Hi quest ,  welcome  |  sign in  |  registered now  |  need help ?

அப்பாவானார் ஜெயம் ரவி!

Written By Raveendran on Friday, July 2, 2010 | Friday, July 02, 2010

நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தி தம்பதிக்கு ஜூன்.29 ஆண் குழந்தை பிறந்தது. திரை நட்சத்திரங்களுக்கு இந்த மாதம், அதிர்ஷ்டமான மாதம் போலிருக்கிறது. நடிகர் சூர்யா-ஜோதிகா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அடுத்து நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா ஜோடிக்கும் ஆண் குழந்தை பிறந்தது. இந்த இரண்டு ஜோடிகளுக்கு இது இரண்டாவது குழந்தையாகும். இப்போது ஜெயம் ரவிக்கும் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. ஜெயம் ரவிக்கும், சென்னையை சேர்ந்த ஆர்த்தி என்பவருக்கும் ஜூன், 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

 நிறைமாத கர்ப்பமாக இருந்த ஆர்த்திக்கு ஜூன்.2 காலை பிரசவவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மாலை 4 மணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த செய்தி கேட்டு மகிழ்ச்சியடைந்த ஜெயம் ரவியின் தந்தை எடிட்டர் மோகன், அண்ணன் இயக்குனர் ஜெயம் ராஜா மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு சென்று, அங்குள்ளவர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். அமீர் இயக்கும் ஆதிபகவான் படப்பிடிப்புக்காக வெளிநாட்டில் இருக்கும் ஜெயம் ரவி, குழந்தை பிறந்த தகவல் கேட்டு மகிழ்ச்சி அடைந்ததோடு, படப்பிடிப்பை முடித்துக் கொண்டு நாளை (ஜூலை 1) சென்னை திரும்புகிறார். இது 'திரை நட்சத்திரங்களின் வாரிசுகள் உதிக்கும்' மாதம்!


0 comments:

Post a Comment