
சென்னைக்குத் திரும்பி விட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தனது நண்பர்கள் வெங்கட், ஹரி ஆகியோருடன் இமயமலை சென்ற ரஜினி, மூலிகை அருவியில் குளித்து தினமும் பாபா குகையில் அமர்ந்து நீண்ட நேரம் தியானம் செய்தாராம். கடும் குளிர், பயமுறுத்தும் மலைப் பயணம், இயற்கை இடர்பாடுகள் இவற்றையெல்லாம் துச்சமாக நினைத்து ரஜினி துணிச்சலாக இமயமலையில் பயணம் செய்ததை அவருடன் சென்ற நண்பர்கள் பார்த்து வியந்துள்ளனர். மலை குகைகளில் உள்ள நூறு வயதை கடந்த மகான்களை சந்தித்து ஆசி பெற்ற ரஜினி, நேற்று முன்தினம் சென்னை திரும்பியுள்ளார். ரஜினியின் அடுத்தத் திட்டம் வெளிநாட்டு சுற்றுப்பயணம். இதுபற்றி ரஜினிகாந்த் கூறியுள்ளதாவது: "நான் ஒரு படத்தில் நடித்து முடித்ததும், இமயமலைக்கு செல்வேன். அதன் பிறகு சென்னை திரும்பி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்வேன். அங்கு இரண்டு மாதங்கள் இருப்பேன். இடங்களை சுற்றிப் பார்ப்பதற்காக மட்டும் நான் வெளிநாடு செல்வதில்லை. பணம், புகழ், செல்வாக்கு இவற்றிலிருந்து விலகி, சாதாரண மனிதனாக வாழ்வதற்காகவே வெளிநாடு செல்கிறேன். அங்குள்ள சாலைகளில் விருப்பம்போல நடந்து செல்லலாம். சாதாரண மனித வாழ்க்கையை அங்கு நான் அனுபவிக்கிறேன்" என்கிறார். இப்ப நீங்க எந்த மூலைக்குப் போனாலும் எந்திரன்தான் உங்களை அடையாளம் காட்டிடுமே......
0 comments:
Post a Comment