

கமல்-த்ரிஷா ஜோடியாக நடித்த 'மன்மதன் அம்பு' நேற்று வெளியானது. இப்படத்தை நடிகர்-நடிகைகளுக்கு கமல் நேற்று மாலை பிரத்யேகமாக திரையிட்டுக் காண்பித்தார். ஆழ்வார்பேட்டையில் தனது ராஜ்கமல் ப்ரிவியூ திரையரங்கில் இந்தப் படம் திரையிடப்பட்டது. ரஜினி கலந்துக் கொண்டு படம் பார்த்தார். படம் முடிந்ததும் கமல் கையை பிடித்துக் கொண்டு அபாரமாக நடித்துள்ளீர்கள் என்று ரஜினி பாராட்டினார். வசனம் பிரமாதமாக இருப்பதாக சொன்னார். குறிப்பாக ஒரு காட்சியில் த்ரிஷாவிடம் மாதவன் 'இந்த உலகத்தையே உன் காலடியில் போடுறேன்' என்பார். அதற்கு த்ரிஷா, "உலகத்தை யாரும் யார் காலடியிலும் வைக்க வேண்டாம். அது அங்கேதான் இருக்கிறது. பிச்சைக்காரர்கள் காலடியில் கூட உலகம் இருக்கிறது" என்று பதில் அளிப்பார். இந்த வசனம் தன்னை மிகவும் கவர்ந்ததாக ரஜினி
சொன்னார். இன்னொரு இடத்தில் வீரத்தின் அடுத்த கட்டம் என்ன தெரியுமா? மன்னிக்கிறது.
வீரத்தின் உச்சக்கட்டம் என்ன தெரியுமா? அஹிம்சை என்று கமல் பேசும் வசனமும் ரஜினியை ஈர்த்தது. கைதட்டி ரசித்தார். ரஜினியோடு இயக்குநர் கே.பாலச்சந்தர், நடிகர்கள் பிரபு, பார்த்திபன் உள்ளிட்ட பலரும் 'மன்மதன் அம்பை' பார்த்து ரசித்தனர். மனச குறிபார்த்து அடிச்ச அம்பாச்சே....ஆனந்த தையல் போட்டுக்கோங்க...!
0 comments:
Post a Comment