பெரும் எதிர்பார்ப்போடு இன்று வெளியாகிறது நான் மகான் அல்ல. கார்த்தியின் தொடர் வெற்றிகளை அடுத்து இப்படத்தை பெரும் ஆர்வத்தோடு பார்க்க காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். எல்லாம் சரி. இதுவரை கார்த்தியின் படங்களை ரிலீசுக்கு முன்பே முக்கிய பிரமுகர்களுக்கு திரையிட்டு காட்டுகிற வழக்கம் இருந்தது. ஆனால் இந்த முறை ஒரு துண்டு பிலிமை கூட யார் கண்ணிலும் காட்டக் கூடாது என்று கூறிவிட்டாராம் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா.
அதாவது பிரிமியர் ஷோ கண்டிப்பாக யாருக்கும் இல்லை! ஏன் இந்த திடீர் அதிரடி? கார்த்தி நடித்த பருத்தி வீரன் படத்திலிருந்து கடைசியாக வெளியான பையா வரைக்கும் அவர் குறைந்தது ஐம்பது பேரையாவது து£க்கி போட்டு மிதிக்கிற மாதிரி காட்சிகள் இருந்தன. ஆனால் நான் மகான் அல்ல மிக யதார்த்தமான படமாம். இந்த திடீர் பிரசன்ட்டேஷன் மக்களுக்கு பிடிக்கும் என்றாலும், முன்கூட்டியே தவறான பிரச்சாரத்திற்கு வழி வகுத்துவிடக் கூடாதே என்பதால்தான் இந்த முன்னெச்சரிக்கையாம்.
இன்னொரு முக்கிய செய்தி. இப்படத்தை சென்னை தவிர தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்திருப்பவர் பொக்கிஷம் தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக்தானாம். (சென்னையில் சொந்த ரிலீஸ்) க்ளவுட் நைன் வெளியிடுவதாக விளம்பரங்கள் வந்திருக்கிறதே என்றால், இந்த வெளியீட்டுக்கு அவர்களும் தங்கள் பங்களிப்பை செய்திருக்கிறார்கள். அவ்வளவே என்கிறது கோடம்பாக்கம்!
0 comments:
Post a Comment