இது பழிவாங்கப்பட்டவர்களின் கதை என்று சப் டைட்டில் கொடுக்காமல் இருந்தால் சரி. மற்றபடி இரண்டு கைகள் நான்கானால்... என்ற ரேஞ்சில் கை கோர்த்துவிட்டார்கள் சீமானும், விஜய்யும். தாணுவின் தயாரிப்பில் சீமான் இயக்கவிருக்கும் 'பகலவன்' படத்தில் விஜய் நடிக்கிறார் என்பதுதான் நேற்றுவரை உலவிய செய்தி. இன்று அதில் இஞ்ச் அளவுக்கு ஒரு மாற்றம்! 'கோபம்' என்று தலைப்பு வைக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம் இருவரும். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உள்ளேயிருந்தவர் சீமான். வெளியே வந்த பின்பும் முன்னிலும் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறார். என் மீனவனை அடித்தால் உன் மாணவனை அடிப்பேன் என்ற தனது வாதத்தில் இப்போதும் மாற்றமில்லை என்று முழங்கிக் கொண்டிருக்கிறார். தன் படத்திற்கு தியேட்டர் கிடைக்காததால் குமுறிக் கொண்டிருக்கிறார் விஜய். எனவே "சீமான் இயக்கத்தில் விஜய்யின் கோபம்" என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறார்களாம் இருவரும். மாற்றம் இதில் மட்டும் இல்லை. இன்னொரு முக்கியமான விஷயத்திலும் இருக்கிறது என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். அது? முன்பு இப்படத்தை தயாரிப்பதாக இருந்த தாணு என்ன காரணத்தாலோ கை மாற்றிவிடத் துடிக்கிறாராம். தாணு போனாலும் 'கோபத்தை' விடக் கூடாது என்ற முடிவிலிருக்கிறார்களாம் சீமானும், விஜய்யும். யார் மேல இம்புட்டு கடுப்புனு சொல்லியா தெரியணும் நம்மாளுங்களுக்கு......
Tuesday, December 28, 2010 | 0
comments


காவலன் படம் தொடர்பான வழக்குகளில் இருந்து மீண்டு வந்திருக்கிறார் நடிகர் விஜய். காலனுக்கு தடை கோரி கோகுலம் சிட்பண்ட்ஸ் நிறவனம் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தது. அதில், `பாடி கார்ட் என்ற மலையாள படத்தை தயாரிப்பதற்காக நிதி கேட்டு ஜானி சகரிகா சினிமா ஸ்கொயர் நிறுவனம் எங்களை அணுகியது. அதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்துக்கு ரூ.3.90 கோடி கடன் வழங்கினோம். அப்போது `பாடி கார்டு படத்தின் பிறமொழி பதிப்புரிமையை எங்களுக்கு தரவேண்டும் என்று கேட்டோம். அதற்கான ஒப்பந்தமும் போடப்பட்டது. தற்போது தயாரிக்கப்பட்டுள்ள `காவலன் என்ற சினிமா, `பாடி கார்ட் படத்தின் கதையை கொண்டதாகும். `பாடி கார்ட் கதையை மற்ற மொழிகளில் தயாரிக்கும் உரிமையை கோகுலம் நிறுவனம்தான் பெற்றுள்ள நிலையில், அந்த கதையை தழுவிய `காவலன் படத்தை ரோமேஷ்பாபு தயாரித்துள்ளார். மேலும் நாங்கள் கொடுத்த தொகையில் மீதி ரூ.1.88 கோடியை ஜானி சகரிகா நிறுவனம் தரவில்லை. எனவே அந்தத் தொகையை திருப்பித்தர உத்தரவிட வேண்டும். எங்களிடம் பதிப்புரிமை உள்ளதால் மற்றவர்கள் அந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.





நடிகர் ரஜினிகாந்த் முன்னிலையில் 4 மாநில சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி நடக்கிறது என்றார் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார். சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது: தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய 4 மொழி படக் கலைஞர்களும் பங்கேற்கும் செலிப்ரிட்டி கிரிக்கெட் லீக் (சிசிஎல்) போட்டி வரும் ஜனவரி மாதம் 22, 23, 29, 30 ஆகிய 4 நாட்கள் நடக்க உள்ளது. தமிழ் நடிகர்கள் கிரிக்கெட் டீமுக்கு 'சென்னை சூப்பர் ஸ்டார்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த டீமின் ஐகான் வீரர்களாக சூர்யா, விஜய் இருப்பார்கள். அவர்களிடம் இது தொடர்பாக பேச்சு நடக்கிறது. சிம்பு, கார்த்தி, ஜெயம் ரவி, தனுஷ், ராதாரவி, ஷாம், அப்பாஸ், ஜெய், அம்சவர்தன், ரமணா, விக்ராந்த், ஜீவா, ஆர்யா, மாதவன், சாந்தனு உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் இதில் பங்கேற்கின்றனர். நானும் பங்கேற்கிறேன், என்றார். கேட்பதற்கு சந்தோஷமாக இருந்தாலும் அனைவருக்கும் ஒரு பொறி தட்டியது. இந்த அணியின் 'செலிப்ரிட்டி பிளேயர்கள்' சூர்யா மற்றும் விஜய் என்று குறிப்பிட்டார். ஏதோ முதல் முறை தவறி சொல்லியிருப்பார் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் திரும்பத் திரும்ப நடிகர்களின் பெயர்களை உச்சரிக்கும் போதும் சரத்குமார் தனது 'ஆர்டரில்' முதலிடத்தை சூர்யாவுக்கும் இரண்டாமிடத்தை விஜய்க்கும் தர பத்திரிகையாளர்களுக்கே வியப்பு. விஜய் சீனியர் மட்டுமல்ல, ரஜினிக்கு அடுத்து அதிக ரசிகர்களை, அதுவும் பக்கா அரசியல் செட்டப்போடு வைத்திருப்பவர். சமீபத்தில் சில படங்கள் அவருக்கு சரியாகப் போகவில்லை என்றாலும், ரசிகர் பலத்தில், வர்த்தகத்தில் அவர் குறைந்துவிடாத நிலையில், நடிகர் சங்கமே விஜய்யை இரண்டாம் இடத்துக்கு தள்ளுகிறதோ என்ற முணுமுணுப்புகளைக் கேட்க முடிந்தது. முன்னணி நடிகர்களுக்கு இந்த ரேங்க் பிரச்சினை ரொம்ப முக்கியம். சரத்குமார் தவறுதலாக இதைச் சொன்னாரா, அல்லது மனதிலிருப்பதைச் சொன்னாரா என்று அவர்தான் விளக்க வேண்டும், என்றார் சரத்துக்கு நெருக்கமான ஒரு பத்திரிகையாளர். ஆடுறதுக்கு முன்னாடியே தளபதிய டக்-அவுட் பண்ணிட்டாரே.....


கையிலிருந்த நெய்ய கீழே கொட்டிவிட்டுட்டு இப்ப வெண்ணையத் தேடி அலையுறாப்புல ஆகிப்போச்சு ஷங்கரின் நிலைமை. கையிலிருந்த விஜய்யை காவு கொடுத்துவிட்ட ஒரே காரணத்தால் கால்ஷீட் தேடி இவரே மூவ் பண்ண வேண்டியிருக்கிறது முன்னணி நடிகர்களை. த்ரி இடியட்ஸ் ரீமேக்கில் ஏற்பட்ட பிரச்சினைக்குப் பிறகு ஷங்கர் லேண்ட் ஆன முதல் இடம் சூர்யா வீடுதான். ஷங்கர் இயக்கத்தில் நடிப்பதென்றால் யாருக்குக் கசக்கும்? சந்தோஷமாக ஓ.கே சொன்ன சூர்யா அடுத்தடுத்து சொன்ன இரு கண்டிஷன்கள்தான் ஷங்கரை ஆடிப்போக வைத்ததாம். நம்பர் 1- உடனே என்னால் கால்ஷீட் தர முடியாது. நம்பர் 2- இந்தப் படத்தில் நான் நடிக்கணும் என்றால், தெலுங்கிலும் இந்த கேரக்டரை நானே செய்யணும் என்றாராம் சூர்யா. 
உலகின் மிகவும் செக்ஸியான பெண்ணாக நடிகை காத்ரீனா கைப் மீண்டும் தேர்வாகியுள்ளார். இவ்வாறு அவர் தேர்வாவது இது தொடர்ச்சியாக 3வது முறையாகும். ஹாலிவுட்டில் கலக்கி வரும் ப்ரீடா பின்டோ, பிரியங்கா சோப்ராவை அவர் போட்டியில் எதிர்கொண்டு பின் தள்ளியுள்ளார். லண்டனைச் சேர்ந்த ஈஸ்டர்ன் ஐ என்ற பத்திரிக்கையின் கருத்துக் கணிப்பில்தான் காத்ரீனாவுக்கு இந்தப் பெருமை கிடைத்துள்ளது. உலகின் ஹாட்டான பெண்கள் பட்டியலை 'ஈஸ்டர்ன் ஐ' வெளியிட்டுள்ளது. அதில் தொடர்ச்சியாக 3வது முறையாக காத்ரீனா முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதுகுறித்து காத்ரீனா கூறுகையில், ஈஸ்டர்ன் ஐ பத்திரிக்கையின் உலகின் செக்ஸியான பெண்கள் பட்டியலில் மூன்றாவது முறையாக நான் முதலிடத்தைப் பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு இங்கிலாந்து மிகவும் விசேஷமான ஒரு இடமாகும். அந்த நாட்டிலிருந்து வெளியாகும் பத்திரிக்கை என்னை செக்ஸியான பெண்ணாகத் தேர்வு செய்திருப்பது கூடுதல் விசேஷமாகும். 

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஈரோடு, பெருந்துறை பகுதியில் ஈமு.கோழிப்பண்ணை திறப்பு விழாவிற்கு போயிருந்த நடிகை சினேகாவை ரசிகர் ஒருவர் இடுப்பில் கிள்ளி இம்சைக்கு ஆளான செய்தியை படித்திருப்பீர்கள்! அந்த ரசிகர் மீது சினேகா அவ்வளவு கோபம் அடைய காரணம் என்ன? என்ற கேள்விக்கு சற்று தாமதமாக பதில் இப்பொழுது கிடைத்திருக்கிறது. 








இந்து மக்கள் கட்சி ஒருங்கிணைப்பு செயலாளர் தா.கண்ணன் சார்பில் வக்கீல் ராஜசெந்தூர் பாண்டியன் நடிகர் கமலஹாசன், நடிகை த்ரிஷா, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
“இந்த தலைமுறை நடிகர்களில் ரஜினியும் என்னையும்போல் ஒரு நண்பர்கள் இருந்தால் காட்டுங்கள் ” என்று கமல் 50 விழாவில் கமல்ஹாசன் கூறியது நினைவு இருக்கலாம். அப்படி ஒருவருக்கு அன்பை பரிமாறிக் கொள்ளும் இவர்கள் சேர்ந்து நடிக்க வேண்டுமென்பதே அனைத்து ரசிகர்களும் ஆசைப்படுகிறார்கள். ஆனால் கமல், நானும் ரஜினியும் சேர்ந்து நடிப்பதில்லை என்று பல வருடங்களுக்கு முன்பே ஒப்பந்தம் செய்துகொண்டோம் எனக் கூறியுள்ளார். 
பாலிவுட்ட நம்பி பெட்டிய தூக்கிட்டு, போன வேகத்துல திரும்பி வந்த கையோடு பழைய 'வுட்'களே நமக்கு பெஸ்ட்னு செட்டாகலாம்னு வந்தா விட்ட குறை தொட்ட குறை. அம்பு பாய்ஞ்ச இடத்தில இப்ப ஆல்கஹால வேற ஊத்துறாய்ங்க ஆத்திரமடைந்த ஆந்திராகாரனுங்க! த்ரிஷாவை தெலுங்கு படமொன்றில் விலைமாதுவாக நடிக்க அழைத்தனர். அதிக சம்பளம் தருவாகவும் பேசப்பட்டது. ஆனால் அதில் நடிக்க மறுத்து விட்டார். இதுபற்றி த்ரிஷா சொல்கிறார். விபச்சாரி கேரக்டர் என்பது மிகவும் சவால் நிறைந்தது. எளிதாக அதில் நடிக்க முடியாது. எனவேதான் அந்த வேடத்தில் நடிக்க நான் மறுத்து விட்டேன். விலைமாது கேரக்டர் செய்யும் அளவு எனக்கு இன்னும் பக்குவம் வரவில்லை. அந்த கேரக்டரில் நடிக்கும்போது இதற்கு முன் எந்த நடிகையும் அதுமாதிரி நடிக்கவில்லை என்று பெயர் எடுக்க வேண்டும். வேறு நடிகைகளும் இந்த நடிப்பைப் பார்த்து பயப்பட வேண்டும். அப்படியொரு துணிச்சல் வரும்போது நடிப்பேன். கமலுடன் நடித்த 'மன்மதன் அம்பு' படம் வருகிற 17-ந்தேதி வெளியாகிறது. கமலுடன் நடிக்கும் முதல் படம் என்பதால் ரொம்ப பயந்தேன். படப்பிடிப்புக்குப் போகும் போதெல்லாம் எனது முதல் படத்தில் வேலை செய்த உணர்வே ஏற்பட்டது. அந்தப் படத்தை ரொம்பவும் எதிர்நோக்கி இருக்கிறேன். நடிகர், நடிகைகள் பற்றி கிசுகிசுக்கள் வருவது தவறல்ல. கிசுகிசுக்கள் வளர்ச்சிக்கு உதவுகின்றன. எனவே அவை பற்றி வருத்தப்படக் கூடாது. சில நடிகைகள் தங்களைப் பற்றிய கிசுகிசுக்களை அவர்களே பரப்பி விளம்பரம் தேடுகின்றனர். நான் அதுபோல் பரப்புவது இல்லை. அம்மாடியோவ்! நல்ல வேள இமேஜ்ல ஆசிட்ட ஊத்திட்டு அப்புறம் எரியுதேனு புலம்பலியே....!


விஜய் நடித்த 'காவலன்' பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவும், ஏழைகளுக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சியும் வடபழனி ஜே.எஸ்.திருமண மண்டபத்தில் இன்று காலை நடந்தது. விழாவில் விஜய் பங்கேற்று 300 ஏழை குடும்பங்களுக்கு 300 மூட்டை இலவச அரிசி வழங்கினார். 'காவலன்' பட ட்ரெய்லரையும் வெளியிட்டார். 
சூர்யாவின் 'ரத்த சரித்திரம்' நேற்று திரையைத் தழுவியிருக்க, சூர்யாவோ காயமடைந்து ஓய்வெடுத்து வருகிறார். தற்பொழுது '7ஆம் அறிவு' படத்தில் நடித்து வரும் சூர்யா, அப்படத்தின் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டபோது காயமடைந்தார். ஏ.ஆர்.முருகதாஸ், சூர்யாவை வைத்து '7ஆம் அறிவு' படத்தின் முக்கிய காட்சியொன்றை படமாக்கிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சூர்யா காயமடைந்தார். உடனடியாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இரண்டு நாட்களுக்கு எவ்வித படப்பிடிப்பிலும் கலந்துக் கொள்ளாமல் ஓய்வாக இருக்கும்படி சூர்யாவை அறிவுறுத்தினர். இதனால் நேற்று மாலை மலேசியாவில் நடைபெறவிருந்த 'ரத்த சரித்திரம்' முன்னோட்டக் காட்சியில் சூர்யா கலந்துக் கொள்ள முடியாது போய்விட்டது. மருத்துவர்களின் அறிவுரைப்படி சூர்யா தற்பொழுது முழு ஓய்வில் இருந்து வருகிறார். அச்சச்சோ! யாரு கொள்ளிக்கண்ணு பட்டுச்சோ... முதல்ல சுத்திப் போடுங்க!






வீணைக்கு பிறந்தது விறகாகுமா? யானைக்கு பிறந்தது எறும்பாகுமா? நடிகர் கமல்ஹாசனின் வாரிசுகள் கலையுலகத்தையே வியக்க வைக்கிற அளவுக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். கமலுக்கு காதல் மன்னன் என்றொரு பட்டமும் உண்டல்லவா? அவரது மகள்கள் இருவரும் அப்பாவின் கலையுலக வாழ்க்கைக்கும், காதல் வாழ்க்கைக்கும் சேர்த்து வியத்தகு வாரிசுகளாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.
