skip to main |
skip to sidebar
கின்னஸில் இடம்பெறப் போகும் விஷால்!
நடிகர் விஷாலின் பெயர் மதிப்புமிக்க 'கின்னஸ்' புத்தகத்தில் விரைவில் இடம்பெறவுள்ளதாம். என்ன காரணத்திற்காக அவரது பெயர் அப்புத்தகத்தில் இடம்பெறவுள்ளது என்பது இதுவரைத் தெரியவில்லை, ஆனால் எந்தவொரு மொழிப் படத்திலும் இல்லாத, ஏதோ ஒன்றை சிறப்பாக செய்துள்ளதால் விஷாலின் பெயர் கின்னஸில் இடம்பெறவுள்ளதாம். பாலா இயக்கத்தில், 'திருநங்கையாக' வித்தியாசமான வேடத்தில் விஷால் 'அவன் இவன்' படத்தில் நடித்து வருகிறார். எந்தவொரு படத்தையும் விரைவாக முடித்திடாத பாலா இப்படத்தையும் வெகு நாட்களாக இயக்கி வருகிறார்.
இப்படம் கிட்டத்தட்ட முடிந்து விட்டது எனக் கூறப்பட்ட நிலையில், பல காட்சிகளை மீண்டும் படமாக்கப் போவதாகக் கூறி பாலா வழக்கம் போல் இழுத்தடித்து வருகிறார். இப்படத்தில் விஷாலுடன் இணைந்து ஆர்யாவும் நடித்து வருகிறார். 'அவன் இவனில்' விஷால் செய்த ஏதோ ஒன்று கின்னஸில் இடம்பெறப் போகிறதாம், விஷால் என்ன சாதனை புரிந்துள்ளார் என்பது படம் வெளியானதும் தெரியவருமாம். இப்படத்தை பாலா விரைவில் முடித்து, திரைக்குக் கொண்டு வருவார் என நம்புவோம். இழுத்தடிச்சாலும் எப்டியாச்சும் இடத்த புடுச்சுப்புடுறீக பாருங்க....சந்தோஷம்ணே!
0 comments:
Post a Comment