Hi quest ,  welcome  |  sign in  |  registered now  |  need help ?

அஜித்தின் மங்காத்தாவுக்கு எதிர்ப்பு

Written By Raveendran on Tuesday, July 20, 2010 | Tuesday, July 20, 2010

அஜித்தின் 50-வது படத்துக்கு மங்காத்தா என்று பெயர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் பட நிறுவனம் தயாரிக்கிறது. நீதுசந்திரா கதாநாயகியாக நடிக்கிறார். இவர் யாவரும் நலம் என்ற படத்தில் மாதவனுடன் நடித்தவர். அஜித் கடந்த சில மாதங்களாக கார் பந்தயங்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். தற்போது அதை தள்ளி வைத்து விட்டு பட வேலைகளில் இறங்கியுள்ளார். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இந்த நிலையில் அஜித் படத்துக்கு மங்காத்தா பெயர் வைக்க திடீர் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தயாரிப்பாளர் மனோ அக்கினேஷி இந்த தலைப்புக்கு சொந்தம் கொண்டாடுகிறார். இவர் ஏற்கனவே குறும்பு என்ற படத்தை எடுத்தவர். தற்போது ஸ்ரீகாந்த் நடிக்கும் துரோகி படத்தை தயாரித்து வருகிறார். நிறைய டி.வி. தொடர்களும் தயாரித்துள்ளார். அஜித் படத்துக்கு மங்காத்தா பெயர் வைத்திருப்பதாக செய்திகள் மூலம் அறிந்தேன். ஆனாலும் இதுவரை அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வரவில்லை. மங்காத்தா தலைப்பு என்னுடையது. வரும் காலங்களில் தயாரிப்பதற்காக சில பட தலைப்புகளை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன். அதில் மங்காத்தா தலைப்பும் ஒன்று. இதே தலைப்பில் படம் எடுக்க நான் முடிவு செய்துள்ளேன், என்று கூறினார். மங்காத்தா போனா என்ன? மாரியாத்தா இருக்குல்ல....

0 comments:

Post a Comment