ஒரு நடிகர் உயர செல்லச் செல்ல நடிப்பில் மட்டுமல்லாது, படத்தின் தயாரிப்பு, விநியோகம், விளம்பரம் என அனைத்து வித நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. படம் நன்றாக ஓடினால் நடிகருக்குப் பெயர், புகழ், பணம் என அனைத்தும் கிடைக்கிறது. அதே நேரத்தில் படம் தோல்வியடைந்தால் தயாரிப்பாளர், விநியோகிஸ்தர், திரையரங்கு உரிமையாளர்கள் என அனைவருக்கும் அந்நடிகர் இழப்பை ஈடு செய்ய வேண்டியிருக்கிறது. தயாநிதி அழகிரியின் 'க்ளவுட் நயன்' நிறுவனம் தீபாவளிக்கு வெளியிட்ட 'வ குவாட்டர் கட்டிங்' 2010ன் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்து, க்ளவுட் நயனுக்கு பெருத்த நஷ்டத்தை விளைவித்தது. இந்நிலையில் ராம்கோபால் வர்மா இயக்கத்தில், சூர்யா நடிக்க இந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட 'ரத்த சரித்திரம்' திரைப்படமும் தோல்வியைத் தழுவியுள்ளது. கதையே இல்லாத படம் என 'வ குவாட்டரை' நிராகரித்த ரசிகர்கள், டப்பிங் படம் போன்று உள்ளது என 'ரத்த சரித்திரத்தை' நிந்திக்கிறார்கள். 'ரத்த சரித்திரம்' எடுபடாமல் போனதால் நஷ்டம் அடைந்துள்ள தயாநிதி அழகிரி, இழப்பை ஈடு செய்யும் வகையில் க்ளவுட் நயன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்குமாறு சூர்யாவை கேட்டுக் கொண்டார். சூர்யாவும் அதற்கு சம்மதித்து தனது அடுத்த படத்தை 'க்ளவுட் நயன்' தயாரிப்பில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
0 comments:
Post a Comment