
நடிகர் ரஜினிகாந்த் முன்னிலையில் 4 மாநில சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி நடக்கிறது என்றார் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார். சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது: தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய 4 மொழி படக் கலைஞர்களும் பங்கேற்கும் செலிப்ரிட்டி கிரிக்கெட் லீக் (சிசிஎல்) போட்டி வரும் ஜனவரி மாதம் 22, 23, 29, 30 ஆகிய 4 நாட்கள் நடக்க உள்ளது. தமிழ் நடிகர்கள் கிரிக்கெட் டீமுக்கு 'சென்னை சூப்பர் ஸ்டார்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த டீமின் ஐகான் வீரர்களாக சூர்யா, விஜய் இருப்பார்கள். அவர்களிடம் இது தொடர்பாக பேச்சு நடக்கிறது. சிம்பு, கார்த்தி, ஜெயம் ரவி, தனுஷ், ராதாரவி, ஷாம், அப்பாஸ், ஜெய், அம்சவர்தன், ரமணா, விக்ராந்த், ஜீவா, ஆர்யா, மாதவன், சாந்தனு உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் இதில் பங்கேற்கின்றனர். நானும் பங்கேற்கிறேன், என்றார். கேட்பதற்கு சந்தோஷமாக இருந்தாலும் அனைவருக்கும் ஒரு பொறி தட்டியது. இந்த அணியின் 'செலிப்ரிட்டி பிளேயர்கள்' சூர்யா மற்றும் விஜய் என்று குறிப்பிட்டார். ஏதோ முதல் முறை தவறி சொல்லியிருப்பார் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் திரும்பத் திரும்ப நடிகர்களின் பெயர்களை உச்சரிக்கும் போதும் சரத்குமார் தனது 'ஆர்டரில்' முதலிடத்தை சூர்யாவுக்கும் இரண்டாமிடத்தை விஜய்க்கும் தர பத்திரிகையாளர்களுக்கே வியப்பு. விஜய் சீனியர் மட்டுமல்ல, ரஜினிக்கு அடுத்து அதிக ரசிகர்களை, அதுவும் பக்கா அரசியல் செட்டப்போடு வைத்திருப்பவர். சமீபத்தில் சில படங்கள் அவருக்கு சரியாகப் போகவில்லை என்றாலும், ரசிகர் பலத்தில், வர்த்தகத்தில் அவர் குறைந்துவிடாத நிலையில், நடிகர் சங்கமே விஜய்யை இரண்டாம் இடத்துக்கு தள்ளுகிறதோ என்ற முணுமுணுப்புகளைக் கேட்க முடிந்தது. முன்னணி நடிகர்களுக்கு இந்த ரேங்க் பிரச்சினை ரொம்ப முக்கியம். சரத்குமார் தவறுதலாக இதைச் சொன்னாரா, அல்லது மனதிலிருப்பதைச் சொன்னாரா என்று அவர்தான் விளக்க வேண்டும், என்றார் சரத்துக்கு நெருக்கமான ஒரு பத்திரிகையாளர்.
ஆடுறதுக்கு முன்னாடியே தளபதிய டக்-அவுட் பண்ணிட்டாரே.....
0 comments:
Post a Comment