skip to main |
skip to sidebar
த்ரிஷாவை பழிவாங்கிய கௌதம் மேனன்!
த்ரிஷா இந்தியில் தயாரிக்கப்படும் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் . திடீரென வேறு படங்களில் நடிப்பதற்காக த்ரிஷா இப்படத்திலிருந்து விலகினார். இதனால் இப்பட இயக்குநர் கௌதம் மேனன் அவர் மீது கோபம் அடைந்ததாகக் கூறப்பட்டது. இந்தப் படத்திற்கு முன்பாக 'சென்னையில் ஒரு மழைக்காலம்' படத்தை கௌதம் இயக்கி வந்தார். இதிலும் த்ரிஷா தான் நடித்தார். அந்தப் படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில், திடீரென படம் நிறுத்தப்பட்டு விட்டது. இப்போது மீண்டும் இப்படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறார் கௌதம் மேனன். 50 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் இதிலிருந்து த்ரிஷாவை நீக்க அவர் திட்டமிட்டுள்ளாராம். 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்திலிருந்து த்ரிஷா விலகியதுதான் இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. த்ரிஷாவுக்கு பதிலாக 'மதராசப்பட்டினம்' எமி ஜாக்சன் கதாநாயகியாக நடிக்க உள்ளாராம். ஏற்கனவே இந்தி 'விண்ணைத்தாண்டி' படத்திலும் த்ரிஷா வேடத்தை அவர் ஏற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. கால வாரிட்டீங்க.. அப்படியே ஜில்லுனு ஒரு கப் ஐஸ் வாட்டர் குடிங்க... இந்த மழைகாலத்துல இன்னும் குளு குளுனு இருக்கும்!
0 comments:
Post a Comment