விஜய் நடித்த 'காவலன்' பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவும், ஏழைகளுக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சியும் வடபழனி ஜே.எஸ்.திருமண மண்டபத்தில் இன்று காலை நடந்தது. விழாவில் விஜய் பங்கேற்று 300 ஏழை குடும்பங்களுக்கு 300 மூட்டை இலவச அரிசி வழங்கினார். 'காவலன்' பட ட்ரெய்லரையும் வெளியிட்டார். விழாவில் விஜய் பேசியதாவது:- 'காவலன்' பட ட்ரெய்லர் வெளியிட அழைத்ததும் நான் ஒப்புக்கொள்ளவில்லை. ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்குவதையும் சேர்த்து நடத்துவதாகச் சொன்னார்கள். அதன் பிறகுதான் விழாவுக்கு வர சம்மதித்தேன். எந்த ஒருவிழாவாக இருந்தாலும் அதை ஏழைகளுக்குப் பயன்படுவதாக நடத்த வேண்டும். 'காவலன்' படம் சிறப்பாக வந்துள்ளது. மனதுக்கும் நிறைவாக இருக்கிறது. 'காதலுக்கு மரியாதை' படம் போல கடைசி 15 நிமிடங்கள் உணர்ச்சிகரமாக இருக்கும். சித்திக் மலையாளத்தில் நிறைய வெற்றிப்படங்கள் கொடுத்துள்ளார். இதையும் நன்றாக எடுத்துள்ளார்.
விழாவில் இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், ஷக்தி சிதம்பரம், செல்வபாரதி, தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், கேரள விநியோகஸ்தர் சிபு, மக்கள் தொடர்பாளர்கள் பி.டி.செல்வகுமார், தென்னிலவன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். என்னமா மூட்டை மூட்டையா புழுகுறாய்ங்க.......

0 comments:
Post a Comment