி - வெங்கடேஷ், அஞ்சுக செல்வி - விவேக், உதயநிதி ஸ்டாலின், அறிவுநிதி, சீதாராமன் குடும்பத்தினர் வரவேற்றனர்.

மணமேடையில் திருமண நிகழ்ச்சி இன்று காலை 9.10க்கு தொடங்கியது. மண விழாவுக்கு அமைச்சர் அன்பழகன் தலைமை தாங்கினார். மு.க.ஸ்டாலின் வரவேற்றார். 9.47க்கு முதல்வர் கருணாநிதி திருமாங்கல்யத்தை எடுத்துக் கொடுக்க, மணமகள் அனுஷா கழுத்தில் அதை மணமகன் துரை தயாநிதி கட்டினார். பின்னர் முதல்வர் மற்றும் தயாளு அம்மாள் காலில் விழுந்து மணமக்கள் ஆசி பெற்றனர்.

மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் மணமக்களை வாழ்த்தி பேசினர். மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறன், வயலார் ரவி, குலாம்நபி ஆசாத், ஜி.கே.வாசன், சன் குழும தலைவர் கலாநிதி மாறன் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், தொழிலதிபர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் வாழ்த்தினர்.

திருமணத்தையொட்டி, மதுரை நகர் விழாக்கோலம் பூண்டிருந்தது. திமுக கொடி தோரணங்கள், வண்ண விளக்குகளால் மதுரையின் முக்கிய சாலைகள் அனைத்தும் ஜொலித்தன. திருமண நிகழ்ச்சிகள் 5 இடங்களில் டிஜிட்டல் திரை மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. திருமண பந்தலில் சிறப்பு சைவ விருந்து அளிக்கப்பட்டது. கூட்டத்தினர் அனைவரும் விருந்து சாப்பிட வேண்டும் என்பதற்காக ராஜாமுத்தையா மன்றம், காந்தி மியூசியம் உள்ளிட்ட பல்வேறு திருமண மண்டபங்களிலும் விருந்து பரிமாறப்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், கள்ளழகர் திருக்கோயில், நரசிங்கப் பெருமாள் கோயில், மதுரை நகர் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள ஆதரவற்றோர், முதியோர், பார்வையற்றோர் இல்லங்களிலும் திருமண விருந்து அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் நெப்போலியன், ஜெகத்ரட்சகன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ராசா, சபாநாயகர் ஆவுடையப்பன், தமிழக அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி, வேலு, ஐ.பெரியசாமி, பெரியகருப்பன், சுப.தங்கவேலன், சாத்தூர் ராமச்சந்திரன், நேரு, தங்கம் தென்னரசு, தமிழரசி உள்பட பலர் பங்கேற்றனர். அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சினிமா துறையினர் ஏராள மானோர் திரண்டு வந்திருந்தனர்.

முன்னதாக நேற்று நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கவர்னர் பர்னாலா கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். நடிகர்கள் கமல்ஹாசன், அஜித், பிரபு, மாதவன், சூரியா, கார்த்தி, வடிவேல், விவேக், ஸ்ரீகாந்த், எஸ்.எஸ்.ராஜேந்திரன், ராஜேஷ், தியாகு, வாகை சந்திரசேகர், ஏ.எல்.ராகவன், எம்.என்.ராஜம், சினிமா தயாரிப்பாளர் சங்க தலைவர் ராமநாராயணன் மற்றும் டிஜிபி லத்திகாசரண் உட்பட அரசு அதிகாரிகள், தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
Friday, November 19, 2010 | 0 comments

கமுக்கமாக பிறந்த நாள் கொண்டாடும் நயன்!

கோர்ட், வழக்கு, சம்மனுக்கு நடுவில் பிறந்த நாள் கொண்டாடும் நயன்! முன்னெப்போதும் இல்லாத சிக்கலுக்கு நடுவே இன்று பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் பிரபுதேவாவின் 'கள்ளக் காதலி'யான நயன்தாரா. ஒரு பக்கம் பிரபுதேவாவை திருமணம் செய்வதா... 'கோயிங் ஸ்டெடியாக' தொடர்வதா என்ற குழப்பம்... இன்னொரு பக்கம் ரம்லத் வழக்கில் வரும் நவம்பர் 23-ம் தேதி ஆஜராவதா இல்லையா என்ற தயக்கம்... புதுப்படங்களை ஒப்புக் கொள்வதா வேண்டாமா என்ற தடுமாற்றம் என நயன்தாராவுக்கு இது உண்மையிலேயே மறக்க முடியாத பிறந்த நாள்தான். இந்த விசேஷ நாளில் அனைவருடனும் இணைந்து கொண்டாட முடியாத சூழலில் உள்ளாராம் அவர். இதனால் தன் காதலன் பிரபு தேவாவுடன் ரகசிய இடத்தில் அவர் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். திரைத்துறையில் உள்ளவர்களுக்குக் கூட தெரியாத இடத்தில் இருவரும் தங்கியுள்ளனராம். நயன்தாரா கைவசம் எலக்ட்ரா என்ற மலையாளப் படமும், ஒரு தெலுங்குப் படமும் மட்டுமே உள்ளன. புதுப்படங்களில் அவர் நடிக்க மாட்டார் என பிரபுதேவா அறிவித்திருந்தது நினைவிருக்கலாம். வாழ்த்த கூட வாய் வரலங்க....  சாரி! எப்டியோ....சந்தோஷமாயிருங்க அவ்வளவுதான்!
Friday, November 19, 2010 | 0 comments

சிம்புவிடம் முட்டிக்கொள்ளும் ரசிகை!

நான் சிம்புவின் ரசிகை. அவருக்கு ஜோடியாக நடிக்க கூப்பிட்டா அடுத்த நொடியே பிளைட் புடிச்சு ஸ்பாட்ல இருப்பேன், என்று பெரும் நம்பிக்கையோடு பேட்டியெல்லாம் கொடுத்திருந்தார் சினேகா உல்லல். தெலுங்கு தேசமே வியந்து நோக்கும் அழகியான இவரை இவ்வளவு சொன்ன பிறகும் விட்டு வைக்க சிம்பு என்ன காவி தரித்த சாமியாரா? 'வானம்' படத்தில் தனக்கு ஜோடியாக்கிக் கொண்டார். (அப்படின்னா அனுஷ்கா?) நடிக்க வந்த நாலே நாளில் 'சீச்சி பழம் புளிக்கும்' என்று கூறிவிட்டாராம் சிம்பு. அடிக்கடி ஸ்பாட்டில் முட்டிக் கொள்கிறார்களாம் இருவரும். சிம்பு அடிக்கிற ஜோக்குகளுக்குக் கூட முகத்தை இறுக்கமாக வைத்துக் கொள்கிற அளவுக்கு உஷ்ணமாகியிருக்கிறார் சினேகா உல்லல். (பின்னணியில் என்ன பிணக்கோ) பொறுத்துப் பொறுத்து பார்த்த சிம்பு, "படத்துல இந்த பொண்ணு வேண்டாம். அவருக்குப் பதிலாக வேறொருவரை நடிக்க வைக்கலாம்" என்கிறாராம். ஐயய்யோ... ரீ ஷூட்டா? என்று அதிர்ந்து போன தயாரிப்பாளர் சிம்புவை கூல் பண்ணி வருகிறாராம். இன்னொரு பக்கம் சினேகாவையும்! இவரு தங்கம் இல்ல துருபிடிச்ச தகரம்னு இப்பதான் புரிஞ்சிச்சோ என்னவோ...?
Friday, November 19, 2010 | 0 comments

Blog Archives