Hi quest ,  welcome  |  sign in  |  registered now  |  need help ?

திருநங்கை வேடத்தில் விஷால்

Written By Raveendran on Tuesday, July 20, 2010 | Tuesday, July 20, 2010


பாலா இயக்கும் அவன் இவன் படத்தில் விஷால் திருநங்கை வேடத்தில் நடிக்கிறார். சமீபத்தில் இப்படம் குறித்து பாலா பேட்டி அளித்தபோது, அவன் விஷால் என்றும், இவன் ஆர்யா என்றும் கூறினார். திருநங்கையை சினிமா வட்டாரத்தில் அவன் என பட்டப்பெயரிட்டு அழைப்பதுண்டு. விஷாலின் திருநங்கை வேடம் பற்றிய தகவல் வெளியாகி விடாமல் ரகசியமாக வைத்திருந்தனர். தற்போது வெளியே கசிந்து விட்டது. முன்னணி கதாநாயகனாக இருக்கும் விஷால் திருநங்கை வேடத்தில் நடிக்க எப்படி சம்மதித்தார் என்று திரையுலக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. பாலா படம் என்பதால் இந்த கேரக்டரை ஒப்புக்கொண்டார் என்று கூறப்படுகிறது. பெரும் பகுதி படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதில் கதாநாயகியாக ஜனனி அய்யர் நடிக்கிறார். யுவன்சங்கர்ராஜா இசையமைக்கிறார். பாலா படம்ல திருநங்கை என்ன? தெருநங்கை கூட நடிப்பாங்க.....

0 comments:

Post a Comment