Hi quest ,  welcome  |  sign in  |  registered now  |  need help ?

காவல்காரனை அம்போன்னு விட்டுட்டு போன அசின்

Written By Raveendran on Sunday, June 27, 2010 | Sunday, June 27, 2010

வேக வேகமாக வளர்ந்து வந்த காவல்காரன் படப்பிடிப்பில் இப்போது கனத்த பாறாங்கல்லை தூக்கி பேப்பர் வெயிட்டாக வைத்திருக்கிறது சூழ்நிலை. இந்தியில் பிசியாக இருந்த அசினுக்கு திடீர் பின்னடைவு. இவரது இரண்டாவது இந்தி படம் செமத்தியாக காலை வாரிவிட, ஒரு பிடிமானத்திற்காக மீண்டும் தமிழ் படத்தை பற்றிக் கொண்டார் அசின். விஜய்க்கும் அசினே மீண்டும் தன்னுடன் ஜோடி போட வந்ததில் அளவுகடந்த மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியை அதிக நாள் நீடிக்க விடவில்லை அழகு மயில் அசின். எப்படி? காவல்காரன் படத்தை ஒரேயடியாக முடித்துவிடுகிற திட்டத்தில்தான் இந்த படத்தை ஒப்புக் கொண்டார். நினைத்தபடி வேக வேகமாக போனது படப்பிடிப்பு. இந்த நேரத்தில்தான் ஷெட்யூலில் இல்லாதபடி திடீரென்று லண்டனுக்கு கிளம்பினார் விஜய். அதற்கான காரணங்களை இப்போது சொன்னால் ஆறிப்போன மெது வடையாகிவிடும் என்பதால் நிற்க. ஆனால் இந்த பத்து நாள் பயணத்தில் அசின் கொடுத்த கால்ஷீட் அநியாயத்துக்கு வீணானதாக கவலைப்படுகிறது சித்திக் தரப்பு. இந்த தேதிகளை அவர் மீண்டும் எப்போது கொடுத்திருக்கிறார் தெரியுமா? வரப்போகும் ஆகஸ்டுக்கு பிறகுதானாம். 
திட்டமிட்டபடி இந்தி படத்திற்காக இலங்கை போகிறார் அசின். அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு வருகிற அவர், காவல்காரனை முடிக்க ஒத்துழைப்பு தருவது ஆகஸ்டில்தான் என்பதால், இப்போதைக்கு காவல்காரன் தூங்கிக் கொண்டிருக்கிறான். காவல்காரனுக்காக எல்லோரும் காவல் காக்கணும் போல!


Sunday, June 27, 2010 | 0 comments

என் படத்துக்கு தடை விதிக்க முடியாது! - சூர்யா

பெங்களூரிலிருந்து வெளிவருகிறது மிர்ரர் நாளிதழ். அதில் சூர்யா ஒரு பேட்டியளித்திருக்கிறார். அதை அப்படியே இங்கு தருகிறோம். படித்துவிட்டு பல்லை கடிப்பதும், புன்னகைப்பதும் வாசகர்களாகிய உங்கள் சாய்ஸ்...  தடையை மீறி கொழும்பில் நடந்த ஐஃபா விழாவில் பங்கேற்ற விவேக் ஓபராயுடன் நீங்கள் நடித்துள்ள ரத்த சரித்திரா படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதே? ஐஃபா விழா விவகாரமே செத்துப் போன ஒன்று. அதை இனியும் இங்கே பேசிக் கொண்டிருக்கக் கூடாது. 
அது ஒரு சின்ன விஷயம். அதைப் போய் இன்னும் பெரிதாக்கிக் கொண்டிருக்கிறீர்களே; என்னுடைய ரத்த சரித்திரா வெளியீட்டை அந்த விழா தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகள் ஒன்றும் செய்து விடாது. சமீபத்தில் ராவணன் வெளியானபோதுகூட யாரும் ஒன்றும் சொல்லவில்லையே ரத்த சரித்திரம் படப்பிடிப்பின்போது நான் விவேக் ஓபராயோடு பேசினேன். 
அப்போது யுனிசெப் மற்றும் அந்நாட்டின் உள்ளூர் தமிழர்களுடன் இணைந்து புதிய பள்ளி ஒன்றை அமைத்திருப்பதாகச் சொன்னார். இந்த விஷயத்தில் அவர் என்ன உதவி கேட்டாலும் செய்ய நான் தயாராக உள்ளேன். அவருடன் சேர்ந்து அந்தப் பணியைச் செய்ய விரும்புகிறேன். நடிகர்கள் இலங்கை சென்றது வெறும் கேளிக்கைக்காக அல்ல. அங்குள்ள மக்களுக்கு உதவத்தான். இந்தப் பிரச்சினை அன்றோடு முடிந்துவிட்டது. திரும்பத் திரும்ப அதை கிளறுவது ஏன்? என்று கேட்டுள்ளார் சூர்யா. 
Sunday, June 27, 2010 | 0 comments

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் மேடை சரிந்தது..!


டெட்ரோய்ட்டில் ஏ ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட மேடை சரிந்ததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. ரஹ்மான் உள்ளிட்ட குழுவினர் சிறு காயங்களுடன் தப்பினர். ஜெய்ஹோ உலக இசைப் பயணம் எனும் பெயரில் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார் ரஹ்மான். இதுவரை நியூயார்க், அட்லாண்டிக் சிட்டி, சிகாகோ நகரங்களில் நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளார்.அடுத்து டெட்ரோய்ட் நகரில் இசை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள் நடந்து வந்தன. தி போன்டியாக் சில்வர்டோம் என்ற அரங்கில் இதற்காக பிரமாண்ட செட்கள், மேடை அமைக்கும் பணி நடந்து வந்தது. மேடையில் ரஹ்மானின் இசைக் குழுவினர் இருந்தபோது எதிர்பாராதவிதமாக அந்த மேடை மொத்தமாக சரிந்துள்ளது.இதுகுறித்து ரஹ்மான் தனது ட்விட்டரில் கூறியுள்ளதாவது: “டெட்ரோய்ட் நகரில் இசை நிகழ்ச்சியை நடத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். இங்கு அமைக்கப்பட்டு வந்த பிரமாண்ட மேடை சரிந்துவிட்டது. கடவுள் அருளால் எனது குழுவினர் சிறு காயங்களுடன் தப்பிவிட்டனர். மேடை அமைப்புப் பணியில் ஈடுபட்ட டெட்ராய்ட் நகர தொழிலாளர்களுக்கும் பெரிய காயம் ஒன்றும் நேரவில்லை.இதன் காரணமாக டெட்ரோய்ட், டொரண்டோ நகரங்களில் நடக்கவிருந்த இசை நிகழ்ச்சிக்கான தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. அதை விரைவில் தெரிவிக்கிறேன். காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி…” என்று கூறியுள்ளார். 

Sunday, June 27, 2010 | 0 comments

கவர்ச்சி உடை எனக்கு பொருத்தமாக உள்ளது - ப்ரியாமணி

கண்களால் கைது செய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ப்ரியாமணி. இதையடுத்து அது ஒரு கனாக்காலம், பருத்தி வீரன், மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களில் நடித்தார். அமீர் இயக்கத்தில் நடித்த பருத்தி வீரன் படம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்று கொடுத்தது. 
ஆனாலும் கடந்த ஒரு வருடமாக தமிழில் கதாநாயகி வாய்ப்பு வரவில்லை. ராவணன் படத்தில் மட்டும் சிறு வேடத்தில் தலைகாட்டி விட்டு போனார். இப்போது தமிழ் சினிமாவில் அவருக்குப் படங்களே இல்லை. இதுகுறித்து ப்ரியாமணி கூறியது: பருத்தி வீரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளியிட்டேன். அதற்காக தேசிய விருதும் கிடைத்தது. ஆனாலும் எனக்கு தமிழ்ப்பட வாய்ப்புகள் வரவில்லை. தமிழ்ப் பட இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் என்ன நினைத்து இப்படியெல்லாம் செய்கிறார்கள் என்று புரியவில்லை. நான் நிறைய வெற்றிப் படங்களில் நடித்துள்ளேன். ஆனாலும் தமிழில் வாய்ப்புகள் வருவதில்லை. மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. ராவணன் படம் மூலம் அது நிறைவேறி இருக்கிறது.
 மலையாளத்தில் வெளியான திரக்கதா படத்தில் எனக்கு விருது கிடைத்திருக்க வேண்டும். சொந்த குரலில் டப்பிங் பேசாததால் அந்த வாய்ப்பை இழந்தேன். ஏதோ நான் மட்டும்தான் கவர்ச்சியாக நடிப்பது போல பேசுகிறார்கள். எல்லா நடிகைகளுமே இப்போது கவர்ச்சியாகத்தானே நடிக்கிறார்கள்... நான் ஒருத்தி மட்டும்தானா பிகினி உடையில் நடித்திருக்கிறேன்? தெலுங்கில் துரோணா படத்தில் ஒரு கனவு காட்சியில்தான் அப்படி நடித்து இருக்கிறேன். எனது உடல் அமைப்புக்கு கவர்ச்சி உடை அணிவது பொருத்தமாக இருக்கிறது. இதில் என்ன தவறு இருக்கிறது என்று புரியவில்லை. நீச்சல் குளத்தில் குளிக்கும் காட்சியில் நீச்சல் உடையைத்தான் அணிய வேண்டும். சேலை உடுத்திக் கொண்டா குளிப்பார்கள்...? என்கிறார். சரி... சரி... ரொம்ப கோபப்படாதீங்க மேடம்!

Sunday, June 27, 2010 | 0 comments

ஜூலை 2ல் வெளியாகிறது வெளுத்துக்கட்டு

எஸ்.ஏ.சந்திரசேகரன் சொந்தப் படமான வெளுத்துக்கட்டு வரும் ஜூலை 2-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தை கதை,  திரைக்கதை,  வசனம் எழுதி தயாரித்துள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகரன். சேனாபதி மகன் இயக்குகிறார். என் வாழ்க்கையின் ஒரு பகுதி இந்தப்படம் என்று கூறி இந்தப் படத்துக்கு விளம்பரம் செய்துவரும் எஸ்.ஏ.சி, படத்தை நல்ல விலைக்கு விற்பனை செய்துள்ளார். 
படத்தைப் பார்த்த சென்ஸார் அதிகாரிகளும் பாராட்டி யு சான்றிதழ் கொடுத்துள்ளனர். விஜய்க்காக இந்தப் படம் சமீபத்தில் சிறப்புக்காட்சியாக போட்டுக் காட்டப்பட்டது. படத்தைப் பார்த்துவிட்டு அவர் வெகுவாகப் பாராட்டினாராம். இந்தப் படத்துக்காக ராமநாதபுரம், புதுக்கோட்டை, மானாமதுரை போன்ற சின்னச் சின்ன நகரங்களிலும் அறிமுக விழா நடத்தி விளம்பரம் செய்து வருகிறார் எஸ்.ஏ.சி. வரும் ஜூலை 2-ம் தேதி தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது வெளுத்துக்கட்டு. சரி! அப்பா படத்துல ஏன் நடிக்கல.......? பாவம் அப்பா நஷ்டப்பட்ருவாருல அதுக்காகத்தான்...!

Sunday, June 27, 2010 | 0 comments

சிம்புவின் புது ஸ்டைல்

விக்னேஷ் சிவா இயக்கத்தில் சிம்பு, சரத்குமார் மகள் வரலட்சுமி நடிக்கும் படம் போடா போடி. முக்கிய காட்சிகள் லண்டனில் படமாகின்றன. மென்மையான காதல் கதை இது. இதற்காக புது ஹேர் ஸ்டைலுடன் தோன்றுகிறார் சிம்பு. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இருந்த ஸ்டைலுக்கும் இதற்கும் நிறைய வித்தியாசங்கள் காட்டுகிறாராம். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின், லிங்குசாமி இயக்கும் படத்தில் நடிக்கிறார் சிம்பு. ஸ்டைல் எல்லாம் ஓகே தான்.... படத்தில் சரக்கு இருக்குமா?

Sunday, June 27, 2010 | 0 comments

இண்டர்நெட்டில் பாஸ்போர்ட்- அதிர்ச்சியில் ஐஸ்வர்யாராய்!

Written By Raveendran on Friday, June 25, 2010 | Friday, June 25, 2010


இண்டர் நெட்டில் தனது பாஸ்போர்ட் வெளியானது கண்டு அதிர்ச்சியில் உள்ளார் ஐஸ்வர்யாராய். பாஸ்போர்ட் ரகசிய ஆவணம் தன்னிடமே எப்போதும் வைத்திருந்தார். அது எப்படி வெளியானது என்று புரியாமல் குழம்புகிறார். பாஸ்போர்ட்டில் தனது பெயரை ஐஸ்வர்யா என்று குறிப்பிட்டுள்ளார். பிறந்த தேதி 1.11.1973 என்று உள்ளது.திருமணத்துக்கு முன்பு இந்த பாஸ்போர்ட்டை எடுத்துள்ளார். இதை இண்டர்நெட்டில் வெளியிட்டது யார் என்று விசாரணை நடக்கிறது. போலீசுக்கும் இந்த பிரச்சினை போய் உள்ளது.
திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் மீது ஐஸ்வர்யாராய்க்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. வெளிநாடு படப்பிடிப்புகளுக்கு செல்லும்போது விசாபெறும் விஷயங்களுக்காக பாஸ்போர்ட்டை படப்பிடிப்பு குழுவினர் வாங்கிச் செல்வது உண்டு. அப்போது யாரோ இதனை காப்பி எடுத்து இண்டர்நெட்டில் வெளியிட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கு முன்பு இது போன்று முக்கிய பிரமுகரின் பாஸ்போர்ட் இண்டர்நெட்டில் வெளியான சம்பவங்கள் நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது


Friday, June 25, 2010 | 0 comments

ராவணன் ராமாயணம் அல்ல..! - மணிரத்னம்

ராவணன் படம் ராமாயணத்தின் தழுவல் அல்ல. ராமாயணத்தின் ஒரு சில விஷயங்கள் இடம்பெற்றிருக்கலாம், என்றார் மணிரத்னம். மணிரத்னம் இயக்கிய ராவணன் படம் தமிழ், இந்தியில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் கதை ராமாயணத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
Manirathnam
 தமிழில் ராமன் கதாபாத்திரத்தில் பிருத்விராஜும், ராவணன் பாத்திரத்தில் விக்ரமும், சீதை கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யாராயும், கார்த்திக் அனுமனாகவும், ப்ரியாமணி சூர்ப்பனையாகவும் நடித்துள்ளனர். கதையின் போக்கும் ராமாயணத்தின் மறுபதிப்பு போலவே உள்ளது. பல காட்சிகளில் சந்தன காட்டு வீரப்பன் கதையின் சாயலும் இந்தப் படத்தில் உள்ளது. இறுதிக்காட்சியில் ராமனாக வரும் பிருத்விராஜ் வில்லனாகவும், ராவணனாக வரும் விக்ரம் கதாநாயகனாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். இது வட இந்தியாவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் இதற்காக எந்த கிளர்ச்சியும் நடந்ததாகத் தெரியவில்லை. இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம் சென்னையில் நிருபர்களை சந்தித்தார். அவர் கூறியது: முரட்டுத்தனமாகவும், வில்லத்தனமாகவும் தெரியும் ஒருவன் மனதில் அன்பு, பாசம், காதல் போன்ற உணர்வுகள் வெளிப்படுவதை தற்போதைய உலகில் பரவலாக காண முடிகிறது. 
எனவேதான் அதுபோன்ற கதாபாத்திரத்துக்கு ராவணன் பெயர் வைத்தேன். பத்து தலை மாதிரி அவனுக்குள் பல குணங்கள் இருக்கலாம். ஆனாலும் உள்ளுக்குள் அவனும் ஒரு இயல்பான மனிதனே. இது ராமாயணத்தின் தழுவல் அல்ல. ராமாயணத்தில் உள்ள ஒருசில விஷயங்கள் இப்படத்தில் இருக்கலாம். ஆனால் இது ராமாயணம் அல்ல. ராவணன் படத்தில் எல்லோருமே சிரமப்பட்டு நடித்தனர். இந்தியில் இன்னொருத்தர் மனைவியான ஐஸ்வர்யாவை அபிஷேக்பச்சன் கடத்துவது போன்று கதையை அமைத்திருப்பதை ரசிகர்கள் ஏற்பார்களா என்ற கேள்விக்கே இடம் இல்லை. திரையில் பார்க்கும்போது கதாபாத்திரத்தில் மூழ்கி விட்டால் அவர்களின் நிஜவாழ்க்கை மனதில் எழாது. படத்துக்கு உலகம் முழுக்க நல்ல வரவேற்பு உள்ளது, என்றார். இந்தப் படம் மோசமாக எடிட் செய்யப்பட்டுள்ளதாக அமிதாப் கூறியிருந்தாரே என்ற கேள்விக்கு மணிரத்னம் பதில் சொல்லவில்லை. இந்த பூனைக்கு மணி கட்டிவிட்டுட்டாரே பிக் பி!


Friday, June 25, 2010 | 0 comments

செல்போனில் ராவணன் டவுன்லோட்!

மணிரத்னம் இயக்கியுள்ள ராவணன் முழுப் படமும் செல்போனில் இலவசமாக டவுன்லோட் செய்யக் கிடைக்கிறது. மேலும் யூ ட்யூப் மற்றும் ஃபேஸ்புக்கிலும் முழுவதுமாக காண முடிகிறது. 

இப்போதெல்லாம் யாருடைய படமாக இருந்தாலும் சரி வெளியான அடுத்த சில மணி நேரங்களிலேயே இன்டர்நெட்டில் பார்த்து விட முடிகிறது. அந்த அளவுக்கு பைரஸி பேய் தலை விரித்தாடி வருகிறது. அந்த பேயின் தாக்குதலுக்கு தற்போது ராவணனும் சிக்கியுள்ளது. ராவணன் படம் வெளியான அன்றே இணையதளங்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 சேலம் போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் செல்போனிலேயே முழுப் படமும் பார்க்கும்படி பரவ விட்டார்கள். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் இந்தப் படம் யூ ட்யூப் இணையத்தளத்தில் நல்ல தரத்தில் பார்க்கும் வகையில் செய்து விட்டனர் புண்ணியவான்கள். இதுதவிர 20க்கும் மேற்பட்ட அண்டர்கிரவுண்ட் இணையத்தளங்களிலும் முழுப் படமும் தரவிறக்கம் செய்யக் கிடைக்கிறது. இந்த விவரங்களையும் டவுன்லோட் லிங்குகளையும் ஃபேஸ்புக்கிலும் பரவச் செய்கிறார்கள். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிக் பிக்சர்ஸ் நிறுவனம், வீடியோ பைரஸி பெரும் சவாலாக உள்ளது. மாற்று வழிகளும் தெரியவில்லை என்று கூறியுள்ளது.
இதனால் கோடிகள் செலவு செய்து படம் எடுத்து கோடியில் போய் கொட்ட ​வேண்டியதுதான். ஆனாலும் தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து இதுகுறித்து போலீஸில் எந்த புகார்களும் பதிவு செய்யப்படவில்லை. காலம் கெட்டு போச்சு, யாருக்கு என்ன கவலை....?

Friday, June 25, 2010 | 0 comments

ரஜினி மீண்டும் தாத்தா ஆனார் : தனுஷ்-ஐஸ்வர்யாவுக்கு ஆண் குழந்தை

Written By Raveendran on Tuesday, June 22, 2010 | Tuesday, June 22, 2010

நடிகர் தனுஷ் & ஐஸ்வர்யா தம்பதிக்கு இன்று காலை ஆண் குழந்தை பிறந்தது. ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகன் தனுஷுக்கும்  காதல் மலர்ந்தது. இருவீட்டு பெற்றோர் சம்மதத்துடன் 2004 நவம்பரில் தனுஷ், ஐஸ்வர்யா திருமணம் சென்னையில் நடந்தது. இவர்களுக்கு மூன்றரை வயதில் யாத்ரா என்ற மகன் இருக்கிறான். இந்நிலையில் ஐஸ்வர்யா மீண்டும் கர்ப்பம் ஆனார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐஸ்வர்யா அனுமதிக்கப்பட்டார். இன்று காலை 6.21 மணிக்கு, ஐஸ்வர்யாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. ரஜினி மீண்டும் தாத்தா ஆனதையொட்டி அவருக்கு சினிமா பிரமுகர்களும் உறவினர்களும் வாழ்த்து தெரிவித்தனர். படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு, ஐஸ்வர்யாவை கவனித்து வரும் தனுஷ், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

Tuesday, June 22, 2010 | 0 comments

கோரிப்பாளையம் திரைவிமர்சனம்!

Written By Raveendran on Saturday, June 19, 2010 | Saturday, June 19, 2010

சென்ட்டிமென்ட்டில் நனைத்தெடுத்த அருவா! அது சீறிப்பாய்வதுதான் கோரிப்பாளையம். 'இந்தாரூ....' என்று யாராவது மதுரை பாஷையில் பேச வந்தாலே மாருவலி வர்ற அளவுக்கு போயிட்டு இருக்கு தமிழ்சினிமா. ஆனாலும் துணிச்சலா மதுரையிலேயே மறுபடியும் 'ஆங்கிள்' வச்சுருக்காரு ராசுமதுரவன்.
சரக்கும், சைட் டிஷ்ஷ§மா திரியுற நாலு உருப்படாத பசங்க. அவங்க வாழ்க்கையில் நடக்கிற சொந்த பந்த சோகங்கள், மற்றும் அநாதை 
அழுகாச்சிகள், காதல், கட்டி உருளல் என்று சகல திசைகளிலும் பார்வையை செலுத்தியிருக்கிறார் இயக்குனர். முணுக்குன்னு சில காட்சிகளில் முட்டிகிட்டு வருது அழுகை. பல காட்சிகள் சொரேர். அடுக்கடுக்கா விழும் பிணங்கள், அதுக்கு கொள்ளி வைக்கிற வரை நீளும் காட்சிகள்னு பக்கத்து சீட் ஆசாமி நம்ம சட்டையில மூக்கு தொடைக்கிற அளவுக்கு போகுது சென்ட்டிமென்ட். ராசுமதுரவன் படத்தில் இது இல்லாமலா? போகட்டும்...

யாரோ ஒரு பொண்ணு நிக்கிற இடத்தில இந்த பசங்க எதார்த்தமாக நிற்க போக, பொண்ணுக்கும் பொறுக்கிகளுக்கும் லவ்வுன்னு போட்டுக் கொடுக்கிறார் ராஜ்கபூர். ஏன்? காரணம், இவருக்கும் பசங்களுக்கும் முன்பகை. இந்த நேரத்தில் களவாட போற பசங்க குறிப்பா அந்த பொண்ணு வீட்டுக்குள்ளேயே குதிக்க, கள்ளத்தொடர்புன்னு முடிவுக்கு வர்ற அண்ணனுங்க தங்கச்சியையும் கொன்னுட்டு பசங்களையும் விரட்டி விரட்டி வெட்டித்தள்ள, ஆரம்பிக்கிறது குருஷேத்திர போர். நடுவில தொழில் முறை ரவுடியான விக்ராந்தும் விரட்டுகிறார். கடைசி நாலு ரீலில் ஏ பாசிட்டிவ் ல் துவங்கி இசட் நெகட்டிவ் வரை ஆறாக ஓடுது ரத்தம்!
ஏகப்பட்ட பாத்திரங்கள். அதனால, மைண்ட்ல இருக்கிறவங்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கலாம். பிறந்ததுமே அநாதை ஆகிவிடுகிற ராமகிருஷ்ணன், இரண்டொரு சந்திப்பிலேயே பூங்கொடி மேல் காதலில் விழுகிறார். இந்த ஜோடிகளின் அழுகாச்சியை விடுங்க. காதலில் சுவாரஸ்யம். ரோட்டோரத்தில் படுத்திருக்கும் இவர் மீது பூங்கொடியின் நாய் உச்சா போக, அங்க ஆரம்பிக்குது லவ். கடைசியில் வயிற்றுப்பிள்ளையுடன் ராமகிருஷ்ணன் சடலத்திற்கு கொள்ளி வைக்கிறாரு பூங்கொடி.
இன்னொரு ஜோடி ஷரிஷ்-சுவாசிகா. தனது மனைவி நண்பனோட காதலின்னு தெரிஞ்சதும், சுவாசிகாவின் தாலியை அறுத்து அதே நண்பனுக்கு மனைவியை தாரை வார்க்கிறாரு. தட்டிக் கேட்கும் ஊர் மக்களிடம், "அவ என் பெண்டாட்டி. இத கேட்க யாருக்கும் உரிமை இல்ல"ன்னு சொல்வது முறையல்ல என்றாலும், நல்ல டயலாக்!
இவர்களையெல்லாம் தாண்டி, நான் இருக்கேன் என்று பிரேமுக்கு பிரேம் மனசை அள்ளிகிட்டு போவது நம்ம சிங்கம்புலிதான். எம்ஜிஆர் விக், எக்குதப்பான டயலாக்னு மனிதர் குலுக்கியெடுக்கிறார். பேசாம டைரக்ஷன் வேலையை விட்டுட்டு முழுநேர காமெடி நடிகராயிட்டாருன்னா நாடே மெச்சும்! ஆப்பத்தை திருப்பி போட முடியாதுன்னு ஒரு டயலாக் விடுறாரு பாருங்க... தியேட்டரே அல்லுசில்லு ஆகுது. 'மயில்'சாமியின் ஆட்டத்தை எதிர்பார்த்து தியேட்டருக்கு போனா அவர் தோளிலும் சென்ட்டிமென்ட்டை இறக்கி வைச்சு 'சோக'சாமியாக்கியிருக்காங்க. ப்ச்!
நடிச்சிருக்கிற இயக்குனர்கள் வரிசையில கொஞ்சம் மெச்சூரிடி நந்தா பெரியசாமியிடம். ரவிமரியாவோட செவத்த தோலையும் மீறி கருப்பா கலவரப்பட வைக்குது அவரோட வில்லத்தனம்.

குத்துப்பாட்டுக்கான கோரியோகிராப் எல்லாம் வில்லேஜ் மக்களுக்கான விசேஷ சர்பத்! என்ன இந்த மாற்றமோ... அருமையான மெலடி. சபேஷ் முரளிக்கு ஸ்பெஷல் பாராட்டு. அப்படியே பாலபரணியின் கேமிராவுக்கும் தனி ஜால்ரா போடலாம்.
இன்னொரு பீம்சிங்காவோ, கே.எஸ்.ஜியாகவோ வருவாருன்னு நினைச்சுட்டு இருந்தா, பேரரசு, ஏ.வெங்கடேஷ்களுக்கு போட்டியா குதிச்சிருக்காரு ராசு.மதுரவன். வேணாம்ங்க. உங்க பழைய ஸ்டைலுக்கு போங்க. இதுதாங்க எங்கள மாதிரி ரசிகருங்களோட கோரி(க்கை)பாளையம்!
Saturday, June 19, 2010 | 0 comments

5 கோடிக்கு ராவணனை வாங்கிய ராஜ் தொலைக்காட்சி

ராவணன் தமிழ்ப் படத்தை ரிலையன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்களிடமிருந்து ரூ 5 கோடிக்கு வாங்கியுள்ளது ராஜ் தொலைக்காட்சி. சிவாஜி, தசாவதாரம் மற்றும் குசேலன் படங்களுக்குப் பிறகு அதிக விலைக்கு தொலைக்காட்சி உரிமை விற்கப்பட்ட தமிழ்ப் படம் இதுவே. இந்தப் படத்தை வாங்க தமிழ் சேனல்கள் சில போட்டியிட்டன. ஆனால் அதிக விலை கூறப்பட்டதால் ஆரம்பத்திலேயே வேண்டாம் என்று கூறிவிட்டது சன் தொலைக்காட்சி. கலைஞர் தொலைக்காட்சியும் போட்டியிலிருந்து விலகிக் கொண்டது. இதற்கிடையில் ரூ 5 கோடியைக் கொட்டிக் கொடுக்க முன்வந்தது ராஜ் தொலைக்காட்சி. இதைவிட நல்ல விலை இந்தப் படத்துக்கு கிடைக்காது என்ற நிலையில் கப்பென்று ராஜ் தொலைக்காட்சியை பிடித்துக் கொண்டனர் தயாரிப்பாளர்கள். இவ்வளவு பெரிய தொகைக்கு ராஜ் தொலைக்காட்சி இந்தப் படத்தை வாங்கியிருப்பதை பெரும் ஆச்சர்யத்தோடு பேசுகின்றனர் திரையுலகில். மணிரத்னத்தின் பெரும்பாலான படங்களை சன் தொலைக்காட்சி வாங்கியதில்லை. இருவர், உயிரே, ஆயுத எழுத்து மற்றும் கடைசியாக வெளியான குரு போன்ற படங்களின் உரிமையை ஜெயா, விஜய் மற்றும் ராஜ் தொலைக்காட்சிதான் வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. விருது கிடைக்கும் சரி, வசூல் ஆகுமா?

Saturday, June 19, 2010 | 0 comments

சினிமாவை விட்டு விலக மணிரத்னம் முடிவு!

சினிமாவை விட்டு விலகி கொடைக்கானலில் தங்கி கோல்ப் விளையாட விரும்புவதாக இயக்குனர் மணிரத்னம் கூறியுள்ளார். நாயகன், அக்னி நட்சத்திரம், அஞ்சலி, தளபதி, ரோஜா, திருடா திருடா, பம்பாய், அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளிட்ட ஏராளமான வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் மணிரத்னம். இவரது இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, இந்தியில் ராவணன் படம் இன்று வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் 250க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் தமிழ் ராவணன் வெளியாகிறது. இந்தி ராவண், தெலுங்கு வில்லன் படத்தையும் சேர்த்து 1300 திரையரங்குகளில் வெளியாகிறது. முதல் மூன்று நாட்களுக்கான முன்பதிவு திருப்தியாக உள்ளதென பிக் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது. திங்கள் கிழமைக்குப் பிறகு படம் தாக்குப் பிடிப்பது ரசிகர்கள் கையில் உள்ளது. 

இந்நிலையில் மணிரத்னம் அளித்துள்ள பேட்டி அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராவணன் படத்தை ஆரம்பிக்கும் போதே, இதுதான் எனது கடைசி படம் என முடிவு செய்து கொண்டேன். இந்தப் படத்துக்குப் பிறகு சினிமாவிலிருந்து விலகி, கொடைக்கானலில் செட்டிலாகும் எண்ணம் இருக்கிறது. அங்கே தினமும் கோல்ப் விளையாட ஆசை எனக்கு. இப்போது அடுத்த படம் என்ன என்ன? என்று எல்லோரும் என்னைக் கேட்கிறார்கள். எனக்கும் இன்னுமொரு படம் மட்டும் பண்ணலாம் என்றுதான் தோன்றுகிறது. பார்க்கலாம். ஆனால் அடுத்த படத்துக்கான ஐடியா எதுவும் என்னிடம் இல்லை. ராவணன் படத்துக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது. ஆனால் அது படத்தைப் பாதிக்காது என்றுதான் நம்புகிறேன், என்று மணிரத்னம் தனது பேட்டியில் கூறியுள்ளார். வெற்றி படங்கள் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கும் இயக்குனர் மணிரத்னம் சினிமாவை விட்டு விலகக் கூடாது. தொடர்ந்து ஆண்டுக்கு ஒரு படமாவது இயக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த தலைமுறை இயக்குனர்களுடன் போட்டி போட பாவம் சார்கிட்ட புதிய சரக்கு இல்லைபோல அதான் நைசா நழுவுறாரு!

Saturday, June 19, 2010 | 0 comments

இசைப் பயணத்தை கோலாகலமாக தொடங்கிய ஏ.ஆர்.ரகுமான்

Written By Raveendran on Sunday, June 13, 2010 | Sunday, June 13, 2010

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமானின் அமெரிக்க இசைப் பயணம் கோலாகலமாக தொடங்கியுள்ளது. A.R. Rahman Jai Ho Concert: The Journey Home World Tour என்ற பெயரிலான இந்த இசைப் பயணம், இதுவரை இல்லாத அளவுக்கு பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தீபக் கட்டானி இந்த நிகழ்ச்சியை வடிவமைத்து தயாரித்துள்ளார்.
                                                                                                    உலகம் முழுவதும் 20 நகரங்களில் இது நடைபெறுகிறது. அமெரிக்காவிலும், பின்னர் கனடா, நெதர்லாந்து, பிரான்ஸ், நோர்வே, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. அமெரிக்காவில் நியூயார்க், அட்லான்டிக் சிட்டி, வாசிங்டன், சிகாகோ, டெட்ராய்ட், டொரன்டோ, சான் பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்செலஸ், டல்லாஸ், ஹுஸ்டன் ஆகிய நகரங்களிலும், ஆம்ஸ்டர்டாம், பாரீஸ், ஆஸ்லோ, கிளாஸ்கோ, மான்செஸ்டர் மற்றும் லண்டன் நகரங்களிலும் இசை விருந்து படைக்கிறார் ரகுமான். தனக்கு 2 ஆஸ்கார் விருதுகளை பெற்றுத் தந்த ஜெய்ஹோ பாடலின் பெயரிலேயே இந்த இசைப் பயண நிகழ்ச்சியை தொடங்கியுள்ளார் ரகுமான். முதல் நிகழ்ச்சி நியூயார்க்கில் பிரம்மாண்டமானதாக நடந்தது. இதில் கோட், சூட்டில், தலையில் தொப்பி அணிந்தபடி கேஷுவலாக நடனமாடியபடி, பாடியபடி ரகுமான் தனது நிகழ்ச்சியை நடத்தினார். மடோனா, பிரிட்னி ஸ்பியர்ஸ் உள்ளிட்ட பிரபலங்களுக்காக நடனம் வடிவமைத்தவரான அமி டிங்காம் இந்த நிகழ்ச்சியின் நடனத்தையும் வடிவமைத்துள்ளார். 
இந்திய பாரம்பரிய நடனம் மற்றும் மேற்கத்திய நடனங்களின் கலவையுடன், ரகுமானின் முதல் இசை நிகழ்ச்சி வித்தியாசமான விருந்தாக அமைந்தது. இந்த நிகழ்ச்சியை பல ஆயிரக்கணக்கானோர் பார்த்து ரசித்தனர். இந்த இசைத் தொடரில் பங்கேற்கும் அனைவருக்கும் விலை உயர்ந்த, வித்தியாசமான உடைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ரகுமானும் கூட தனது முதல் நிகழ்ச்சியின்போது படு ஸ்டைலாக உடையணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆஸ்கார் நாயகனே சும்மா அசத்துங்க....
Sunday, June 13, 2010 | 0 comments

கார்த்தியை காதலிக்கிறாரா தமன்னா?

நடிகை தமன்னா, பையா படத்தில் தன்னுடன் ஜோடியாக நடித்த கார்த்தியை காதலிப்பதாகவும், திடீரென்று சம்பளத்தை ஒரு கோடி ரூபாயாக உயர்த்தி விட்டதாகவும் செய்திகள் வெளியாயின. இதற்கு அவர் விளக்கம் அளிக்கும்போது, பையாவில் கார்த்தியுடன் நடித்ததை வைத்து, அவரை நான் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரப்புகின்றனர்.




என்னை சந்திப்பவர்களெல்லாம் கார்த்தியை காதலிக்கிறீர்களாமே? என்று கேட்கிறார்கள். இதெல்லாம் எனக்கு சிரிப்பைத்தான் வரவழைக்கின்றன. எங்களுக்குள் நல்ல நட்புதான் உள்ளது. வேறு எந்த உறவும் கிடையாது. எனக்கு எவ்வளவு சம்பளம் தரவேண்டும் என்பது நான் நடிக்கும் படங்களின் தயாரிப்பாளர்களுக்கு தெரியும். அவர்கள் கொடுப்பதை நான் வாங்கிக் கொள்கிறேன். மற்றபடி எனக்கு இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று நான் கேட்பது கிடையாது. ஒரு கோடி ரூபாய் சம்பளம் தர வேண்டும் என்று நான் யாரையும் நிர்பந்தித்ததில்லை. என்னிடம் பலரும், தற்போது தமிழ்த் திரையுலகில் நீங்கள்தான் நம்பர் ஒன் நடிகையாக இருக்கிறீர்கள், என்கிறார்கள். ஆனால் எனக்கு அதில் நம்பிக்கை கிடையாது. 


ஒவ்வொரு படத்தில் நடிக்கும்போதும் என் திறமையை வளர்த்துக் கொள்கிறேன். ஒவ்வொரு தவறில் இருந்தும் பாடம் கற்றுக்கொண்டு அதை திருத்திக் கொள்கிறேன், என்று கூறியிருக்கிறார். சீக்கிரம் கத்துக்கிட்டு, நல்ல படமா தாங்க அம்மணி!

Sunday, June 13, 2010 | 0 comments

திருமணக் கோலத்தில் நயன் & பிரபுதேவா !

அதன் பிறகு இருவரும் நெருக்கமாக பழகினார்கள். நயன்தாராவை திருமணம் செய்ய மனைவி ரம்லத்திடம் பிரபுதேவா அனுமதி கேட்டார். அவர் சம்மதிக்க வில்லை.பிரபுதேவாவுடனான தொடர்பை நயன்தாரா துண்டிக்கவேண்டும் என்றும் இல்லாவிட்டால் எங்கு பார்த்தாலும் அடிப்பேன் என்றும் ரம்லத் பேட்டி அளித்தார். இதையடுத்து சில மாதங்களாக சென்னைக்கு வருவதை நயன்தாரா தவிர்த்தார். ஆனால் தற்போது நிலைமை மாறி விட்டது. நயன்தாராவும் பிரபுதேவாவும் சேர்ந்து பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள்.

நயன்தாராவும் பிரபுதேவாவும் மணக்கோலத்தில் இருப்பது போன்று இண்டர்நெட்டில் படங்கள் பரவியுள்ளன. இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டதாக அவற்றில் தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த படம் உண்மையா என்று இருவரிடமும் உறுதி படுத்த முயன்றபோது செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. நிஜமாகவே திருமண கோலத்தில் இப்படம் எடுக்கப்பட்டதா அல்லது போலியாக ''மார்பிங்'' செய்து வெளியிடப்பட்டதா என்று தெரியவில்லை.நயன்தாராவுக்கும் பிரபு தேவாவுக்கும் ''வில்லு'' படப்பிடிப்பில் காதல் மலர்ந்தது.




கேரளாவில் நடந்த மலையாள இயக்குனர் ஒருவரின் இல்லத் திருமணத்தில் கைகோர்த்த படி சென்று பங்கேற்றனர்.ஐதராபாத்தில் நடந்த பட விழாவில் அருகருகே அமர்ந்திருந்தார்கள். நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த நடிகர், நடிகைகள் கலை நிகழ்ச்சியில் ஒன்றாக நடனம் ஆடினார்கள். இருவரும் சேர்ந்து குடும்பம் நடத்துவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது பற்றிய கேள்விகளுக்கு சொந்த விஷயம் என்று கூறி பதில் சொல்ல மறுக்கிறார்கள். இந்த நிலையில் தான் திருமண கோலத்திலான படத்தை இணைய தளங்கள் வெளியிட்டு உள்ளன.
Sunday, June 13, 2010 | 0 comments

ராவணன் – ஒரு உயிர் கொல்லும் பாடல் With ரஹ்மான் !!

Written By Raveendran on Wednesday, June 2, 2010 | Wednesday, June 02, 2010

நல்ல பாடல்களை கேட்கும்போது எனக்கு எப்போதும் ஒரு கிறுக்கத்தனமான சந்தேகம் வரும் அது பாட்டா..? மெட்டா…? சிறந்தது.. என்பதுதான் பல சமயங்களில் எத்தனை தடவை திரும்ப திரும்ப யோசித்தாலும் ம்ஹூம்…விடையே கிடைக்காது. இந்த கேள்வி எனக்கு மட்டுமல்ல வைரமுத்துவுக்கும் இளையராஜாவுக்கும் வந்து தொலைந்ததுதான் அவர்கள் இருவரும் நிரந்தரமாக பிரிய காரணமானது. அப்படி ஒரு வில்லங்கமான வினா இது. அண்மையில் ராவணன் பாடல்கள் வெளியான போது ‘உசிரே போகுதே’ பாடலை கேட்கும் போது மீண்டும் இந்த கேள்வி மூக்கை நுளைத்தது என் மண்டைக்குள் நடந்த சண்டையில் பாடல் பாடமாகிப்போனதுடன் ஒரு நல்ல பதிலும் கிடைத்தது.
ஒரு நல்ல பாடல் ஒரு நல்ல குடும்பம் போல தனியே பிரித்து பார்க்க முடியாது பிரிந்து போனால் சேர்ந்து இருக்கும் போது இருந்த சிறப்பு இல்லாமல் போய்விடும் மெட்டும் பாட்டும் அற்புதமாக பொருந்தி  மெட்டு பாட்டை அழகுபடுத்த.. மெட்டுக்கு பாட்டு அர்த்தத்தை கொடுக்க.. மொத்தத்தில் பாடல் முழுமையடைகிறது.
இதுதான் அந்த பதில் !!
ஒலித்தட்டில் இடம்பெறாத பாடல்

இந்த பதில் கூட  நீண்ட காலம் நிலைக்க முடியவில்லை மீண்டும் குழப்பம் !!அண்மையில் கலைஞ்ஞர் தொலைக்காட்சி ஒளிபரப்பிய ராவணன் முதல் பார்வை நிகழ்ச்சியில் மெட்டும் பாட்டும் மேடை ஏறி இருந்தன ஒலித்தட்டில் இடம்பெறாத பாடல் ஒன்று முதலில் வைரமுத்து கவிதை வாசிக்கிறார்….
நான் வருவேன்
மீண்டும் வருவேன்..
உன்னை தொடர்வேன்..
உயிரால் தொடுவேன் !
ஒரு பிள்ளை எழுதும் கிறுக்கல் தான் வாழ்க்கையோ ?
அதில் அர்த்தம் தேடி அலைவதே வேடகையோ?
அர்த்தம் புரியும் போது வாழ்வு மாறுது
வாழ்வு கழியும் போது அர்த்தம் கொஞ்சம் மாறுது
அழுது கொண்டு பூமி வந்தோம்
சிரித்து கொண்டே வானம் போவோம்..
அர்த்தமுள்ள அழகிய வரிகள் வைரமுத்துவின் குரலில் கணீரென்று காதுகளில் ஒலித்து இனம்புரியாத ஒரு கிளர்ச்சி மனதில். வைரமுத்து எப்பொழுதும் மணிரத்தினத்திற்கு கொஞ்சமும் குறையாத முத்துக்களைதான் கொடுத்து வருகிறார்..
ரஹ்மான் ஒலிவாங்கியை கையில் எடுக்கிறார் நான்கு வரிதான் பாடுகிறார் அவரின் குரலில் வரிகளுக்குள் மெட்டு கலந்து   பாடல் உயிர் பெறுகிறது. கவிதைக்குள் அடைபட்டு கிடந்த உணர்வுகள் மனதை ஆக்கிரமிக்கின்றன. மீண்டும் குழப்பம் இந்த முறை பதில் இப்படி வருகிறது !
கவிதை என்பது ஒரு அழகிய சிலை போல அதன் உணர்வுகளை வெளிக்கொணரும் உன்னதமான ஜீவன்தான் மெட்டு.
mani-ratnam-a-r-rahman-ravana-movie.jpg (400×271)இசைக்கே பெருமை சேர்க்கிறார் ரஹ்மான் !!


ராவணன் படத்தில் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் பிடித்த பாடல் உசிரே போகுதே. இப்பொழுது  இந்த புதிய பாடல் எனக்கு மிக மிக பிடித்த பாடலாக மாறி விட்டது.முதலில் ஹிந்தியில் இந்த பாடலை கேட்கும் போதே அடிமையாகி விட்டிருந்தேன் இப்போது தமிழ் வரிகளுடன் பாடல் மனதை பிழிந்தெடுக்கிறது. என் தனிமையின் வெற்றிடத்தை இந்த பாடல் தான் இனி நிரப்பியபடி இருக்கும்.

குல்சார் + ரஹ்மான் பின்னணி இசையுடன் பாடல் ஹிந்தியில்

நாளுக்கு நாள் ராவணன் படத்திற்கான எதிர்பார்ப்புகள் எகிறிக்கொண்டிருக்கின்றது சந்தோன் சிவனின் கைவண்ணத்தில் இதுவரை தொலைக்காட்சியில் நான் பார்த்த அத்தனை காட்சிகளும் பயங்கரமாக இருக்கின்றன .  இப்போது கூடுதலாக இந்த பாடல் அதுவும் படத்தின் முக்கியமான தருணத்தில் “படத்தின் உச்ச கட்ட பாட்டு இது.. இந்த மண்ணிடம் இருந்தும் ஒரு பெண்ணிடம் இருந்தும் ஒரு வீரன் விடைபெறும் போது வரும் பாடல்” என வைரமுத்து குறிப்பிடுகிறார்  திரையில் தான்பார்க்க முடியும். காத்திருப்போம் வரட்டும் ஜீன் 18 .
Wednesday, June 02, 2010 | 0 comments

ரஜினிக்கு செவாலியே சிவாஜி விருது!



விஜய் டிவி வழங்கிய செவாலியே சிவாஜி விருதினை, நடிகர் திலகம் சிவாஜியின் வீட்டுக்குப் போய் பெற்றுக் கொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினி.




விஜய்டிவியின் முதலாண்டு விருதே ரஜினிக்குதான் வழங்கப்பட்டது. சிவாஜி படத்தில் நடித்ததற்காக அறிவிக்கப்பட்ட சிறந்த நடிகருக்கான விருது அது. விழாவுக்கு வர இயலாது என்பதை முன்கூட்டியே அவர் சொல்லிவிட்டார். இருந்தாலும் விஜய்டிவி தலைமை நிர்வாகி, ரஜினி இருக்கும் இடம் தேடிச் சென்று அந்த விருதினைக் கொடுத்தார்.
அன்று குசேலன் படப்பிடிப்புக்காக பொள்ளாச்சியிலிருந்தார் ரஜினி!





அதன்பிறகு இரண்டு விருது விழாக்கள் நடந்தன. அவற்றிலும் ரஜினி பங்கேற்கவில்லை. இடையில் ஒருமுறை மட்டும் விஜய்டிவி விழாவில் பங்கேற்றார். அது கமல் - 50 விழா.


இந்த நிலையில் விஜய்டிவி 4-வது விருது விழா ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடந்தது. இந்த விழாவுக்கு எப்படியாவது ரஜினியை வரவழைக்க பெரும் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அவர் பங்கேற்க மறுத்துவிட்டார்.
விழாவில் அவருக்கு செவாலியே சிவாஜி விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதினை பிரபுவும் ராம்குமாரும் ரஜினியின் வீட்டுக்கே போய் கொடுப்பதாக முடிவு செய்து, அதனை ரஜினியிடம் தெரிவித்தனர்.
                  ஆனால் அதற்கு மறுத்து விட்ட ரஜினி, சிவாஜி பெயரில் அமைந்த விருதினை, அவரது இல்லத்தில் வைத்தே வாங்கிக் கொள்வதாகக் கூறினார். இதையடுத்து சிவாஜி கணேசனின் வீட்டுக்குப் போய் விருதைப் பெற்றுக் கொண்டார் ரஜினி. சிவாஜியின் மகன்கள் ராம்குமாரும் பிரபுவும் இந்த விருதினை வழங்கினர். 
Wednesday, June 02, 2010 | 0 comments

Blog Archives