லேசாக தாடி வளர்க்க ஆரம்பித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். எல்லாம் அவர் நடிக்கப் போகும் புதுப்படத்திற்காக. 'ஒரு கல் ஒரு கண்ணாடி' என்ற தலைப்பெல்லாம் மலையேறி போச்சு. இப்போது 'நண்பேன்டா' என்ற தலைப்போடு ஸ்டார்ட் ஆக்ஷன் சொல்ல நாள் பார்த்துக் கொண்டிருக்கிறார் டைரக்டர் ராஜேஷ் எம். ரொம்ப சீரியஸ்சா கதை சொல்ற பாணியை மறந்தும் கையால் கூட தொடாத ராஜேஷ், உதயநிதிக்காகவும் ஒரு ஸ்பெஷல் ஜோக் தோரணம்தான் கட்டிக் கொண்டிருக்கிறாராம்.இதற்கிடையில் இந்த யங் ஹீரோவுக்கு ஜோடியாக யாரை நடிக்க வைப்பது? வாக்காளர் பட்டியல் நீளத்துக்கு ஒரு நடிகைகள் மேளாவையே நடத்திய ராஜேஷ் கடைசியாக செலக்ட் செய்திருப்பது கமல்ஹாசனின் கலை வாரிசு ஸ்ருதியைதானாம்.
ஏழாம் அறிவு படத்திற்கு பிறகு அதே தரத்துடன், அதே பிரமாண்டத்துடன் ஒரு கதைக்காவும், சம்பளத்திற்காகவும் காத்திருந்த ஸ்ருதி, உதயநிதியுடன் ஜோடி சேர சம்மதித்திருப்பதாக தகவல்.
0 comments:
Post a Comment