கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஈரோடு, பெருந்துறை பகுதியில் ஈமு.கோழிப்பண்ணை திறப்பு விழாவிற்கு போயிருந்த நடிகை சினேகாவை ரசிகர் ஒருவர் இடுப்பில் கிள்ளி இம்சைக்கு ஆளான செய்தியை படித்திருப்பீர்கள்! அந்த ரசிகர் மீது சினேகா அவ்வளவு கோபம் அடைய காரணம் என்ன? என்ற கேள்விக்கு சற்று தாமதமாக பதில் இப்பொழுது கிடைத்திருக்கிறது. அதாகப்பட்டது சினேகாவை ரசிகர் இடுப்பில் கிள்ளுவதற்கு முன்பாக ஈமு.கோழிப்பண்ணையை ரிப்பன் வெட்டி திறந்துவிட்டு உள்ளே போனபோது, ஒரு ஈமு.கோழி ஒன்றும் தன் அலகால் பதம் பார்த்திருக்கிறது. அந்த எரிச்சலில் பண்ணைக்குள்ளே போகவே பயந்து திரும்பியிருக்கிறார் சினேகா. இந்நிலையில் ரசிகர் ஒருவரும் தன் கைகளால் இடுப்பை கிள்ளி துன்புறத்த சினேகாவிற்கு வந்ததே கடுப்பு. ஈமு.கோழியை ஒன்றும் செய்ய முடியாத நட்பு நாயகி, தன் ஆட்கள் மூலம் அந்த ரசிகரிடம் விரோதம் காட்டி வெளுத்து கட்டியிருக்கிறார். ஆஃப்தரெக்கார்டாக கோழியை மன்னித்த மாதிரி ரசிகரையும் மன்னித்து இருக்கலாம் சினேகா......
0 comments:
Post a Comment