Hi quest ,  welcome  |  sign in  |  registered now  |  need help ?

3 இடியட்ஸில் விஜய்? சூர்யா?

Written By Raveendran on Saturday, December 11, 2010 | Saturday, December 11, 2010

http://www.extramirchi.com/wp-content/uploads/2008/08/surya-taare-zameen-par.jpgசூப்பர் மெயிலுக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்பது 'ஸ்லோ' ரயில்களின் வழக்கம். அப்படி ஒரு சூப்பர் மெயிலுக்கு வழி விட தயாராகியிருக்கிறார்கள் சில இயக்குநர்கள். அதிலும் சூர்யாவை வைத்து படம் எடுக்கப் போகிறோம் என்ற தெம்பிலிருந்தவர்களுக்கு ஏற்பட்ட திடீர் திருப்பம் இது. த்ரி இடியட்ஸ் படத்திலிருந்து விஜய் நீக்கப்பட்டுள்ளார். (அட... இத்தனை நாளும் அவரே விலகிட்டார்னுல்ல நினைச்சுகிட்டு இருந்தோம்) ஒரு சில பிரஷரின் காரணமாகத்தான் இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டியிருந்ததாம் ஷங்கருக்கு. இந்தப் படமே இனிமேல் வளரப் போவதில்லை. விஜய்க்கு இணையான நடிகர் இருந்தாலொழிய ஷங்கர் படப்பிடிப்புக்குப் போக மாட்டார் என்றெல்லாம் யூகங்கள் கசிய, விஜய்க்கு இணையான நடிகரான சூர்யாவை சந்தித்துப் பேசி முடித்துவிட்டாராம் ஷங்கர். ஏழாம் அறிவுக்குப் பிறகு கவுதம் மேனன், ஹரி போன்ற இயக்குநர்களுடன் மீண்டும் இணைந்து நடிக்கத் திட்டமிட்டிருந்த சூர்யா, எல்லாவற்றையும் தள்ளி வைக்க முன் வந்திருக்கிறாராம். 

0 comments:

Post a Comment