
தொழில் ஸ்தானமான பத்தாமிடத்தில் ஊரிலுள்ள கெட்ட கிரகங்கள் எல்லாம் சேர்ந்து உட்கார்ந்துக் கொண்டு செல்வராகவனை பாடாய்படுத்தி வந்தன. ஆனால் எல்லாவற்றையும் தன் உழைப்பால் விரட்டியடிப்பார் போலிருக்கிறது செல்வா! பரபரப்பான திரைக்கதையுடன், படபடப்பான ஒரு கதையைத் தயாரித்துக் கொண்டு சென்றாராம் சூர்யாவிடம். முழு கதையையும் கேட்ட சூர்யா, ஆஹா ஓஹோ என்றாராம்! "கண்டிப்பா இந்த கதையை நாம சேர்ந்து பண்றோம். ஆனால் அதுக்கு முன்னாடி ஸ்கிரிப்டின் முழு பைண்டிங் காப்பியும் தயார் பண்ணிட்டீங்கன்னா சந்தோஷப்படுவேன்" என்று சொல்ல, பேனாவும் பேப்பருமாக உட்கார்ந்து விட்டார் செல்வா. கதையைக் கேட்டு கவுரமாக அனுப்பி வைத்ததோடு இல்லாமல், இந்த கதையை அப்படியே தன் ஆஸ்தான இயக்குநர் கே.வி.ஆனந்திடமும் சொன்னாராம் சூர்யா.

அவரும் "இந்த கதையில் நீங்க நடிச்சா பெரிய பேர் கிடைக்கும். படமும் பெரிய ஹிட் ஆகும்" என்று கூற, எப்படியாவது முந்தைய கமிட்மென்டுகளை முடித்துவிட்டு செல்வாவுடன் கரம் கோர்ப்பதென்று தயார் நிலையில் இருக்கிறாராம் சூர்யா.
சூர்யா செல்வாவின் கூட்டு என்னதான் நடக்கும் என்று பொருத்திருந்துதான் பார்ப்போமே.....
0 comments:
Post a Comment