Hi quest ,  welcome  |  sign in  |  registered now  |  need help ?

போதை மருந்து பயன்படுத்திய விவகாரம் பிரபல நடிகைகள் சிக்குகிறார்கள்

Written By Raveendran on Monday, August 23, 2010 | Monday, August 23, 2010

கோகைன் போதை மருந்து வாங்கும்போது நடிகர் ரவிதேஜாவின் சகோதரர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். தெலுங்கு முன்னணி நடிகைகள் சிலரும் போதை மருந்து பயன்படுத்துவது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் கேளிக்கை, பொழுதுபோக்கு வசதிகளுடன் கூடிய ஓட்டல்கள், பஃப்கள் ஏராளமாக உள்ளன. சில முக்கிய பஃப்களுக்கு வரும் வி.ஐ.பி.க்கள், நடிகர், நடிகைகளுக்கு கோகைன் போன்ற போதை மருந்து ரகசியமாக விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த இடங்கள் எப்போதும் ஹவுஸ்புல்லாக இருக்கும். சமீபகாலமாக இதுபற்றி ஐதராபாத் போலீஸ் கமிஷனர் ஏ.கே.கானுக்கு நிறைய புகார்கள் வந்தன. போதை மருந்து விற்பவர்கள், வாங்குபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்காணித்து கையும் களவுமாக பிடிக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து பஃப் மற்றும் ஆடம்பர ஓட்டல்களை போலீசார் மாறுவேடங்களில் கண்காணித்து வந்தனர். பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள கிரீன் மாஸ்க் அருகே நேற்று முன்தினம் போலீசார் அதிரடிவேட்டை தொடங்கினர். அப்போது அப்போது இருவரிடம் வாலிபர்கள் போதை மருந்து வாங்கினர். அவர்களை போலீசார் சுற்றிவளைத்துப் பிடித்தனர். கோகைன் போதை மருந்து விற்றவர்கள் நைஜீரியாவை சேர்ந்த சிமா கிளமன்ட் (எ) விக்டர், அவரது நண்பர் நரேஷ் என்பதும், அவர்களிடம் கோகைன் வாங்கியவர்கள் பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் சகோதரர்கள் ரகுநாத ராஜு என்ற ரகுபாபு (34), பரத் ராஜு (36) என்பது தெரிந்தது. அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இதுபற்றி ஐதராபாத் போலீஸ் கமிஷனர் ஏ.கே.கான் கூறியதாவது: தெலுங்கு சினிமா வட்டாரத்தில் போதை மருந்து நடமாட்டம் அதிகமாக இருப்பதாக தகவல் வந்தது. பிரபல ஹீரோயின்கள், தொழிலதிபர்கள், மாணவர்கள், வசதிமிக்க குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 65 பேர் கோகைன் உள்ளிட்ட போதை மருந்துகளை உபயோகிப்பதாக தெரியவந்தது. நகரின் பல இடங்களிலும் 9 பெரிய பஃப்களிலும் இது விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
பஃப்களில் போதை மருந்து மட்டுமில்லாமல் மது மற்றும் போதை மாத்திரைகளை பெண் வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்து வந்துள்ளனர். உகாண்டா, தான்சானியா போன்ற நாடுகளிலிருந்து வந்திருக்கும் சிலரும் போதை மருந்து விற்பதாக தெரியவந்துள்ளது. அவர்களையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். போதை மருந்து கும்பல் விரைவில் பிடிபடும்.

இவ்வாறு கமிஷனர் ஏ.கே.கான் கூறினார். பிரபல நடிகரின் சகோதரர்கள் போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது தெலுங்கு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முன்னணி நடிகைகள் பலர் போதை மருந்து பயன்படுத்துவதாக கமிஷனர் கூறியதையடுத்து, அந்த நடிகைகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.  ஆதாரங்களுடன் அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், நடிகைகள் கிலி அடைந்துள்ளனர்.
Monday, August 23, 2010 | 0 comments

தெலுங்கிலும் விஜய் த்ரி இடியட்சில் ஒரு திருத்தம்?

விஜய், ஆர்யா, ஜீவா ஆகிய மூவரும்தான் 'த்ரி இடியட்ஸ்' படத்தில் நடிக்கப் போகிறார்கள் என்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. தமிழில் விஜய் நடிக்கும் கேரக்டரில் தெலுங்கில் மகேஷ்பாபு நடிக்கப் போவதாக ஒரு செய்தி ஏற்கனவே வெளியானதல்லவா? அதில் பெரிய்ய்ய்ய்ய திருத்தம் என்கிறது கோடம்பாக்கத்து குருவி.
விஜய் நடிக்கும் படங்கள் பல தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியிருந்தாலும் நேரடி தெலுங்கு படத்தில் விஜய் நடித்ததில்லை. பிற மொழி அழைப்புகளை அவர் ஒருபோதும் ஏற்றுக் கொண்டதும் இல்லை. இந்த நிலையில் விஜய்யை நேரடியாக தெலுங்கில் அறிமுகப்படுத்தினால் என்ன என்று நினைத்தாராம் எஸ்.ஏ.சி. அதுவும் ஷங்கரை விட்டால் இந்த அறிமுகத்தை நிகழ்த்த போகிற பெரிய மோதிரக்கை எதுவும் இல்லை என்று முடிவு செய்ததால் தெலுங்கிலும் விஜய்யையே நடிக்க வைக்க முயற்சி எடுக்கிறாராம்.
டோலிவுட்டை பொருத்தவரை மகேஷ்பாபுவின் இடத்தை விஜய்யால் ஈடு செய்ய முடியாது என்பதால் அதற்கும் ஒரு விலை கொடுக்க முன் வந்திருக்கிறதாம் விஜய் தரப்பு. என்ன அது? த்ரி இடியட்ஸ் படத்தை தயாரிக்கும் ஜெமினி நிறுவனத்திற்கு மேலும் ஒரு படத்தில் நடிக்க கால்ஷீட் தருவாராம் விஜய். இந்த தனி கால்ஷீட்டுக்கு சம்பளம் வேண்டாம் என்பதுதான் அந்த மிகப்பெரிய சலுகை
Monday, August 23, 2010 | 0 comments

பிரிமியர் ஷோ கிடையாது -கார்த்தி திட்டவட்டம்!

பெரும் எதிர்பார்ப்போடு இன்று வெளியாகிறது நான் மகான் அல்ல. கார்த்தியின் தொடர் வெற்றிகளை அடுத்து இப்படத்தை பெரும் ஆர்வத்தோடு பார்க்க காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். எல்லாம் சரி. இதுவரை கார்த்தியின் படங்களை ரிலீசுக்கு முன்பே முக்கிய பிரமுகர்களுக்கு திரையிட்டு காட்டுகிற வழக்கம் இருந்தது. ஆனால் இந்த முறை ஒரு துண்டு பிலிமை கூட யார் கண்ணிலும் காட்டக் கூடாது என்று கூறிவிட்டாராம் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா.
அதாவது பிரிமியர் ஷோ கண்டிப்பாக யாருக்கும் இல்லை! ஏன் இந்த திடீர் அதிரடி? கார்த்தி நடித்த பருத்தி வீரன் படத்திலிருந்து கடைசியாக வெளியான பையா வரைக்கும் அவர் குறைந்தது ஐம்பது பேரையாவது து£க்கி போட்டு மிதிக்கிற மாதிரி காட்சிகள் இருந்தன. ஆனால் நான் மகான் அல்ல மிக யதார்த்தமான படமாம். இந்த திடீர் பிரசன்ட்டேஷன் மக்களுக்கு பிடிக்கும் என்றாலும், முன்கூட்டியே தவறான பிரச்சாரத்திற்கு வழி வகுத்துவிடக் கூடாதே என்பதால்தான் இந்த முன்னெச்சரிக்கையாம்.
இன்னொரு முக்கிய செய்தி. இப்படத்தை சென்னை தவிர தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்திருப்பவர் பொக்கிஷம் தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக்தானாம். (சென்னையில் சொந்த ரிலீஸ்) க்ளவுட் நைன் வெளியிடுவதாக விளம்பரங்கள் வந்திருக்கிறதே என்றால், இந்த வெளியீட்டுக்கு அவர்களும் தங்கள் பங்களிப்பை செய்திருக்கிறார்கள். அவ்வளவே என்கிறது கோடம்பாக்கம்!
Monday, August 23, 2010 | 0 comments

பிறகு பார்க்கலாங்க... முன்னணி இயக்குனருக்கு விஜய் பதில்!

பெரிய நடிகர்களை இயக்கியவர்களுக்கு மீண்டும் அதே லெவல் கூட்டுதான் பிடிக்கும். நினைத்தால் புதுமுகங்களை கூட அறிமுகப்படுத்தலாம். என்றாலும் அகலமான வியாபாரம். அதிர வைக்கும் சம்பளம் எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் மீண்டும் மீண்டும் பெரிய நடிகர்களின் கால்ஷீட்டுக்கு முயல்கிறார்கள். அப்படி முயன்றவர்தான் லிங்குசாமியும்.
வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், விஜய்யும் இவரும் அவ்வப்போது சந்தித்து கதை பரிமாறிக் கொண்டார்கள். இந்த விஷயம் தெரிந்துதான் சிம்புவும் வெளிப்படையாக ஒரு அறிக்கை வெளியிட்டார். என்னை ஒப்பந்தம் செய்துவிட்டு வேறொரு ஹீரோவை வைத்து படம் எடுப்பது என்ன நியாயம் என்றெல்லாம் புலம்பி தள்ளினார் அவர்.
இந்த நிலையில் லிங்குசாமியின் அடுத்த படத்தில் விஜய்தான் ஹீரோ என்ற நம்பிக்கை டமால் ஆகி விட்டதாம். காரணம், விஜய்க்கு லிங்கு சொன்ன சில கதை சுருக்கங்கள் அவரை அவ்வளவாக இம்ப்ரஸ் செய்யவில்லையாம். இயக்குனரின் அடுத்த சாய்ஸ் அஜீத் என்கிறார்கள். ஆனாலும் லிங்குசாமியை சுற்றி சுற்றி வருகிறார் கார்த்தி. மீண்டும் பையா போல ஒரு அதிரடி உருவாகலாம் என்கிறது கோடம்பாக்கக் குருவி!
Monday, August 23, 2010 | 0 comments

நீதானா அவன்' பாடல் வெளியீட்டு விழா

Written By Raveendran on Tuesday, August 10, 2010 | Tuesday, August 10, 2010


பல படங்களில் ஸ்டண்ட் கலைஞராக, நடிகராக, சண்டைக் காட்சிகளின் இயக்குநராகப் பணியாற்றிய பஞ்ச் பரத் இயக்கும் இரண்டாவது படம் 'நீதானா அவன்". இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை, பிலிம் சேம்பரில் நடைபெற்றது. வி.தஷி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு விஜயகிருஷ்ணன், மக்கள்தாசன், முகில், பத்மாவதி ஆகியோர் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். சாதாரணமாகச் சொல்லப்படுகிற வார்த்தையை வேறுவிதமாக எடுத்துக் கொண்டால் விளைவு விபரீதமாகி விடும். அப்படி அரசியல்வாதி ஒருவர் சாதாரணமாகக் கூறியதை விபரீதமாக எடுத்துக் கொள்கிற அடியாள் கூட்டம், ஒரு குடும்பத்தையே அழித்து விடுகிறது. அப்படி அழிந்த அந்த குடும்பத்தில் இருந்து, எதிரிகளை பழி தீர்க்க ஒருவன் வருகிறான். அவன் எப்படி எதிரிக்கூட்டதை தன் விவேகத்தால் அழிக்கிறான் என்பதை காமெடி, காதல், ஆக்ஷன் என்று கமர்ஷியல் முறையில் படமாக்கி இருக்கிறாராம் பஞ்ச் பரத். சதன் என்ற புதுமுகம் நாயகனாக நடிக்க, ஐஸ்வர்யா, 'சன் டிவி' ஜெயஸ்ரீ ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் சீதா, காதல் தண்டபாணி, வையாபுரி, டாக்டர் சீனிவாசன் ஆகியோர் நடிக்கும் இப்படத்தை வெற்றிவேல் கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரங்கநாயகி தயாரிக்கிறார்.

Tuesday, August 10, 2010 | 0 comments

ரஜினி அடுத்த மாதம் இமயமலை பயணம்

சூப்பர் ஸ்டார் ரஜினி இந்த ஆண்டு செப்டம்பரில் இமயமலை செல்கிறார். இமயமலையிலிருந்து அவர் திரும்பியதும், சௌந்தர்யா ரஜினி இயக்கும் சுல்தான் தி வாரியர் படத்தில் பங்கேற்கிறார். ரஜினியின் இரண்டவாது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த், தனது தந்தையை வைத்து சுல்தான் தி வாரியார் என்ற அனிமேஷன் படத்தை இயக்கி வருகிறார். கடந்த இரண்டு வருடங்களாக இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. படத்தின் 70 சதவிகித வேலைகள் முடிந்துவிட்டன. இந்நிலையில், எந்திரன் பட வேலைகளால் சுல்தான் தி வாரியர் படத்தின் வேலைகள் தாமதமாகின. இதற்கிடையே எந்திரன் படப்பிடிப்பு முடிந்த கையோடு சில நாட்கள் சுல்தானில் நடித்துக் கொடுத்தார் ரஜினி. இப்போது எந்திரன் வெளியீடு மற்றும் சௌந்தர்யாவின் திருமண வேலைகளில் ரஜினி பிஸியாக உள்ளார். செப்டம்பர் 3-ம் தேதி சௌந்தர்யாவின் திருமணம் நடக்கிறது. அன்றே எந்திரன் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஆனால் 24-ம் தேதிதான் படம் வெளியாகும் என்றும் சிலர் கூறிவருகின்றனர். எந்திரன் படம் வெளியானதும், வழக்கம்போல ரஜினிகாந்த் இமயமலைக்கு பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். அவர் இமயமலையிலிருந்து திரும்பியதும், சுல்தான் தி வாரியர் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளார். 2011ல் கோடை விடுமுறை விருந்தாக, சுல்தான் தி வாரியர் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. கல்யாண விருந்து போட்ட கையோடு ரசிகர்களுக்கும் விருந்து வச்ச சந்தோஷத்த சாந்தமா கொண்டாடுங்க...... பாபாஜி!

Tuesday, August 10, 2010 | 0 comments

விளையாடும் கலைக் குடும்பம்


கலைக் குடும்பமாக இருந்த அஜித்-ஷாலினி இப்போது விளையாட்டு குடும்பமாகவும் அவதாராம் எடுத்துள்ளார்கள். அஜித், திரைப்படங்களில் நடிப்பதோடு, கார் ரேஸ், ரிமோட் ஹெலிகாப்டர் தயாரிப்பது போன்றவற்றிலும் ஆர்வமுள்ளவர். அவரது மனைவி நடிகை ஷாலினியும் அஜித்தைப்போலவே பேட் மிட்டன் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். ஷாலினியிடம் உள்ள இந்த பேட் மிட்டன் ஆர்வம், தொலைக்காட்சியில் பேட் மிட்டன் ஆட்டத்தை பார்ப்பதோடு மட்டும் நில்லாமல், விளையாட்டு போட்டிகளில் பங்குகொள்ளவும் செய்திருக்கிறது. சென்னை மாவட்ட பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஷாலினி கலந்துகொண்டு விளையாடியுள்ளார். இதனை ரசிகர்களோடு ரசிகராக அமர்ந்து கைதட்டி ரசித்திருக்கிறார் அஜித். பெண்கள் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் நடிகை ஷாலினி-ஏ.பிரியா அணியும், சுனேடி-விசாலட்சி அணியும் மோதியது. முதல் செட்டை இழந்த ஷாலினி அணி, இரண்டாவது செட்டில் 20-18 கணக்கில் ஆட்டத்தில் முன்னேறியது. மூன்றாவது செட்டில் ஷாலினி அணி மின்னல்வேக ஆட்டத்தை வெளிப்படுத்தியப்போது, ஷாலினியை உற்சாகப்படுத்தும் விதத்தில் சப்தம் எழுப்பினார் அஜித். ஆனால் வெற்றியை பெற்றது என்னவோ எதிர் அணிதான். எனினும் மனைவிக்கு ஆறுதல் வார்த்தை கூறி, உற்சாகத்தோடு அழைத்து சென்றார் அஜித். "உங்கள் மனைவியை தொடர்ந்து போட்டியில் விளையாட அனுமதிப்பீர்களா? என்று நிருபர்கள் கேட்க ஷாலுக்கு எதில் சந்தோஷமோ அதை தொடர்ந்து செய்வார். பேட்மிட்டன் என்றால் ஷாலுக்கு உயிர். எனவே அவர் தொடர்ந்து விளையாடுவதில் தடை இருக்காது" என்று கூறினார். நல்ல குடும்பம் பல 'கலை' கழகம்!

Tuesday, August 10, 2010 | 0 comments

மலையாளத்துக்கு சலுகையளிக்கும் விக்ரம்!

Written By Raveendran on Friday, August 6, 2010 | Friday, August 06, 2010

http://www.koodal.com/cinema/gallery/movies/bheema/bheema_31_10312007113056321.jpgரோஷன் ஆன்ட்ரூஸ் என்பவர் இயக்கும் மலையாளப் படத்தில் சம்பளம் கூட வாங்காமல் இலவசமாக நடித்துத் தருகிறாராம் சீயான் விக்ரம். கடந்த வெள்ளிக்கிழமை சென்னை வந்த ரோஷன், விக்ரமை அவரது புதிய வீட்டில் சந்தித்து ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார். அதை ரோஷன் சொன்ன விதம் மற்றும் கதையின் அழுத்தம் போன்றவை விக்ரமுக்கு மிகவும் பிடித்து விட்டதாம். இரண்டு மணிநேரம் நான் சொன்ன கதையைக் கேட்டு ஒரு கணம் சிலிர்த்து விட்டார் விக்ரம். கண்டிப்பாக இந்தப் படத்தை நான்தான் பண்ணுவேன். அடுத்த ஆண்டு ஆரம்பிக்கலாம் என உறுதி கூறினார், என்று விக்ரமுடனான தனது அனுபவத்தைக் கூறினார் ரோஷன்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhC_wFy1Eih7k7CeDZ2iKn0lRRYhK9bTGCu_ViSct8jPQGTOTU_R_DuZwDvjuEyQIbcmQaejqg-3ZWcLyvxv4tOC362iVwD_MxfRPS3tKYTMqDrBEkjocCRU6Klya_JJk6ln-P_n76-O3H_/s400/vikram.jpgசரி, மலையாளத்தில் நாலு கோடி, அஞ்சு கோடி சம்பளம் தரமாட்டார்களே, விக்ரம் எப்படி ஒப்புக் கொண்டார்? இப்படி நீங்கள் நினைப்பதே தவறு என்று சொல்லும் வகையில் ஒரு முடிவை அறிவித்து எனக்கு பெரும் இன்ப அதிர்ச்சியைத் தந்துவிட்டார் விக்ரம். இந்தப் படத்துக்கு சம்பளமாக ஒரு பைசா கூட வேண்டாம். மலையாளப் பட உலகுக்கு என் பங்களிப்பாக இந்தப் படம் அமையட்டும் என்று கூறிவிட்டார். அவர் பெருந்தன்மை யாருக்கு வரும்! என கண் கலங்குகிறார் ரோஷன். விக்ரம் இப்போது இரு படங்களில் நடித்து வருகிறார். அவை முடிந்ததும் இந்த மலையாளப் படம் ஆரம்பமாகுமாம். அதற்குள் ரோஷனும் காஸனோவா என்ற தனது படத்தை முடித்துவிடுவாராம். வளர்த்து விட்ட தமிழுக்கு சிறப்புச் சலுகையெல்லாம் கிடையாதா சீயான்?
Friday, August 06, 2010 | 0 comments

ஷங்கர் சேர்த்துள்ள கூட்டணி மிகப்பெரிய கூட்டணி - ரஜினி

Written By Raveendran on Thursday, August 5, 2010 | Thursday, August 05, 2010

எந்திரன் திரைப்படம் புதிய சரித்திரம் படைக்கும் என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கோலாலம்பூரில் நடந்த எந்திரன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் அவர் ஆற்றிய சிறப்புரை... இது வித்தியாசமான சரித்திரம் படைக்கப்போகும் படம். இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ.150 கோடியில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட படம் என்பதால் எந்திரன் சரித்திரம் படைக்கப்போகிறதா... அல்லது ஷங்கர், ஐஸ்வர்யா ராய், ரஜினிகாந்த், சன் பிக்சர்ஸ் இணைந்து பணியாற்றியதால் சரித்திரம் படைக்கப்போகிறதா... இல்லை. 
 ஹாலிவுட் படங்களின் தயாரிப்புக்கு இணையாக சொல்லும் அளவுக்கு இந்தியாவிலேயே எந்த படமும் இதுவரை தயாரிக்கப்பட்டதில்லை. இதுதான் முதல்படம். அதனால்தான் இந்தப் படம் ஒரு சரித்திரம் என்றேன். இதற்கு கலாநிதி மாறன்தான் காரணம். இதைவிட அதிக பட்ஜெட்டில்... ரூ 1000 கோடியில் கூட எதிர்காலத்தில் படம் தயாரிக்கலாம். ஆனால் இந்த மாதிரி ஒரு விஞ்ஞானப் படம் தயாராவது தமிழில் இந்தியாவில் இதுதான் முதல்முறை. முதலில் வேறு ஒரு நிறுவனம் இதைத் தயாரிப்பதாக இருந்தது. சில சூழ்நிலைகளால் அதிலிருந்து வெளியே வர நேர்ந்தது. அதன் பிறகு கலாநிதி மாறனை சந்தித்தோம். 
இந்தப் படத்தின் கதையை கேளுங்கள்.. என்று ஷங்கர் சொன்னார். கலாநிதி உடனே உங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. எவ்வளவு பட்ஜெட் எத்தனை நாட்களில் முடிப்பீர்கள் என்று கேட்டார். ஷங்கரும் பட்ஜெட் சொன்னார். நாலு நாள் கழித்து முடிவு சொல்கிறேன் என்று கலாநிதி மாறன் கூறினார். பிறகு நாங்கள் அவரை சந்தித்தபோது சிவாஜி படத்தின் மொத்த வசூல் விவரத்தையும் தியேட்டர் வாரியாக அவர் வைத்திருந்தார். இதை சிவாஜி பட தயாரிப்பாளர் கூட வைத்திருந்திருக்க மாட்டார். அந்த அளவுக்கு பிராக்டிக்கலாக இருக்கிறார். இதைவிட பெரிய படமாக எந்திரனை பண்ணலாம் பிரம்மாண்டமாக செய்வோம் என்றார். அவர்தான் கலாநிதி மாறன். எதைச் செய்தாலும் வித்தியாசமாக செய்வது, பெரிதாக செய்வது, வெற்றிகரமாக செய்வது... அதனால்தான் சினிமா நட்சத்திரங்கள் மட்டுமல்ல, அரசியல்வாதிகள், பெரிய தொழில் அதிபர்கள் எல்லாரும் கலாநிதி மாறன் யார் என்று முழுமையாக அறிந்து கொள்ள விரும்புகிறார்கள். இவர் அறிமுகத்துக்காக எல்லோரும் காத்திருக்கிறார்கள். ஏனென்றால் இவர் ஸ்டார்களுக்கெல்லாம் ஸ்டார். இவர் இந்தியாவின் நம்பர் ஒன் தொழிலதிபராக கட்டாயம் வருவார். சிவாஜி படத்தில் நடிக்கும்போது கமல்ஹாசனிடம் ஷங்கரை பற்றி கேட்டேன். கெட்டிக்காரர், ஆனால் அதிகம் வேலை வாங்குவார், என்றார். 
ஷங்கருடன் பணியாற்றியது சந்தோஷமாக இருந்தது. என்னைப் பற்றி பெருமையாக பேசினார்கள். பெருமைப்படும் அளவில் நான் ஒன்றும் செய்யவில்லை. என் படங்களில் பஞ்ச் டயலாக் நானே யோசித்து சேர்ப்பேன். எந்திரனில் அப்படி நானாக எதையும் செய்யவில்லை. எல்லாமே ஷங்கர் பார்த்துக் கொண்டார். குழந்தைக்கு விதம் விதமாக மேக்கப் போட்டு ஆடு, பாடு என்று பெரியவர்கள் சொல்வார்கள். அது தப்பு தப்பாக செய்தாலும் கைதட்டிப் பாராட்டுவார்கள். என் ரசிகர்களான நீங்கள் எல்லாம் என்னை அப்படித்தான் அழகு பார்க்கிறீர்கள். ஷங்கர் சேர்த்துள்ள கூட்டணி மிகப்பெரிய கூட்டணி. இந்த மாதிரி கூட்டணி சேர்ந்தால் 234 தொகுதியும் ஓகேதான். வைரமுத்து பேசும்போது, இந்தியாவிலிருந்து ஹாலிவுட்டுக்கு செல்லும் இயக்குனர் ஷங்கர்தான் எனச் சொன்னார். அதை நானும் ஆமோதிக்கிறேன். ஐஸ்வர்யா ராய் வழக்கமான நடிகை அல்ல. இதற்கு முன் பல உலக அழகிகள் வந்திருக்கிறார்கள். ஆனால் ஐஸ்வர்யா மாதிரி யாரும் இல்லை. அழகுடன் அபார அறிவும் கொண்டவர் அவர். அவருடன் காதல் காட்சிகளில் நடிக்க எனக்கே ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. அவர் நம்ம வீட்டுப் பொண்ணு. எதிரில் அமிதாப் நின்றபடி ரஜினி கபர்தார் என்று கூறுவது போலிருக்கும் (ஐஸ்வர்யா ராய் விழுந்து விழுந்து சிரிக்கிறார்). 
ஒரு மனிதனுக்கு ஈகோ இருக்கக்கூடாது. ஈகோவை அழிப்பது ஆன்மிகம். ஈகோ சிறிதும் இல்லாததால் இவ்வளவு புகழ் கிடைத்தும் எல்லா புகழும் இறைவனுக்கே என்கிறார் ரகுமான். யோகி, மகான் என்றால் இமயமலையில்தான் இருக்க வேண்டும் என்று அல்ல. கோட் சூட் போட்டுக்கொண்டும் இருக்கலாம். எத்தனை உச்சிக்கு போனாலும் எல்லா மனிதர்களும் கீழே இறங்கி வந்தாக வேண்டும். இதற்கு உதாரணமாக ஒரு குட்டி கதை சொல்கிறேன். ஒரு இடத்தில் 70 மாடி கட்டிடம் இருந்தது. மேல் மாடிக்கு போக லிஃப்ட்டில் ஏறினோம். பாதியில் லிஃப்ட் நின்றுவிட்டது. அதுக்கு மேல போக லிஃப்ட் கிடையாது. படிகளில் ஏறித்தான் போக வேண்டும். "சரி, ஆளுக்கு ஒரு கதை சொல்லுவோம். கால் வலி தெரியாமல் மேலே போய்விடலாம் என்றார்கள். அப்படியே ஒவ்வொருவரும் கதை சொன்னார்கள். 69வது மாடி வந்தபோதுதான் நான் சொன்னேன், "ஐயோ" வீட்டு சாவியை எடுத்துவர மறந்துவிட்டேன்' என்றேன். "சரி, கீழே போய் எடுத்து வருவோம்", என்று இறங்கினோம். கீழே இறங்கி மேலே போவதுதான் வாழ்க்கை. உச்சிக்கு ஒருத்தன் போயிட்டா, அங்கேயே இருந்திட முடியாது. காணாம போயிடுவான். திரும்ப கீழே வந்துதான் ஆக வேண்டும். பையனுக்குக் கல்யாணம்... கீழே இறங்கி வரணும்... பொண்ணுக்கு கல்யாணம்... கீழே இறங்கணும். அதுதான் சந்தோஷம். கீழே வருவதும் மேலே போவதும்தான் வாழ்க்கை. அதை சந்தோஷமா செய்யலாம்" என்றார். உச்சியில் இருந்தாலும் உண்மையைச் சொல்ல உங்களால மட்டும் தான் முடியும்... அதனாலதான் நீங்க சூப்பர் ஸ்டார்!
Thursday, August 05, 2010 | 0 comments

பலமுறை கல்யாணம்...பலமுறை அபார்ஷன்: பொங்கிய நயன்தாரா!

முன்பு இருந்த அழகை இழந்துவிட்டாலும், நயன்தாராவை இன்னும் கொண்டாடிக் கொண்டிருக்கிறது ரசிகர் வட்டாரம். ஆனால் திரை கொள்ளாமல் சிரிக்கிற நயன்தாரா, நேரில் வேறு மாதிரி இருக்கிறார். அதை கண்ணுக்கு எதிரே பார்த்து கலங்கி போய் நிற்கிறார்கள் சில நிருபர்கள். நயன் நடித்த படம் ஒன்றின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. தினசரி நிருபர்கள் சிலரை அழைத்திருந்தார்கள் படப்பிடிப்பு தளத்திற்கு. இவர்களில் ஒருவரை பார்த்ததும் சாமியாடாத குறையாகிவிட்டார் நயன்தாரா. சில அடிகள் முன்னே வந்தவர், படக்கென்று காலில் விழுவது போல ஆக்ட் கொடுத்தார். எனக்கு பல முறை அபார்ஷன் பண்ணி வச்சவர் நீங்கதான். பல முறை கல்யாணம் பண்ணி வச்சவரும் நீங்கதான். உங்களை பார்க்கவே பிடிக்கலே என்று அவரது முகத்திற்கு நேரே கூற, அதிர்ச்சியில் உறைந்து போனார் நிருபர். வேறொரு பெண் நிருபரையும் பிலுபிலுவென்று பிடித்துக் கொண்டார் நயன். நான் எப்போ சென்னைக்கு வந்தாலும் உங்க நியூஸ் பேப்பரை பார்க்கிறேன். அதில் என்னைப் பற்றி ஒரு கான்ட்ரவர்சி இருக்கு. இனிமே உங்களை சந்திக்கவோ பேட்டி கொடுக்கவோ மாட்டேன். நீங்களும் போகலாம் என்றார். ஆனால் படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனரும், கதாநாயகனும் மேற்படி நிருபர்களிடம் அன்போடு பழகக் கூடியவர்கள் என்பதால் அத்தனையையும் பொறுத்துக் கொண்டார்கள் அவர்கள். 
பதிலுக்கு ஏதாவது பேசி நயன்தாரா கோபத்தை இன்னும் அதிகமாக்கினால் அவர் கேரவேனுக்குள் புகுந்து கொள்வார். படப்பிடிப்பு இன்னும் நீளும். தேவையில்லாமல் தயாரிப்பாளருக்குதான் செலவு ஏறும். எனவே பொறுத்திருப்போம் என்று பேசிக் கொண்டார்கள் அந்த நேரத்திலும். நல்லவேளையாக அசம்பாவிதம் ஏதுமின்றி படப்பிடிப்பு நிறைவுற்றது! மீடியாக்கள் மக்கள் மத்தியில் இருப்பதால் அப்படியும் இப்படியும் சிலதை விழுங்கித்தான் ஆக வேண்டும்.....!
Thursday, August 05, 2010 | 0 comments