கதாநாயகனுக்கு காய்ச்சல் வந்தால், கதாநாயகிக்கு நெறி கட்டுமான்னு தமன்னாவிடம் கேட்டால் 'கட்டுமே' என்பார். தனுஷ் தற்போது நடித்துவரும் படங்கள் எல்லாமே கிட்டதட்ட முடிந்துவிட்டது. 'சிங்கம்' படம் வெளியான கையோடு தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க வேண்டிய ஹரி அவரது கால்ஷீட் கிடைக்காததால் தவித்துக் கொண்டிருக்கிறார். இவருடன் சேர்ந்து தவிப்பது தமன்னாவும்தானாம். திடீர் காய்ச்சல் வந்து படுத்த படுக்கையாக கிடந்த தனுஷ் மீண்டும் எழுந்து நடப்பதற்குள் ஒரு மாசம் ஓடிப் போய்விட்டது. இந்த ஒரு மாதம் ஹரி படத்திற்காக தமன்னா கொடுத்த தேதிகளும் ஸ்வாகா ஆகிவிட்டது. சர்ரென்று ஆந்திராவுக்கு பறந்துவிட்டார். அங்கும் சில படங்களில் நடிக்கிறாராம். அவற்றை முடித்துவிட்டு சென்னை திரும்பினாலும் தனுஷ் படத்தை கண்டு கொள்ள முடியாது. காரணம் கார்த்தி நடிக்கும் சிறுத்தை தயாராக இருக்கிறது தமன்னாவுக்கு. இந்த நிலையில் தமன்னாவையே மாற்றிவிடலாம் என்ற முடிவுக்கு வந்தாராம் ஹரி. ஆனால் படிக்காதவன் வெற்றிக்குப் பிறகு தனுஷுடன் ஜோடி சேர்கிற படமாச்சே. வேறு ஒரு நடிகைக்கு விட்டுக் கொடுக்கவும் மறுக்கிறார் தமன்னா. மாசத்துக்கு அறுபது நாளு இருந்தா நல்லாயிருக்குமே என்று இவரும் இவரது மேனேஜரும் காலண்டரை கசக்கிக் கொண்டிருக்க, கையை பிசைந்து கொண்டிருக்கிறார் ஹரி. மீனும் திங்கனும் முள்ளும் மாட்ட கூடாதுன்னா எப்படி மேடம்?
விட்டுக் கொடுக்காத தமன்னா!
Written By Raveendran on Saturday, September 25, 2010 | Saturday, September 25, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment