சமீபத்தில் ‘ரெடி’ இந்தி படத்தின் ஷூட்டிங்குக்காக அசின் இலங்கை சென்றார். கொழும்பில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அவர் தங்கியிருந்தார். இந்தியா& இலங்கை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட இந்திய அணியும் கடந்த வாரம் இலங்கை சென்றது. அசின் தங்கியிருந்த அதே நட்சத்திர ஓட்டலில் டோனியும் தங்கியுள்ளார். அப்போது இருவரும் சந்தித்து பேசினர். இதுபற்றி அசின் கூறியதாவது: இலங்கையில் இருந்து நேற்று முன்தினம் மும்பைக்கு வந்தேன். நான் தங்கியிருந்த ஓட்டலில் டோனியும் தங்கியிருந்தார்.
நாங்கள் நண்பர்கள். அவரது திருமணத்துக்கு போக முடியவில்லை. அதனால் நேரில் சந்தித்து வாழ்த்தலாம் என இருந்தேன். அவரே இலங்கைக்கு வந்தது மகிழ்ச்சி அளித்தது. அவரை சந்தித்து வாழ்த்து கூறினேன். ஓட்டலில் அவர் மட்டுமல்ல, மொத்த இந்திய கிரிக்கெட் அணியும் தங்கியிருந்தது. ‘ரெடி’ பட ஷூட்டிங் இலங்கையில் முடிந்து விட்டது. அடுத்த கட்ட ஷூட்டிங் மும்பையில் நடக்கிறது. விஜய்யுடன் நடிக்கும், ‘காவல் காதல்’ பட ஷூட்டிங்கில் பங்கேற்க அடுத்த மாதம் சென்னை வருவேன். இவ்வாறு அசின் கூறினார்.
0 comments:
Post a Comment