Hi quest ,  welcome  |  sign in  |  registered now  |  need help ?

கமலின் 4 பிரண்ட்ஸ் இன்று வெளியீடு!

Written By Raveendran on Saturday, October 30, 2010 | Saturday, October 30, 2010

கமல்ஹாசன் நடித்துள்ள 4 பிரண்ட்ஸ் மலையாளப் படம் இன்று கேரளாவில் வெளியாகிறது. சாஜி சுரேந்திரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கமல் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஜெயராம், ஜெயசூர்யா மற்றும் குஞ்சக்கோ போபன் நடித்துள்ள இந்தப் படத்தின் நாயகி மீரா ஜாஸ்மின். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் நடித்துள்ள மலையாளப்படம் இது. நடிகர் கமலாகவே இந்தப் படத்தில் வருகிறாராம். "இந்தப்படத்தை தனது மலையாள நண்பர்களுக்காகவும் ரசிகர்களுக்காகவும் விரும்பிச் செய்திருக்கிறேன்" என்று கமல் கூறியது நினைவிருக்கலாம். எம்.ஜெயச்சந்திரன் இசையமைத்துள்ள இந்தப் படம், இன்று கேரளா முழுவதும் வெளியாகிறது. 'அம்மா' கோவம் இனிமேலாவது தணியுமா?
Saturday, October 30, 2010 | 0 comments

ஆரம்பமானது விக்ரம்-அனுஷ்காவின் முதல் சவாரி!

தமிழ்நாட்டின் முன்னணி கதாநாயகர்கள் ஏற ஆசைப்படும் குதிரை இது, அவர்களின் உயரம் குறைவு என்பதால் இந்த குதிரை ஏறும் பாக்கியம் யாருக்குமே கிடைக்கவில்லை, கிடைத்த ஒரு நாயகனும் திரைக்கு வெளியே இருந்து பார்க்கும் ரசிகன் போலவே அவரும் பார்த்ததுதான் மிச்சம். ஆனால் இப்போது அந்த குதிரைக்கு கடிவாளம் போட்டு சவாரி செய்ய இருக்கிறார் பாக்கியசாலி விக்ரம்.. அந்த குதிரை அனுஷ்கா! மதராசபட்டினம் புகழ் விஜய் இயக்க, விக்ரம் - அனுஷ்கா முதல்முறையாக ஜோடி சேரும் தெய்வ மகன் படப்பிடிப்பு துவங்கியது. அனுஷ்காவின் உயரமும், வாளிப்பான உடலமைப்பும்தான் அவரது ப்ளஸ் என்பதால் தெலுங்கில் வாய்ப்புகள் குவிகின்றன. ஆனால் தமிழிலோ அவரது உயரமே எதிரியாகிவிட்டது. உயரம் குறைந்த நாயகர்கள், அரையடி ஸ்டூல் அளவுக்கு ஷூ போட்டுக் கொண்டு அவருடன் நடிக்கவேண்டிய நிலை உள்ளதால், 'அனுஷ்காவா, வேண்டாம்... பக்கத்தில் நின்று பேசக் கூட முடியாது (?!)' என்று ஓரங்கட்டுகிறார்களாம். இப்படி அனுஷ்கா இழந்த வாய்ப்புகள் நான்கைந்து இருக்கும் என்கிறார்கள். ஆனால் இயக்குநர் விஜய்க்கு அந்த கஷ்டமில்லை தெய்வமகன் படத்தில். இந்தப் பட நாயகன் விக்ரமுக்கு சரியான ஜோடி எனும் அளவு படுபாந்தமாக அமைந்துள்ளதாம் இருவரின் பொருத்தமும். தனது நோயின் காரணமாக சமூகசேவகி ஒருவரால் கொண்டு செல்லப்பட்ட தன் மகளை மீட்கப் போராடும் ஒரு வளர்ச்சி குன்றிய மனிதனின் கதையை இப்படம் பிரதிபலிக்கவுள்ளது. இந்தப் படத்தில் 7 வயது மகளை மீட்கப் போராடும் மனநிலை பாதிக்கப்பட்டவராக நடிக்கிறார் விக்ரம். அவருக்கு உதவும் நேர்மையான வக்கீலாக வருகிறாராம் அனுஷ்கா. 2001-ல் வெளியான 'ஐயாம் ஸாம்' என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல் இது என்கிறார்கள். பூஜையினைத் தொடர்ந்து, இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது. தீபாவளிக்குப் பிறகு படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெறவுள்ளது. எந்தவித உருவாக்குத்தன்மையும், கற்பனையும், முதன்மைத்தன்மையும் இன்றி, ரசிகர்களை உணர்வுப்பூர்வமாக கவரும் கலையினை மட்டும் கற்றுக்கொண்டு விஜய் மீண்டும் படத்தை இயக்கத் துவங்கிவிட்டார். இப்படம் கவனமாக உருவாக்கப்பட்டால் மட்டுமே ரசிகர்களின் இதயங்களை கவர்ந்து, அவர்களது உணர்வுகளில் ஊடுருவும் என்பதில் இயக்குநர் விஜய் தெளிவான கண்ணோட்டத்துடன் உள்ளார். வெளிநாட்டுக் கதை என்பதால் உள்ளூர் ரசிகர்களை கவரும் வகையில் அதனை மாற்றி அமைப்பது இயக்குநரின் கையில் தான் உள்ளது. கோழி நெட்டையோ சொத்தையோ... கொழம்பு ருசியா இருந்தா சர்தாம்பா......!
Saturday, October 30, 2010 | 0 comments

வெளிநாடுதான் என் அடுத்த திட்டம் - ரஜினி

Written By Raveendran on Friday, October 22, 2010 | Friday, October 22, 2010


சென்னைக்குத் திரும்பி விட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தனது நண்பர்கள் வெங்கட், ஹரி ஆகியோருடன் இமயமலை சென்ற ரஜினி, மூலிகை அருவியில் குளித்து தினமும் பாபா குகையில் அமர்ந்து நீண்ட நேரம் தியானம் செய்தாராம். கடும் குளிர், பயமுறுத்தும் மலைப் பயணம், இயற்கை இடர்பாடுகள் இவற்றையெல்லாம் துச்சமாக நினைத்து ரஜினி துணிச்சலாக இமயமலையில் பயணம் செய்ததை அவருடன் சென்ற நண்பர்கள் பார்த்து வியந்துள்ளனர். மலை குகைகளில் உள்ள நூறு வயதை கடந்த மகான்களை சந்தித்து ஆசி பெற்ற ரஜினி, நேற்று முன்தினம் சென்னை திரும்பியுள்ளார். ரஜினியின் அடுத்தத் திட்டம் வெளிநாட்டு சுற்றுப்பயணம். இதுபற்றி ரஜினிகாந்த் கூறியுள்ளதாவது: "நான் ஒரு படத்தில் நடித்து முடித்ததும், இமயமலைக்கு செல்வேன். அதன் பிறகு சென்னை திரும்பி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்வேன். அங்கு இரண்டு மாதங்கள் இருப்பேன். இடங்களை சுற்றிப் பார்ப்பதற்காக மட்டும் நான் வெளிநாடு செல்வதில்லை. பணம், புகழ், செல்வாக்கு இவற்றிலிருந்து விலகி, சாதாரண மனிதனாக வாழ்வதற்காகவே வெளிநாடு செல்கிறேன். அங்குள்ள சாலைகளில் விருப்பம்போல நடந்து செல்லலாம். சாதாரண மனித வாழ்க்கையை அங்கு நான் அனுபவிக்கிறேன்" என்கிறார். இப்ப நீங்க எந்த மூலைக்குப் போனாலும் எந்திரன்தான் உங்களை அடையாளம் காட்டிடுமே......
Friday, October 22, 2010 | 0 comments

டிசம்பர் 6 முதல் 3 இடியேட்ஸ்

எந்திரன் என்ற மெகா பிரமாண்டப் படத்தைக் கொடுத்த ஷங்கர், அடுத்து முழுவீச்சில் 3 இடியட்ஸ் ரீமேக்கில் இறங்குகிறார். தமிழ் மற்றும் தெலுங்க என இரு மொழிகளில் உருவாகுகிறது. இதில் அமீர்கான் வேடத்தைச் செய்யப் போகிறவர் விஜய். மாதவன் வேடத்தில் ஜீவாவும், ஷர்மான் ஜோஷி பாத்திரத்தில் சித்தார்த்தும் நடிக்கிறார்கள். ஷங்கர் இயக்கும் முதல் ரீமேக் 3 இடியட்ஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்கிறார். இதனையடுத்து டிசம்பர் 6 முதல் 3 இடியேட்ஸ் படத்தின் தெலுங்கு பதிப்பை முதலில் தொடங்குகிறார் ஷங்கர். மகேஷ் பாபுவின் கால்ஷீட் பிரச்சனை காரணமாக 3 இடியேட்ஸ் படத்தை முதலில் தெலுங்கில் தொடங்குகிறார். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
Friday, October 22, 2010 | 0 comments

நம்பர் ஒன்னுக்கு பிறகுதான் திருமணம் - த்ரிஷா


திரையுலகில் 1999-ல் அறிமுகமானவர் த்ரிஷா. சாமி, கில்லி போன்ற பல ஹிட் படங்கள் அவரை முன்னணி நடிகையாக்கியது. தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். காட்டா மீட்டா படம் மூலம் இந்திக்கும் போனார். தற்போது கமல் ஜோடியாக நடித்து வரும் மன்மதன் அம்பு நவம்பரில் வெளியாகிறது. அஜித்துடன் மங்காத்தா படத்தில் நடித்து வரும் த்ரிஷா, இந்தப் படம் முடிந்ததும் திருமணம் செய்து கொள்வார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. காரணம் அவருக்கு இப்போது வயது 27ஐத் தாண்டிவிட்டது. ஆனால் த்ரிஷாவோ இதனைக் கடுமையாக மறுக்கிறார். என் வயசெல்லாம் ஒரு வயசா.. நான் சினிமாவுக்கு வந்து எட்டு வருடங்கள்தான் ஆகின்றன. ஆரம்பத்தில் சுமாரான கதையம்சம் உள்ள படங்களில் நடித்தேன். ஆனால் சமீபகாலமாக நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வருகின்றன. அபியும் நானும், விண்ணைத்தாண்டி வருவாயா படங்கள் சிறந்த கதையம்சம் உள்ளவை. மன்மதன் அம்பு படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறேன். நம்பர் ஒன் நடிகை என பெயர் வாங்குவதே என் லட்சியம். எனவே திருமணத்துக்கு அவசரப்பட மாட்டேன். திரையுலகில் எனக்கென்று ஒரு அங்கீகாரம் இப்போது தான் கிடைக்க ஆரம்பித்து இருக்கிறது. இந்தியில் நான் நடித்த காட்டா மீட்டா படம் ஹிட்டாகவில்லை என்று பேசுகிறார்கள். நடிப்பதுதான் என் வேலை. படம் வெற்றியா? தோல்வியா என்றெல்லாம் சிந்திக்க மாட்டேன். இந்திப் படத்தில் நடித்ததன் மூலம் மும்பையில் நிறைய பேர் பழக்கமாகி இருக்கிறார்கள். மீண்டும் இந்திப் படங்களில் நடிப்பேன், இந்தியாவின் நம்பர் ஒன் நடிகை என்ற பெயரெடுத்த பிறகுதான் திருமணம் பற்றி யோசிப்பேன் என்றார். அடி... ஆத்தாடி! அப்போ கிழவியானாத்தான் கல்யாணமா?
Friday, October 22, 2010 | 0 comments

காட்சிகளை 3டியில் உருவாக்க எந்திரன் டீம் முடிவு


இந்தியாவின் அவதார் என்று வர்ணிக்கப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படம் பல சாதனைகளை தகர்த்து வரும் நிலையில், எந்திரன் படத்தின் ஆங்கில வடிவத்தை சர்வதேச அளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆங்கிலப் பதிப்பில் குறிப்பிட்ட காட்சிகளை 3 டியில் உருவாக்க எந்திரன் டீம் முடிவு செய்துள்ளது. அதுமட்டுமின்றி ஏற்கெனவே எந்திரனுக்காக 7 நிமிட 3டி காட்சிகள் உருவாக்கப்பட்டது. . இப்போது அந்தக் காட்சிகளை தமிழ், தெலுங்கு மற்றும் இந்திப் பதிப்பிலும் இணைக்கலாம் என தெரிகிறது.
Friday, October 22, 2010 | 0 comments

ஏ.ஆர்.ரஹ்மானின் எந்திரன் இசை அனுபவம்!

Written By Raveendran on Thursday, October 7, 2010 | Thursday, October 07, 2010


இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அதிகம் பேசாதவர். தனது இசை பேசப்பட வேண்டும் என எதிர்பார்ப்பவர். ஒவ்வொரு படத்தையும் முதல் படமாக கருதி கடுமையாக உழைப்பவர். அதனால்தான் இரட்டை ஆஸ்கர் விருதுகளை வென்றெடுக்க முடிந்தது. அப்படிப்பட்ட செயல்வீரர்களுக்கு பேச நேரம் கிடைக்காதுதான். ஆனாலும், ரஜினியும் ஷங்கரும் எந்திரன் படத் தயாரிப்பில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை வாசகர்களோடு பகிர்ந்துகொண்டதை சுட்டிக் காட்டி, உங்கள் பேட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள் என சொன்னதும் கூச்சத்துடன் புன்னகைத்தார். அப்போது சிதறிய முத்துக்கள்.. எந்திரன் படத்துல எல்லாமே பிரம்மாண்டமா இருக்கும்னு தெரிஞ்சுகிட்டேன். பாடல்கள் ஒவ்வொன்னையும் ஒரு வகையான உணர்வோட படமாக்கி இருக்கார் ஷங்கர். படத்தோட மையக் கருத்துக்கு பின்னணி இசையும் பொருத்தமா அமையணும்னு அவர் எதிர்பார்த்தார். 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEia3M-mpkTRnsgtFnAcB80F6AN9mvN2jTSUqGJrr9q3JbktTsbIvyxZ9SjP72SFPC7zMp4JJ6ZlQ2_oAMqzQiKfJAOEXH5t0FdSzJmRULRY665w_Hc3qgzeFwSmHbL2tMbDS5uAe0biKKgT/s1600/endhiran_audio_launch_stills_pics_photos_04.jpg
படத்துல ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் காட்சிகள் நிறைய இருக்குறதனால ரசிகர்கள் ஒன்றிப் போயிடுவாங்க.. அந்த இடத்துல சவுண்ட் பெருசா இருந்தாதான் கவனிப்பாங்க.. ஸோ, பெருசா செய்யணும்னு ஆசைப்பட்டோம். அதனால என்ன ஆச்சுன்னா, லண்டன், சென்னை, மும்பைனு மூணு இடத்துல பின்னணி இசை சேர்க்குற மாதிரி ஆயிருச்சு.. அதுக்கு ரொம்ப செலவாகும்னு சொன்னோம். சன் பிக்சர்ஸ் தயங்காம அதுக்கு ஏற்பாடு பண்ணினாங்க.. அதுக்கு நன்றி சொல்லணும். லண்டன்ல பாத்தீங்கன்னா 100 இசைக் கலைஞர்களை வச்சு ரெக்கார்ட் பண்ணிருக்கோம். அங்க டோல் பவுண்டேஷன்னு சொல்லிட்டு ஃபேமஸான ஒரு டோல் குரூப் இருக்கு. அவங்க இந்தப் படத்துக்கு வேலை செஞ்சுருக்காங்க. ரொம்ப தள்ளிப்போகக் கூடாது, படத்தை சீக்கிரம் ரிலீஸ் பண்ணணும்னு சொன்னதால கடுமையா வேலை செஞ்சிருக்கோம்.. சீக்கிரமாவும் முடியணும், ரொம்ப நல்லாவும் வரணும்னா அவ்ளோ உழைச்சாதான முடியும்.. அந்த வேலை நடந்தப்ப ஒரு நாளைக்கு ரெண்டு மணி நேரம்தான் தூங்கினோம்னா நீங்களே பார்த்துக்குங்க.. 'சிவாஜி' படம் பண்ணும்போது செக்கஸ்லோவியாவுல உள்ள பிராக்ல ரெக்கார்ட் பண்ணினோம். அங்க சிம்ஃபனி இசைக் கலைஞர்கள் கிடைப்பாங்க. ஆனா, எந்திரன்ல இன்னும் ஒரு ஸ்டெப் மேல போய், பிராஸ்ங்கற இசைக்குழுவை பயன்படுத்தியிருக்கோம். பாடல்கள் எல்லாமே பிரம்மாண்டமா பிரமாதமா வந்திருக்கு. லண்டன்ல இருக்கிற பிராஸ் செக்ஷன், என்னோட ஆர்க்கெஸ்ட்ரா ட்ரூப் இவங்கல்லாம் நிறைய ஹெல்ப் பண்ணிருக்காங்க. இதுதவிர நிறைய மாடர்ன் டெக்சர்ஸ் மியூசிக் பண்ணியிருக்கோம். நீங்க எல்லாருமே ரொம்ப ரசிப்பீங்கனு எனக்கு நம்பிக்கை இருக்கு. உங்களுக்கு ரொம்ப பிடிச்ச பாட்ட சொல்லவேயில்லீயே..... சரி விடுங்க எல்லாம் நீங்க போட்டதுதானே!
Thursday, October 07, 2010 | 0 comments

தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்க்கும் எந்திரன்!


ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய திரையரங்கமான கொலோஸியம் Kino-1ல் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் சிறப்புக் காட்சி திரையிடப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இங்கு வெளியாகும் முதல் படம் ரஜினியின் எந்திரன் மட்டுமே. இந்தக் காட்சிக்கான டிக்கெட்டுகள் வேகமாக விற்பனையாகி வருகின்றன. இந்த அரங்கம் நார்வேயின் தலைநகரமான ஆஸ்லோவில் அமைந்துள்ளது. Matrix, அவதார் போன்ற சரித்திரப் புகழ்பெற்ற படங்கள் இங்கே வெளியாகியுள்ளன. மேற்கத்திய நாடுகளில் ஒரு திரையரங்கில் 400 முதல் 700 இருக்கைகளே அதிகம் என்ற நிலைதான் இப்போது உள்ளது. அந்த பாணியைத்தான் இன்றைக்கு இந்தியாவிலும் பின்பற்றி வருகிறார்கள். ஆனால் கொலோஸியம் அரங்கம் 975 இருக்கைகள் கொண்டது. அதிநவீன முறையில், சர்வதேச தரத்திலான (THX) ஒலியமைப்புடன் கட்டப்பட்ட இந்த அரங்கம்தான் ஐரோப்பாவிலேயே பெரியதாகும். இந்த அரங்கில் ஆங்கிலம் தவிர்த்த பிறமொழிப் படங்களை வெளியிடுவதில்லை. காரணம் அவற்றை ஒரு காட்சி கூட முழுமையாக ஓட்ட முடியாது என்பதே. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் முதல்முறையாக வெளியாகும் இந்திய/தமிழ் திரைப்படம் என்றால் அது எந்திரன் மட்டுமே. நார்வேயில் உள்ள தமிழரான வசீகரன் சிவலிங்கத்தின் வி.என் மியூசிக் ட்ரீம்ஸ் நிறுவனமும், அபிராமி கேக் அண்ட் கேரி நிறுவனமும் இணைந்து இந்த சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன. இதுகுறித்து வசீகரன் கூறுகையில், "கொலோசியத்தில் ரஜினி சாரின் எந்திரன் தமிழ் படம் திரையிடுவது மிகுந்த பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. இந்த வாய்ப்பை எங்களுக்குத் தந்த ஜாக் ஏ ராஜசேகரின் ஃப்யூஷன் எட்ஜ் மீடியா மற்றும் ஐங்கரன் நிறுவனத்துக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.." என்றார். அவரிடம் எந்திரன் படத்துக்கான வரவேற்பு எப்படி உள்ளது என்று கேட்ட போது, "பிரமிக்கத்தக்க வகையில் உள்ளது. நார்வேயில் மொத்தம் 14000 தமிழர்கள் வசிக்கிறார்கள். இவர்களில் அதிகபட்சம் 20 சதவீதத்தினர்தான் திரையரங்குகளுக்குப் போய் படம் பார்ப்பார்கள். பொதுவாக தமிழ்ப் படம் போட்டால் 1400 பேர் வரை வருவார்கள். இதனால் சின்ன தியேட்டர்களாகப் பார்த்து ரிலீஸ் பண்ணுவோம். ஆனால் இது சூப்பர் ஸ்டார் படமாச்சே. எதிர்பார்ப்பும் எக்கச்சக்கம். எனவேதான் இந்த பெரிய தியேட்டரில் வெளியிடுகிறோம். மிகக் குறுகிய நேரத்தில் 75 சதவீதம் டிக்கெட்டுகளை விற்றுவிட்டோம். அட, சில நார்வே மக்கள் கூட எந்திரனுக்கு டிக்கெட் வாங்கியுள்ளார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நார்வேயைப் பொறுத்தவரை இது முன்னெப்போதும் நிகழாத சாதனைதான்..." என்றார். இந்த கொலோஸியம் அரங்கில் சிறப்புக் காட்சி முடிந்ததும், 300 இருக்கைகள் கொண்ட வேறு திரையரங்கில் எந்திரன் காட்சிகள் தொடரும் என்றும் அவர் கூறினார். எந்திரன் படம் குறித்து வசீகரன் கூறுகையில், "நிச்சயம் இந்தப் படத்தால் தமிழ் சினிமாவுக்குப் பெருமை. சூப்பர் ஸ்டார் ரஜினியின் மேஜிக் குறிப்பிட்ட எல்லைக்குட்பட்டதல்ல. உலகம் முழுவதையும் வசீகரப் படுத்தும் சக்தி கொண்டவர் அவர். இந்தப் படம் மிகச் சிறந்த படைப்பாக வந்திருக்கிறது. நிச்சயம் உலக சினிமாவில் எந்திரன் புதிய சாதனைப் படைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை," என்றார். ரிலீஸூக்கு முன்னாடியே சாதனை படைத்து வரும் படம் எந்திரனாத்தான் இருக்கும் போல.......
Thursday, October 07, 2010 | 0 comments

ஷங்கர் ரசித்த காதல் அணுக்கள்


எந்திரன் திரைப்படம் தயாரானது எப்படி என்பதை பெரிய புத்தகமாக எழுதலாம். ரசிகர்களுக்கு மாத்திரமல்ல, திரைப்படத் துறையில் பணியாற்றுபவர்களுக்கும் பல பாடங்கள் அதிலே படிக்கக் கிடைக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். ஒன்றிலிருந்து மற்றொன்று முற்றிலும் வித்தியாசமானது. எல்லா அனுபவங்களுக்கும் பொதுவான தன்மை ஒன்றுதான் சுவாரசியம். அந்த வகையில் எந்திரனுக்காக 'காதல் அணுக்கள்' பாடலை படமாக்கியது குறித்த தனது உணர்வுகளை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் ஷங்கர்... 'காதல் அணுக்கள்' ரொம்ப மென்மையான பாடல். கனவுப் பாடல். அதனால ஐரோப்பால ஜெர்மனி மாதிரி குளுமையான ஒரு நாட்டுல அந்தப் பாடலை படமாக்கலாம்னு திட்டம் போட்டிருந்தேன். ஆனா, லொகேஷன் பார்க்கப் போனா எல்லா இடமும் ஏதோ ஒரு டீவில வர்ற பாடல்ல பார்த்த மாதிரியே இருந்துது. அதே மாதிரி, லொகேஷன் மேனேஜரும் ஒவ்வொரு இடத்துக்குப் போனதும், போன வாரம்தான் இந்த இடத்துல ஒரு தெலுங்கு ஷூட்டிங் நடந்துச்சு.. இந்தி பாட்டு எடுத்தாங்க. அப்படீம்பார். யாரும் ஷூட் பண்ணாத இடமா இருக்கணும்னு நான் உறுதியா இருந்தேன்.. அப்பதான் பிரேசில் நாட்ல, கிளிமஞ்சாரோ பாடலுக்கு இடம் தேடினப்ப பாத்து வச்ச லாங்காய்னு ஒரு இடம் ஞாபகம் வந்துது. பெரிய பாலைவனத்துல நடுவுல துண்டு துண்டா நிறைய ஏரிகள் இருந்தா எப்படி இருக்கும்? அதுதான் லாங்காய். அந்த மாதிரி இடம் உலகத்துல வேற எங்கயுமே கிடையாது. ஆனா, கஷ்டப்பட்டு அங்க போனதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சுது, 'கிளிமஞ்சாரோ பாடல்ல ஒரு பகுதியதான் அங்க எடுக்க முடியும். முழுப் பாடலும் எடுக்க முடியாது. அதனால் கிளம்பி வந்துட்டோம். 'காதல் அணுக்கள்' அங்க எடுத்தா என்னானு தோணுச்சு. நிறைய ஸ்டில்ஸ் எடுத்துருந்தோம். அதையெல்லாம் பாத்ததும் மென்மையான பாட்டுக்கு இந்த இடம் பிரமாதமான வீஷூவலா இருக்கும்'னு (ஒளிப்பதிவாளர்) ரத்னவேலு அடிச்சு சொன்னார். உடனே புறப்பட்டோம். லாங்காய் பெரிய டூரிஸ்ட் ஸ்பாட். ரொம்ப கட்டுப்பாடுகள். சின்ன பேப்பர்கூட கீழே போடக்கூடாது. ஓட்டல்ல இருந்து கார்ல ஒரு பயணம், அப்புறம் படகுல ஒன்றரை மணி நேரம், திரும்ப ரெண்டு மணி நேரம் கார்ல, அதுக்குப் பிறகு பாலைவனத்துல போறதுக்கு ஸ்பெஷலா பண்ணின ஜீப்ல பயங்கரமான பயணம்.
http://www.filmmy.com/images/Endhiran-new-stills1.jpg

கடைசி அஞ்சு நிமிஷம் தண்ணிக்குள்ள ஜீப் போகும். அதுக்கப்புறம் இறங்கி நடக்கணும். ஏன்னா, அது காடு. ஜீப் போகக்கூடாது. எல்லாத்தையும் தூக்கிட்டு போய் ஷூட் பண்ணுவோம். மத்தியானம் பசிக்கும். அங்க எதுவும் சாப்பிடக் கூடாது. திரும்ப ஒரு மணிநேரம் டிராவல் பண்ணி சாப்பிட்டுட்டு ஓடி வரணும். சிரமப்படறதுக்குன்னே போய் எடுத்த மாதிரி கஷ்டப்பட்டு எடுத்தோம். 'சும்மா சொல்லக்கூடாது, ஷங்கர்.. கூட்டிட்டு வந்தீங்களே இடம்.. இந்த மாதிரி நான் பார்த்ததே இல்லை..'ன்னு ரஜினி சார் சொல்லிட்டே இருப்பார். அந்த பாலைவனத்துல எப்பவும் காத்தடிச்சுட்டே இருக்கும். எல்லார் மேலயும் மணல் விழும். முகத்துல துணி கட்டிகிட்டு கொள்ளை கோஷ்டி மாதிரி வேலை பார்த்தோம். பிரம்மாண்டமான ஏரியா. கண்ணுக்குள்ள அடங்காது. அதனால ஹெலிகாப்டர்ல பறந்து படம் பிடிச்சோம். ரஜினி சார்கிட்ட எல்லாருக்கும் பிடிச்ச ஒரு லுக் இருக்கு. அதோட ஒரிஜினலை ரீ கிரியேட் பண்ணணும்னு சொல்லி பழைய ஸ்டில்ஸ் எல்லாத்தையும் பார்த்தேன். அதுல ஒரு லுக் ரொம்ப பிடிச்சிருந்துது. அருமையான லுக் அது. அதுக்கான விக் ரெடி பண்ணி, நினைச்சது வர்ற வரைக்கும் நிறைய மாற்றங்கள் பண்ணி, அதே மாதிரி லுக் கொண்டு வந்திருக்கோம். பானுவோட மேக்கப்பும் ரத்னவேலுவோட லைட்டிங்கும் சேந்து அவரை இன்னும் அழகா காட்டும். 'ஜானி' படத்துல ஒரு பாட்டுல ரஜினி சார் ரொம்ப கேஷுவலா வருவார். அதே மாதிரி 'தம்பிக்கு எந்த ஊரு' படத்துல ரொம்ப யதார்த்தமா பேன்ட் பாக்கெட்ல கைய விட்டு பாடிக்கிட்டே நடப்பார். அத பார்க்கும்போது நல்ல ஃபீல் கிடைக்கும். இன்னைக்கும் மறக்க முடியாது. அது மாதிரி பண்ணணும்னுதான் இந்த பாட்டுக்கு மெனக்கிட்டோம். ரகுமான் அழகா ட்யூன் போட்ருக்கார். ரஜினி சார் கிடார் வச்சுகிட்டு ஃப்ரீயா பண்ணியிருக்கார். படத்துல எனக்கு ரொம்பப் பிடிச்ச பாடல்னு கேட்டா இதைத்தான் சொல்லுவேன். காதல் வந்த ஒரு விஞ்ஞானி பாடுற பாடல். வழக்கமான காதல் மொழி தெரியாது. அதனால் விஞ்ஞான ரீதியா ரொமான்டிக் பாடல் வேணும்னு கேட்டேன். வைரமுத்து சார் நியூட்ரான், எலக்ட்ரான்னு வச்சு வித்தியாசமா எழுதினார். எல்லாரோட பங்களிப்பும் சேந்து அந்தப் பாடல் சீனை எப்படி சூப்பரா அமைச்சுருக்குன்னு படத்தைப் பாத்துட்டு சொல்லுங்க. உண்மையிலேயே எந்திரன் படப்பிடிப்பு மறக்க முடியாத ஒரு வரலாற்று நிகழ்வுதான்..
Thursday, October 07, 2010 | 0 comments

யார் கூட வேண்டுமானாலும் சேர்ந்து நடிப்பேன் - சிம்பு


வானம்' படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் நேற்று சென்னையில் பத்திரிகையாளரை சந்தித்தனர். சிம்பு, பரத், அனுஷ்கா, வேகா, சோனியா அகர்வால், ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் கிரிஷ், பட அதிபர் வி.டி.வி.கணேஷ் மற்றும் படக்குழுவினர் இந்த சந்திப்பில் பங்கேற்றுப் பேசினர். அப்போது, சிம்பு படம் குறித்து கூறியதாவது:- 'விண்ணைத்தாண்டி வருவாயா' படம் வெளிவந்த பிறகு, 150 நாட்கள் வேறு எந்த படத்திலும் நடிக்காமல், சும்மா உட்கார்ந்திருந்தேன். 'கோ,' 'போடா போடி' ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் தள்ளிப்போய் விட்டன. அப்போதுதான் அல்லு அரவிந்த் நடித்த 'வேதம்' என்ற தெலுங்கு படத்தைப் பார்த்தேன். வித்தியாசமான படம். மிக அருமையான திரைக்கதை. பாதி படம் பார்த்தபோதே இந்தப் படத்தை தமிழில் நாம் பண்ணலாம் என்ற முடிவுக்கு வந்தேன். என் நண்பர் கணேஷ், இந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்தார். படத்தில் பரத், அனுஷ்கா, வேகா, சோனியா அகர்வால் என்று நட்சத்திரக் கூட்டம் நிறைய இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த படம் ஈடுகட்டும். 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் வேறு ஒரு சிம்புவை பார்த்தது போல், 'வானம்' படத்தில் இன்னொரு சிம்புவை பார்க்கலாம்." என்றார். அவரிடம் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு சிம்பு அளித்த பதில்களும் வருமாறு:- உங்களை விட, அனுஷ்கா உயரமானவர் என்று பேசப்படுகிறதே...? நான் வேண்டுமானால் பக்கத்தில் நிற்கிறேன். பார்த்துக்கொள்ளுங்கள். (இவ்வாறு கூறிவிட்டு, அனுஷ்கா பக்கத்தில் போய் நின்றார்.) சிம்பு உயரமாகத்தான் இருந்தார். நீங்கள் அனுஷ்காவின் ரசிகர் என்கிறீர்கள். மற்ற கதாநாயகிகளிடம் இல்லாத அம்சம் அனுஷ்காவிடம் இருப்பதாக நினைக்கிறீர்களா? நான் அவ்வளவு எளிதில் யாருடைய ரசிகராகவும் மாற மாட்டேன். முன்பு ஜோதிகாவின் ரசிகராக இருந்தேன். 'அருந்ததீ' படம் பார்த்ததில் இருந்து அனுஷ்காவின் ரசிகராக மாறிவிட்டேன். பொதுவாக, ஒரு படத்தை கதாநாயகன்தான் தோளில் தூக்கி சுமப்பார். ஆனால், ஒரு முழு படத்தையும் கதாநாயகி அனுஷ்கா தோளில் தூக்கி சுமந்திருந்தார். அதனால்தான் நான் அனுஷ்காவின் ரசிகராக மாறினேன். உங்களுக்கு வீட்டில் பெண் பார்ப்பதாக சொன்னார்களே, மணமகளை தேர்ந்தெடுத்து விட்டார்களா? பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் தேர்வு செய்யவில்லை. ஒரு நடிகையை அழைத்துப்போய், 'இவளைத்தான் நான் திருமணம் செய்துகொள்ளப்போகிறேன். ஆசீர்வாதம் செய்' என்று உங்கள் அம்மாவிடம் சொன்னதாக ஒரு தகவல் பரவியதே? அப்படி யாரையும் நான் அழைத்துப்போகவில்லை. அது வெறும் வதந்தி. இந்தப் படத்தில் பரத்துடன் இணைந்து நடித்த மாதிரி, தனுஷுடனும் இணைந்து நடிப்பீர்களா? தனுஷ் உட்பட யார் கூட வேண்டுமானாலும் சேர்ந்து நடிப்பேன். வம்பு பண்ணாம யாரு கூட நடிச்சாலும் சரி!
Thursday, October 07, 2010 | 0 comments

எந்திரன் சூப்பர் மெகா ஹிட் : தமிழமெங்கும் ரஜினி தீபாவளி!

http://www.filmmy.com/images/endhiran-latest-stills-012.jpgஉலகம் எங்கும் இன்று தீபாவளி போல் தோன்றுகிறது, அதற்கு காரணம் சூப்பர் ஸ்டாரின் எந்திரன் திரைப்படம் சூப்பர் மெகா ஹிட் ஆகியுள்ளது. ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தங்களது சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டனர். முதல் தகவல் படி படத்தை பார்த்த ரசிகர்கள் ரஜினி ரோபோ கெட்டப்பில் அசத்தியுள்ளார். இனி இந்தியாவில் எந்திரன் படம் போல் வருமா என்பது சந்தேகம் தான் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

காட்சி ஒவ்வொன்றிலும் புதுமை, ரஜினியின் சூப்பர் ஸ்டைல், ஐஸ்-ன் சொக்க வைக்கும் அழகு, அழகான பாடல் காட்சிகள் என அசத்தி வருகிறது எந்திரன். சென்னை போல் மதுரை, திருச்சி, கோவை என திரையிட்ட இடங்களில் எல்லாம் வெற்றி கனியை பறித்து வருகிறது எந்திரன். ரசிகர்களை திரை நட்சித்திரங்களும், முக்கிய பிரமுகர்களும் எந்திரன் படத்தை காண ஆவலாக வருகின்றனர்.

சிறந்த பொழுதுபோக்கு படமாக அமைந்திருக்கும் எந்திரன் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரும் என்பதில் துளி சந்தேகமே இல்லை.
Thursday, October 07, 2010 | 0 comments