காதலர் தினத்தையொட்டி பிப்ரவரி மாதத்தில் 2 திரைப்படங்கள் காதலர்களை மகிழ்விக்க வருகிறது. தீபாவளி, பொங்கலுக்கு புதிய திரைப்படங்கள் வருவதைப் போல இப்போது காதலர் தினத்தன்றும் புதிய திரைப்படங்களை ரிலீஸ் செய்வது வழக்கமாகி வருகிறது. கடந்த ஆண்டு காதலர் தினத்தன்று, 'விண்ணைத்தாண்டி வருவாயா' வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. அதேபோல 2009ம் ஆண்டு 'சிவா மனசுக்குள் சக்தி' படமும் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த வரிசையில் இந்த ஆண்டு இரண்டு திரைப்படங்கள் காதலர் தினத்தன்று வெளியாகின. ஒன்று கே.வி.ஆனந்த்தின் 'கோ'. இன்னொன்று, பிரபுதேவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'எங்கேயும் காதல்'. இரு படங்களுக்கும் இசையமைப்பு ஹாரிஸ் ஜெயராஜ். இரு படங்களின் பாடல்களும் ஏற்கனவே அனைவரையும் வசீகரிக்க ஆரம்பித்து விட்டன. 'எங்கேயும் காதல்' படத்தின் மூலம் ஹன்சிகா மோத்வானி தமிழுக்கு அறிமுகமாகிறார். ஜெயம் ரவியுடன் ஜோடியாக நடித்துள்ளார். காதலர்களை கொள்ளை கொள்ளும் அதிர்ஷ்ட படம் எதுவோ?
காதலர்களை மகிழ்விக்க வரும் 'எங்கேயும் காதல்', 'கோ'!
Written By Raveendran on Saturday, February 5, 2011 | Saturday, February 05, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment