மனோகரா படத்தில் கொடூரமான வில்லி கேரக்டருக்கு வசந்த சேனை என்று பெயர் சூட்டிய முதல்வர் கருணாநிதி, தனது இளைஞர் படத்தில் வில்லியாக நடிக்கும் நமீதாவுக்கு சேனை என்று பெயரிட்டிருக்கிறார். டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணாவின் 50வது படம் இளைஞன். முதல்வர் கருணாநிதி கதை, வசனத்தில், உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படம் பொங்கல் தினத்தில் ரீலிஸ் ஆகவிருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் முதல்வர் கருணாநிதி கருணாநிதி கலந்து கொண்டு இசை குறுந்தகடை வெளியிட்டார். இளைஞனை பார்த்து விட்டு "தமிழ் படம் எடுப்பேன்னு பார்த்தா ஒரு இங்கிலீஷ் படமே எடுத்திருக்கியே!" என்று சுரேஷ் கிருஷ்ணாவை முதல்வர் பாராட்டியிருக்கிறார். அந்த சந்தோஷத்தில் இருந்து மீளான அவர் இளைஞன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். படத்தின் கதைக்களம் கப்பல் கட்டும் துறைமுகமா இருந்தா நல்லாயிருக்கும்னு சொன்னார் கலைஞர். நிறைய செலவாகுமே என்றேன். பக்கத்திலிருந்த தயாரிப்பாளர் மார்ட்டின் செலவு ஒரு பிரச்சனையே இல்லை. கலைஞர் என்ன நினைக்கிறாரோ அது ஸ்கீரின்ல வரணும்னு சொன்னார். அப்புறம் என்ன? இந்த படம் இங்கிலீஷ் படம் மாதிரி பிரமாண்டமா வந்திருக்கு. பென்ஹர் மாதிரி படங்கள் எடுத்த ஸ்டுடியோவுல இளைஞன் எடுத்திருக்கோம். இங்கிருந்து எங்களோட வந்திருந்த டெக்னீஷியன்கள் அந்த ஸ்டுடியோவுல கால் வச்சதுமே கண் கலங்கிட்டாங்க, என்கிறார் சுரேஷ் கிருஷ்ணா.
கடைசி படம் ஓடவில்லை என்பதால் விரக்தியில் இருந்த நேரத்தில்தான் நமீதாவை இந்த படத்தில் நடிக்க அழைத்திருக்கிறார்கள். வில்லி கேரக்டர் என்பதும் சம்மதிக்காமல் இழுத்தடித்த நமீதாவை முதல்வர் கருணாநிதியே போன் செய்து அழைத்திருக்கிறார். முதல்வரின் அழைப்பென்றால் சும்மாவா.... மறு பேச்சேதும் பேசாமல் டபுள் ஓ.கே. சொல்லி களத்தில் இறங்கிவிட்டாராம் நமீ. இளைஞனில் நமீதாவின் கேரக்டர் பெயர் சேனை. மனோகரா படத்தில் வசந்த சேனை என்ற கொடூரமான வில்லியை காட்டிய கலைஞர், அந்த தாக்கத்தில்தான் நமீதா கேரக்டருக்கு இப்படியொரு பெயரை முதல்வர் வைத்தார் என்பது கூடுதல் தகவல்
0 comments:
Post a Comment