skip to main |
skip to sidebar
கண்களால் மிரள வைத்த சூர்யா!
சூர்யாவின் முதல் பாலிவுட் படமான 'ரத்த சரித்திரம்' விரைவில் திரைக்கு வர இருக்கிறது. தமிழ், இந்தி என இரண்டு மொழிகளில் மிகுந்த வன்முறைக் காட்சிகளுடன் இப்படம் வெளிவரவுள்ளது. ராம்கோபால் வர்மா இயக்கியுள்ள இப்படத்தின் சில காட்சிகளை தணிக்கைக் குழுவினர் கத்தரித்துள்ளனர். இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் மையக்கருத்தை பாராட்டியுள்ள தணிக்கைக் குழுவினர் இப்படத்தின் மூன்று காட்சிகளை நீக்கியுள்ளனர். டிசம்பர் 3ல் வெளியாகவுள்ள இப்படத்திற்கு, அதன் வன்முறைக் காட்சிகள் காரணமாக தணிக்கைக் குழுவினர் 'A
' சான்றிதழ் வழங்கியுள்ளனர். படத்தில் சூர்யாவின் நடிப்பைப் பார்த்து வியந்த, தணிக்கைக் குழுவினர், படத்தின் காட்சிகளை கண்டு மிரண்டு விட்டனராம். தணிக்கைக் குழுவினர் பாராட்டால் சூர்யாவும், ராம் கோபால் வர்மாவும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 'இப்படத்தில் சூர்யா கண்களால் பேசியிருக்கிறார்' என ராம்கோபால் வர்மா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கிராமப்புறங்களில் இப்படத்தை பிரபலபடுத்துவதற்காக சூர்யாவும், ராம்கோபால் வர்மாவும் மதுரை, கோவை பகுதிகளுக்குச் செல்லவுள்ளனர். இப்படத்தில் சூர்யாவின் நடிப்பு பெரிதும் பேசப்படும் என தயாரிப்பாளர், இயக்குநர், விநியோகஸ்தர் என அனைவரும் உறுதியளித்துள்ளனர். ரசிகர்களை கண்களால் கைது செய்தாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்ல....!
2 comments:
If there is so much of blood and fight sequence it will not get "U". It will be "A" then. Already Surya has said that the film will not be for all audience and will be for 18+
Thanks 4 u r comment, info
Post a Comment