தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை திரைக்குப் பின்னால்தான் இருக்கிறார் சுஹாசினி. திரையில் அவர் தலைகாட்டி வருடங்களாகிறது. ஆனால் மலையாளத்திலும், கன்னடத்திலும் நல்ல அம்மா வேடத்திற்கு சுஹாசினிதான் முதல் சாய்ஸ். மலையாளத்தில் சீனிவாசன் ஜோடியாக சமீபத்தில் நடித்தார் சுஹாசினி. இவர்களின் மகனாக சீனிவாசனின் மகனே நடித்திருந்தார். இதேபோல் அம்மா பாசத்தை சொல்லும் மகேந்திர குமார் இயக்கிய கன்னடப் படத்தில் கதாநாயகி அர்ச்சனாவுக்கு அம்மாவாக நடித்துள்ளார் சுஹாசினி. கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான இந்தப் படத்தை தமிழில் உள்ளமெல்லாம் தாலாட்டுதே என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகின்றனர். சுஹாசினியை திரையில் பார்க்க முடியவில்லையே என்று கவலைப்படும் ரசிகர்களுக்காக உள்ளமெல்லாம் தாலாட்டுதே விரைவில் வெளியாக உள்ளது. தமிழர்களையும் தாலாட்ட வாங்கம்மா....நல்ல அம்மாவான சுஹாசினி
Written By Raveendran on Sunday, July 18, 2010 | Sunday, July 18, 2010
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை திரைக்குப் பின்னால்தான் இருக்கிறார் சுஹாசினி. திரையில் அவர் தலைகாட்டி வருடங்களாகிறது. ஆனால் மலையாளத்திலும், கன்னடத்திலும் நல்ல அம்மா வேடத்திற்கு சுஹாசினிதான் முதல் சாய்ஸ். மலையாளத்தில் சீனிவாசன் ஜோடியாக சமீபத்தில் நடித்தார் சுஹாசினி. இவர்களின் மகனாக சீனிவாசனின் மகனே நடித்திருந்தார். இதேபோல் அம்மா பாசத்தை சொல்லும் மகேந்திர குமார் இயக்கிய கன்னடப் படத்தில் கதாநாயகி அர்ச்சனாவுக்கு அம்மாவாக நடித்துள்ளார் சுஹாசினி. கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான இந்தப் படத்தை தமிழில் உள்ளமெல்லாம் தாலாட்டுதே என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகின்றனர். சுஹாசினியை திரையில் பார்க்க முடியவில்லையே என்று கவலைப்படும் ரசிகர்களுக்காக உள்ளமெல்லாம் தாலாட்டுதே விரைவில் வெளியாக உள்ளது. தமிழர்களையும் தாலாட்ட வாங்கம்மா....
Labels:
Kollywood செய்திகள்,
சுஹாசினி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment