காவலன் படத்தில் விஜய்யை விடவும் வடிவேலுவைதான் அதிகம் எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள். ஏனென்றால் இதற்கு முன்பு பிரண்ட்ஸ் படத்தில் வடிவேலுவை வைத்துக் கொண்டு சித்திக் ஏற்படுத்திய சிரிப்போற்சவம், இன்னும் சின்னத் திரைகளில் கொட்டமடித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் காமெடி போர்ஷனை மட்டும் நல்ல ரேட்டுக்கு விலை பேசி வருகிறார்களாம் சேனல்காரர்கள். அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வது போலவே புதுப்புது ஸ்டைலில் வரப் போகிறார் வடிவேலு. ஒரு காட்சியில் இவர் உடல் முழுக்க காந்தத்தால் ஆன கோட் அணிந்துக் கொண்டு வருவாராம். யேய்... எனக்கு எதிரி எவனாயிருந்தாலும் அவன் கையில் வச்சிருக்கிற ஆயுதம் என்னை தாக்குவதற்கு முன்னாடியே என் கோட்ல பறந்து வந்து ஒட்டிக்கும். எப்படி நம்ம ஐடியா? என்று மார்தட்டுவாராம் வடிவேலு. அந்த நேரம் பார்த்து ஒரு தண்ணி லாரி அந்த பக்கம் வர, லாரியின் பாடி இரும்பும், வடிவேலு பாடியின் காந்தமும் ஒட்டிக் கொள்ள, லாரியோடு லாரியாக பறப்பாராம் வடிவேலு. யோசிக்கும் போதே பொத்துக் கொள்கிறதா சிரிப்பு? இவர் இப்படி என்றால், இதே மாதிரி ஸ்டைலில் ஒரு காட்சியை யோசித்து வைத்திருக்கிறார் விவேக். இது விஷால் நடிப்பில் பிரபுதேவா இயக்கப்போகும் பெயர் வைக்காத படத்திற்காக. சிக்ஸ்பேக் வயிற்றை காட்டி ஃபிகர்களை மடக்க வேண்டும் என்று பிளான் போடும் விவேக்கின் வயிற்றில் கேஸ் பலூனை கட்டி விட்டுவிடுவாராம் அவரது நண்பர் செல் முருகன். அப்புறம் என்ன? விவேக் அப்படியே அந்தரத்தில் பறக்க, மீண்டும் எப்படி தரையிறங்குகிறார் என்பது ஒரு காட்சி! கப்ஸா அடிச்சாலும் கலக்கலாத்தான்யா அடிக்கிறாய்ங்க......
காவலனில் வடிவேலுவின் காந்தக் கோட்!
Written By Raveendran on Wednesday, December 15, 2010 | Wednesday, December 15, 2010
Labels:
Kollywood செய்திகள்,
காவலன்,
வடிவேலு,
விஜய்
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment