Hi quest ,  welcome  |  sign in  |  registered now  |  need help ?

காதல் திருமணம் செய்ய மாட்டேன் - கார்த்தி

Written By Raveendran on Sunday, July 18, 2010 | Sunday, July 18, 2010

கார்த்தி, காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கும் படம் நான் மகான் அல்ல சுசீந்திரன், இயக்குகிறார். ஞான வேல்ராஜா தயாரிக்கிறார். இப்படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் நேற்று நடந்தது. இயக்குனர்கள் லிங்குசாமி, ஹரி, விஷ்ணுவர்த்தன், எழில் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் கார்த்தி பேசியது:- நான் மகான் அல்ல படம் சிறப்பாக வந்துள்ளது. பையா பட வெற்றிக்கு பின் யுவன் மீண்டும் இந்த படத்திலும் இசையமைத்துள்ளார். 

பையாவில் இடம் பெற்ற அடடா மழைடா அடை மழைடா பாடலை போகுமிடமெல்லாம் பாடி பெருமை படுத்துகிறார்கள். அது போல் இந்த படத்திலும் எல்லா பாடல்களும் நன்றாக வந்துள்ளன. சுசீந்திரன் இயக்கியுள்ளார். சென்னையில் உள்ள ஒரு நடுத்தர குடும்பம் சந்திக்கும் பிரச்சினைகளே கதை. காஜல் அகர்வால் நாயகியாக நடித்துள்ளார். மேடையில் என்னைப் பற்றி நிறைய பேர் பேசினார்கள். நான் காதலிப்பதாகவும் சொல்லப்பட்டது. நிச்சயமாக நான் காதல் திருமணம் செய்ய மாட்டேன். பெற்றோர் பார்க்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்வேன். அழுக்காக வந்த என்னை பையாவில் அழகாக காட்டிய லிங்குசாமிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், என்று பேசினார் கார்த்தி. ஏ பையா...இது பொய் தானே?

0 comments:

Post a Comment