Hi quest ,  welcome  |  sign in  |  registered now  |  need help ?

விளையாடும் கலைக் குடும்பம்

Written By Raveendran on Tuesday, August 10, 2010 | Tuesday, August 10, 2010


கலைக் குடும்பமாக இருந்த அஜித்-ஷாலினி இப்போது விளையாட்டு குடும்பமாகவும் அவதாராம் எடுத்துள்ளார்கள். அஜித், திரைப்படங்களில் நடிப்பதோடு, கார் ரேஸ், ரிமோட் ஹெலிகாப்டர் தயாரிப்பது போன்றவற்றிலும் ஆர்வமுள்ளவர். அவரது மனைவி நடிகை ஷாலினியும் அஜித்தைப்போலவே பேட் மிட்டன் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். ஷாலினியிடம் உள்ள இந்த பேட் மிட்டன் ஆர்வம், தொலைக்காட்சியில் பேட் மிட்டன் ஆட்டத்தை பார்ப்பதோடு மட்டும் நில்லாமல், விளையாட்டு போட்டிகளில் பங்குகொள்ளவும் செய்திருக்கிறது. சென்னை மாவட்ட பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஷாலினி கலந்துகொண்டு விளையாடியுள்ளார். இதனை ரசிகர்களோடு ரசிகராக அமர்ந்து கைதட்டி ரசித்திருக்கிறார் அஜித். பெண்கள் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் நடிகை ஷாலினி-ஏ.பிரியா அணியும், சுனேடி-விசாலட்சி அணியும் மோதியது. முதல் செட்டை இழந்த ஷாலினி அணி, இரண்டாவது செட்டில் 20-18 கணக்கில் ஆட்டத்தில் முன்னேறியது. மூன்றாவது செட்டில் ஷாலினி அணி மின்னல்வேக ஆட்டத்தை வெளிப்படுத்தியப்போது, ஷாலினியை உற்சாகப்படுத்தும் விதத்தில் சப்தம் எழுப்பினார் அஜித். ஆனால் வெற்றியை பெற்றது என்னவோ எதிர் அணிதான். எனினும் மனைவிக்கு ஆறுதல் வார்த்தை கூறி, உற்சாகத்தோடு அழைத்து சென்றார் அஜித். "உங்கள் மனைவியை தொடர்ந்து போட்டியில் விளையாட அனுமதிப்பீர்களா? என்று நிருபர்கள் கேட்க ஷாலுக்கு எதில் சந்தோஷமோ அதை தொடர்ந்து செய்வார். பேட்மிட்டன் என்றால் ஷாலுக்கு உயிர். எனவே அவர் தொடர்ந்து விளையாடுவதில் தடை இருக்காது" என்று கூறினார். நல்ல குடும்பம் பல 'கலை' கழகம்!

0 comments:

Post a Comment