skip to main |
skip to sidebar
ரஜினி மீண்டும் தாத்தா ஆனார் : தனுஷ்-ஐஸ்வர்யாவுக்கு ஆண் குழந்தை
நடிகர் தனுஷ் & ஐஸ்வர்யா தம்பதிக்கு இன்று காலை ஆண் குழந்தை பிறந்தது. ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகன் தனுஷுக்கும் காதல் மலர்ந்தது. இருவீட்டு பெற்றோர் சம்மதத்துடன் 2004 நவம்பரில் தனுஷ், ஐஸ்வர்யா திருமணம் சென்னையில் நடந்தது. இவர்களுக்கு மூன்றரை வயதில் யாத்ரா என்ற மகன் இருக்கிறான். இந்நிலையில் ஐஸ்வர்யா மீண்டும் கர்ப்பம் ஆனார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐஸ்வர்யா அனுமதிக்கப்பட்டார். இன்று காலை 6.21 மணிக்கு, ஐஸ்வர்யாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. ரஜினி மீண்டும் தாத்தா ஆனதையொட்டி அவருக்கு சினிமா பிரமுகர்களும் உறவினர்களும் வாழ்த்து தெரிவித்தனர். படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு, ஐஸ்வர்யாவை கவனித்து வரும் தனுஷ், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
0 comments:
Post a Comment