தொழிலாளர்களின் கூலி, தங்குமிடம், லொக்கேஷன் செலவு இப்படி பல விதங்களில் கணக்குப் போட்டுப் பார்த்தாலும் தினந்தோறும் சினிமா படப்பிடிப்புக்கு ஆகும் செலவு ஒன்றரை லட்சம் அல்லது இரண்டு லட்சங்கள் ஆகும். இதுதான் பொதுவான ஃபார்முலா. ஆனால் 'ஏழாம் அறிவு' படத்தின் தினச்செலவு ஆவரேஜாக ஆறு லட்சத்தைத் தாண்டுகிறதாம். எல்லா செலவும் செட்டுக்குள் முடங்கிவிடுவதாகவும், கேரவேன்களில் கரைந்துவிடுவதாகவும் கூறுகிறார்கள் தயாரிப்பு நிர்வாகிகள். பொதுவாக ஒரு படத்தை அறுபது நாட்கள், அல்லது தொண்ணூறு நாட்களில் எடுத்து முடிப்பார்கள். இந்தப் படத்தை பொறுத்தவரை 200 நாட்கள் ஆகும் என்று கூறியிருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ். போகிற வேகத்தைப் பார்த்தால் அது இன்னும் கூடும் என்று கணக்குப் போடுகிறார்கள். ஆனால் இந்தப் படத்தை வியாபார ரீதியாக அணுகாமல் மிகுந்த ஆர்வத்தோடு அணுகி வருகிறாராம் தயாரிப்பாளர் உதயநிதி. அதனால்தான் எவ்வளவு பில் கொடுத்தாலும், ஓ.கே என்று கையெழுத்திடுகிறாராம் அவர்.
0 comments:
Post a Comment