
தனது கணவர் பிரபுதேவா, நடிகை நயன்தாராவை கல்யாணம் செய்து கொள்ள அவரது மனைவி ரமலத் சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. இதையடுத்து கேரளா அல்லது திருப்பதியில் வைத்து எளிமையான முறையில் இந்தக் கல்யாணத்தை முடித்துக் கொள்ள பிரபுதேவாவும், நயன்தாராவும் முடிவு செய்துள்ளனராம். நயன்தாராவை காதலிக்கிறேன், கல்யாணமும் செய்து கொள்ளப் போகிறேன் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார் பிரபுதேவா. இதனால் அதிர்ச்சி அடைந்த ரமலத் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனைகளில் குதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இப்போது அவர் தனது கணவரின் 2வது கல்யாணத்திற்கு சம்மதித்து விட்டதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரமலத்தை சம்மதிக்க வைப்பதற்காக பெரும் தொகை ஒன்றை ரமலத் பெயரில் பிரபுதேவா வங்கியில் டெபாசிட் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பணத்தைக் கொடுத்தாலும் ரமலத் சம்மதிப்பாரா என்று பிரபுதேவா-நயன்தாராவுக்கு சந்தேகம் இருந்ததாம். ஆனால் அவர் கல்யாணம் செய்ய சம்மதித்தது அவர்களுக்கு இனிய அதிர்ச்சியாகி விட்டதாம். இதையடுத்து கல்யாணத்தை வேகமாக முடிக்கத் திட்டமிட்டுள்ளார் பிரபுதேவா. முதல் கல்யாணத்தைப் போலவே தனது 2 வது கல்யாணத்தையும் மிகவும் ரகசியமாக, எளிமையாக வைத்துக் கொள்ளப்போகிறாராம். திருப்பதி அல்லது கேரளாவில் ஏதாவது ஒரு கோவிலில் வைத்து கல்யாணம் நடக்கும் என்று கூறுகிறார்.
வாழ்க்கைதான் போச்சே... வர்ற பணத்தையும் ஏன் விடுவானேன்னு ரம்லத் நினைச்சிட்டாரு போல....
0 comments:
Post a Comment