
சிங்கப்பூரில் நடந்த 'மன்மதன் அம்பு' பாடல் வெளியீட்டு விழாவில் த்ரிஷாவுடன் ஆடிப் பாடி அசத்தினார் கமல்ஹாசன். உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில், கே.எஸ். ரவிக்குமார் இயக்கியுள்ள 'மன்மதன் அம்பு' படத்தின் இசை நிகழ்ச்சி சிங்கப்பூரில் பிரமாண்டமாக நடந்தது. இதில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், படத்தின் பாடல்களை மேடையில் லைவாக இசைத்தார். இதில் கமல்ஹாஸன், த்ரிஷா ஆகியோர் பங்கேற்று பாடல்களைப் பாடி ஆடினர். 'நீலவானம்' என்ற டூயட் பாடலை இருவரும் பாடி ஆடினர். இதுகுறித்து த்ரிஷா கூறுகையில், "கமலுடன் நான் மேடையில் ஆடிப் பாடியதை நம்பவே முடியவில்லை. இதுவரை நான் பார்த்ததிலேயே சிறந்த பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி இதுவே. மேடையில் கமல் பாடியபோது, மாதவன் கண்ர்விட்டு அழுததை (ஆனந்தத்தில்!) என்னால் மறக்க முடியவில்லை" என்றார். இந்த நிகழ்ச்சியை லைவாக சென்னையில் நிருபர்களுக்கு போட்டுக் காட்டுவதாகவும், இறுதியில் கமல் பேசுவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் பின்னர் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுவிட்டது. அசத்தலா பிலிமெல்லாம் காட்டிப்புட்டு இப்படி ஆப் பண்ணிட்டீங்களே........
0 comments:
Post a Comment