விஜய் படங்களில் நஷ்டம் ஏற்பட்டதால் தங்களுக்கு நஷ்டஈடு தர வேண்டும் என்று தியேட்டர் அதிபர்கள் சங்கத்தினர் வற்புறுத்தினர். இது சம்பந்தமாக இருதரப்பினருக்கும் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. இதற்கு முன் ரஜினி, மணிரத்னம் படங்கள் நஷ்டமான போது அவர்கள் நஷ்டஈடு அளித்ததாகவும் அது போல் நஷ்டங்களை விஜய் தரப்பில் ஈடுகட்ட வேண்டும் என்றும் தியேட்டர்காரர்கள் கூறினர். இன்னும் இப்பிரச்சினையில் முழு உடன்பாடு எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நஷ்டஈடு பிரச்சினை குறித்து ஆலோசிக்க வருகிற 13-ந்தேதி சென்னையில் அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்கம் அறிவித்து உள்ளது. இக்கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி செயற்குழுவில் முடிவு செய்யப்படும் என்று சங்க நிர்வாகி ஒருவர் கூறினார்.
0 comments:
Post a Comment