வீணைக்கு பிறந்தது விறகாகுமா? யானைக்கு பிறந்தது எறும்பாகுமா? நடிகர் கமல்ஹாசனின் வாரிசுகள் கலையுலகத்தையே வியக்க வைக்கிற அளவுக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். கமலுக்கு காதல் மன்னன் என்றொரு பட்டமும் உண்டல்லவா? அவரது மகள்கள் இருவரும் அப்பாவின் கலையுலக வாழ்க்கைக்கும், காதல் வாழ்க்கைக்கும் சேர்த்து வியத்தகு வாரிசுகளாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.
ஸ்ருதியின் முதல் படம் முன்னே பின்னே இருந்தாலும், இழந்த மார்க்கெட்டை முன்னிலும் வேகமாக கைப்பற்றிவிட்டார். அவரது இரண்டாவது மகள் அக்ஷரா, சொசைட்டி என்ற படத்தில் உதவி இயக்குனராகவும், டான்ஸ் மாஸ்டராகவும் இருக்கிறார். அம்மா தனியே அப்பா தனியே இருந்தாலும், மகள்களில் அக்ஷரா மட்டும் அம்மா செல்லம். மும்பையில் சரிகாவுடன்தான் இருக்கிறாராம்.
கண்டிப்பு இல்லாத குழந்தைக்கு காதல் ஈசி! அக்ஷராவும் அப்படி ஒரு காதலில் சிக்கிக் கொண்டாராம். இலங்கை வாலிபர் ஜேசன் ஜெயசீலன் என்பவருடன் கடந்த ஒரு வருடமாக காதல் கொண்டிருக்கிறாராம் அக்ஷரா. முதலில் நட்பாக துவங்கிய பழக்கம் நாளடைவில் காதலாகிவிட்டது என்று முணுமுணுக்கின்றன மும்பை மீடியாக்கள். இந்த மேட்டர் மெல்ல மெல்ல கமல்-சரிகா இருவருக்கும் இப்போதுதான் தெரிந்ததாம். அதுவும் தங்கள் போட்டோக்களை இன்டர்நெட்டில் இருவரும் வெளியிட்டதால்தான் என்கிறார்கள் அதே மும்பைக்காரர்கள்.
தப்பா கிறுக்குனா மாடர்ன் ஆர்ட்! சரியா எழுதினா கவிதை! இது புரியாதா காதல் அத்தாரிடியான கமலுக்கு?
0 comments:
Post a Comment