Hi quest ,  welcome  |  sign in  |  registered now  |  need help ?

தில்லாலங்கடி விமர்சனம்

Written By Raveendran on Saturday, September 25, 2010 | Saturday, September 25, 2010

http://www.mirchigossips.com/wp-content/uploads/2009/09/thillalangadi-movie-stills-05.jpg
நடிகர்கள்
ஜெயம் ரவி, தமன்னா, வடிவேலு, பிரபு, ஷாம், ராதாரவி, சுஹாசினி, நளினி, சந்தானம், கஞ்சா கருப்பு, மன்சூர் அலிகான்
இசை

யுவன்சங்கர்ராஜா
இயக்கம்

ஜெயம் ராஜா
தயாரிப்பு

மோகன்
தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற "கிக்" படத்தின் ரீமேக்தான் இந்த தில்லாலங்கடி.
எதிலும் ஒரு கிக்கை எதிர்பார்ப்பவர் ஜெயம் ரவி. இப்படி அனைத்திலும் ஒருவிதமான கிக்கை தேடி அலைவதால் அவரால் எந்த வேலையிலும் நிரந்தரமாக இருக்க முடிவதில்லை. காதலும், கண்டவுடன், ஹீரோயிசத்தால், அனுதாபத்தால் வந்து விடக் கூடாது கிக்குடன் வரவேண்டும் என்று நினைக்கிறார். ரவியின் இந்த கிக் பிரச்சினையால் காதலை உதறிவிட்டு மலேசியாவுக்கு சென்று விடுகிறார் தமன்னா. கிக்கிலேயே பெரிய கிக், மற்றவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதுதான் என்பதை ஒரு சம்பவம் ரவிக்கு உணர்த்த, அவரது வாழ்க்கை பாதை மாறுகிறது. தமிழ்நாட்டில் பிரபலமான போலீஸ் அதிகாரி ஷாம். அவரின் கண்ணில் விரல்விட்டு ஆட்டிய திருடன் மலேசியாவில்தான் இருக்கிறான் என்பதை அறிந்து அவனைத் தேடி மலேசியா வருகிறார். ஷாமுக்கும், தமன்னாவிற்கும் திருமண ஏற்பாடு நடக்கிறது. ஷாம் தேடும் திருடனும், தமன்னாவின் இதயத்தை திருடியவரும் ஜெயம்ரவிதான். இந்த மூவருக்குமான தில்லாலங்கடி ஆட்டந்தான் மீதிக் கதை.
காதல், ஆக்ஷன் என இருந்த ஜெயம் ரவி, இப்படத்தின் மூலம் காமெடியிலும் கலைகட்டுகிறார். தன் நண்பன் காதலிக்கும், எம்எல்ஏ நளினியின் மகளுக்கும், தனது நண்பனுக்கும் திருட்டு கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்யும் ரவி, அதே திருமணத்தை பற்றி தானே எம்எல்ஏவுக்கு போட்டுக்கொடுப்பது என அறிமுக காட்சியையே அமர்க்களப்படுத்தி இருக்கிறார். மற்றவர்களிடம் காட்டும் தனது தில்லாலங்கடித்தனத்தை தன் காதலிலும் காட்டி, ரசிகர்களுக்கு புதிய பரிணாமத்தை கொடுத்திருக்கிறார்.
சிரிக்கிற தமன்னாவை விட கொதிக்கிற தமன்னாவே அதிக இடங்களில் வருவதால் நமக்கும் பிசகிக் கொள்கிறது மனசு. நல்லவேளை, தமன்னாவின் காஸ்ட்யூமர் புண்ணியத்தில் கன்னாபின்னாவென்று ஏறுகிறது கிக். ரவியை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காக இவர் வடிவேலுவை லவ் பண்ணுவதும், அதை அவர் சீரியசாக எடுத்துக் கொள்வதும் ஜோக் தோரணம்.
தெலுங்கில் நடித்த அதே கதாபாத்திரத்தில் ஷாம், அதிர வைக்கும் காவல்துறை அதிகாரியாக படத்தில் களம் இறங்கும் இவரின் கதாபாத்திரத்திற்கு வேலை கொஞ்சம் என்றாலும் அதை சரியாக செய்திருக்கிறார். அலட்டல் இல்லாத இவரின் தேடுதல் வேட்டை படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு இன்னும் பரபரப்பை ஏற்படுத்துகிறது.
அன்பான மனைவி அருகில் இருக்க மற்ற பெண்களுக்கு பிராக்கெட் போடும் ஜொள்ளு பார்ட்டியாக வடிவேலு வெடி வைக்கிறார். ரவியை வெறுப்பேற்ற தமன்னா, வடிவேலுவை காதலிப்பதாக சொல்ல அதையே கெட்டியாகப் பிடித்துக் கொண்டு வடிவேலு பெண் கேட்டுச் செல்வதும், கட்டிய மனைவியை போட்டுத் தள்ள திட்டமிடுவதுமாக அதிர வைக்கிறார். அவரும் மன்சூர் அலிகானும் நடத்தும் கூத்தில் தியேட்டர் சிரிப்பில் உருளுகிறது. பைத்தியக்கார டாக்டராக சந்தானம், எம்.எல்.ஏ. டிரைவராக சத்யன், மந்திரி பினாமியாக கஞ்சா கருப்பு, அடியாளாக மயில்சாமி என குரூப்பாக வந்து சிரிப்பை கொட்டிவிட்டுப் போகிறார்கள்.
பிரபு வெயிட்டை பார்த்தாவது கொஞ்சம் வெயிட்டான ரோல் கொடுத்திருக்கலாம். ஓரத்துல வச்ச ஊறுகாயா இருந்தாலும் சுர்ருன்னுதான் போவுது ராதாரவி போர்ஷன்.
கமர்ஷியல் படமாக இருந்தாலும், "சொல்பேச்சு கேட்காத சுந்தரியே..." என்ற பாடலின் மூலம் தன்னை ஒரு தொழில்நுட்ப இயக்குனராகவும் ராஜா நிருபித்திருக்கிறார். பி.ராஜசேகரின் ஒளிப்பதிவு மலேசியாவின் அழகை அள்ளி வந்து கொட்டியிருக்கிறது. காமெடி கலாட்டாவில் யுவன்சங்கர் ராஜாவின் காதல் பாடல்களில், இரண்டு மட்டுமே தேர்கிறது.
இல்லாதவர்களுக்கு இருப்பவர்களிடம் இருந்து எடுத்து கொடுக்கும் கதாநாயகன். இது தமிழ் சினிமாவில் பார்த்ததுதான் என்றாலும், அதை தன் திரைக்கதையின் மூலம் மறுபடியும் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர் ராஜா. காட்சிக்கு காட்சி விறுவிறுப்பையும், காமெடியையும் கலந்து அடிக்கும் ராஜாவின் திரைக்கதை ஜெட் வேகத்தில் பயணிக்கிறது.
லாஜிக்கை பார்க்காமல் இரண்டரை மணி நேரத்தை சிரித்து செலவழிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தில்லாலங்கடியை தாராளமாக பார்க்கலாம்.
தில்லாலங்கடி - "கிக்"குக்கு பஞ்சமில்லை
Saturday, September 25, 2010 | 0 comments

மனைவி சம்மதத்துடன் பிரபுதேவா-நயன்தாரா திருமணம்!

http://www.boxofficesouth.com/wp-content/uploads/2009/09/Prabhu_Deva_.jpgதனது கணவர் பிரபுதேவா, நடிகை நயன்தாராவை கல்யாணம் செய்து கொள்ள அவரது மனைவி ரமலத் சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. இதையடுத்து கேரளா அல்லது திருப்பதியில் வைத்து எளிமையான முறையில் இந்தக் கல்யாணத்தை முடித்துக் கொள்ள பிரபுதேவாவும், நயன்தாராவும் முடிவு செய்துள்ளனராம். நயன்தாராவை காதலிக்கிறேன், கல்யாணமும் செய்து கொள்ளப் போகிறேன் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார் பிரபுதேவா. இதனால் அதிர்ச்சி அடைந்த ரமலத் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனைகளில் குதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இப்போது அவர் தனது கணவரின் 2வது கல்யாணத்திற்கு சம்மதித்து விட்டதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgiQFTIb6zXdTipAQ1WSEVCqQTc-c46MczaVQ6aKvSvxI21dvy1i7uN5kt2Fgud1BvhbaWvYbasRZvDlZm-CPPVE9kK_9BXjM7hMNo7MvNKWyEqCJbj2rFtcnZdzczZNQ2-grLIHU4XBrxa/s400/nayanthara-prabhudeva.jpgரமலத்தை சம்மதிக்க வைப்பதற்காக பெரும் தொகை ஒன்றை ரமலத் பெயரில் பிரபுதேவா வங்கியில் டெபாசிட் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பணத்தைக் கொடுத்தாலும் ரமலத் சம்மதிப்பாரா என்று பிரபுதேவா-நயன்தாராவுக்கு சந்தேகம் இருந்ததாம். ஆனால் அவர் கல்யாணம் செய்ய சம்மதித்தது அவர்களுக்கு இனிய அதிர்ச்சியாகி விட்டதாம். இதையடுத்து கல்யாணத்தை வேகமாக முடிக்கத் திட்டமிட்டுள்ளார் பிரபுதேவா. முதல் கல்யாணத்தைப் போலவே தனது 2 வது கல்யாணத்தையும் மிகவும் ரகசியமாக, எளிமையாக வைத்துக் கொள்ளப்போகிறாராம். திருப்பதி அல்லது கேரளாவில் ஏதாவது ஒரு கோவிலில் வைத்து கல்யாணம் நடக்கும் என்று கூறுகிறார். வாழ்க்கைதான் போச்சே... வர்ற பணத்தையும் ஏன் விடுவானேன்னு ரம்லத் நினைச்சிட்டாரு போல....
Saturday, September 25, 2010 | 0 comments

விட்டுக் கொடுக்காத தமன்னா!

http://www.southdreamz.com/wp-content/uploads/2009/07/Thamanna.jpg
கதாநாயகனுக்கு காய்ச்சல் வந்தால், கதாநாயகிக்கு நெறி கட்டுமான்னு தமன்னாவிடம் கேட்டால் 'கட்டுமே' என்பார். தனுஷ் தற்போது நடித்துவரும் படங்கள் எல்லாமே கிட்டதட்ட முடிந்துவிட்டது. 'சிங்கம்' படம் வெளியான கையோடு தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க வேண்டிய ஹரி அவரது கால்ஷீட் கிடைக்காததால் தவித்துக் கொண்டிருக்கிறார். இவருடன் சேர்ந்து தவிப்பது தமன்னாவும்தானாம். திடீர் காய்ச்சல் வந்து படுத்த படுக்கையாக கிடந்த தனுஷ் மீண்டும் எழுந்து நடப்பதற்குள் ஒரு மாசம் ஓடிப் போய்விட்டது. இந்த ஒரு மாதம் ஹரி படத்திற்காக தமன்னா கொடுத்த தேதிகளும் ஸ்வாகா ஆகிவிட்டது. சர்ரென்று ஆந்திராவுக்கு பறந்துவிட்டார். அங்கும் சில படங்களில் நடிக்கிறாராம். அவற்றை முடித்துவிட்டு சென்னை திரும்பினாலும் தனுஷ் படத்தை கண்டு கொள்ள முடியாது. காரணம் கார்த்தி நடிக்கும் சிறுத்தை தயாராக இருக்கிறது தமன்னாவுக்கு. இந்த நிலையில் தமன்னாவையே மாற்றிவிடலாம் என்ற முடிவுக்கு வந்தாராம் ஹரி. ஆனால் படிக்காதவன் வெற்றிக்குப் பிறகு தனுஷுடன் ஜோடி சேர்கிற படமாச்சே. வேறு ஒரு நடிகைக்கு விட்டுக் கொடுக்கவும் மறுக்கிறார் தமன்னா. மாசத்துக்கு அறுபது நாளு இருந்தா நல்லாயிருக்குமே என்று இவரும் இவரது மேனேஜரும் காலண்டரை கசக்கிக் கொண்டிருக்க, கையை பிசைந்து கொண்டிருக்கிறார் ஹரி. மீனும் திங்கனும் முள்ளும் மாட்ட கூடாதுன்னா எப்படி மேடம்?
Saturday, September 25, 2010 | 0 comments

கைவிடப்பட்ட படங்களின் நாயகன்!

எல்லா இயக்குநர்களின் செல்ல நாயகனாக மாறி வரும் சூர்யா, தற்போது அஜித் கைவிடப்பட்ட படத்திற்கு நாயகனாக நடிக்கிறார் என கோலிவுட்டில் ஒரு பேச்சு நிலவுகிறது. அது என்ன படம் தெரியுமா?... 

கௌதம் மேனனின் 'துப்பறியும் ஆனந்த்'. என்ற படத்தில் இணைவதாக இருந்த அஜித்தும், கௌதம் மேனனும் இப்போது திடீரென பிரிந்து விட்டனர். அஜித்துக்காக கௌதம் மேனன் தயார் செய்த கதைதான் 'துப்பறியும் ஆனந்த்'. இதில் அஜித் துப்பறியும் நிபுணராக நடிப்பார் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட சலசலப்பு காரணமாக படம் கைவிடப்பட்டது. சூர்யாவுக்கு ஜோடியாக நடிப்பவர் எமி ஜாக்சன் என தெரிகிறது. படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான் அமைப்பாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்! என்ன சலசலப்பு இருந்தாலும் ஈகோ இல்லாம சைலன்ட்டா வேலைய முடிக்கிறவராச்சே....
Saturday, September 25, 2010 | 0 comments

அரசு நிர்ணயித்துள்ள எந்திரன் டிக்கெட் விலை


இன்னும் கொஞ்ச நாட்கள்தான் இருக்கிறது எந்திரன் வெளியாவதற்கு. அதற்குள் இந்த படத்தின் டிக்கெட் முதல் நாளே எவ்வளவு ரூபாய்க்கு விற்கும் என்று கணக்கு போட்டு கணக்கு போட்டு வாயைப் பிளக்க ஆரம்பித்திருக்கிறார்கள் ரசிகர்கள். இத்தனைக்கும் கொஞ்சம் பெரிய மண்டபம் கிடைத்தால் அங்கேயும் ஒரு திரையைக் கட்டி படம் போட்டுவிடுவார்களோ என்று அஞ்சுகிற அளவுக்கு திரும்புகிற இடத்திலெல்லாம் வெளியிடப் போகிறார்களாம் எந்திரனை. அப்படியிருந்தும் டிக்கெட் கிடைக்குமா என்ற கவலை ரசிகர்களை வாட்ட ஆரம்பித்திருக்கிறது. 
http://www.extramirchi.com/wp-content/uploads/2010/07/Aishwarya-Rai-and-Rajini-in-Endhiran-the-Robot-2.jpg
சென்னை மாவட்ட விநியோக உரிமையைப் பெற்றிருக்கும் திமுக மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் மேலும் சில கோடிகள் அதிகம் வைத்து இப்படத்தை சத்யம் நிறுவனத்திற்கு விற்றுவிட்டாராம். சென்னையில் மட்டும் முதல் ஒரு வாரத்திற்கு டிக்கெட் ரேட் தாறுமாறாக இருக்கும் என்று கவலைப்படும் ரசிகர்களுக்கு முதல்வர் போட்ட வாய் மொழி உத்தரவு ஒன்று ஆறுதல் அளிக்கக்கூடும். அரசுக்கு கெட்ட பேரு வர்ற மாதிரி எந்த தியேட்டர்காரர்களும் நடந்துக்க வேணாம். டிக்கெட் விலையை அதிகப்படுத்தி விற்பதை அனுமதிக்க முடியாது என்று முதல்வர் கூறியிருப்பதாக தகவல்கள் உலவுகின்றன. இந்த நல்ல செய்தி ரசிகர்களை நிச்சயம் சந்தோஷத்தில் ஆழ்த்தியிருக்கும். சென்னையைப் பொறுத்தவரை, இதுவரை டிக்கெட் புக்கிங் ஆரம்பித்துள்ள திரையரங்குகள் அரசு நிர்ணயித்துள்ள ரூ 100 மற்றும் 120 -ஐ மட்டுமே பெற்றுக் கொண்டு முன்பதிவு கூப்பனை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த மாதிரி எல்லாப் படத்துக்கும் அரசு குரல் கொடுக்குமா?
Saturday, September 25, 2010 | 0 comments

மீனாவை வெட்கப்பட வைத்த ரஜினி

Written By Raveendran on Wednesday, September 22, 2010 | Wednesday, September 22, 2010


அவ்வளவு களேபரத்திலும் மீனாவை பார்த்து நலம் விசாரித்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. இடம் சௌந்தர்யா திருமண வரவேற்பு. சற்றே பூசிய அழகான மீனா இப்போ ஆறு மாசம். வேறு கல்யாணமாக இருந்திருந்தால் வீட்டிலிருந்தே ஒரு பொக்கே அனுப்பியிருப்பார். சூப்பர் ஸ்டார் வீட்டு திருமணமாச்சே. சுமையோடு காரேறி வந்துவிட்டார். அவ்வளவு கூட்டத்திலும் அலுங்காமல் குலுங்காமல் அழைத்து வந்தார்கள் செக்யூரிடிகள். மணமக்களை வாழ்த்திவிட்டு நகர்ந்த மீனா, ரஜினியையும் பார்த்து பேசினார். அந்த நேரத்தில்தான் எத்தனை மாசம்மா என்று விசாரித்தாராம் சூப்பர் ஸ்டார். ஆறாவது மாசத்திலிருந்து ரொம்ப ஜாக்ரதையா இருக்கணும். நிறைய பழங்கள் சாப்பிடணும் என்று அட்வைஸ் கொடுத்தவர், படுக்கும் போது எந்த பக்கமா திரும்பி படுக்கிறே? வலது கை பக்கமாவா? இடது கை பக்கமாவா? என்று கேட்க வெட்கத்தில் முகம் சிவந்து போனார் மீனா. அவர் கேட்டதற்கு பின்னால் ஒரு வலுவான காரணம் இருப்பதை அப்புறம்தான் புரிந்து கொண்டார் மீனா. பெண்கள் இடது பக்கமாக படுத்தால் பெண் குழந்தை பிறக்குமாம். எந்த பக்கம் என்று சொன்னாரா மீனா? சொன்னாராம். ஆனால் அதுதான் சஸ்பென்ஸ்! ஹய்யோடா....இன்னும் நாலு மாசம் காத்திருக்கணுமே!
Wednesday, September 22, 2010 | 0 comments

எனக்கு நடிப்பில் விருப்பமில்லை - அக்ஷரா கமல்ஹாசன்


அம்மா சரிகா நடித்து வரும் இந்திப் படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றுகிறாராம் மகள் அக்ஷரா. கமல்ஹாசனுக்கு சரிகா மூலம் இரண்டு புதல்விகள். மூத்தவர் ஸ்ருதி, இளைய மகள் அக்ஷரா. ஸ்ருதி, தனது பெற்றோர் வழியில் நடிகையாகி விட்டார். அதேசமயம், இசை உள்ளிட்ட பிற துறைகளிலும் திறமைசாலியாக உள்ளார். இளையவரான அக்ஷரா மும்பையில் செட்டிலாகி விட்டார். அங்கு பல்வேறு துறைகளில் முத்திரை பதிக்க ஆரம்பித்துள்ளார். இதுகுறித்து அக்ஷரா கூறுகையில், கடந்த 9 மாதத்துக்கு முன் மும்பை சென்றுவிட்டேன். என் குருநாதர் கவுதம் - கோகிலா ஏற்பாடு செய்த நடன நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தேன். சென்னையை ரொம்பவே மிஸ் செய்கிறேன். இங்கிருக்கும்போது ஆங்கிலத்தில் பேசினாலும், தமிழில் பேசும் வாய்ப்பும் கிடைத்தது. மும்பையில் அந்த வாய்ப்பு இல்லை. பலவகை நடனம் கற்றிருக்கிறேன். இதில் சாதிப்பதே என் குறிக்கோள். ஹிப் - ஹாப் நடனம் மிகவும் பிடிக்கும். குச்சுப்புடி, பரதநாட்டியமும் கற்றிருக்கிறேன். இதை மேடையில் ஆட மாட்டேன். இந்தியில் சொசைட்டி படத்தை இயக்கும் ராகுல் தோல்கியாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றுகிறேன். எனது அம்மா சரிகா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சினிமா சம்பந்தமாக எந்த படிப்பும் படிக்கவில்லை. உழைப்பின் மூலமே அதை அறிய விரும்புகிறேன். ஏற்கனவே நண்பர்களுடன் சேர்ந்து 3 விளம்பர படம் இயக்கி உள்ளேன். எப்போதாவது சோர்வாக உணர்ந்தால் அம்மா, அப்பாவிடம் பேசுவேன். நானும் ஸ்ருதியும் சகோதரிகள் மட்டுமல்ல. நெருங்கிய தோழிகள் போல் பழகுவோம். எனக்கு நடிப்பில் விருப்பமில்லை. கேமராவுக்குப் பின்னால் இருக்கவே விரும்புகிறேன். நடனம், சினிமா இந்த இரண்டும் இல்லாமல் என்னால் வாழ முடியாது. அப்பாவை இயக்கும் ஆசையும் எனக்கு உண்டு. ஆனால் அது மிகக் கடினமானது. அவருக்காக ஒரு கதாபாத்திரத்தை நான் உருவாக்குவது கடினம். அதேசமயம், ஏதோ ஒரு கதாபாத்திரத்தை கொடுத்து நடிக்க வேண்டும் என்று என்னால் அவரிடம் சொல்ல முடியாது என்றார் அக்ஷரா. நல்ல புத்திசாலி... புலிக்கு பிறந்தது பூனையாகுமா?
Wednesday, September 22, 2010 | 0 comments

அஜித்தின் மங்காத்தாவில் சிம்புவுக்கு கெஸ்ட்ரோல்!

நடிகர் அஜித் அடுத்து நடித்து வரும் மங்‌காத்தா படத்தில் நடிகர் சிம்பு கெஸ்ட் ரோலில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகர் சிம்பு சமீப காலமாக தன்னை அஜித்தின் தீவிர ரசிகராக காட்டிக் கொண்டு வருகிறார். தனது படங்களில் அஜித்தை புகழும் வகையில் வசனங்களை வைப்பதுடன், அஜித் எனது அண்ணன் மாதிரி என்று பேசி வருகிறார். இந்நிலையில் அஜித் நடிக்கும் மங்காத்தா படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க நடிகர் சிம்பு, மங்காத்தா டைரக்டர் வெங்கட் பிரபுவிடம் விருப்பம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அறிந்த அஜித், அதற்கென்ன... சிம்புவுக்கு ஏற்ற கெஸ்ட் ரோல் ரெடி பண்ணி அவரை நடிக்க வைக்கலாமே...! என்று கூறிவிட்டாராம். இதுதொடர்பாக சிம்புவிடம் போனில் பேசிய அஜித், நடி தம்பி என்று கூறி விட்டாராம். இதனால் ஏக குஷியாகியிருக்கிறார் சிம்பு.
Wednesday, September 22, 2010 | 0 comments

த்ரிஷாவுக்கு பிடிச்சது யாரு?


எப்போதுமே எனது மனம் கவர்ந்த நடிகர் கமல்ஹாசன் மட்டுமே என்று கூறியுள்ளார் த்ரிஷா. கமல்ஹாசனுடன் இணைந்து மன்மதன் அம்பு படத்தில் நடித்து வருகிறார் த்ரிஷா. விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. படப்பிடிப்புக்கு இடை இடையே அவ்வப்போது பேட்டிகளையும் கொடுத்து விட்டு வருகிறார் த்ரிஷா. அப்படி அவர் லேட்டஸ்டாக கொடுத்த பேட்டியில் தனது மனம் கவர்ந்த நடிகர் எப்போதுமே கமல்ஹாசன்தான் என்று கூறியுள்ளார். இதுவரை தனக்குப் பிடித்த நடிகர் என்று யாரையும் கூறியதில்லை த்ரிஷா. குறிப்பாக இளம் நடிகர்களில் உங்களை யார் அதிகம் கவர்ந்தது என்ற கேள்விக்கு பதிலே கொடுக்க மாட்டார், எதற்கு வம்பு என்று. இந்த நிலையில் தனக்குப் பிடித்த ஒரே நடிகர் கமல் மட்டுமே என்று கூறியுள்ளார் த்ரிஷா. இதுகுறித்து ட்விட்டர் தளத்தில் அவர் எழுதியுள்ளதாவது... உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று என்னிடம் தொடர்ந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதுவரை பதில் சொல்லவில்லை. சிக்கல் வரும் என்பதால் அந்த கேள்வியைத் தவிர்த்தேன். ஆனாலும் விடவில்லை. தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். எனவே இப்போது பதில் சொல்கிறேன். எப்போதும் எனக்குப் பிடித்தமான நடிகர் கமல். நான் அவரது தீவிர ரசிகை. பிடித்த நடிகையாக முன்பு சிம்ரன் இருந்தார். இப்போது தமன்னாவையும், சமந்தாவையும் பிடிக்கும் என்று கூறியுள்ளார் த்ரிஷா. போட்டி நடிகைகளேயே பிடிக்கும்ம்னு சொல்லிட்டாரே....... ஆஹா.. அதிபுத்திசாலி!
Wednesday, September 22, 2010 | 0 comments