Hi quest ,  welcome  |  sign in  |  registered now  |  need help ?

காதலர்களை மகிழ்விக்க வரும் 'எங்கேயும் காதல்', 'கோ'!

Written By Raveendran on Saturday, February 5, 2011 | Saturday, February 05, 2011


காதலர் தினத்தையொட்டி பிப்ரவரி மாதத்தில் 2 திரைப்படங்கள் காதலர்களை மகிழ்விக்க வருகிறது. தீபாவளி, பொங்கலுக்கு புதிய திரைப்படங்கள் வருவதைப் போல இப்போது காதலர் தினத்தன்றும் புதிய திரைப்படங்களை ரிலீஸ் செய்வது வழக்கமாகி வருகிறது. கடந்த ஆண்டு காதலர் தினத்தன்று, 'விண்ணைத்தாண்டி வருவாயா' வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. அதேபோல 2009ம் ஆண்டு 'சிவா மனசுக்குள் சக்தி' படமும் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த வரிசையில் இந்த ஆண்டு இரண்டு திரைப்படங்கள் காதலர் தினத்தன்று வெளியாகின. ஒன்று கே.வி.ஆனந்த்தின் 'கோ'. இன்னொன்று, பிரபுதேவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'எங்கேயும் காதல்'. இரு படங்களுக்கும் இசையமைப்பு ஹாரிஸ் ஜெயராஜ். இரு படங்களின் பாடல்களும் ஏற்கனவே அனைவரையும் வசீகரிக்க ஆரம்பித்து விட்டன. 'எங்கேயும் காதல்' படத்தின் மூலம் ஹன்சிகா மோத்வானி தமிழுக்கு அறிமுகமாகிறார். ஜெயம் ரவியுடன் ஜோடியாக நடித்துள்ளார். காதலர்களை கொள்ளை கொள்ளும் அதிர்ஷ்ட படம் எதுவோ?

Saturday, February 05, 2011 | 0 comments

மூன்றாவதாக இணையும் கார்த்தி-தமன்னா!


என்னதான் கார்த்தியும் நானும் நல்ல நண்பர்கள் என்று தமன்னா சொன்னாலும், 'சிறுத்தை' படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தில் இணைவதால் இவர்கள் மீதான காதல் கிசு கிசுவுக்கு நிச்சயம் மேலும் அணல் மூட்டி விடுவார்கள் போலிருக்கிறது, இந்த சூப்பர் கெமிஸ்ட்ரி ஜோடியினர். இவர்கள் மீண்டும் ஜோடி சேர இருப்பது நேரடித் தமிழ் படத்தில் அல்ல. 'பொம்மரிலு' பாஸ்கர் இயக்க இருக்கும் தமிழ், தெலுங்கில் உருவாக இருக்கும் இருமொழிப் படத்தில் என்று தகவல் கசிகிறது. வழக்கம்போல இந்த படத்தையும் கார்த்தியின் நெருங்கிய உறவினரான ஞானவேல்ராஜாதான் தயாரிக்கிறாராம். ஹரி விறுவிறுப்பாக இயக்கி வரும் 'வேங்கை' படத்தை தவிர வேறெந்த படமும் தற்போது தமன்னாவின் கைவசம் இல்லை. தற்போது தனது ஊதியத்தை தமிழில் 90 லட்சத்தில் இருந்து 60 லட்சமாக குறைத்திருக்கும் தமன்னா, தெலுங்குப் பக்கம் கவனம் செலுத்தினால் போதும் என்று முடிவு செய்திருக்கிறாராம். இதற்கிடையில் வெற்றிமாறன் இயக்கத்தில் இந்த ஆண்டு இறுதியில் சிம்பு நடிக்க இருக்கும் படத்துக்கு தமன்னா கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் ஒரு தகவல் நம் காதுகளை எட்டியது!பின்ன! விட்ட எடத்த பிடிக்க வேணாமா?
Saturday, February 05, 2011 | 0 comments

மூன்று வேடங்களில் ரஜினி!

Written By Raveendran on Wednesday, February 2, 2011 | Wednesday, February 02, 2011

சட்டையை மாற்றினால் ஆளே மாறிவிடுவார் என்று நினைப்பது போலதான் இருக்கிறது இது! ரஜினி நடித்த அனிமேஷன் படமான 'சுல்தான் தி வாரியர்' பின்பு 'ஹரா'வானது. இப்போது 'ராணா'வாகியிருக்கிறது. ஆனால் இந்த மாற்றத்தால் ரஜினிக்கு இன்னொரு கூடுதல் கேரக்டர் கிடைத்திருக்கிறது என்பது மட்டும்தான் புதுசு. மற்றதெல்லாம் அதே! அதேதான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். நேற்றைய கோடம்பாக்கத்தின் பரபரப்பு ரஜினி நடிக்கும் 'ராணா' படத்தை பற்றிதான்! பத்திரிகையாளர்களுக்கு அவசரம் அவசரமாக அனுப்பப்பட்ட செய்தி குறிப்பில் ரஜினி மூன்று வேடத்தில் நடிக்கும் 'ராணா' என்ற விஷயம் பிரதானமாக இடம் பெற்றிருந்தது. ஒரு புதுப்படம் போலவே இதை அறிவித்திருந்தார்கள். ரஜினி ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கக் கூடிய மந்திர வார்த்தைகள்தான் அவையெல்லாம் என்றாலும், நிஜம் என்னவாக இருக்கும் என்ற ஆவலும் தேடலும் அநேகமாக எல்லா பத்திரிகையாளர்களுக்கும் இருந்தது. 

http://msheri.com/wp-content/uploads/2011/01/hara-300x163.jpg
நாம் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் வேறு மாதிரியானவை. 'சுல்தான் தி வாரியர்' படத்திற்கு சுமார் பத்து கோடி வரை பைனான்ஸ் செய்திருந்த ஆட்லேப்ஸ் நிறுவனம் தனது பணத்தை திரும்ப வாங்கிக் கொண்டதாம். மேலும் இரண்டு கோடிகள் வட்டியாக கொடுத்து பனிரெண்டு கோடியாக கடந்த வாரம்தான் செட்டில் செய்யப்பட்டது என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். இந்த நிலையில் ஈராஸ் நிறுவனத்தோடு ஒரு புது ஒப்பந்தம் போட்டார்களாம்.
இதுவரை எடுக்கப்பட்ட அனிமேஷன் பகுதிகளை ஒரு ரஜினியாக வைத்துக் கொண்டு படத்தில் மேலும் இரண்டு நிஜ ரஜினிகளை உள்ளே நுழைத்துவிடலாம். அதற்கேற்றார் போல திரைக்கதையை சுவாரஸ்யமாக்கிக் கொள்ளலாம் என்று ஐடியா கொடுத்தாராம் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார். இந்த டிஸ்கஷன் நடந்து கொண்டிருக்கும்போது சில சமயங்களில் ரஜினியே கூட விரும்பி ரவிக்குமார் ஆபிசுக்கு வந்திருக்கிறார். அவரும் டிஸ்கஷனில் கலந்து கொண்டிருக்கிறார். முள் மேல் விழுந்த சேலையாக பல கோடி ரூபாய்களை இந்த அனிமேஷன் படத்தில் கொட்டியிருந்தார் சவுந்தர்யா ரஜினி. இப்போது சேலையும் கிழியாமல் முள்ளும் உடையாமல் காப்பாற்ற போகிறார் கே.எஸ்.ரவிகுமார். அவர் போட்டிருக்கும் இந்த புதிய திட்டம் ரஜினி ரசிகர்களுக்கு நிஜமாகவே சர்க்கரை பொங்கலாக இருக்கும் என்பதுதான் அசர வைக்கும் உண்மை! அதுமட்டுமல்ல... இப்படத்தில் மற்ற இரண்டு ரஜினியுடன் ஜோடி சேர அனுஷ்காவிடமும், தீபிகா படுகோனிடமும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். இத்துணூன்டு சீனிக்கே எறும்பு கூட்டம் மொய்க்கும்.. இதுல ஸ்வீட் ஸ்டாலே திறந்து கிடந்தா சொல்லவா வேணும்..!
Wednesday, February 02, 2011 | 0 comments

'3 இடியட்ஸி'ல் மீண்டும் விஜய்!

வட மாநிலங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தி படம், '3 இடியட்ஸ்.' இந்த படத்தில் அமீர்கான், மாதவன், சர்மான்ஜோஷி ஆகிய மூன்று கதாநாயகர்கள் இணைந்து நடித்து இருந்தார்கள். இந்த படத்தை ஜெமினி நிறுவனம் தமிழில் தயாரிக்கிறது. ஷங்கர் இயக்குகிறார். படத்துக்கு, 'மூவர்' என்று பெயர் சூட்டலாமா? என்று யோசித்து வருகிறார்கள். அமீர்கான் நடித்த வேடத்துக்கு முதலில் விஜய் பேசப்பட்டார். பின்னர், விஜய் இந்த படத்தில் இருந்து விலகிக்கொண்டதாக செய்தி பரவியது. அவருக்கு பதில், சூர்யா நடிப்பார் என்று பேசப்பட்டது. இப்போது, மீண்டும் விஜய்யே அந்த படத்தில் நடிப்பதாக உறுதியான தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் '3 இடியட்ஸ்' படத்தின் கதாநாயகன் யார்? என்ற குழப்பம் தீர்ந்தது. இந்த படத்தில் சூர்யா நடிக்கவில்லை. விஜய்யுடன் இணைந்து ஸ்ரீகாந்த், ஜீவா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். படம் முழுக்க வரும் ஒரு முக்கிய வேடத்தில், சத்யராஜ் நடிக்கிறார். படப்பிடிப்பு ஊட்டியில் தொடங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது. பிப்ரவரி 7-ந் தேதி முதல் விஜய் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும் மூன்று மாணவர்களை பற்றிய கதை இது. மூன்று பேரும் நண்பர்கள். கல்லூரி படிப்பு முடிந்ததும், நண்பர்கள் மூன்று பேரில் ஒருவர் மட்டும் காணாமல் போகிறார். படிப்பை முடித்து வேலைகளில் சேர்ந்த மற்ற இரண்டு நண்பர்களும், காணாமல் போன நண்பனை தேடுகிறார்கள். அவர்கள் அந்த நண்பனை கண்டுபிடித்தார்களா, இல்லையா? என்பதே '3 இடியட்ஸ்' படத்தின் கதை! யப்பா சாமிகளா... இப்ப மொதல்லயிருந்து ரீவைண்ட் பண்ணனுமா....?
Wednesday, February 02, 2011 | 0 comments

சிம்பு காலில் ஆபரேஷனா?

Written By Raveendran on Wednesday, January 26, 2011 | Wednesday, January 26, 2011

சிம்பு தற்போது 'வானம்' படத்தில் நடித்து வருகிறார். அவரது  காலில் ஆணி பட்டு பாதத்தில் வீக்கம் காணப்பட்டது. இதனால் சிரமப்பட்டார். டாக்டர்களிடம் சென்றபோது ஆபரேஷன் செய்து கொள்ளும்படி அறிவுறுத்தினர். இதையடுத்து கால் ஆணியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்துள்ளார். ஓரிரு நாளில் இதற்கான ஆபரேஷன் நடக்கிறது. அறுவை சிகிச்சைக்குப் பின் இரண்டு வாரங்கள் ஓய்வு எடுக்கிறார். எனவே படப்பிடிப்பு ரத்து செய்யப்படுகிறது. 'வானம்' படத்தை காதலர் தினத்தில் ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடந்தன. தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்படுவதால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுகிறது. இதுபற்றி சிம்பு கூறும்போது, "கால் ஆணியால் காலில் வலி ஏற்பட்டது. எனவே அறுவை சிகிச்சை செய்து அதை அகற்ற முடிவு செய்துள்ளேன். கடந்த வருடம் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படம் மெகா ஹிட்டாக அமைந்தது. அது போல் 'வானம்' படத்தையும் எதிர்பார்க்கிறேன்" என்றார். ஒருவழியா வானத்துக்கும் சேர்த்து ஆணி அடிச்சிட்டீங்க...!
Wednesday, January 26, 2011 | 0 comments

அண்ணன்தான் எனக்கு ரோல் மாடல்! - கார்த்தி

http://way2online.com/wp-content/uploads/2010/08/Siruthai.jpgநடிகர் கார்த்தி நேற்று கோவை வந்தார். அவர் நடித்த 'சிறுத்தை' படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டருக்கு சென்று ரசிகர்கள் முன் தோன்றினார். அவர்கள் முன் கார்த்தி பேசும் போது, 'சிறுத்தை' எனக்கு 5-வது படம். நான் நடித்த அனைத்து படமும் வெற்றி பெற்றுள்ளது. ரசிகர்களுக்கு நன்றி சொல்லவே இங்கு வந்துள்ளேன் என்றார். பின்னர் ஏர்டெல் நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியது:- சினிமாவிலும் வாரிசுகளே வருவதாக இங்குள்ளவர்கள் கூறினார்கள். நானும் உதவி இயக்குநராக பணியாற்றித்தான் நடிகராகி உள்ளேன். வாரிசு என்பதை விட கஷ்டப்பட்டு நடித்தால் தான் நிலைக்க முடியும். அப்போதுதான் மக்கள் ஏற்றுக்கொள்ளவார்கள். என்னுடைய திருமணத்தை பற்றி ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள். காதலித்தால் காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்யலாம். எனக்கு இப்போது பெற்றோர் பெண் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அம்மா, அப்பா பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்வேன். சினிமாவில் என்னுடைய அண்ணனை (சூர்யா) 'ரோல் மாடலாக' கொண்டுள்ளேன். நம்ம ராக்கெட்டு நல்லாத்தான் ஐஸ் வைக்கிறாருப்பா......!!!
Wednesday, January 26, 2011 | 0 comments

அரசியலுக்கு வருவேனா? மாட்டேனா? - விஜய்!

http://nammaarea.com/wp-content/uploads/2010/09/Kaavalan-Movie-Stills-1.jpgஅரசியலில் குதிக்கும் எண்ணம் இப்போது இல்லை என்று நடிகர் விஜய் கூறினார். சென்னையில், 'வேலாயுதம்' படப்பிடிப்பில் இருந்த விஜய், அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது: பல பிரச்சினைகளுக்குப் பிறகு 'காவலன்' படம் வெளியாகி வரவேற்பை பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு முன் எனது சில படங்கள் வெளியாகும்போது பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கிறது, அதை நான் சரி செய்திருக்கிறேன். ஆனால் 'காவலன்' படத்துக்குப் புதிதாக பல பிரச்சினைகள் உருவானது. அது எங்கிருந்து வருகிறது என்று தெரியாமல் தவித்தேன். படத்துக்கு மக்கள் அளித்திருக்கும் வரவேற்பால் அந்த கவலை மறந்து சந்தோஷமாக இருக்கிறது. நான் அரசியலுக்கு வருவேனா? மாட்டேனா? என்ற செய்தி அடிக்கடி மீடியாவில் வெளிவந்து கொண்டிருக்கிறது. நான் தெளிவாகச் சொல்கிறேன். நான் நடிகன் ஆனேன். ஆனால் இவ்வளவு பெரிய உயரத்தில் மக்கள் என்னை அமர வைப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. என்னை உயர்த்திப் பார்த்த மக்களுக்கு நானும் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். அரசியலுக்கு வரும் சூழ்நிலை இன்னும் வரவில்லை. அதற்கு முக்கியமான காரணம், இப்போது என் கவனம் சினிமாவில்தான் இருக்கிறது. இனி ஒரு ஆக்ஷன் படம், ஒரு கதையம்சமுள்ள படம் என்று மாறி மாறி நடிக்க முடிவு செய்திருக்கிறேன். வரும் தேர்தலில் எந்த கட்சிக்கு பிரசாரம் செய்வீர்கள் என்று கேட்கிறார்கள்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnS9HKDGHUdZE5vp_5XeD9E2W-C12PWAgAdBH3ghW7eQIyzD2dU-MNCevWRP_9LDxDtervzdjijOMr7Gqv6vb7_5XFGHaDcbBPPq58QRVBfjGaSkz6FDEkofs8P0FpQRDW0mSXe60DcKY/s1600/vijay_kavalan_movie_wallpapers_01.jpg
நான் அரசியலுக்கு வருவது பற்றியே முடிவு செய்யாதபோது, அந்த கேள்விக்கே இடம் இல்லை. எனது தந்தை ஜெயலலிதாவை சந்தித்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை. எனக்கு ராகுலை சந்திக்க அரிய வாய்ப்பு கிடைத்ததை போல ஜெயலலிதாவை சந்திக்க, அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அது ஒரு நல்ல சந்திப்பு அவ்வளவுதான். ஷங்கர் படத்தில் நடிக்க வேண்டுமென்றால் அவருக்குத் தேவையானபடி நான் மாற வேண்டும். இப்போதைக்கு நான் வேறு சில படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் அது இயலாத காரியம். அதனால் '3 இடியட்ஸ்' படத்தில் நடிக்க முடியவில்லை. அதற்கும் வேறு காரணம் கற்பிப்பது தவறு. திருச்சியில் நடக்க உத்தேசித்திருக்கும் ரசிகர் மன்ற மாநாடு குறித்தும் இதுவரை முடிவெடுக்கவில்லை என்றார். அரசியலுக்கு வந்துதான் மக்களுக்கு நல்லது செய்யணும்னு சட்டம் ஒன்னும் இல்லையே......
Wednesday, January 26, 2011 | 0 comments

காவலுக்கு நெருக்கடி கொடுத்தவர்கள் யார், யார்? விஜய் அதிரடி பேட்டி

Written By Raveendran on Sunday, January 23, 2011 | Sunday, January 23, 2011

இதுவரை எத்தனையோ படங்களுக்கு சி்க்கல்கள் வந்திருக்கிறது; ஆனால் காவலனுக்கு கொடுக்கப்பட்டு வரும் பிரச்னைகள் புதிய அனுபவமாக இருக்கிறது. அந்த பிரச்னைகளுக்கு காரணம் யார்? அது எங்கிருந்து வருகிறது? யார் தூண்டி விடுகிறார்கள்? எதனால் நெருக்கடி கொடுத்தார்கள்? என்பது எனக்கு தெரியவில்லை என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.  காவலன் படம் எதிர்பார்த்தபடியே வெற்றிக்கனியை சுவைத்து விட்ட மகிழ்ச்சியுடன், அடுத்த படமான வேலாயுதத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய். காவலனுக்கு கொடுக்கப்பட்டு வரும் இடையூறுகள் மற்றும் எதிர்கால திட்டம் குறித்து சூட்டிங் ஸ்பாட்டிலேயே அவர் பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது:
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCCpLnhJ0uKd84c8DE4UT5sYfKbVmuLoqO8oswnPBynYy1z0TwpN8FqNundQiBZQVFeOlB_UPUifCULvxZrg6nDs2JR-ff2sdPyz3TS16pu8En1bS-vLFdyIQNLg4qJw84jnadx3zSVHyL/s1600/Kavalan_New_Stills_04.jpg
காவலன் படத்தை ரிலீஸ் செய்வதற்குள் நிறைய பிரச்னைகளை சந்திக்க வேண்டியதாகி விட்டது. இதற்கு முன்பும் சில படங்களில் பிரச்னைகள் வந்தது உண்டு. பொருளாதார ரீதியாக பல படங்களுக்கு உதவி செய்து இருக்கிறேன். பணம் பெரிய பிரச்சினையே அல்ல. காவலன் படத்தில் சில மோசமான பிரச்சினைகளை சந்திக்க வேண்டியதிருந்தது. அந்த பிரச்சினைகளுக்கு காரணம் யார், அது எங்கிருந்து வருகிறது, யார் தூண்டிவிடுகிறார்கள்? என்று எனக்கு தெரியவில்லை. புது அனுபவமாக இருந்தது. பிரச்சினைக்கு காரணம் தெரியவில்லை. இன்றுவரை அது புரியவில்லை. சில பல பிரச்னைகள் காரணமாக, காவலன் படத்தை ஜனவரி 14ம்தேதி கொண்டுவர முடியவில்லை. என்றாலும், அந்த பிரச்சினைகளை எல்லாம் தாண்டி காவலன் படத்துக்கு மக்கள் வரவேற்பு கொடுத்து இருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் 350 தியேட்டர்களில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. கஷ்டமான சூழ்நிலையில், என் கூட இருந்து உதவி செய்தவர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி.

இவ்வாறு விஜய் கூறினார். ஜெயலலிதாவை எஸ்.ஏ.சந்திரசேகர் சந்தித்து பேசியது குறித்தும், அரசியல் பிரவேசம் குறித்தும் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையி்ல், ஜெயலலிதா அம்மாவை சந்திப்பதற்கு எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. சந்தித்தோம். அது எல்லோருக்கும் கிடைக்காது. இதற்கு முன்பு ராகுல்காந்தியை நான் சந்தித்ததும் இதுபோல்தான் அமைந்தது. அரசியலில் நுழைவதற்கு இது சரியான நேரம் அல்ல. ஒரு நடிகராக நான் மக்களுக்கு அறிமுகமானேன். இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. காவலன் பிரச்னைகளுக்கும், அரசியலுக்கும் முடிச்சு போட நான் விரும்பவில்லை, என்றார்.
http://www.vijayfansclub.com/wp-content/uploads/2010/12/kavalan-movie-new-wallpapers-03.jpg
விஜய் அ.தி.மு.க. கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்வாரா? என்று ஜெயலலிதாவிடம் கேட்டதற்கு, அதை அவரிடம்தான் கேட்க வேண்டும் என்று ஜெயலலிதா பதில் அளித்திருந்தார். வருகிற தேர்தலில், அதிமுகவுக்கு ஆதரவாக நீங்கள் பிரசாரம் செய்வீர்களா? என்ற கேள்விக்கு,  பிரசாரம் செய்வது பற்றி இன்னமும் முடிவு செய்யவில்லை, என்றார்
Sunday, January 23, 2011 | 0 comments

சிம்புவை எச்சரித்த பிரபுதேவா!

Written By Raveendran on Friday, January 21, 2011 | Friday, January 21, 2011

நயன்தாரா பற்றிய ரகசியங்களை சிம்பு தனது நண்பரிடம் கூறி வருவதை அறிந்த பிரபுதேவா, சிம்புவைக் கூப்பிட்டு எச்சரித்துள்ளார். 'வல்லவன்' படத்தின் மூலம் சிம்பு-நயன்தாரா இடையே ஏற்பட்ட பழக்கம், பின்னாளில் காதலாக மாறியது. இருவரும் மிகநெருக்கமாக இருந்த காட்சிகள் வெளியானதால் இவர்கள் இடையே பிரச்சினை உருவானது. பின்னர் இருவரும் பிரிந்தனர். அதன்பின்னர் பிரபுதேவாவுடன் காதல் வயப்பட்டார் நயன்தாரா. பிரபுதேவா-நயன்தாரா காதல் விவகாரம் பிரபுதேவாவின் மனைவி ரம்லத்திற்குத் தெரியவர பெரும் பிரச்சினை வெடித்தது. இப்போதுதான் அந்தப் பிரச்சினை ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. ரம்லத்திற்கு ஒரு மிகப்பெரிய தொகையைக் கொடுத்து சமாதானம் ஆக்கி விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ள வைத்துள்ளார் பிரபுதேவா. இருவருக்கும் ஜூன் மாதம் விவாகரத்து கிடைக்கவுள்ளது. 

விவாகரத்து கிடைத்த கையோடு நயன்தாராவை கரம்பிடிக்க உள்ளார் பிரபுதேவா. இதற்கான ஏற்பாடுகள் இப்போதே துவங்கிவிட்டன. இந்நிலையில் புதிதாக மற்றொரு பிரச்சினை கிளம்பியுள்ளது. இம்முறை பிரச்சினை நயன்தாராவுக்கு. நயன்தாராவின் முன்னாள் காதலரான சிம்பு தமக்கும், நயன்தாராவுக்கும் இடையேயான நெருக்கம் மற்றும் நயன்தாரா பற்றிய ரகசியங்களைத் தமது நண்பரிடம் கூறி வருகிறாராம். இந்த செய்தி எப்படியோ பிரபுதேவாவின் காதுக்கு எட்ட மிகவும் டென்ஷனாகிப் போனா பிரபுதேவா, சிம்புவை பார்த்து முடிஞ்சது முடிஞ்சு போச்சு, நீ ஒண்ணும் வாயைத் திறக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார். வம்பு இனி வாயே தெறக்க மாட்டாருல்ல.....!
Friday, January 21, 2011 | 0 comments

காவலன் வெளியான ரகசியம்!


விஜய்யின் 'காவலன்' எப்படி ரிலீஸ் ஆனது என்பதுதான் இப்போது கோடம்பாக்கத்தின் வியத்தகு கேள்வி. பிரபல பைனான்சியரான மதுரை அன்பு இந்த பஞ்சாயத்தில் பெரும் பங்கு வகித்தாராம். இவரும் விஜய்யும் நல்ல நண்பர்கள் என்பதும் ஒரு காரணம். மதுரை ஏரியாவையும் இவர்தான் வாங்கிக் கொண்டார். இன்னொரு புறம் தோள் கொடுக்க வந்தவர் மைக்கேல் ராயப்பன். வருகிற தேர்தலில் தேமுதிக சார்பில் ஏதாவது ஒரு தொகுதியில் நிற்கப் போகிறவர் இவர். திரையுலக வேலைகளை விட கட்சி வேலைகளைதான் அதிகம் பார்த்து வருகிறார் இப்போது. அந்த சூழ்நிலையிலும் ஓடோடி வந்த இவர், தேவைப்பட்ட பணத்தை கொடுத்து திருநெல்வேலி கன்னியாகுமரி ஏரியாவை வாங்கிக் கொண்டாராம். இதற்கிடையில் ஷக்தி சிதம்பரத்தின் பெயர் எங்கும் வரக் கூடாது என்று முடிவெடுத்தார்கள் 'காவலன்' மீட்புக் குழுவினர். நான் பதினேழு கோடி கொடுத்திருக்கேன். என் பெயர் வந்தாகணும் என்று ஷக்தி சிதம்பரம் முரண்டு பிடிக்க, அப்போதுதான் களத்தில் இறங்கினாராம் மதுரை அன்பு. அவர் பிடித்த பிடியில் தனது பிடிவாதத்தைத் தளர்த்திக் கொண்டாராம் இவர். ஆனாலும் தனக்குத் தெரிந்த வழக்கறிஞர்களிடமும் ஆலோசித்தாராம். எப்படியோ, 'காவலன்' வெளிவந்து விட்டது. ரசிகர்களுக்கு சந்தோஷமா என்பதை இனிமேல்தான் விசாரிக்க வேண்டும். அரசியல் தலைவிரித்து ஆடுதுல... அதான் சிக்கெடுக்க இம்புட்டு சிரமம்!
Friday, January 21, 2011 | 0 comments

ஒழுக்கமும் கலையும் கலந்த கலவை - ஸ்ருதி!

Written By Raveendran on Tuesday, January 18, 2011 | Tuesday, January 18, 2011

கமல் மகள் ஸ்ருதி 7-ஆம் அறிவு படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கிறார். தெலுங்கில் சித்தார்த் ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்கிறார். இதைப்பற்றி ஸ்ருதியிடம் கேட்டபோது ரொம்ப ஓபனா அவர் பேசியது: நடிகையானது என் சிறு வயது கனவு. இசையமைத்தல், பாடுதல், நடிப்பு இவற்றில் நடிக்கவே ரொம்பப் பிடிக்கிறது. இசையமைப்பது கடினமான வேலை. கமல் மகள் என்ற முத்திரையால் எனக்கு பொறுப்பு கூடியுள்ளது. கமல் மகளாக என்னைப் பார்க்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். கலையை என் தந்தையிடமும் ஒழுக்கம், கட்டுப்பாடுகளை தாயிடமும் கற்றேன். நான் அழகாக இருப்பதாகக் கூறுகிறார்கள். என் அழகின் ரகசியம் என்பது நிம்மதியான தூக்கம். நிறைவாகத் தூங்கினால் முகத்தில் பொலிவு ஏற்படும். முகத்தை அடிக்கடி சுத்தம் செய்வேன், அரிசி உணவுகளை சாப்பிட மாட்டேன். சீனியும் சேர்க்க மாட்டேன். தெலுங்கு இயக்குநர் கே.விஸ்வநாத், படங்களில் என் தந்தை நடித்துள்ளார். என்னை வைத்து ஒரு படம் இயக்க அவர் விரும்பினார். கால்ஷீட் இல்லாததால் அவர் படத்தில் நடிக்க முடியவில்லை. என் தந்தை நிறைய அறிவுரைகள் சொல்லி இருக்கிறார். தப்பு செய்தால் அதற்கான பலனை அனுபவித்து தான் தீர வேண்டும் என்பார். என் நடிப்பு சம்பந்தமாக ஆலோசனைகள் சொல்வது இல்லை. அச்சச்சோ... ரகசியத்தெல்லாம் இப்படி ஓபனா சொல்லுறீங்களே.....
Tuesday, January 18, 2011 | 0 comments

சோதனைக்கும் வேதனைக்கும் ஆளான விஜய்!

http://600024.com/files/2011/01/vijay-kavalan.jpgஅவ்வளவு பெரிய அடையாறு ஆலமரமே திடீரென்று பொட்டிக்குள் அடங்குகிற போன்சாய் மரமாகிவிட்டால்? அதே கதிதான் இப்போது விஜய்யின் 'காவலனுக்கும்'! கொண்டை ஊசி வளைவுகளாக ஏகப்பட்ட திருப்பங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது படம். நேற்றைய நிலவரம் ஒன்று. இன்றைய நிலவரம் வேறொன்றாக திடுக்கிடும் திருப்பங்கள் இப்படத்தின் வெளியீட்டு விஷயத்தில். நாலாபுறத்திலிருந்தும் கடனை வாங்கியிருக்கும் இப்படத்தின் 'திடீர்' தயாரிப்பாளர் ஷக்தி சிதம்பரத்தின் பெயர், இன்றைய 'காவலன்' விளம்பரத்திலிருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டிருக்கிறது. (அதுவும் முன்னணி நாளிதழான தினத்தந்தியில் காவலன் விளம்பரம் வரவேயில்லை) படத்தின் முதல் தயாரிப்பாளரான ரோமேஷ் பாபுவை 15 கோடி கட்டிவிட்டு படத்தை ரிலீஸ் செய்ய சொல்லிவிட்டது நீதிமன்றம். இதில் மூன்று கோடியை தருவதாக ஒப்புக் கொண்டாராம் விஜய். ஆனால் கடைசி நேரத்தில் அதற்கும் பிரச்சினை. சொந்த வீட்டிலிருந்தே அதற்கும் எதிர்ப்பு எழுந்ததாகக் கூறப்படுகிறது. விஜய்யின் தனிக்கட்சி மூட், எஸ்.ஏ.சியின் ஜெயலலிதா சந்திப்பு இவ்விரண்டும்தான் அவரது படத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறதோ என்ற எண்ணம் அழுத்தமாக விதைக்கப்பட்டிருக்கிறது சினிமா வட்டாரத்தில். 'இந்தப் பிரச்சினையில் நான் உதவட்டுமா?' என்று, தானே முன்வந்து விஜய்யிடம் பேசினாராம் கேப்டன் விஜயகாந்த். அது மேலும் பல அரசியல் சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும் என்பதால் இப்போதைக்கு அதை நிறுத்தி வைத்திருக்கிறார் விஜய் என்றும் கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். இறுதி நேரம் வரைக்கும் நம்பிக்கையைக் கைவிடாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள்! நாளைக்கு 'காவலன்' வரலாம். அல்லது வராமலும் போகலாம் என்பதுதான் இப்போதைய நிஜ நிலவரம். பின் குறிப்பு- இதற்கிடையில் ராஜபோகமான சேனல் ஒன்றும் இப்படத்தின் சேட்டிலைட் ரைட்சுக்காக மூன்று கோடியைக் கொடுத்திருந்ததாம். ஆனால் இவர்கள் கைக்கு படம் போகவில்லை. மாறாக சன் டி.விக்கு விற்கப்பட்டு விட்டது. கடைசி நேரத்தில் இந்த சேனல்காரர்களும் கோர்ட் படியேறலாம். இருந்தாலும் தளபதிக்கு இப்டி ஒரு சோதனை வரக்கூடாதுப்பா...!
Tuesday, January 18, 2011 | 0 comments

கார்த்தி வீட்டு முன்பு மறியல்!

Written By Raveendran on Thursday, January 13, 2011 | Thursday, January 13, 2011

சிறுத்தை' படத்தில் ராக்கெட் ராஜா என்ற பெயரைப் பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் கார்த்தி வீடு முன்பு, நாடார் மக்கள் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 100 பேரை போலீசார் கைது செய்தனர். நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் 'சிறுத்தை'. இப்படத்தில் ராக்கெட் ராஜா என்ற பெயரில் அவர் நடித்துள்ளாராம். நாடார் மக்கள் கட்சி என்ற கட்சியின் தலைவர் பெயர் ராக்கெட் ராஜா. இதையடுத்து 'சிறுத்தை' படத்தில் ராக்கெட் ராஜா என்ற பெயரைப் பயன்படுத்தியதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்பெயரை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும், இதை வலியுறுத்தி கார்த்தி வீட்டை முற்றுகையிடப் போவதாக அவர்கள் அறிவித்தனர். இதையடுத்து பாண்டி பஜாரில் உள்ள நடிகர் சிவக்குமார் வீட்டில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு போடப்பட்டது. இருப்பினும் இன்று காலை தடையை மீறி நாடார் மக்கள் கட்சியினர் குவிந்து விட்டனர். 

http://movies.vinkas.in/files/2011/01/Siruthai-tamanna-karthi-stills10.jpg
இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 100 பேரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே ராக்கெட் ராஜா என்ற பெயரை மாற்ற முடியாது என்று 'சிறுத்தை' படத் தயாரிப்பாளரும், நடிகர் கார்த்தியின் உறவினருமான ஞானவேல் ராஜா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், படம் வெளிவருவதற்கு முன்பே அந்த கேரக்டர் பெயரை மாற்றக்கோருவது சரியல்ல. படம் பார்க்கும் போது உண்மை நிலை தெரியவரும். அப்போது எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார். ஐயா சாமிகளா! இப்டி ஒவ்வொருத்தருக்கும் ஒரு கட்சி தலைவர் இருந்தா எப்டிங்க சினிமா எடுக்கிறது....?
Thursday, January 13, 2011 | 0 comments

எந்திரன் 'ரோபோ'வுக்கு இரண்டு விருதுகள்!

http://www.indiangossips.com/wp-content/uploads/2010/09/Endhiran-Rajinikanth-and-Aishwarya-Rai.jpg
இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் (வட இந்தியப் பதிப்புகள்) ஸ்கிரீன் பத்திரிகை சார்பில் ஆண்டுதோறும் திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான ஸ்கிரீன் விருதுகள் வழங்கும் விழா மும்பை அந்தேரியில் மிகப் பிரமாண்டமாக நடந்தது. ரஜினியின் ரோபோ படத்துக்கு ஸ்பெஷல் எஃபெக்ட்ஸுக்காக ஒரு விருதும், படத்தின் நவீன தொழில்நுட்ப உத்திக்காக நடுவர்களின் சிறப்பு விருதும் வழங்கப்பட்டன.


இந்த விழாவில் சிறந்த நடிகருக்கான விருதினை தபாங் படத்துக்காக சல்மான்கான் பெற்றார். சிறந்த நடிகை விருது வித்யா பாலனுக்கு வழங்கப்பட்டது. ஷாரூக்கானின் மை நேம் ஈஸ் கான் படத்துக்கு ராம்நாத் கோயங்கா நினைவு சிறப்பு விருது வழங்கப்பட்டது.
Thursday, January 13, 2011 | 0 comments

பொங்கலுக்கு கூடுதல் காட்சிகள்! - அண்ணாமலை

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் ராம.மு.அண்ணாமலை, பொதுச்செயலாளர் ஆர். பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளினை ஏற்று தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நிரந்தர மற்றும் பகுதி நிரந்தர திரையரங்குகள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 15-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை அரசு விடுமுறையானதால் அதிகப்படியாக ஒரு காட்சி அதாவது ஐந்தாவது காட்சி நடத்திக் கொள்ளலாம். மேலும் தமிழக அரசின் அரசாணையின்படி வருகிற 18-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை அதிகப்படியாக ஒரு காட்சி அதாவது ஐந்தாவது காட்சி நடத்திக்கொள்ளலாம். அதுபோல் நடமாடும் திரையரங்குகளுக்கு வருகிற 18-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை மேட்னி காட்சிகள் நடத்திக்கொள்வதற்கும் மற்றும் வருகிற 15-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை காலை காட்சிகள் நடத்திக்கொள்வதற்கும் அரசாணை மூலம் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மாவட்ட ஆட்சியர் மற்றும் கேளிக்கை வரி அதிகாரிகளுக்கு முன் கூட்டியே இதுபற்றிய தகவல் தெரிவித்து விட்டு அதிகப்படியாக ஒரு காட்சி அதாவது ஐந்தாவது காட்சி நடத்திக்கொள்ளலாம் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே தமிழக அரசின் அரசாணைப்படி அதிகப்படியான காட்சிகள் அதாவது ஐந்தாவது காட்சிகள் நடத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். 'இளைஞனுக்காக' முதியவர் காட்டும் காடாட்சமோ....?
Thursday, January 13, 2011 | 0 comments

நடன அமைப்புகளில் புதுமை - சிம்பு

Written By Raveendran on Tuesday, January 11, 2011 | Tuesday, January 11, 2011

வானம்’ படத்துக்காக, ஒரே ஒரு பாடலை வெளியிட்டு புதுமை படைத்திருக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜாவின் பாஸ்ட் பீட்டில், ‘எவன்டி உன்னை பெத்தான்... பெத்தான்...’ என்று ஆரம்பிக்கும் இந்த பாடலுக்கு சிம்பு என்கிற எஸ்.டி.ஆருடன் டான்ஸ் போட்டிருக்கிறார் அனுஷ்கா. ஒரிஜினலான தெலுங்கு ‘வேதம்’ படத்தில் இப்படியொரு காட்சி கிடையாதாம். ரீமேக் என்பதால் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக இதை சேர்த்திருக்கிறார்கள். பாடல் ஏற்கெனவே எஃப்.எம்.களில் ரவுண்ட் கட்டிக்கொண்டிருக்கிறது. பாடலை எழுதியிருக்கும் சிம்பு, ‘தமிழ் ரசிகர்களுக்கு ‘வானம்’ புதிய அனுபவமாக இருக்கும். மேலும் இனி வரும் படங்களில் நடன அமைப்புகளில் புதுமைகளை செய்ய விரும்புகிறேன்’ என்கிறார்.
Tuesday, January 11, 2011 | 0 comments

ஆடுகளத்தில் வில்லன் ??? - வெற்றிமாறன்!

http://tamilpoonga.com/news/cinemanews/images/danushi-adukalam.jpgவெற்றிமாறனின் 'ஆடுகளம்' பொங்கலுக்கு வெளிவருகிறது. 'பொல்லாதவன்' படத்தில் இணைந்த வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. ஆடுகளத்தில் தனுஷுடன் கிஷோரும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். 'பொல்லாதவனைப்' போல இதிலும் கிஷோர் வில்லனாக நடித்திருக்கிறார் என்று ஊர் முழுக்க வதந்தி. ஆனால் இதனை வெற்றிமாறன் மறுத்துள்ளார். கிஷோர் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கவில்லை. அவரின் இன்னொரு பரிமாணத்தை இப்படம் காட்டும். நமது நிஜ வாழ்க்கையில் வில்லன் என்று யாரும் இல்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஒருவர் நல்லவிதமாகவும் கெட்டவிதமாகவும் ரியாக்ட் செய்வார்கள். அப்படிப்பட்ட மனிதர்களைப் பற்றியதுதான் 'ஆடுகளம்' என வெற்றிமாறன் தெளிவுபடுத்தியுள்ளார். என்னத்தயாச்சும் புதுசா சொன்னாத்தானய்யா இவிங்க படமே பாப்பானுங்க...
Tuesday, January 11, 2011 | 0 comments

காவலன் கண்டு கண் கலங்கிய சென்சார்!!!

Written By Raveendran on Friday, January 7, 2011 | Friday, January 07, 2011

காவலன்' படத்தைப் பார்ப்பதற்கு ரொம்ப ஆவலாக இருக்கிறார்கள் ரசிகர்கள். ஆனால் நினைத்த மாதிரி திருவிழா நடத்த முடியாது போலிருக்கே என்று இப்போதிலிருந்தே கையைப் பிசைய ஆரம்பித்திருக்கிறது தயாரிப்பாளர் தரப்பு. தியேட்டர் கிடைக்கவில்லை என்ற பழைய ஸ்லோகம்தான் இதற்கு பதில். தமிழகத்தில் மட்டும் சுமார் 600 தியேட்டர்களை கைப்பற்றி விட வேண்டும் என்று துடியாக துடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதுவரைக்கும் 200 தியேட்டர்கள் கூட ஒப்பந்தம் ஆகவில்லையாம். ரொம்பவே டென்ஷனோடு நடந்தது சென்சார்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVdXb-9wRMkALfF88egOpF6equ9NerMEyF2TpNLRgLpcVRSbYJ6HMXSGpU3pU73W4-in-qt5B_dpJqLnSxvxQnh2eekVGBsoJRQPFfnSHVz6PUaJPD9M6CeIavwwGlnYa_Wi0kb2lICjk/s1600/vijay_kavalan_movie_wallpapers_03.jpgஆங்காங்கே விஜய் பேசும் சில வசனங்கள் நெருப்பைக் கக்குகிறதாம் தனக்கு எதிரானவர்களை நோக்கி! அதே நேரத்தில் எங்கும் கத்தரி வைக்க முடியாதபடி படம் எடுத்திருக்கிறாராம் சித்திக். க்ளைமாக்ஸ் காட்சி அசத்தல். நாங்கள் எங்களை அறியாமல் கண் கலங்கினோம் என்றார்களாம் சென்சார் உறுப்பினர்கள். இப்போதெல்லாம் சென்சார் போர்டுல என்ன சொன்னாங்க என்றொரு கேள்வியை அடிஷனலாக கேட்டு அதையும் எழுத ஆரம்பித்திருக்கிற நிருபர்களுக்கு நாம் சொல்லியிருக்கும் இந்த துணுக்கு, பெரும் தீனியாக இருக்கலாம். கேட்டுக்கோங்கப்பா... இனி தைரியமா தியேட்டர ஒதுக்கலாம்!
Friday, January 07, 2011 | 0 comments

நண்பனுக்காக விட்டுக்கொடுத்த சூர்யா!

சென்னையில் நடக்கும் ஏர்செல் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயிடம் தோல்வியடைந்தார் நடிகர் சூர்யா. நடிகர்கள் இப்போது விளையாட்டுப் போட்டிகளில் தீவிரமாக இறங்க ஆரம்பித்துவிட்டனர். ஒருபக்கம் கிரிக்கெட் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாகி வருகின்றன. இன்னொரு பக்கம் டென்னிஸ், கால்பந்து, இறகுப் பந்து என வேறு விளையாட்டுக்களிலும் கவனம் செலுத்துகின்றனர். தற்போது சென்னை ஓபன் டென்னிஸ் ஆரம்பித்துள்ளது. இந்த டோர்னமெண்டில் பிரபலங்களுக்கான போட்டி நேற்று நுங்கம்பாக்கம் ஸ்டேடியத்தில் நடந்தது. நடிகர் சூர்யாவும் ரோஹன் போபன்னாவும் ஒரு அணியாகவும், நடிகர் விவேக் ஓபராய் - பாகிஸ்தானின் ஆசியம் குரைஷி இன்னொரு அணியாகவும் களமிறங்கினர். இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே விவேக் ஓபராயின் அணி சிறப்பாக விளையாடி, சூர்யா அணியைத் தோற்கடித்தது. இதுகுறித்து பின்னர் சூர்யா கூறுகையில், "விவேக்கும் நானும் நீண்ட நாள் நண்பர்கள். என்னை அண்ணா அண்ணா என்றுதான் விவேக் அழைப்பார். அப்படிப்பட்ட நண்பனுக்காக இந்த மேட்சில் நான் தோற்றேன்..." என்றாரே பார்க்கலாம். கீழ விழுந்தாலும் மீசைல மண் ஒட்டக் கூடாதுல்ல.....
Friday, January 07, 2011 | 0 comments

உதயநிதிக்கு ஜோடியானார் த்ரிஷா

Written By Raveendran on Tuesday, January 4, 2011 | Tuesday, January 04, 2011

'நண்பேன்டா' படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் த்ரிஷா. தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் தயாரிப்பாளராக மாறியுள்ள உதயநிதி ஸ்டாலின், அடுத்து புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்துக்கு 'நண்பேன்டா' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 'பாஸ் என்கிற பாஸ்கரன்' வெற்றிப் படம் தந்த ராஜேஷ்.எம் இயக்குகிறார். இந்தப் படத்தில் உதயநிதிக்கு ஜோடி யார் என்பதில் பலரது பெயர்கள் அடிபட்டன. முதலில் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் நடிக்கக்கூடும் என்ற செய்திகள் வெளியாயின. அதன் பின் 'களவாணி' படத்தில் கலக்கிய ஓவியா நடிக்கக் கூடும் என்றார்கள். ஆனால் இப்போது, உதயநிதியின் ஜோடியாக த்ரிஷா முடிவு செய்யப்பட்டுள்ளார். இதனை இயக்குநர் ராஜேஷ்  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். உதயநிதி தயாரித்த 'குருவி', 'மன்மதன் அம்பு' படங்களில் நாயகியாக நடித்தவர் த்ரிஷா என்பது குறிப்பிடத்தக்கது. வெல்வெட் மெத்தையில பட்டுத் தலையணை!
Tuesday, January 04, 2011 | 0 comments

கோலிவுட்டுக்கு 'பாய்'! டோலிவுட்டுக்கு 'ஹாய்'- தமன்னா!

Written By Raveendran on Monday, January 3, 2011 | Monday, January 03, 2011

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFYGPR4dslDzZm4ydIMWcE-PsCxtWHkncB4UL1b986NntVW5mWWwN6v34Mhy1iRVL4qgneDKodVCEeYOmRBmQprvZa-CUp5HN9ANiQQQ6U5estCYkgnReGEKLYHdDWxHyiMAOE2Z4eLGA/s1600/tamanna+4.jpgதமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் நடிகை தமன்னா, தெலுங்கு படங்களுக்காக தமிழ் சினிமாவை ஓரம் கட்டி விட்டார். 'கேடி' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்க அறிமுகமான தமன்னா, 'கல்லூரி' படத்தின் மூலம் வெற்றி நாயகி ஆனார். தமன்னா நடிப்பில் வெளியான அடுத்தடுத்த படங்கள் வெற்றியடைந்ததால் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் தமன்னாவின் கால்ஷீட்டுக்காக காத்துக்கிடக்கும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. தற்போது கார்த்தியுடன் 'சிறுத்தை' படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர், தனுஷுடன் 'வேங்கை' படத்தில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு தமன்னா தமிழில் எந்த படத்தையும் ஒப்புக் கொள்ளவில்லையாம். தெலுங்கில் அடுத்தடுத்து 3 படங்களில் நடிக்க கமிட் ஆகியிருக்கும் தமன்னா 2011ம் ஆண்டு இறுதியில்தான் தமிழில் புதிய படத்தில் கமிட் ஆகும் முடிவில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
தெலுங்கு சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இலியானா தமிழ் சினிமாவை முற்றுகையிடத் தொடங்கியிருக்கும் நிலையில், இலியானாவின் இடத்தை பிடிக்க ஏற்கனவே நடிகை த்ரிஷா முடிவு செய்திருக்கும் நிலையில், தமன்னாவும் தெலுங்கு பக்கம் போகத் தயாராகி விட்டார். முன்பு தமிழில் நம்பர் ஒன் இடத்தில் இருந்த த்ரிஷாவை ஓரம் கட்டிவிட்டு முதலிடத்துக்கு வந்த தமன்னா, த்ரிஷாவுக்கு போட்டியாக தெலுங்கு சினிமாவிலும் குதிக்கத் தயாராகியிருப்பது தெலுங்கு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்ன...இங்க காட்ட முடியாததெல்லாம் அங்க காட்டலாம்ல......
Monday, January 03, 2011 | 0 comments

2010-ன் Top 5 இசையமைப்பாளர்கள் ஓர் பார்வை!

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான வருடம் 2010. வானளாவிய சாதனைகளும், தாங்க முடியாத சோதனைகளுமாக பரபரப்புக்குப் பஞ்சமில்லாத ஆண்டாகத் திகழ்ந்தது 2010. நடிப்பு, இயக்கம், இசை, தயாரிப்பு, பாக்ஸ் ஆபீஸ் வசூல் என பல துறைகளில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள், விறுவிறுப்பான நிகழ்வுகளை அடுத்தடுத்துப் பார்க்கலாம். இந்த கோலிவுட் 2010 ப்ளாஷ்பேக்கை இசையுடன் துவங்கலாம். 2010-ன் ஆகச் சிறந்த இசையைத் தந்தவர் எந்தக் கலைஞர்... இந்தப் பட்டியலில் இமான், ஜ.“வி. பிரகாஷ்குமார், யுவன் சங்கர் ராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா என 5 முக்கிய கலைஞர்கள் போட்டி போடுகின்றனர்.
யுவன் சங்கர் ராஜா
http://userserve-ak.last.fm/serve/252/339263.jpg2010-ம் ஆண்டில் அதிக ஹிட் பாடல்களைக் கொடுத்தவர் யுவன் சங்கர் ராஜாதான். 'பையா' படத்தில் அத்தனைப் பாடல்களும் சூப்பர் ஹிட். படத்தின் நாயகன் யுவன்தான் என மீடியா கொண்டாடியது. அகில இந்திய அளவில் அதிக சிடிக்கள் விற்பனையான படங்களின் வரிசையில் 'பையா' இடம்பிடித்ததென்றால், யுவன் இசையின் தாக்கத்தை அறிந்து கொள்ளலாம். இந்தப் படத்தில் இடம் பெற்ற 'துளித்துளி...' பாடல் இந்திய அளவில் டாப் 20 பாடல்கள் பட்டியலில் இடம்பெற்றது. 'நான் மகான் அல்ல' படத்திலும் பெரிதும் பேசப்பட்டது யுவனின் இசை. 2010-ம் ஆண்டின் குறிப்பிடத்தக்க வெற்றிப் படமான 'பாஸ் என்கிற பாஸ்கரன்' இசையும் பாடல்களும் இளைஞர்களை பெரிதும் கவர்ந்துவிட்டதையும் மறுக்க முடியாது. 'கோவா', 'சர்வம்', 'தில்லாலங்கடி', 'பாணா காத்தாடி' போன்ற படங்கள் வர்த்தக ரீதியில் பேசப்படாவிட்டாலும் பாடல்கள் வெற்றி பெற்றன. 2010-ல் அதிக படங்களுக்கு இசையமைத்தவர் என்ற பெருமையும் யுவனுக்கே உண்டு. மொத்தம் 15 படங்கள்!
ஜீ.வி. பிரகாஷ்குமார்
http://www.kollywoodtoday.com/wp-content/uploads/2009/07/gv-prakash-jul10-2009.jpg2010-ம் ஆண்டில் குறிப்பிடத்தக்க இசையைத் தந்த இன்னொரு இசையமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ்குமார். ஆரம்பத்தில் அவ்வளவாகப் பிடிபடாத இவருடைய இசை, 'அங்காடித் தெரு'வில் கவனம் ஈர்த்தது. இந்தப் படத்தில் இன்னொரு இசையமைப்பாளரும் இருந்தார். அவர் விஜய் ஆண்டனி. 'அவள் அப்படியொன்றும் அழகில்லை..' பாடலை அவர்தான் கம்போஸ் செய்திருந்தார். எனவே படத்தின் இசை பெற்ற வெற்றியில் பாதிப் பங்கு அவருக்கே போனது. அடுத்து ஜீ.வி. பிரகாஷ்குமார் இசையில் வந்த 'மதராசபட்டினம்', அவரது திறமையை சரியாக வெளிப்படுத்தியது. 'வாம்மா துரையம்மா...' பாடலும், 'ஆருயிரே...', 'பூக்கள் பூக்கும்...' பாடல்களும் அட சொல்ல வைத்தன. எம்.எஸ்.வி. பாடிய 'மேகமே மேகமே..' உருக வைத்தது. மற்றும் 'வா குவாட்டர் கடடிங்' படம் பேசப்படாவிட்டாலும் பாடல்கள் சூப்பராகவே உள்ளது.
இமான்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnEWHoPYWUSQCvWdRIsL7B3PVcrvtcNOWgEVkLgFs6_SRgAB-fDBv2En8WFL_zALxLOS68YJK4rn8xty9YtyE4Qog26t3V0Sg56Ypzwm0PQhzmUjW8MUncpTuKMvMs1KoFGiyr237drjk/s320/D-Imman_02.jpgஇவரது இசையில் வெளியான 'மைனா' படப் பாடல்கள், அதற்கு முன் இவர் இசைத் துறையில் செய்த தவறுகளைக் கூட மன்னிக்க வைத்தது. குறிப்பாக 'மைனா மைனா நெஞ்சுக்குள்ள...' மகா இனிமை. இந்த புதிய இடத்தை அவர் எப்படி தக்க வைத்துக் கொள்வார் என்பதே இனி முக்கியம்.




ஏ.ஆர்.ரஹ்மான்
http://2.bp.blogspot.com/_Vk2ir6UMOjY/TFgRiZCGfZI/AAAAAAAABTw/2h1y9cHn5t8/s1600/AR-Rahman_1290837c.jpg
'விண்ணைத்தாண்டி வருவாயா', 'ராவணன்' மற்றும் 'எந்திரன்' ஆகிய மூன்று பெரிய படங்களின் இசை ரஹ்மான்தான். இவற்றில் 'விண்ணைத்தாண்டி வருவாயா' இசைக்காகவே மீண்டும் மீண்டும் பார்க்க வைத்தது என்றால் மிகையல்ல. 'ஹோசனா...,' 'மன்னிப்பாயா,' 'ஓமனப் பெண்ணே...' இதயத்தில் பச்சென்று ஒட்டிக் கொண்டன. 'ராவணன்' பற்றி சொல்ல ஒன்றுமில்லை. பெரிதாக சொல்லப்பட்ட 'உசுரே போகுதே...' பாடல்  மெய் சிலிர்க வைத்தது. ஆண்டின் இறுதியில் அவர் இசையில் வெளியான ரஜினியின் சூப்பர் ஹிட் படமான 'எந்திரன்' இந்திய சினிமாவின் அத்தனை சாதனைகளையும் உடைத்து நொறுக்கியது. குறிப்பாக இசைத் துறையில் இவ்வளவு பெரிய விற்பனை எப்படி சாத்தியம் என அனைவரும் வியந்து நிற்கிறார்கள். இதற்கு ரஹ்மான் இசையைத் தாண்டி, ரஜினி என்ற சாதனையாளரின் புகழும் காரணம் என்பதையும் மறுக்க முடியாது. 'எந்திரனில்' அத்தனைப் பாடல்களும் அட்டகாசமான விருந்து. குறிப்பாக, 'இரும்பிலே ஒரு இதயம்' , 'காதல் அனுக்கள்' மற்றும் 'கிளிமாஞ்சாரோ' என அனைத்தும் கலக்கல் பாடல்கள். 'இரும்பிலே..' பாடல் ஆரம்பத்தில் சிலருக்கு அவ்வளவாக பிடிக்காமலிருந்தது. ஆனால் படம் வெளியான பிறகு அந்தப் பாடல்தான் நம்பர் ஒன்னாக மாறியது இன்னொரு சுவாரஸ்யம்.
இளையராஜா
http://imovies4you.com/wp-content/uploads/2008/03/ilayaraja.jpgஇளையராஜா இசையில் இந்த ஆண்டில் வந்தவை மூன்று படங்கள்தான். அவற்றில் 'பழஸிராஜா'வின் ஒரிஜினல் மலையாளப்படம். பின்னணி இசையில் தேசிய விருதைப் பெற்ற படம் அது. அதேநேரம், பாடல்களும் மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்றன. தமிழிலும் மிக இனிமையாக அமைந்தன பாடல்கள். 'நந்தலாலா' பின்னணி இசையின் உச்சமாகக் கருதப்படுகிறது. படத்தின் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும், எல்லோரும் ஏகமனதாகப் பாராட்டிய ஒரே அம்சம் இளையராஜாவின் இசைதான். இந்தப் படத்தில் ஜேசுதாஸ் குரலில் இடம்பெற்ற 'ஒண்ணுக் கொண்ணு துணையிருக்கு...' பாடலும், இளையராஜா பாடிய 'தாலாட்டு கேட்க நானும்...', 'மெல்ல ஊர்ந்து...' பாடல்கள் மனசை உருக்கி விட்டன. இவர்களைத் தவிர, 'வம்சம்' படம் மூலம் புதுமுக இசையமைப்பாளராக அறிமுகமான தாஜ் நூர் இசை குறிப்பிட்டுச் சொல்லும்படி இருந்தது. 'களவாணி' படத்தில் எஸ்.எஸ்.குமரனின் 'டம்ம டம்மா..' பாடலும் மறக்கமுடியாதது.  
இன்னிசையோடு துவங்கட்டும் இனிய புத்தாண்டு 2011 !
Monday, January 03, 2011 | 0 comments

Blog Archives