தனுஷ்-செல்வராகவன் சகோதரக் கூட்டணி தற்போது இணைந்துள்ளனர். இதனையடுத்து படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பையும் படு சுமூகமாக முடித்துள்ளது. பத்து நாட்களாக படப்பிடிப்பில் எல்லோரையும் தூங்கவிடாமல் வேலை வாங்கினாராம் செல்வா. மொத்த யூனிட்டும் மொத்தமாகவே தினமும் நான்கு மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்கியதாம். இப்படி நடந்து முடிந்த முதல் கட்டப் படப்பிடிப்பிலேயே படத்தின் ரொம்பவே கஷ்டமான காட்சிகள் எல்லாம் எடுக்கப்பட்டுவிட்டதாக கூறி பெருமைப்படுகிறது படக்குழு. படத்தின் நாயகியாக ஆன்ட்ரியா நடிக்க, இசைப்பணியை ஜீ.வி. பிரகாஷ் ஏற்றுள்ளார். படத்திற்கு செல்வராகவன் 'மறவன்' எனப் பெயர் சூட்டினார் என செய்திகள் வெளியாகின. ஆனால் தனது படத்துக்கு 'மறவன்' என பெயரிடவில்லை என்கிறார் செல்வராகவன்.தூங்கவிடாமல் வேலை வாங்கிய செல்வராகவன்
Written By Raveendran on Saturday, November 27, 2010 | Saturday, November 27, 2010
தனுஷ்-செல்வராகவன் சகோதரக் கூட்டணி தற்போது இணைந்துள்ளனர். இதனையடுத்து படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பையும் படு சுமூகமாக முடித்துள்ளது. பத்து நாட்களாக படப்பிடிப்பில் எல்லோரையும் தூங்கவிடாமல் வேலை வாங்கினாராம் செல்வா. மொத்த யூனிட்டும் மொத்தமாகவே தினமும் நான்கு மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்கியதாம். இப்படி நடந்து முடிந்த முதல் கட்டப் படப்பிடிப்பிலேயே படத்தின் ரொம்பவே கஷ்டமான காட்சிகள் எல்லாம் எடுக்கப்பட்டுவிட்டதாக கூறி பெருமைப்படுகிறது படக்குழு. படத்தின் நாயகியாக ஆன்ட்ரியா நடிக்க, இசைப்பணியை ஜீ.வி. பிரகாஷ் ஏற்றுள்ளார். படத்திற்கு செல்வராகவன் 'மறவன்' எனப் பெயர் சூட்டினார் என செய்திகள் வெளியாகின. ஆனால் தனது படத்துக்கு 'மறவன்' என பெயரிடவில்லை என்கிறார் செல்வராகவன்.
Labels:
Kollywood செய்திகள்,
செல்வராகவன்,
தனுஷ்,
மறவன்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment